ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ஹிட்லர் மாவீரனா....இல்லையா?

இது ஒன்றும் பட்டி மன்றத்தலைப்பு இல்லை.

உலகமே அஞ்சிய சர்வாதிகாரி ஹிட்லர் என்கிறோம். அவன் கோழையாக  இருந்திருந்தால் சர்வாதிகாரியாக  மாறி இருக்கமுடியாது.

தனது நாடு தனது மக்கள் என வாழ்ந்தவன்.அற்புதமான ஓவியன்.

நெப்போலியனை எப்படி பார்க்கிறேனோ அதைப்போலவே ஹிட்லரையும் பார்க்கிறேன். அவனது மனத் திண்மை எனக்கு பிடிக்கும். வறுமையின் கொடுங்கரத்தில் சிக்கி, அனாதை என்ற பட்டியலில் அவன் பெற்று வந்த உதவித் தொகையும் போதாமல் வயிற்றை சுருக்கி வாழ்ந்தவன்.

அந்த நிலையிலும் அவன் மனம் கலங்கவில்லை.

"விதியை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் தந்தை  பயணப்பட்டதைப்போல நானும் தனியனாகவே வியன்னாவுக்கு பயணமானேன் " என்கிறான் ஹிட்லர்.

அவனை வரலாற்றாசிரியர்கள் பார்த்த பார்வை அந்த கால கட்டத்துக்குள்  உள்ளடக்கி  எழுதப்பட்டே இருக்கும். அரசியல் சார்ந்தும் அவனை சார்ந்தும்  எதிர்த்தும் எழுதப்பட்டவையே! "எம்.ஜி.ஆர்.தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே சமாதி கட்டப்பட்டது" என்று ஆங்கில பத்திரிக்கை மேதை ஒருவர் எழுதவில்லையா? அந்த புத்தகத்தில் 1967-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பற்றியும் பேரறிஞர் அண்ணா  முதல்வராக பதவி ஏற்றதையோ குறிப்பிடவில்லை.கலைஞர் கருணாநிதி  முதல்வர் பதவி ஏற்றதையும் எழுதவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பதவி ஏற்றதை மட்டுமே சுட்டியிருந்தார்,

இதையும் ஜனங்கள் நாளை நம்புவார்கள்.

எனது போராட்டம் என்கிற ஹிட்லரின் புத்தக மொழி பெயர்ப்பினை வாசித்தேன்.

அதில்  ஒரு குறிப்பு.

'ஜெர்மனியின் மிகப்பெரிய மானக்கேடு 'என்கிற பெயரில் ஒரு  அறிக்கை. அதை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்  ஒரு புத்தக வியாபாரி.ஜோகன்ஸ் பிலிப் பாம். ஒரு ஆள் காட்டி அவரை பிரெஞ்சுக்காரர்களிடம் காட்டி கொடுத்து  விட்டான். வழக்கு நடந்தது.

கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டும் அந்த துண்டறிக்கையை யார் எழுதியது என்பதை சொல்ல மறுத்து விட்டார்,

இதனால் அவரை  சுட்டுக்கொல்ல நெப்போலியன் உத்தரவிட்டான். ஹிட்லர் பிறந்த சிறிய ஊரான பிறவுனா ஆன் த இன் என்கிற ஊரில்தான் சுட்டுக்கொல்லப்பட்டான். அங்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டிருந்தது. தனது சிறு வயதில்  அந்த வழியாக சென்று வந்த ஹிட்லரிடம் பெரிய பாதிப்பை  உருவாக்கி இருந்தது. அது நாளடைவில் விருட்சமாக வளர்ந்து  அவனை வீரனாக சர்வாதிகாரியாக  மாற்றியது.

அவனது வரலாறை முழுமையாக படித்தவர்களுக்கு  தெரியாமல் இருக்காது. ஆனால்  அவர்கள்  எம்.ஜி.ஆர். தகனம் போல கருத்தை பதிவிடக்கூடாது.

   

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...