வெள்ளி, 2 டிசம்பர், 2016

தென்னாட்டு மக்கள் நிர்வாணமானவர்களா?

இத்தாலிய நாட்டு  சுற்றுலாவாசி  மார்க்கபோலோ.
கி.பி.13 -ம்  நூற்றாண்டு முடிவில் தென்னிந்தியாவில்  ஒன்னரை ஆண்டுகள்  பிரயாணம் செய்திருக்கிறான்  என்கிறார்  தமிழ்ப் பேராசிரியர்  அ.கி. பரந்தாமனார்.. மதுரை  தமிழ்நாடு  நாளிதழில்  செய்தியாளனாக  பணியாற்றியபோது  அவரிடம்  தமிழ்  பயின்றிருக்கிறேன். அந்த காலக்கட்டத்தில் தான்  சகோதரர்  கா. காளிமுத்துவின் நட்பு  கிடைத்தது. அது  அவரது  கடைசி  காலம் வரை  தொடர்ந்தது.

அது  தனி  அத்தியாயம்  எழுதக்கூடியது.

அய்யா  பரந்தாமனார்  எழுதிய  'மதுரை  நாயக்கர்  வரலாறு' நூலை வாசித்தபோது  எத்தனையோ  ஆச்சரியங்களையும்  அதிர்ச்சி  செய்திகளையும் அனுபவித்தேன்.

 அதில்  சில....

"தென்னாட்டில்  அக்காலத்தில்  மக்கள்  உடம்பில் எத்தகைய  உடையும்  அணிந்து கொள்ளாமல் இருந்தது  மார்க்கபோலோவுக்கு  வியப்பாக  காணப்பட்டது. தையற்காரர்களே  இந்நாட்டில்  இல்லை  என்று  எழுதிவிட்டான்.

மரண தண்டனைக்கு ஆளான குற்றவாளிகள்  தங்களை  தெய்வங்களுக்கு  பலியிட்டுக் கொள்வதுண்டு. சாணத்தால்  தரையை மெழுகுவது  சாதாரணமாக காணப்பட்ட வழக்கம்.

ஏழைகளும் செல்வந்தர்களும்  தரையில் அமர்வது  வழக்கம்.ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளித்திருக்கிறார்கள்.  குடிக்கும்போது  குவளையை குவளையைத்  தூக்கி வாயின் எச்சில் படாமல் மக்கள் குடிப்பது வழக்கம் என போலோ  எழுதியிருக்கிறார்.

கள் குடிப்பது  குறைவு! குடியர்களும் கப்பலில் வேலை செய்பவர்களும்  சாட்சி சொல்வதற்கு  தகுதியற்றவர்களாக  கருதப்பட்டார்கள்.[ அதை இந்த காலத்தில்  அமல்படுத்தினால்  ஓரளவு  நாடு உருப்படும்.] 

ஒருவன்  கொடுக்கவேண்டிய கடனைத் திரும்பப்பெறுவதற்குக் கடன் கொடுக்கவேண்டியவனைக் கண்டுவிட்டால்  அவன்  நிற்கும் இடத்தைச்சுற்றி  கோடிட்டுப்  பணத்தை  கொடுக்காமல்  அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது  என  ஆணையிடும்  வழக்கம் இருந்தது  என்றும்  மார்க்கபோலோ  எழுதியிருக்கிறார்.

அப்படி எல்லாம்  நாணயமானவர்கள்  வாழ்ந்த  பூமியா  அய்யா இது? 

மக்களைவிட  நமது  அரசியல்வாதிகள்  படிக்கவேண்டியது  நிறைய  இருக்கிறது  மார்க்கபோலோவின்  பயண  குறிப்புகளில்!

ஆனால் கடவுளே வந்து  சவுக்கினால்  நாலு  இழுப்பு  இழுத்தாலும்  திருந்தாத  ஜென்மங்கள்  ஆயிற்றே! 
    

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...