வெள்ளி, 23 டிசம்பர், 2016

மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு ஆதரவு இருக்கிறதா?

தினமும் சர்வ மதத் தலைவர்களும், ஊடக அதிபர்களும்,படைத்துறையை சார்ந்த சகலரும் சசிகலாவை சந்திப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மன மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார்கள்.

கவுரவர்கள் கட்டிய மாய மாளிகையை விட  பலவீனமானது அவர்களது நம்பிக்கை.  மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.அமைச்சர்களும் அவரது சார்பான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இன்னும் பல பொறுப்புகளிலும் இருக்கிறவர்கள் தங்களது பதவிகாலம் முடியும் வரை அதனுடைய சுகத்தை இழக்கவிரும்பவில்லை. மிச்சம் இருக்கிற நாலரை ஆண்டு காலமும் தங்கச்சுரங்கம்.அதனாலேயே இந்த ஆதரவுப் படலம்!. ஆட்சி ஆட்டம் காணுமேயானால் பழ மரத்தை நாடி ஓடிவிடுவார்கள்.

அதிகாரம் போய்விட்டால் அதனுடைய விளைவுகள் ?

தலைமைச்செயலரையே புழலுக்கு அனுப்பிய மத்திய அரசு தங்களை சுழற்றி சுழற்றி அடிக்காதா என்ன!

அப்பல்லோவில்  முதல்வர் ஜெ இருக்கும்போது மண் சோறு சாப்பிட்ட உருக்கம் என்ன...கண்ணீர் வற்றும் வரை கதறி அழுத சோகம் என்ன..தங்கத்தேர் இழுத்தார்கள். கோவில் கோவிலாக யாகம்,சிறப்பு வழிபாடுகள் என புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுத்தார்கள்.

ஆனால் அம்மா இறந்து விட்டார் என்றதுமே யாரும் கதறவில்லை.மயக்கம்  அடையவில்லை.அப்பாவி தொண்டர்கள்தான் கதறினார்கள்
.கத்தினார்கள்.பலர் மாரடைப்பினால் மாண்டார்கள்.ஆனால் அமைச்சர்களும் மற்ற பெருமக்களும்  சட்டையை மாற்றுவதுபோல விசுவாசத்தை சசியின் பக்கமாக திருப்பிவிட்டார்கள்.அடடா என்னே உருக்கம். என்னே கலக்கம்!

ஊரெங்கும் 'சின்னம்மா வாங்கம்மா...அனாதைகளாக நிற்கிறோம் .தலைமை பொறுப்பு ஏற்று காப்பாற்றுங்கள் சின்ன அம்மா!" என சுவரொட்டிகள். சசியை முன்னிறுத்தி ஜெ.யை பின்நிறுத்தி படங்கள்.அவர்கள்தான் அம்மாவின் நிரந்தர விசுவாசிகள் அடிமைகள் என முன்னர் சுவரொட்டிகளில் சத்திய  பிரமாணம் செய்திருந்தவர்கள். எவ்வளவு சுலபமாக சத்தியத்தை வசதிக்கு ஏற்ப மாற்றுகிறார்கள். அவர்களுக்கு சத்தியம் என்பது  சால்னா கடை முட்டை பரோட்டா!

ஆனால் தொண்டர்கள் சசியை நம்பவில்லை.மக்களும் நம்பவில்லை .காதுபடவே பலவிதமாக பேசுகிறார்கள். அடுத்த ரெய்டு சசிகலாதான் என்று  விகடன் குழும ஏடு செய்தி போடுகிறது. சோ வின் துக்ளக் சசிக்கு கண்டித்து எதிர்த்து தலையங்கம் தீட்டுகிறது.

இவ்வளவும் தெரிந்தும் திரை உலகை சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தி ஷோ காட்டுகிறார்கள். ஜெ.ஆட்சியின் போது போயஸ்கார்டன் கேட்டில் கூட நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்கள்தான் திரை உலகத்தினர். எந்த சலுகையும் அரசு அளிக்கவில்லை என்றாலும் நடிகர்கள்தானே..வேஷம் மாறுவதற்கு தயங்காதவர்கள். வீர வசனங்கள் பேசுவதில் வல்லவர்கள்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...