ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நாளைய தலைவன் நீயடா!

             ஆண்டி வேடம் போட்டால்
             அரசியலில் மரியாதை .

           காவி கட்டி பஜனை பாடினால்
           சாமி, நீயும் ஓர் அமைச்சனே!

           பகலில் ராமன் ,இரவில் காம்னா?
          அடடே..நீயும் ஒரு மடாதிபதியே!

          கிளை தாவும் குரங்குப் புத்தியா?
          நாளைய தலைவனடா நீ!
 

எனது மனைவியை இழந்த நாளிது.

2014--ஜனவரி 1.
அடியேனுக்கு விருது வழங்கும் நாள்.

என்னை வழி அனுப்பியவள் நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்ளுங்கள்
எனச் சொன்னவள்

அவள் வழியில் சென்றுவிட்டாள்
என்னை கதியற்றவனாக்கி.

நான்கு ஆண்டுகளாக
அவள் இல்லாமல் நான்!

கண்ணாடி முன் நின்றால்
அரூபனாகனாக .- என்னில்
பாதி அவள் இல்லை!

உயிர் இருக்கிறது.உணர்வு இற்று.
நடமாடும் சவம் .நரக வாழ்க்கை.

பள்ளி சென்று திரும்பும் இருவழியிலும்
பாத்தி கட்டி வளர்த்த காதல்.
பாதியிலேயே அழிக்கப்படுமோ ?

எதிர்ப்புகள் எனது பக்கம்.
ஒற்றையன் என்பதால்
எம்காதலுக்கு தலை வணங்கியது.

வாழ்ந்தவாழ்க்கையில்
கசப்பும்இனிப்பும்
கலந்திருந்தது.

நீ கண்ணகி .
நான் கோவலன்.
குற்ற உணர்வுடன்

கணவன்.

இது எனது ஒப்புதல் வாக்குமூலம்

சனி, 30 டிசம்பர், 2017

திமுகவுக்கு எதிரி ஆகிறார் ரஜினிகாந்த்.!

 ஆண்டவன் சொல்லிவிட்டான்

"நீ அரசியலுக்கு செல்லலாம் "என்று!

அதனால் "அரசியலுக்குவந்துவிட்டேன்.தமிழகத்தின்அத்தனை தொகுதிகளிலும் போட்டியிடுவேன்" என்கிற அறிவிப்பையும் இன்று அறிவித்து விட்டார் ரஜினிகாந்த்.

திரைத்துறையிலிருந்து அரசியல் பிரவேசம் செய்கிற நடிகர்களில் இவர் விஜயகாந்துக்கு அடுத்து கால் வைத்திருக்கிறார்.ரஜினியை அடுத்து  கமல் வரலாம்.யாரும்அரசியலுக்குவரலாம்!

கட்சியின் பெயர், கொள்கைகள் என எதையும் அறிவிக்கவில்லை. கொள்கைகளைப் பார்த்து வாக்களிக்கும் அளவுக்கு தமிழர்களின் அறிவு வளரவில்லை என நினைத்திருக்கலாம்.ஏனென்றால் அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கு மாறாகவே எல்லா கட்சிகளும் நடந்து கொண்டிருப்பதால்  அது அவசியமில்லை எனநினைத்திருக்கலாம்.

ஆனால்  " ஆன்மீக அரசியல்" என்பதை  அவரின்  இன்றைய பேச்சில் அழுத்தமுடன் பதிவு செய்திருக்கிறார்.


ஆன்மீகஅரசியல் என்பது பிஜேபியின் மறைமுக வழி. ஆனால்  ரஜினி அதை  பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்.. ஆக ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பின் பின்பலமாக பிஜேபி இருப்பதாக நம்பலாம். தனித்து நின்று  சாதிக்க முடியாததை மக்கள் செல்வாக்குள்ள ஒருவரது துணையுடன் செய்து முடிக்க பிஜேபியின் சாணக்கியம் பயன்பட்டிருக்கிறது. .!பிஜேபியின் கிளைக்கழகம் என்றே கருதுகிறேன்.

திராவிட அரசியலுக்கு எதிரானதுதான் ஆன்மீக அரசியல்.

"பெரியார், அண்ணா, கலைஞர் என்கிற வழி வந்த திராவிட அரசியலுக்கும் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும்தான் போட்டி!

ஆன்மீக அரசியல் என்றால்  என்ன என்பதை  ரஜினியும் சொல்லவில்லை. ஆனால் கீதையை  சொல்லித் தொடங்கியதற்கு என்ன காரணம்.? குரான்,பைபிளில் இருந்தும் சொல்லி இருக்கலாமே? தமிழர்களின் வேதமான குறளில் இருந்து சொல்லி இருக்கலாம். ஆனால் அவருக்கு மெட்ராஸ்தான் பிடிக்கும்.தமிழ்நாடு பிடிக்காது. இது அவர் சொன்னதுதான்.!

'மண்ணின் மைந்தர்கள்தான் ஆளவேண்டும் 'என்பதை ஆழக் குழி தோண்டி புதைப்பதுதான் ஆன்மீக அரசியல் !

"அரசியல் சிஸ்டத்தில் மாற்றம் வேண்டும் " என்கிறார். "எது கெட்டு இருக்கிறது" என்பதையும் சொல்லி இருக்கலாம். "தமிழகத்தைப் பார்த்து  மற்ற மாநிலங்கள் சிரிக்கின்றன" என்கிறார் ரஜினி.இதுகாலம் வரை அந்த சிரிப்பை  ரஜினி ரசித்துக் கொண்டிருந்தது ஏன்?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகம் கொள்ளை அடிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான அவருக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது எதுவும் சொல்லாதவர்தான் ரஜினி.ஜனநாயகம் கெட்டதே ஜெயலலிதாவின்
காலத்தில்தான்!

அவர் தற்போது கட்சிக்கான அடிப்படைக்கட்டத்தை வலுவாக அமைக்கும் வழியாக தனது மன்றங்களை முறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.இது சாமர்த்தியமான நடவடிக்கை. கட்சியின் தலைவனாக இருந்து கொண்டுகிராம மக்களை,அப்பாவிகளை இணைக்க முடியாது என்பதை தெளிவாக அறிந்திருப்பதால்தான் நடிகனாக இருந்துகொண்டு அவரது திரைப்படம்  வெளிவரும் காலகட்டத்தில் மன்றங்களை வலுவாக்குகிறார் .இது  அவருக்கு  எளிது.எளிது.!

அரசியலுக்கு வந்து விட்டேன் என சொல்லும் ரஜினி "நாளையிலிருந்து எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன் ,விமர்சிக்க மாட்டேன் " என்றால் அன்றாட அரசியலை விமர்சிக்கிற  கடமையில்  இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஏன்? 

காலா திரைப்படத்தின் கட்டணம் ஆயிரம் வரை விற்கப்படும் வாய்ப்பை தடுத்து விட்டு அரசியல் பேசலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

இப்படி எத்தனையோ கேள்விகள். 

  

ஜெயாவின் வீட்டை நினைவகமாக்குவது நீதியா?

    திங்கள் மலர்ந்தால் புதிய ஆண்டு.

   மாற்றங்கள் நிகழும் , நிகழ வேண்டும் என்கிற நம்பிக்கையில் நல்லவர்கள்.

   யார் நாசமாகப் போனால் நமக்கென்ன என கிடைத்த  பிறர் சொத்துகளை பங்கு போட்டுக்கொள்ள திட்டங்கள் வகுக்கும் ஆட்சியாளர்கள். அவர்களை நம்பி உடந்தையாக இருக்கிற அதிகார வர்க்கம்.

   ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த  பின்னரும் அவரது போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவகமாக  மாற்றுவதற்கு எடப்பாடி அரசு ஆயத்த வேலைகளில் இறங்கி இருக்கிறது.

  ஜெயாவின் மரணத்திற்கு பின்னர் அந்த இல்லம் யாருக்குச் சொந்தம் என்பது  பற்றி உயில் எழுதி வைத்திருக்கிறாரா?

   தெரியவில்லை.உயில் இருக்கிறதா, மறைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது  புனைந்து எழுதப்பட்டவை ஏதேனும் உள்ளதா? மர்மம்.அல்லது சிதம்பர ரகசியம். ஜெயாவின் மர்ம மரணத்தைப் போலவே அவரது உயிலும் மர்மமாகவே இருக்கிறது.

  முறைப்படி,நியாயப்படி, தர்மப்படி அந்த இல்லம் ஜெயாவின் ரத்த உறவுகளுக்கே சொந்தமாக வேண்டும்!

    ஆனால் எந்த உறவும் இல்லாமல் சசிகலா உரிமை கோருவதாக சொல்கிறார்கள். உடன்பிறவா சகோதரி என சொன்னதாலேயே  சொத்துக்கு  சொந்தமாகி விட முடியுமா?

