வியாழன், 22 டிசம்பர், 2016

மோடியின் திட்டத்தால் சாதாரணமக்கள் அவதி!

'எல்லோரும் இந்நாட்டு மன்னர் ' என்றனர் இந்தியா விடுதலை பெற்ற பிறகு.!

ஆனால்அரசியல்வாதிகள்தான் மன்னர்களானார்கள். மக்கள் வழக்கம் போல ஏழைகளாகவே  வாழ்க்கையை தொடங்கினார்கள். இன்று வரை அது  செழிப்பாகவே வளர்கிறது.அவர்களுக்கும் ஏழ்மை பழகிப்போய்விட்டது.

இருந்தாலும் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதில் தலைவர்களுக்கு தனித்த சுகம். அதனால் 'வறுமையே வெளியேறு' கரிபி கடோ என்கிற புதிய மந்திர சொல்லை புகுத்தினர். அதையும் நாடு நம்பியது.ஏழை மோழையாகி விட்டதால்  வறுமையை  சாமான்யனின் நிரந்தர சொத்து என்பதாக தலைவர்கள் எழுதிவிட்டார்கள்.

நீ ஏழையாக இருப்பதற்கு கறுப்புப்பணம்தான் காரணம் என்பதை காலம் காலமாக சொல்லிவந்த---வருகிற   அரசியல்வாதிகள் அதை ஒழிப்பதற்கு என்ன செய்தார்கள்?

ஆங்கிலேயர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் 1934-ல் 500,1000 ரூபாய் தாள்களும் 1938-ல் 10 ஆயிரம் ரூபாய் தாள்களும் வெளியிட்டனர். பின்னர்  அவர்களே 1946-ல் 1000,10 ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தனர். அதிக மதிப்புள்ள தொகை என்பதால் ஏழைகள் பாதிக்கப் படவில்லை. பணக்காரர்கள்தான்  பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.         அதனால் மக்களும்   அதைப்பற்றி  கவலைப்படவில்லை.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் மொரார்ஜி தேசாய் தனது பதவி காலத்தில் 1000,5000,10 ஆயிரம் ரூபாய் தாள்களை புழக்கத்தில் இருந்து விலக்கி உத்திரவு பிறப்பிக்க அதற்கு ரிசர்வ் பாங்கு கவர்னர் படேல் ஆதரவு தரவில்லை.மக்களும் பாதிக்கப்படவில்லை.

ஆனால் 2016 டிசம்பர் 8-தேதி இரவில்  வெளியிட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த அறிவிப்பு அடித்தட்ட மக்களை கொல்லாமல் கொன்று வருகிறது. அரசின் புதிய ரூபாய்தாள்கள் முன்னதாகவே பணக்காரர்களுக்கு  போய் சேர்ந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் தவறான வழிகளில் வங்கிகளிடம் இருந்து பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசு அனுமதி பெற்ற காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் கோடி கோடியாக புதிய தாள்கள் ,தலைமைச்செயலர் ராம் மோகனராவ்,அவரது மகன்,மற்றும் உறவினர் வீடுகளில் வரலாறு காணாத சோதனை.கறுப்புப்பணம் கைப்பற்றல் என தமிழகமே அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறது.

இந்த முறைகேடான மெகா ஊழலுக்கு  யார் காரணம்,எவருடைய தலைமை காலத்தில் அரங்கேறியது என்பதை மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...