வியாழன், 8 டிசம்பர், 2016

கலைஞரை ராகுல்காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகி விடும்?

''ஜெயலலிதாவுக்காக  இரண்டு தடவை சென்னை வந்த ராகுல்காந்தி ஒரு முறை கூட எங்கள் தலைவரை பார்க்கவந்தாரா ?"என்று திமுகவினர் ஆதங்கப்படுவது  அவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறதோ?

திராவிடக் கட்சிகளில் எவருடைய தோள் வசதியானதோ அதில் சவாரி செய்து பழக்கப்பட்ட  காங்.கட்சிக்கு தற்போதைய  சிந்தனை தி.மு.க.வா, அதிமுகவா யாருடன் உறவு கொள்ளலாம் ,எந்த வகையில் அதிமுக- பாஜக.நட்பை  உடைக்கலாம் என்பதாகக் கூட இருக்கலாம் அல்லவா? ஜெயலலிதா போன்ற  இரும்பு மனுஷியின் இழப்பு அதிமுகவை மிகவும் வெறுமைப் படுத்தி இருக்கிறது. உரியவன் இல்லாவிட்டால் எவன் வேண்டுமானாலும்  அறுவடை செய்துகொள்ளலாம் என்கிற நிலையில்தானே அந்த கட்சி தனது  உரிமையாளரை இழந்து  நிற்கிறது!

"அ.தி.மு.க.கண்டிப்பாக பிளவு படும். அதில் ஒரு பிரிவினரை தங்கள் பக்கம்  இழுத்துக்கொள்ளலாம் " என்பது ராகுல் காந்தியின் எண்ணமாக இருக்கலாம்  அதனால் தி.மு.க.தலைவரை சந்திக்காமல் தவிர்த்திருக்கக்கூடும்  அல்லவா?

அதிமுக வின் தலைவர்களை  தமிழ்நாடு காங்.கட்சி தலைவர் திருநாவுக்கரசருக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் மூலமாக  காய் நகர்த்த முடியும். இந்த நகர்த்தல் வேலைகள் திமுகவினரை எரிச்சல் அடைய வைக்கும் என்பதால் ராகுல் முன் எச்சரிக்கையாக  கலைஞரை சந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் ராகுலை நினைத்து தன்னை பலவீனப்படுத்திகே கொள்கிறது தி.மு.க.!
எப்படியெல்லாம் நெஞ்சு உயர்த்தி களம் பல கண்ட திமுகவுக்கு இப்படி ஒரு  நிலையா?
கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...