  ஜெயா முதல்வராக இருந்ததாலேயே அவருக்குப் பின் அவரது இல்லத்தை அரசு நினைவிடமாக்க முடியுமா? உறவுகள்,மனைவி சம்மதம் பெற்ற பின்னர்தான் எம்.ஜி.ஆரின் இல்லத்தை நினைவிடமாக்கியது அரசு. இங்கே  ஜெயாவின் ரத்த சொந்தம் தீபா ,தீபக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து  இருக்கிறார்கள்.அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக அரசு முடிவு எடுக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது என்பது எனக்கு தெரியாது. நான் பாமரன்.

  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இல்லம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது, அவரது வாழ்ந்த ராமாபுரம் இல்லம் எப்படியெல்லாம் சேதாரம் அடைந்து  இருக்கிறது என்பது அவற்றை பார்த்தவர்களுக்கு தெரியும்.

   இவை மட்டுமல்ல  வருமானத்துக்கு அதிகமாக அதிகாரத்தைப்பயன்படுத்தி சொத்துக்குவித்த முதல் குற்றவாளிக்கு அரசு நினைவகம் கட்டுவது நல்ல  உதாரணம் இல்லை. இவருக்கு நினைவகம் என்றால் நாளை வீரப்பனுக்கு  நினைவகம் கட்டினால் என்ன என்கிற கேள்வி எழும். இனவெறியர்களால்  கொல்லப்பட்ட, கொடூரமாக வேட்டையாடப்பட்ட எம்மின மக்களுக்கு நினைவகம் எழுப்பியதை தவறு என வாதாடுகிற வம்பர்கள்தான் இன்று ஜெயலலிதாவுக்கு நினைவகம் அமைப்பதற்கு வாதாடி வருகிறார்கள். அவர்களுக்கு போராளிகளுக்கும்,கொள்ளை அடித்தவர்களுக்கும் வேறுபாடு  தெரிந்தும் தெரியாதவர்களைப் போல நடிக்கிறார்கள்.

அவர்கள் யாராக இருந்தாலும் பொதுவாழ்க்கைக்கு தகுதி அற்றவர்கள்.
     

புதன், 27 டிசம்பர், 2017

காற்றில் வாள் வீசும் ஓபிஎஸ் அண்ட் இபிஎஸ் கம்பெனி!

    தினகரனுக்கு வலது கரமாக இருந்தார் தங்க.தமிழ்ச் செல்வன்.

   வார்த்தைகளில் காரம் தடவி கபாப் போட்டார் நாஞ்சில் சம்பத்.

   'பச்சைத் துரோகிகள்' என்று சி.ஆர்.சரஸ்வதி வறுத்து எடுத்தார். காட்சி ஊடகங்களில் கார சார விவாதம்,தனிப்பேட்டி என்று இவர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.அணியை செமத்தியாக புரட்டி எடுத்தார்கள்.சவால்கள் விட்டார்கள்.

   அப்போதெல்லாம் விபாசனா தியானத்தில் இருந்தவர்களைப் போல  நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தவர்கள் ஆர்.கே.நகரில் இடத்தைப்  பறி கொடுத்ததும் ஆவேசம் வந்தவர்களாக நடிக்கிறார்கள் பாருங்கள்.

    நல்ல வேளை நடிகர்திலகம் செத்துப் போயிட்டார்.

    அவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்களாம்.

    "நீ யார் நீக்குவது? பதவியிலிருந்து நீக்கி இருக்கிறீர்களே அந்த எம்.எல்.ஏ. அத்தனை பேரையும் நீக்கி விட்டதாக சொல்லேன் ,பார்க்கலாம்" என்று இ.பி.எஸ்.அணியைப் பார்த்து நையாண்டி செய்கிறார்கள் 'குக்கரன்" அணியினர். எந்தப் பக்கம் போனாலும் அடிக்கிறார்களே என்று கவலையில்  ஊறிப் பொய் இருப்பவர்களுக்கு சற்றே ஆறுதலாக வருமானவரித் துறை  சசியின் தொடர்புள்ள உறவுகள்,ஆதரவாளர்கள் அலுவலகங்களை குறி  வைத்து இன்று சோதனை நடத்தியது.குறிப்பாக மிடாஸ் மது ஆலை! ஆனால் எதைப்பற்றியும் கவலையில்லாமல் ,ஆர்.கே.நகர் தொ குதிக்கு நன்றி சொல்லவும் போகாமல் தினகரன் மவுனியாகி விட்டார்.
 
     தொகுதிப்பக்கம் போனால் எங்கே மீதிப் பணம் என்று கேட்பார்களோ என்கிற பயத்தில் குக்கர் தூக்கிகள்.

    'ஓட்டு வாங்கி ஜெயிச்சாச்சு .இனி காசு கழட்டினால் என்ன,கழட்டாவிட்டால் என்ன ?' என்கிற மிதப்பில் இருக்கிறார்கள் தினகரன் அணியினர்.ஆட்சியில் இருப்பவர்களோ காற்றில் வாள் சுழற்றுகிறார்கள்.முன்னதாகவே தினகரன்  பக்கமாக போய் விட்டவர்களை நீக்கிவிட்டதாக சொல்லி  அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள்.

     சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு தனியாக நடக்குமோ என்னவோ?
 

திங்கள், 25 டிசம்பர், 2017

தி.மு.க. உண்மையைச்சொல்லுமா?

      ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. 50 ஆயிரம்  வாக்குகள் வரை பெற்றது.
       ஆனால் தற்போது 2௦ ஆயிரம் வாக்குகள் பெற்று பொறுப்புத் தொகையை  இழந்திருக்கிறது.
      திமுகவுக்கு என இருந்த செல்வாக்கு சரிந்து விட்டதா? அல்லது இடம் பெயர்ந்து விட்டதா?
      பணம் விளையாடியது என்பது  உண்மைதான். ஆனால்   விலை போகக் கூடியவர்களா  திமுக தொண்டர்கள்?  கழகத்துக்காக  உயிரையும் கொடுக்கும்  மனப்பான்மை அவர்களுக்கு இருக்கிறது.தியாகத்தில் வளர்ந்த பேரியக்கத்தை சிறு குச்சி புரட்டியிருக்கிறது என்றால் ?
     சிந்திக்கவேண்டும்.திமுக தலைமை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!காரணத்தை கண்டு பிடித்து சொல்ல வேண்டும்!

      இரண்டு பட்ட  அதிமுக பலவீனத்தின் மடியில் கிடக்கிறது. எடப்பாடியா, ஓபிஎஸ்.சா என்கிற அதிகாரப் போட்டியில் அவர்கள் பிளவுண்டு கிடந்தாலும் பொது எதிரி தினகரன். இவரின் வெற்றியில் திமுகவுக்கு பங்கு உண்டு என்று  சொல்வது தோற்றபிறகு சொல்கிற வழக்கமான புலம்பல்தான்!
    ஆனால் தினகரனின் மகத்தான வெற்றிக்கு எது காரணம்,தெரிய வேண்டும். 
     

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இபிஎஸ்--- ஓபிஎஸ் அணி. கை கழுவுவாரா மோடிஜி?

          புட்டிப்பால் புகட்டி புகட்டி வளர்த்த எடப்பாடி,ஓபிஎஸ் அணி மூக்கு உடைந்து  புழுதியில் புரள்கிறதே போலித்தாய் பிஜேபியின் நிலை என்ன?

        அடித்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் சீராட்டி வளர்த்த  அந்த வளர்ப்புக்   குழந்தையை என்ன செய்யப்போகிறது?. பெற்ற குழந்தை பிஜேபிக்கு பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து வளர்த்தால் அது சவலைப் பிள்ளையாக ஆர்.கே. நகரில் ஆடை கிழிந்து நிற்கிறது.அதை வளர்த்தும் இனி பயனில்லை.ஆகவே  ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கவேண்டியதுதான்! சத்துணவு கொடுத்து வளர்த்தாலும் ,சலைன் ஏற்றி காத்தாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான்!

      "கிலுகிலுப்பையை காட்டியதும் பின்னாலேயே போயிட்டோம்.தப்புத்தான் தாயே .திரும்பி வந்திட்டோம்.ஏத்துக்க" என்று சின்னாத்தாவிடம் கெஞ்சு  கெஞ்சு  என கெஞ்சினாலும் கட்டையடிதான் கிடைக்கும். ஆத்தாவே  ஒடுங்கி 'அடங்கியே' போனார் என்கிற போது இந்த செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கும்?
          பிஜேபியின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும்?

       ஆளுநர் ஆட்சிக்கு 3 மாதம் வரை அவசியம் இருக்காது.

        எம்.எல் .ஏக்கள் நீக்க வழக்கை வைத்துக் கொண்டு தினகரனுடன் பேசிப் பார்க்கலாமா? சின்னாத்தாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கலாமா என்றால் காங்கிரஸ் அரசு கை கொடுக்காது. ஆனால் ஆபத்து  இருப்பதாக சொல்லி பிஜேபி ஆளும் மாநிலத்துக்கு மாற்றலாம் அல்லவா?

          குக்கரை கைக்குள் போடுவதற்கு  சின்னாத்தாவின் தயவு கண்டிப்பாக வேண்டும்.  

         தினகரனை வழக்குகளால் முடக்க முடியுமா? அது முடியாமல் போனதால்  தானே வருமானவரித்துறையினரை ஏவி விட்டு அச்சத்தை  விதைக்கப் பார்த்தார்கள். அப்படி சோதனை நடத்தி அள்ளிச்சென்றதாக சொன்னாலும் ஆர்.கே.நகரில் பணமழை பொழிந்ததே  அது எப்படி? கண் கொள்ளாக்காட்சியாக விநியோகம் இருந்தும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு யார் காரணம்?

       அதிமுகவை வைத்து பிஜேபியை வளர்க்கலாம் தமிழகத்தில் கால்  ஊன்றி  விடலாம் என கணக்குப் போட்டார்கள்.நோட்டாவுடன் கூட  அவர்களால் போட்டியிட முடியவில்லை.நச்சுச்செடி என வேரோடு பிடுங்கி எறிந்து விட்டார்கள்.

     அதிமுகவின் தோல்வியைப் பற்றி கருத்து சொல்லாமல் இபிஎஸ்.அண்ட் ஓபிஎஸ் அணி திமுகவின் தோல்விக்கான காரணத்தை சொல்லி தப்பித்துக் கொள்ளப்பாத்திருக்கிறது.எந்த புண்ணியவான் எழுதிக் கொடுத்த அறிக்கையோ? ஜெயலலிதாவின் தொகுதியில் இரட்டை இலையை வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாத இவர்களை மோடி நம்பமாட்டார் என்றே தோன்றுகிறது.
   

மாமியார் செத்தா வலிக்குமா?

                  " கெட்ட சகவாசம் வேணாம்டா மவனே!  பூவோட சேர்ந்தாதான்  நாரும் மணக்கும்! நல்லவங்களோடு சேரு"
                  "கதை பேசாதப்பா! கல்யாணம் பண்ணி வை! பூக்காரியோடு சேர்ந்தா  நான் கூடத்தான் மணப்பேன்"
                 "எனக்கு நல்லா வேணும்.கழுதைக்குப் போயி புத்தி சொன்னா உதைக்கத்தான் செய்யும்,!"
                 " அம்மா..இங்க வா! உன்னை கழுதைங்கிறாரு அப்பா!
*************************************************************************************
               " உங்களுக்கு கர்நாடிக் பிடிக்குமா மெலடி பிடிக்குமா?"
              "எனக்கு லெமன் டி பிடிக்கும்"
               " ஓ !"
*********************************************************************************

              ஆசிரியர்.: " உன்னோட 'போர்பாதர்'எங்கே பிறந்தாங்க .உங்க பூர்விகம் எது?"
            மாணவன்.: " சார்..! எனக்கு ஒரே ஒரு பாதர்தான் சார்!"
*********************************************************************************

             ஆசிரியர்.: " டே..ராமு. நீ யாருக்குடா அதிகமா  அழுதிருக்கே?"
             ராமு.      : " என் நாய் டாமி செத்துப்போனப்ப விக்கி விக்கி அழுதேன் சார்!"
           ஆசிரியர்.: "என் மாமியார் செத்தப்ப நான் அழவே இல்லையே டா!"
          ராமு.       :  " சார் நீங்க குட்டியிலேர்ந்து மாமியாரை வளர்த்தீங்களா, சார்? நான் டாமிய குட்டியா இருந்ததிலேர்ந்து வளர்த்திருக்கேன்!எனக்குத்தான் வலி.!"
********************************************************************************

மானஸ்தர்கள் தினகரனுடன் சேரலாம்!

      
( இது பில்டர் பண்ணி வடிகட்டிய கற்பனை. எவனாவது "என்னைத்தான் சொல்லிருக்கே"ன்னு கம்பு கபடாவை தூக்கிட்டு வந்தே... மவனே! சத்தியமா நான் உன் கையில மாட்டமாட்டேன்.! )

"மாப்ள. இவனுக நிச்சயம் ரெண்டு மாசம் கூட தாங்க மாட்டானுக. மானம் , ரோசம் இல்லாம பொழப்ப பார்க்கிறவனுக. நமக்கு முன்னாடியே போயி  குக்கரை  தூக்கிட்டு வாழ்கன்னு கத்தி கால்ல விழுந்துருவானுங்க.நாம்ம  பிந்துனோம்னு வெச்சுக்க. பழையபடி இவன்கிட்டதான் கை ஏந்தனும். முன்னாடியே போய் ஜோதியில சேந்தோம்னு வையி.! நாம்ம தான் சீனியர். என்ன சொல்றே?"

"கரெக்டா சொன்னடா மச்சான்! சீனியர் மட்டுமில்ல ..வட்டம் கிட்டம்னு எதாவது பொறுப்பு வாங்கலாம். இன்னிக்கே ஒரு எம்.பி. சொவத்தை தாண்டி  வந்திட்டார், "சின்னம்மாவின் செல்லப்பிள்ளையே.நாளைய மொதல்வரே! மோடிய மிரட்டும் சிங்கப்பிள்ளையே"ன்னு  வெளம்பரத்த தட்டி விட்டோம்னு வெச்சுக்கோ.அதான் நமக்கு அட்வான்ஸ் புக்கிங் மாதிரி!"

"சின்னம்மா -அண்ணன் படம் போட்ட பனியனை மொதல்ல வாங்கு! அதான்  நமக்கு மொதலு. "

"அதெல்லாம் அண்ணன் வீட்ல ப்ரீயாம் .அண்ணனை பாத்ததும் டபக்னு கால்ல விழறோம்.கூர் இல்லாத பிளேடால கைய கிழிச்சி ரத்தப்பொட்டு வெச்சுட்டு  "நீதாண்ணே சின்னம்மாவின் நிச வாரிசு"ன்னு கூவுறோம். . சுத்தி நிக்கிற அத்தனை பயலும் சேந்து கத்துவானுங்க. அப்புறம் நம்ம இமேஜ்தான் டாப்பு! டிவிகாரனுங்க அத்தனை பேரும் மூஞ்சில கொண்டாந்து மைக்கை செருகிடுவானுங்க.  பேப்பர்ல போட்டோ,பேட்டின்னு தூள் . என்ன சொல்ற?"

"அசத்துரடா மாப்ள! எனக்கொரு ஐடியா! அம்மா சமாதிக்குப் போனா அங்கேயும் டிவி பேப்பர்காரனுங்க .சும்மா கற்பூரத்த கொளுத்தி காட்டிட்டு  "அண்ணன் தினகரன் ஜெயிச்சா அம்மா சமாதில இருந்து அண்ணன் தினகரன் வீட்டுக்கு உருண்டுபோறதா பிராத்தனைன்னு " சொன்னம்னு வையி. பிரேக்கிங் நியூஸ் போட்ருவானுங்க."

"தார் ரோடுடா. ஒடம்பு வெந்திரும்"!

"அயே! அதுக்குள்ளே போலீஸ்காரனுங்க வந்து தூக்கிட்டு போயிருவானுங்க .அண்ணன் ஆளை அனுப்பி நம்மள மீட்டுருவாரு.அண்ணன் தனியா கூப்ட்டு பேசுவாரு.நெருக்கமாயிடலாம்.!"  

"மச்சான். நீ பிஜேபில இருக்கவேண்டிய ஆளு. என்னா மூளை! "

"ரொம்பவும் புகழாதே! அங்கே தமிழிசை இருக்கார்"

ஆர்.கே. நகர் தேர்தல் திமுகவுக்கு பின்னடைவா?

           "தினகரனை தோற்கடிக்காவிட்டால் நமக்கு மரியாதை இல்லை" என்று அதிமுகவும், "எப்படியாவது உங்களை வீட்டுக்கு அனுப்பியே தீருவேன்" என  டி.டி.வி.தினகரனும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைத்து  கொண்டாடிய இடைத்தேர்தல்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.
         இங்கு நடந்து முடிந்திருக்கும் முடிவு தமிழகம் முழுவதும்  வருகிற  பொதுத் தேர்தலிலும்  எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பது  கடலில் காசைப் போட்டுவிட்டு தேடுவதைப்போலாகும். 
       இரண்டு பணத் திமிங்கலங்களுக்கு இடையில் நிகழ்ந்திருக்கும் 'ஆதிக்க எல்லையை ' வசப்படுத்துவதற்கான போட்டி என்பதாகவே கருதுகிறேன். தினகரன் ஒற்றை ஆளாக இருந்தாலும் தற்போதைய எடப்பாடி- ஓபிஎஸ் அணியை தகர்ப்பதற்கான வெடிகுண்டாகவே அவரை எடுத்துக் கொள்ள முடியும். ஆட்சியில் இருக்கும் அதிமுக வினர் அதிகாரத்தை முழுமையாகவே பயன்படுத்தினார்கள்.கட்டுக்கட்டாக பணம் இறைக்கப்பட்டது. குக்கர் அணிக்கு  அதிகாரப் பலமின்றி போனாலும் பணபலத்துடன் சகல உத்திகளிலும் வாக்காளர் களை  அணுகியது.இரு அணியினரும் பணம் கொடுத்தது தேர்தல் கமிஷனுக்கும்  தெரியும்.தெரிந்தே அனுமதித்தது சகுனித்தனம்.!
          "யார் அதிகமாக பணம் தருவார்கள் "என்கிற மனப்பான்மையில்தான் வாக்காளர்கள் இருந்தார்கள். அவர்களின் சிந்தனையில் உதயசூரியனோ, இரட்டை இலையோ இருக்கவில்லை. இரட்டை இலைக்கு வாக்களித்தால்  தொகுதியின் நிலை உயரப்போவதில்லை. உதயசூரியனுக்கு ஓட்டு அளித்தாலும்  தொகுதியின் நிலை அப்படியேதான் இருக்கும். மொத்தத்தில்  அதிமுகவில்தான் மாற்றங்கள் நிகழலாம்.ஒரே ஒரு ஆள் போனால் போகட்டும் .அடுத்த தேர்தலில் எவன் இந்த அளவுக்கு பணம் கொடுக்கப் போகிறான் என்கிற மனப்பான்மையே வாக்காளர்களிடம் இருந்தது. மேலும்  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மூச்சுடைக்கத் தேவையில்லை  என திமுக கருதியதால் அவர்களின் ஓட்டுகள் சிதறிவிட்டன என்றும் கருதலாம் . ஆனால் கடந்த தேர்தலில் வாங்கிய அளவுக்குக் கூட வாங்க வில்லை என்பது பரிதாபமே!இது பின்னடைவு இல்லை என்றாலும் தொண்டர்கள் மத்தியில்  சோர்வை ஏற்படுத்திருக்கும் என நம்பலாம்.
            தினகரனின் வெற்றிக்குப் பின்னர் திமுக தலைமை எத்தகைய முடிவு எடுக்கும் என்பது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தெரிய வரலாம்.
         எடப்பாடி -ஓபிஎஸ் அணி நிலைக்குமா? அணி மாறல் நிகழுமா?
         நீக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு தினகரனுக்கு  சாதகமாக இருக்குமா?
         சசிகலாவின் பிடிக்குள் மறுபடியும் அதிமுக சிக்கிவிடுமா?
         ஊழல் குற்றவாளி என உச்ச நீதி மன்றமே சொன்ன பின்னரும் ஜெ.யின்  பெயரை உயர்த்திப்பிடிக்கிற போது  சசிகலாவின் பெயரையும் சேர்த்து சொன்னால் என்ன குடி முழுகிப்போகும் ?  
        மோடியை நம்புவதைவிட  பங்காளியை நம்பலாம் என எடப்பாடி -ஓபிஎஸ் அணி முடிவு செய்தால் அது 

நன்மையா தீமையா? ரெய்டுகள் பாயுமா?
      இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு எத்தகைய முடிவுகளை அதிமுக எடுக்குமோ அதை முன்னிறுத்திதான் திமுக முடிவு எடுக்கும்.
      வைகோவின் ராசிதான் திமுகவை தோற்கடித்திருக்கிறது என திமுகவில் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
      அது திமுக தலைமைக்குத்தான் தெரியும்!
     தினகரன் வளர்கிறார்.மறக்காதீர்.
     

திங்கள், 18 டிசம்பர், 2017

பிஜேபியின் கழுத்தை சுற்றிய கயிறு!

          எதிர்பார்த்தபடி குஜராத்,இமாச்சல பிரதேசம் இரு மாநிலத்திலும் பிஜேபி அரசு அமைக்கும் உரிமையை கைப்பற்றியிருக்கிறது. பிரதமர் மோடியின்  ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் பாராட்டாக அவரது கட்சியினர் சொல்கிறார்கள். அது அவர்களது கடமை. மிட்டாய் கொடுக்கலாம் அல்வா தரலாம்.லட்டு வழங்கலாம் .அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு!
        ஆனால் இந்தியத் துணைக் கண்டமே அவர்களை ஆதரிப்பதாக நம்பினால்  அது விழித்துக்கொண்டே  கனவு காண்பதைப் போன்றதாகும்.
        தொடர்ந்து குஜராத்தில் பிஜேபி ஆட்சி செய்தாலும் மக்களின் அதிருப்தி  வளர்ந்தபடியேதான் இருக்கிறது. 12 இடங்களை  பிஜேபி இழந்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் காங் கட்சியின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. காங். கட்சிக்கு எண்பது இடங்கள் கிடைத்திருக்கிறது. கடந்த தேர்தலை விட  அதிகமான இடங்கள் கிடைத்திருக்கின்றன. பிஜேபியின் செல்வாக்கு சரிந்தும்  காங்.கட்சியின் செல்வாக்கு உயர்ந்தும் வந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு தேர்தலும் உணர்த்தி இருக்கிறது.  மோடியும் அமித் ஷாவும் குஜராத்தின் செல்லப்பிள்ளைகளாக கருதப்பட்டவர்கள். முழு மூச்சாக வேலை செய்தாலும் அவர்களால் முந்தைய பெரும்பான்மையை எட்டமுடியவில்லை.
       "என்னை ஏன் எதிர்க்கிறார்கள்? குஜராத்தில் நான் பின்தங்கியவன் என்பதாலா ஏன்?" எனக்  கேட்டு மோடியை  கண்ணீர் விட வைத்தது இந்த தேர்தல்! ராகுலின் தலைமையில் காங்.கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ந்திருக்கிறது
      ராகுலை கடுமையாக விமர்சித்தவர்கள் பிஜேபி தலைவர்கள். அவர்களே  குஜராத் முடிவை கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.   99 இடங்கள் என்பது  ஆட் சி அமைப்பதற்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் காங்.கட்சிக்கு  80 இடங்கள் என்பது பிஜேபியின் கழுத்தை சுற்றிய கயிறு என்பதை மறக்கக் கூடாது.அது எந்த நேரத்திலும் இறுக்கலாம்!
       பிஜேபியின் மதவாத சாயம் வெளுத்துப்போய்விட்டது. இனியும் அவர்களால்  ராஜபார்ட் வேடம் போடமுடியாது. அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் மட்டுமே பயனளித்த பிஜேபியின் அரசு நடுத்தர,பின்தங்கிய  மக்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.
         "மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்கிற மோடி அவர்களே ! உண்மையாகவே  சொல்கிறீர்களா, மனசாட்சியை கேட்டுச்சொல்லுங்கள்" என்று பிரகாஷ்ராஜ் கேட்டிருக்கிறார்.
அதுவும் உண்மைதான்!

     

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஒரே நாளில் ஒரு கோடியா..... கொடுமையடா கோபாலா!

                    வானத்தில் பறந்த சைத்தானை  ஏணி வைத்து ஏறக்கியதைப்  போலாகி  இருக்கிறது  ஆர்.கே.நகரில்.! கடந்த இடைத் தேர்தலில்தான்  கத்தை  கத்தையாய் புத்தம் புது ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்கள் என்று ரத்து செய்தார்கள். மந்திரி ,அதிகாரிகள் என மாட்டினார்கள்.ஆனால் அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கையும் இல்லாமல் மறுபடியும் இடைத்தேர்தல் நடத்தினால் நேர்மையுடன் நடக்குமா? கள்ளப் புருசனை கண்டும் காணாமல்  விட்டால் சொந்தப் புருசனைதான் சந்தேகிக்க முடியும்! தேர்தல் ஆணையமே  பணப்பட்டுவாடாவுக்கு மறைமுகமாக உதவுகிறது என்றுதான் நினைக்க வேண்டும்!
          " ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது" என்பது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு. எடப்பாடி ஆட்கள் 6௦௦௦ வீதம் கொடுக்கிறார்கள் ,தினகரன் ஆட்கள் 10 ஆயிரம் வீதம் கொடுக்கிறார்கள் என்று தொகுதி முழுவதும்  பரபரப்பு பற்றி எரிகிறது.பல இடங்களில் கையும் களவுமாக பிடிபட்டதாக  மீடியாக்கள் அலறுகின்றன.  எப்பவும் இல்லாதவகையில் பிஜேபியும் லவுட் ஸ்பீக்கரில் புல் வால்யூமில் கூச்சலிடுகிறது. "தேர்தலை தள்ளி வை."!
            கன்னம் வைக்கும் வரை கையைக்கட்டி வேடிக்கைப் பார்த்துவிட்டு  திருடன் சுருட்டிக்கொண்டு போன பின்னர் "களவாணி! களவாணி" என யாரைப் பார்த்துக் கதறுகிறது பிஜேபி? 
          வீடியோ ஆதாரமுடன் ஸ்டாலின் புகார் செய்திருக்கிறார்.தேர்தலை ரத்து செய்வதை விட தொடர்புடைய கட்சியை இனி வரும் தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் செய்வதே சிறந்த நடவடிக்கையாக இரு
க்க முடியும்!

சனி, 16 டிசம்பர், 2017

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----
                  சசிகலாவை நொறுக்கத் தொடங்கி விட்டது பிஜேபி மத்திய அரசு.
                 அதன் விளைவுதான் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்  ரெட்டி உண்மையை கசிய விட்டிருக்கிறார் என்று கருத தோன்றுகிறது.
                  இது நாள் வரை ரகசியம் காத்து வந்த அப்பல்லோ மருத்துவமனை  தலைவர்  இன்றுதான் உண்மையின் சிறு பகுதியை வெளியிட்டு  இருக்கிறார்.
                "ஜெயலலிதா உடல் நிலை சீரியசாக இருக்கிறது என்பதை சொல்ல வேண்டாம் ' என அறிவுறுத்தினேன் .மக்களின் அபிமானம் பெற்ற தலைவர் என்பதால் அவ்வாறு சொல்ல அறிவுறுத்தினேன் " என்று  சொல்லி இருக்கிறார்."அறிவுறுத்தல் "என்பதை இங்கு கட்டாயப்படுத்தல், அச்சுறுத்தல் எனவும் நாம் கருதலாம்.
               விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் பிரதாப் ரெட்டி வெளியிட்டிருக்கும் உண்மை மலை அளவு கேள்விகளை எழுப்புகிறது.
              அறிவுறுத்தியதற்கு என்ன காரணம்?
               அமைச்சரவை கூடிஅந்த முடிவை  எடுக்கும்படி சொன்னதா?
              இல்லை. சசிகலா சொன்னார் என்றால் அப்படி சொல்வதற்கு  அவருக்கு என்ன தகுதி இருந்தது? எந்தப் பதவியில் இருந்தார் என்று அப்பல்லோ நிர்வாகம் கட்டுப்பட்டது?
              மக்களின் அபிமானம் பெற்ற தலைவர் என்று சொல்கிற ரெட்டி இந்த  அழுத்தத்தை மத்திய அரசுக்கு சொன்னாரா? அல்லது அன்றைய ஆளுநரிடமாவது சொல்லி இருக்கலாமே? சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று நினைத்ததாக சொல்வது நியாயமான காரணமா?
            இப்போது சொல்கிற அவர் இத்தனை காலம் அதாவது ஓராண்டு  மவுனமாக இருந்ததற்கு என்ன காரணம்?
              "ஜெ.கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்கிற சந்தேகம் வலுவடைவதற்குள்  முழு உண்மையும் வெளிவந்தாக வேண்டும். இதில் மத்திய அரசுக்கு எந்த அளவு பங்கு ? எய்ம்ஸ் டாக்டர்களும் உடந்தையாக  இருந்தனரா? வெளிநாட்டு டாக்டரை அழைத்து வந்து அவரையும் விசாரணை  வட்டத்துக்குள் நிறுத்துங்கள்.
           வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்?


"அரசியல்வாதிகளை ஏன் விட்டு வெச்சிருக்கிங்க?"

                        " சின்னவயசுப் பொண்ணு பொய் சொன்னதுக்கே கோவப் படுறிங்களே,ஏன் அரசியல்வாதிகளை விட்டு வெச்சிருக்கிங்க? குண்டர் சட்டத்திலே உள்ளே போகவேண்டியவங்க எல்லாம் வெளியே இருக்காங்களே கோவத்த வேஸ்ட் பண்ணாதிங்க. சேமித்து வையுங்க."  என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் சொன்னது நினைவுக்கு வருகிறது. சேமித்த கோபத்தில் சிறு அளவு எடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காட்டச் சொல்வாரோ என்னவோ!
                       அவர் சொல்லாவிட்டாலும் பெரும் கோபத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கிறது.
                       ஊழலில் ஊறி உப்பிப் பெருத்துக் கிடக்கிறது அதிமுக.
                       மொத்தத் தமிழ்நாட்டின் பெரும்பகுதியை ஜெயலலிதாவின்  துணையுடன் கொள்ளை அடித்துக் கொழுத்துக் கிடக்கிறது சசிகலா குடும்பம்.
                     பண முதலைகளுக்கு ஏழைகளை இரையாக கொடுத்து இந்திய இறையாண்மையை ,பொருளாதாரத்தை, சீர் கெடுத்து விட்டது பிஜேபி.
                    இந்த நான்கும் நாட்டு வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும்  நச்சுப் புழுக்கள். மதவாதம்.சாதியம் இரண்டுக்கும் மரண அடி கொடுத்தாக வேண்டும். இந்திய நாடு பல கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களை கொண்டதாகும். இதை எந்த மதத்துக்கும் எழுதிக்கொடுக்க அது விலை பொருள் அல்ல!
                    மாநில சுயாட்சியின் கழுத்தை நெரிப்பதற்கு ஆளுநரின்  கையில்  கயிறு ! அதை முழுமையாக எதிர்க்கக்கூடிய கட்சிகள் திமுக.வுக்கு துணை நிற்கின்றன.தமிழ் இனம்,மொழி காப்பதற்கு வலிமையான பேரியக்கம் வரும்வரை திமுகவை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
                   கோபத்தைக் காட்டுங்கள்!

வியாழன், 14 டிசம்பர், 2017

குஜராத், இமாச்சலம் பிஜேபி.யின் வெற்றி ?

                  ஆற்றில் வெள்ளம் ஓடும் போதே  எத்தனை மீன்கள் வலையில் சிக்கும் என்பதை எப்படி கணிக்க முடியாதோ அப்படித்தான் தேர்தல் முடிவுகளையும் முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இக்காலத்தில் இரண்டாயிரம் பேரிடம் கருத்துகளை கேட்டு விட்டு இரண்டு லட்சம் வாக்காளர்களின் முடிவு இப்படித்தான் இருக்கும் என சொல்ல முடிகிறது.
                அது பெரும்பாலும் சரியாகவும் இருந்து விடுகிறது.
                 அப்படித்தான் குஜராத் தேர்தலில் 11௦ இடங்கள்  வரை பிஜேபி.க்கு கிடைக்கும், காங்கிரசுக்கு 7௦ இடம் வரை கிடைக்கலாம்  என  தொலைக்காட்சி கள் கணக்கு போட்டிருக்கின்றன.
                ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வழியாக கோல்மால் பண்ணமுடியும் என்பதாக எதிர்க்கட்சிகள் சொல்வதுடன் நிரூபித்தும் இருக்கின்றன. வட நாட்டில் வாக்குச்சீட்டுகள் போட்டு நடந்த தேர்தல்களில் காங்.கட்சி வெற்றி பெற்றும் எந்திரங்கள் உதவியுடன் நடந்த தேர்தல்களில் பிஜேபி.யும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆட்சியில் அமர்ந்திருக்கிற ஆளும் கட்சிகள் அதிகாரம், பணம்,மிரட்டல்,தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன.
             என்ன, பிஜேபி.ஆட்சியில் அதிகமாக நடக்கின்றன. சட்டத்தை வளைத்துப் போட்டு இந்தியாவின் முழுமையான அதிகாரத்தை கைப்பற்றி  சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு பிஜேபி முயன்று கொண்டிருக்கிறது.
           மத ரீதியான நிர்வாகத்தை இந்தியாவில் நிறுவுவதுதான் ஆர்.எஸ்.எஸ். அண்ட்  பிஜேபி கம்பெனியின் நோக்கம்.இந்தியாவின் பொருளாதாரம் புதை குழிக்குள் போய் விட்டது என்று பிஜேபியின் தலைவர்கள் யஸ்வந்த் , சத்ருகன் சின்கா, பொருளாதார வல்லுநர்கள் கதறியும் கேளா காதினராக மோடியும் மற்றவர்களும் இருக்கிறார்கள் .
         இது இந்தியாவின் தலை எழுத்து.
         என்று மாறுமோ? மக்கள் விழிப்பது எந்நாளோ?


 

புதன், 13 டிசம்பர், 2017

வேட்டியை மடிச்சுக் கட்டுனா எச்.ராஜா ரவுடியாம்....!

              இந்தியா எங்கே போயிட்டிருக்குன்னு தெரியல. ஆட்சி அதிகாரம் நல்லவங்க கையில்தான் இருக்காங்கிறது தெரியல. எலியை கவ்வும் பூனை  அதை கொஞ்ச நேரம் அங்கிட்டும் இங்கிட்டுமா தள்ளிவிட்டு விளையாடி விட்டு அப்புறம் ஒரே முழுங்குதான்! அது மாதிரி மக்களுக்கு வேடிக்கைக் காட்டி விட்டு அப்புறமா ஒரே போடா போட்டுருவாங்களோ என்னவோ!
          ஒரு நாளைக்கு பிரதமர் மோடியின் சாப்பாடு செலவு நாலு லட்சமாம். சாருக்கு தைவான் நாட்டு காளான்தான் வேணுமாம். பாரதமாதாவின் புத்திரனுக்கு இந்திய மண்ணில் விளைந்த காளான் பிடிக்காது.குஜராத் வேட்பாளர் அல்பேஷ் தாக்கூர் என்பவர் சொன்ன தகவல் இது.பிரதமராக இருக்கிறவர் ஒரு நாள் சாப்பாட்டுக்கு நாலு லட்சம் செலவு பண்றது தப்பு இல்லை.
            வெங்கம் பயலா வீதியில் திரிந்து கொண்டிருந்தவன் கவுன்சிலர் ஆனதும் கார்கள். வீடுகள்னு வெறப்பா திரியிறபோது  சாப்பாடு செலவு பத்தி  பேசறது தப்புதான்!
              ஆனா 'வேட்டியை மடிச்சு கட்டுனா நான் கூட ரவுடிதான்'னு பிஜேபியின்  தேசிய செயலாளர் ராஜா சொல்றதுதான் வேடிக்கையா இருக்கு. ரவுடிக்கு அடையாளம் வேட்டிய மடிச்சுக்கட்டுறதுதான் என்பதை எப்படி கண்டு பிடிச்சார்னு தெரியல.கோவணம் கட்டுனவனல்லாம் பழனி ஆண்டின்னு  சொன்னாலும் சொல்வார் போல.! பனி காலம் வந்திட்டா இப்படியெல்லாமா  பேசுவாங்க.!
          ஆர்.கே.நகர் வாக்காளர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ! பணமா கொட்டுதாம்.குறைஞ்ச தொகை ஆறாயிரம் உறுதிங்கிறாங்க.!ஒருநாள் செலவு தினகரனுக்கு மூனரை கோடின்னு சொல்றாங்க.கட்சி இல்லை கொடி இல்லை.
சின்னம் இல்லை .இவர் பண்ற ரவுசு தாங்க முடியலிங்க.
          இன்னிக்கி பத்திரிகையாளர்களுக்கு அதிமுக வினர்  சர்க்கரை பொங்கல்  விருந்து. மூக்கை பார்த்தே குத்து விட்டிருக்காங்க. செல்போன்களை பறிங்கிட்டு பயம் காட்டியிருக்காங்க.போகப்போக இன்னும் என்னென்ன விருந்தெல்லாம் கிடைக்கப்போகுதுன்னு தெரியல!
   
  

திங்கள், 11 டிசம்பர், 2017

"நிர்வாணமாவதைப் போல உணர்கிறேன்"-தீபிகா

      இதுதான் காதலா.....தெரியவில்லை!
      பாலிவுட் ரன்வீரும் தீபிகா படுகோனும் 'பத்மாவதி' படத்தில் நடித்திருக்கிறார்கள். முகலாய மன்னனாக ரன்வீரும் சித்தூர் ராணியாக  தீபிகாவும் வருகிறார்கள். "தங்களை இழிவு படுத்திவிட்டதாக " ரஜபுத்திரர்கள் கடும் எதிர்ப்புக் காட்டி வருவதால் படம் வெளியாகவில்லை.
 ஆனால் ரன்வீர் - தீபிகா காதல் வெளியாகி இருக்கிறது. தீபிகாவின் வார்த்தைகள் உதடுகள்  ஒப்புக்கு உச்சரித்ததாக தெரியவில்லை. அகம் விரிந்து முகம் மலர்ந்து உதடுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது கிறக்கமுடன்தான் தீபிகா சொல்லியிருக்கிறார்.
                  " ரன்வீர்  எனது  ஆருயிர்  நண்பர். நான் சீக்கிரமே  உணர்ச்சி வயப்படுகிறவள். 
                  இது  மட்டுமல்ல.என்னை சுலபத்தில்  காயப் படுத்திவிடமுடியும் .கடும் சொற்களை  தாங்க முடியாது. அன்பினால் என்னை  கட்டிப் போட்டுவிடமுடியும்.
               ரன்வீர்  எதிரில்  வந்து விட்டால் என்னையே  நான் இழந்து விடுவேன். ஆடைகள் அணிந்திராத  ஓர் உணர்வு! அவர்  என்னை ஒருபோதும்  காயப் படுத்தியதில்லை. என்னை அடைந்து விடமுடியும் என நினைத்ததில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல், இணக்கம் இருக்கிறது. காரணம்  நான் அவரை காதலிக்கிறேன். மதிக்கிறேன். உள்ளார்ந்த  அன்பு  இருக்கிறது"---என்கிறார்  தீபிகா படுகோனே.


    

பொம்பளை மட்டும்தான் பாக்கி..மது,மட்டன் ,சிக்கன் தாராளம்!

                    திட்டமிட்டபடி  ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடக்குமா?
               நடக்கிற அத்துமீறல்களைப் பார்த்தால் சந்தேகமாகத்தான் இருக்கிறது. கண்காணிப்பாளர்கள் வெற்றுப் பார்வையாளராகவே இருக்கிறார்கள். அதிமுக வினர் வார்டு தோறும் வகை வகையாக அன்பளிப்பு வழங்கி வருகிறார்கள்.
                    " குஜிலியைத் தவிர மத்த எல்லாமே கிடைக்கிதய்யா! கோழி பிரியாணி ,மட்டன் பிரியாணி , குவார்ட்டர்,   ஆறாயிரம் பணம்னு அள்ளி வீசுறாங்க.செம கவனிப்பு! எல்லாத்தையும் அனுவிச்சிட்டு வேற கட்சிக்கு ஓட்டுப்போட்டா  தொகுதிக்கு ஒண்ணுமே செய்யமாட்டோம்னு ஓப்பனாவே சொல்றாங்க.என்ன செய்ய முடியும்?" என்று என்னிடம் புது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த ஒருவர் சொன்னார்.
                 " அந்த அம்மா செத்த பிறகு பயம் விட்டுப்போச்சுங்க.அதிகாரிகளும்  ஆட்டய  ஆரம்பிச்சிட்டாங்க! ஏதாவது கேட்டா போலீசைக் காட்டி பயமுறுத்துறாங்க.தொகுதியே நாச காடா கிடக்கு!" என்றார் இன்னொருவர்                போதாகுறைக்கு பிஜேபியும் பீரங்கி தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. "ஒழுங்காக தேர்தல் நடக்குமா என்று தெரியவில்லை.பணம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்" என்று தமிழிசை குற்றம் சாட்டியிருக்கிறார். அதாவது கடிவாளத்தை கையில் பிடித்திருக்கும் ஆள் குதிரை மக்கர் பண்ணுகிறது என்று சொல்வதைப் போல!
            சாட்டையினால் நாலு இழுப்பு இழுத்தால் சண்டித்தனம் பண்ணுமா குதிரை? ஒரு வேளை சூட்டுக்கோலை வைத்து இழுக்கப்போகிறோம் என்பதற்கு முன்னோட்டமாக இப்படி சொல்கிறாரோ என்னவோ? திடீர் என்று ஒரு நாள் இடைத்தேர்தல் ரத்து என்று அறிவிக்கப்படலாம் என்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.அந்த அளவுக்கு அராஜகம் ஆர்கே.நகரில் கொடி கட்டியிருக்கிறது.
                  தேர்தல் ரத்து செய்யப்படுமானால் அடுத்தது 'ஆட்சிக் கலைப்பு'தான் என்கிற பயம் அதிமுக வுக்கு வந்திருக்கிறது.நம்மால் ஜெயிக்கமுடியுமா என்கிற அச்சம் இருந்தாலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கட்டாயமும் இருக்கிறது.
                பார்க்கலாம்.!     

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

பெண்ணை உரசுவதில் அப்படி என்னடா இன்பம்?

                            சிலருக்கு மனைவியின் கால்களை உரசுவது அந்தரங்க சுகம். படுக்கை அறை சரசம்!   அந்த உரசலை  பொது இடங்களில் மற்ற பெண்களிடம் காட்டுவது என்ன நாகரீகமோ? நாய்க்கு செக்கும் தெரியாது .சிலையும் தெரியாது. காலை தூக்கி நிற்கும்!
                    அதைப் போலவே சில ஆண்களும்!
                   தங்கல் இந்தி படத்தில் நடித்திருக்கும் ஜைரா வாசிமுக்கு வயது பதினேழு. பருவம் செழித்து வளர்ந்து திமிறும் உருவம்.டெல்லியிலிருந்து  மும்பைக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். 'ஏர்-விஷ்டரா '
               . இரவு என்பதால் மங்கிய ஒளி. உறங்கிய நிலையில் அனைத்துப் பயணிகளும்!
                  ஜைராவின் பின்பக்க ஆசனத்தில் படுத்திருந்த நடுத்தர வயது ஆணுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.அவனது பார்வை எல்லாம் அந்த டீனேஜ் நடிகை மீதே! இருக்கைக்குக் கீழே காலை நுழைத்து நடிகையின் கால்களை  தடவுகிறான்.
               பயந்து போன ஜைராவுக்கு பயம். யாரை அந்த இரவில் அழைப்பது? பயத்தைப் பயன்படுத்திக்கொண்ட பன்னாடை கழுத்தை தடவினான். அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.எப்படியோ அந்த இருட்டிலும் செல்லில் படம் பிடித்து விட்டாள்.
              மும்பையில் இறங்கியதும் தனது இன்ஸ்ட்ரா கிராமில் அழுதபடியே  நடந்ததை பதிவு செய்ய விமான நிலைய அதிகாரிகள் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.
             இதே நடிகைதான் திரை அரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்க மறுத்து விட்டாள்.மற்றவர்கள் கண்டித்தும் கேட்கவில்லை. இதனால்  நடிகையை சீண்டியதை நியாயப்படுத்தவில்லை.

மகளை புணர்ந்த அப்பன்...ச்சே .காட்டுமிராண்டி!

                        " மன்னனாக இருந்தவன் பெற்ற தாயை புணர்ந்திருக்கிறான் .மகளை மஞ்சத்தில் சாய்த்திருக்கிறான்  என்று சரித்திரம் சொல்லும்போது சாதாரணன் நான்  செய்தால் தவறாகிவிடாது " என்று எவனாவது சொன்னால் அது அழுகிய நாக்கு!
                    முறை தவறிய உறவு செய்பவனின் குறி ரணமாகிவிடும் என்கிற  ஆபத்து  இல்லாத காரணத்தால் பாலியல் வன்புணர்வு குற்றம் நாட்டில் பரவிக்  கொண்டிருக்கிறது. உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. பூகம்பத்தினால் சுனாமியால்   உயிரைத்தான் எடுக்க
முடியும்.ஆனால் வன்புணர்வு மனிதம் தின்றுவிடும்! தாய்மை செத்து விடும்!
                 கடவுளின் தேசம் என சொல்லப்படும் கேரளத்தில் விழுந்த பேரிடி!
                 மகளுக்கு பதிநான்கு வயது. ஏழாம் வகுப்பு பயில்கிறாள்...!
                அப்பனுக்கும், அம்மைக்கும் கசப்பு.விலகி சென்றுவிட்டாள் அம்மை.
                தந்தையுடன் வாழ வேண்டிய கட்டாயம் மகளுக்கு! விலகிச்சென்ற தாய்க்கு மகளை தன்னுடன் அழைத்துச்செல்லவேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன என விட்டுச்சென்று விடுகிறாள். தன்னாலேயே அவனுடன்  வாழ முடியவில்லையே மகளால் மட்டும் எப்படி இருக்க இயலும் என்கிற எச்சரிக்கை உணர்வு சற்றும் இல்லாத  அவளும் ஒரு வகையில் காட்டுமிராண்டிதான்!
              ஒரு நாள் இரவு!
              கையில் கோடரியுடன் அசந்து உறங்கிய மகளை உசுப்புகிறான்.
             "சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன்" என சொல்லி வன்புணர்வு  கொண்டான். அருவாள்,கோடரி யை காட்டியே மூன்று ஆண்டுகள் வேட்டை ஆடியிருக்கிறான்.
            அந்த கன்று எத்தனை காலம்தான் எருமையின் வெறிக்கு இரையாக இயலும்? அம்மாவிடமும் செல்ல முடியாது.அப்பனும் அரக்கனாக இருக்கிறான்.
           காவல்தெய்வமே காப்பாற்று என காவல் நிலையம் சென்று விட்டாள்.
                

விஷால் அரசியல்வாதியா?

                              நான் அரசியல் பேசினால் அரசியல்வாதி  ஆகி   விடுவதில்லை .எனக்கு  சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது.கவலை இருக்கிறது. எனது கடமை  தீயவன் கையில் அதிகாரம் போய்விடக்கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டுப் போடுகிறவன்.வசதி இருந்தால் வேட்பாளனாகவும்  நிற்கலாம் . அதனால்  எனக்கு சுயேச்சை என்கிற பெயர்.
             அரசியல் பேசுவது உரிமை.யாரும் பேசலாம்.விஷால் பேசினால் என்ன குடிமுழுகிப் போகும்? அந்த நடிகரைக் கண்டு எதற்காக ஆளும் கட்சி பயம்  கொள்கிறது? ஒரு சுயேச்சையைக் கண்டு அதிர்வதேன்? தோற்கடிக்கும் வலிமை இருப்பின் பொறுப்புத்தொகையை இழக்கச்செய்யலாமே!
          உச்சநீதிமன்றத்தினால் குற்றவாளி என சுட்டிக்காட்டப்பட்டவர்களுக்கு  மாலை போட்டு மண்டியிட்டு வணங்கும் அடிமைகள் ( அவர்களே  தங்களை  இப்படித்தான் சொல்லி விளம்பரப்படுத்தினார்கள்.) சின்னம் கிடைத்து    விட்டதால்  வெற்றி பெறுவது சுலபம் என நினைக்கிறார்கள். காய்ந்த இலையில் கறிச்சோறு பரிமாற முடியுமா?
        ஒகி புயலால் உடைந்து கிடக்கும் குமரி மாவட்டத்துக்கு செல்ல எடப்பாடி ,ஓபிஎஸ் இருவருக்கும் வழி தெரியவில்லை.வாகனமும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகரில் புதையலைத் தேடுகிறார்கள்.அதை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன!
      களவாணியை கக்கத்தில் வைத்துக்கொண்டே 'பட்டணம் பறி போகிறது' என்கிறது பிஜேபி. சாலை மறியல் என்கிற  நாடகம் வேறு! ஓரங்க நாடகம் போட்டாலே ஆள் சேராது.இதில் இப்படி ஒரு கூத்து.! 
     இந்தியாவின் உயர்ந்த அதிகாரத்துடன் இருக்கிற நீதிமன்றத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப் பார்க்கிறது மத்திய பிஜேபி அரசு. வருமான வரித்துறை,உளவுத்துறை, சிபிஐ மூன்றும் தனது சுய அதிகாரம் இழந்து அரசிடம் அடமானம் போய்விட்டது.தற்போது மிச்சம் இருப்பது நீதித் துறை  மட்டுமே! அதுவும் ஐசியு போகிறது என்பதை முன்னாள் நீதியரசர்கள்  சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
           

ஜெ.மரணமும்.புருஸ்லீ மரணமும் ,

           கடுமையான தலைவலி என்று சொல்லி  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில்  கொண்டு  செல்லப்பட்ட  புரூஸ்லீயை  சடலமாகத்தான் எடுத்து வந்தார்கள்.
          உருக்கு போன்ற உடல்.உள்ளமோ திடம், குறைந்த வயது .
         "இவ்வளவு சின்ன வயதில் மரணமா?" என்று உலகமே அழுதது.
         "மரணத்தில் மர்மம் இருக்கிறது" என்றார்கள்.ஜெயலலிதாவின் மரணமும் அத்தகையதுதான் என்று சொல்லலாம். "மரணத்தில் மரணம்" என்பது   துணை முதல்வராக இருக்கிற ஓபிஎஸ்.விதித்த நிபந்தனைகளில்  ஒன்று என்று சொல்லலாம்.
         லீயின்  மரணத்துக்குக்காரணம் அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளே காரணம் என்றார்கள்.மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர்  அவருக்கு மருந்து கரைசல் புகட்டப்பட்டிருக்கலாம் என்பது ஒரு செய்தி. அவருடைய காதலி அடிக்கடி தவறான மருந்தைக் கொடுத்து வந்திருக்கலாம்  என்றும் சொன்னார்கள்.
    மருத்துவமனைக்கு ஜெ.மயக்க நிலையில்தான் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.நினைவுடன் இருந்தார் ,இல்லை என இரு கருத்துகள்  உண்டு."இட்லி சாப்பிட்டார்" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  சொன்னார். "யாரையுமே பார்க்கவிடவில்லை" என்று பின்னர் சொன்னார்கள். சசிகலா ஒருவர் மட்டுமே ஜெ. பக்கம் இருந்தார்.அவர் மட்டுமே அந்த அறைக்கு சென்று வந்தார் என்றும் இப்போது சொல்கிறார்கள்.
    ஜெ.க்கு தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டது,இல்லை என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரலாம்.
    ஆனால் நேர்மை?

சனி, 9 டிசம்பர், 2017

மனைவிதான் சொர்க்கம்.!

                            தன்னை மறந்து ஊஞ்சல் ஆடுகிற அந்த அழகி மணமானவளா, திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவளா,காதலை மனதில் இருத்தி  அவன்  வருகையை எதிர்பார்த்து  ஆடுகிறவளா...யாருக்குத் தெரியும்? ஒருவேளை  மணமானவளாக  இருப்பின் முந்தைய இரவின் ஊடலில் தொடங்கி உடல்  கலந்த அந்த இனிய நிகழ்வை நினைத்து ஆடுகிறாளோ? இருக்கலாம்!!
                        ராஜா ரவிவர்மாவின் அந்த ஓவியம் பார்த்தபின் ரத்த நாளங்களில்  அலைகள்.!மலர்ந்தும் மலராத மலரைப் போல தெரிகிற கச்சை அணியா  மார்பு, காற்றின் வேகத்தில் உடலுடன் ஒட்டிவிட்ட மெல்லிய சேலை, தொடைகளின் செழுமை, அடடா...அற்புதமான கனவுடன்தான்  தூரிகையும் தொட்டு ஆனந்தம் பெற்றிருக்கிறது,!  ஓவிய ராஜாவை நகல் எடுக்க எவரும் இல்லையோ ....எனது சிற்றறிவுக்கு தெரிந்தவரை  ஓவிய திலகம் மாதவனை சொல்லமுடிகிறது. சிறந்தவர்கள் இருக்கலாம்.அவர்களது படைப்புகளைப் பார்க்காமல் ஒப்பீடு செய்வது பிழைதான்!
                  ஆனாலும் ஊஞ்சல் அழகியின் ஒய்யாரம்,திமிர் என சொன்னாலும் குற்றம் இல்லை, நம்மை வெகுவாக பாதிக்கிறது.இவ்வளவு நீளமுள்ள அடர்த்தியான கூந்தலை இன்றைய பெண்களிடம் காணமுடியாது. கூந்தலை  படுக்கையாக பயன்படுத்தி கணவனுடன் உறவு கொண்டபின்னர் தலை குளிப்பது மற்றவர்களுக்கு அடையாளம் உணர்வதற்காகத்தானோ! ஞாயிறு இரவு முடிந்து கதிரவன் உதிப்பதற்கு முன்னதாகவே இன்றைய இல்லத்தரசிகள் தலை குளித்துவிட்டு வந்தால் சக பெண்களின் கிண்டலுக்கு  ஆளாவதை பார்த்திருக்கலாம்.
                சிற்றின்பம்தான் பேரின்பம்.! அது சொர்க்கத்தில் இல்லை. சொர்க்கமே  பெண்கள்தான்! மனைவியை  இழந்த கணவனும், கணவனை இழந்த பெண்களும் வாழ்வதுதான் நரகம்.! சிற்றின்பம் தீயது என்று யாருடைய மனமும் சொல்வதில்லை! ஆன்மீகம் சொல்கிறது என்பது அவர்களது இயலாமையினால் இருக்கலாம்!
                    ஆலயங்களில், திருத்தேர்களில் சிற்றின்ப படைப்புகள் இன்றும்  காணப்படுகிறதே....!
                   செத்தபின்னர் மண்ணோடு மண்ணாகவோ,மாறப்போகிற உடம்புக்கு சிவலோகம் என்ன,வைகுண்டம் என்ன..?
                 வாழும்போதே பேரின்பம் பெருகட்டும்! சொர்க்கமே மனைவிதான்!

வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஆர்.கே.நகரில் ஜனநாயகம் ஜெயிக்குமா?

                                           இந்திய வரலாற்றில்அடிமை வம்ச ஆளுகை என்றோ மரித்துப் போன சடலம் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம்." இல்லை இல்லை ! இன்று தமிழ்நாட்டில் அதை உயிர்ப்பிக்கும் முயற்சியில் சிலர் மந்திரம் சொல்லிவருகிறார்கள்" என்கிற அசிரீரி ஈசானிய  மூலையிலிருந்து வருகிறது !அந்த மூலையில் படுக்கை அறை அமையக்கூடாது என்பது வாஸ்து.
                        ஆனால் படுக்கையைப் போட்டதுடன் நிற்காமல் அதில் தாம்பத்யமும் நடத்தினால் நாடு உருப்படுமா...அதனால்தான் குமரி அலைகடல் கொந்தளித்து உயிர்களை கொள்ளை கொண்டு போய்விட்டது போலும்! என்ன கொடுமை அய்யா! எத்தனையோ மீனவர்களின் உயிரை தனது தாலியில் சுமந்து கொண்டிருக்கிற பெண்களின் கண்ணீரை துடைப்பதற்கு முதல்வர் என்கிற மனிதர் வருவார் என்று காத்திருக்க யாருமே  வரவில்லை என்றால் தாய்க்குலம்தான் என்ன செய்யும்?
                    சைரன் இல்லாமல் ஆம்புலன்ஸா? சல்யூட் அடிக்காமல் போலீசா?  அங்கேதான் அடிமைவம்சத்தின் விசுவாசம் சைரன் இல்லாமலும்,தொப்பி  வைக்காமலும் தரையில் தண்டனிட்டு வடக்கு திசைக்கு வணக்கம் சொல்லி  வழி விட்டிருக்கிறது.இதற்கு பரிசு ஆர்கே நகரில் கொடுப்பதற்கு வடக்கும்  வாக்குக் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.பண நாயகத்துக்கு முதல் பலியாக விஷாலின் வேட்புமனு வெட்டப்பட்டிருக்கிறது.
                 ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு எங்கிருந்தெல்லாம்  கொடும் கரங்கள் நீளுமோ? தெரியவில்லை.வலிமை மிகு திமுகழகம் எப்படி சர்வாதிகாரத்தை சந்திக்கப்போகிறதோ தெரியவில்லை. வாக்குப்பதிவு நாளன்றுதான் அவர்களுக்கு விலங்கா, விடுதலையா என்பது விதிக்கப்பட்ட விதி!அச்சுறுத்தலை எப்படி அந்த கழகம் எதிர்கொள்ளப்போகிறதோ தெரியவில்லை.அருவாளைக் காட்டி வன்புணர்வு கொள்வது மாதிரியான இழிசெயல் என சொல்லலாமா?
             உண்மையிலேயே திமுகவுக்கு சோதனைதான்!
 

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

முதலிரவு பால் குடிக்கும் ரகசியம்.

                                  முதலிரவு. அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. இரவில் இருவரும் முதன்முதலாக சந்திக்கிறார்கள். மாப்பிள்ளை கட்டிலில்  காத்திருக்கிறான்.அவனது கனவு,எண்ணம் எல்லாமே அவளுடன் கூடும் ஆசையாகவே இருக்கும். பெரும்பாலும் அவன் பதட்டப்படுவதில்லை.

                                ஆனால் அவள் அப்படி இருக்கமாட்டாள்.

                             அம்மாவோ,அக்காவோ யாரோ ஒருவர் அவளின் கையில் பால் சொம்பு கொடுத்து சில பல உபதேசங்கள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்க ...அவள் பதட்டப்படுகிறாள். "அவர் பேசுவாரா அல்லது நாம் முதலில்  பேசுவதா?"

                  அவளை பெயர் சொல்லி அழைப்பதா அல்லது "ங்க" போடுவதா ...அவனுக்கும் படபடப்பு.

                எப்படியோ..."வாம்மா ..வசந்தி!" என்கிறான். "ம்" என்கிறாள் அவள். வந்ததும் அருகில் இருந்த மேஜையில் பால் சொம்பை வைத்து விட்டு அவனது பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு மஞ்சள் மணம் மாறாத தாலியையும் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள்.

               சில வினாடிகள் மலர் மணம் தவிர அந்த சிற்றறையில் வேறு மணம் எதுவும் இல்லை. மின் விளக்குத் தவிர அகல் விளக்கும் ஒளிர்கிறது.

             புதிய பஞ்சு மெத்தையை லேசாக தட்டி ''உக்காரேன்...பேசுவோம்."! என்றான். அவளும் உட்கார்ந்தாள். "என்னத்த பேசறது? காலாகாலத்தில் லைட்ட அணைக்காம?" அவனது உள்மனம் சொன்னாலும் அடக்கமுடன் இருந்தான். அவளுக்கு சங்கடம்தான்.உட்கார சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் இருந்தால் அவள்தான் என்ன செய்வாள்? மெதுவாக எழுந்து பால் சொம்பிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றி நீட்டினாள்.

              பயலுக்கு சினிமா ஞாபகம். "உன் உதடு இருக்கிறபோது இது எதுக்கு வசந்தி பாலு?"என்று அவளை  தன்பக்கமாக இழுத்து அமர்த்திக்கொண்டான்.

                  "அப்படி எல்லாம் சொல்லாதிங்க"என அவனது வாயை மருதாணி பூசியிருந்த விரல்களை கொண்டு பொத்தினாள்.

                  "ஏன் அப்படி சொல்லக்கூடாதுங்கிறே"?
                   இருவர்க்கும் வெட்கம் விலகிவிட்டது என்றே சொல்லலாம். தொட்டாச்சு .பேசியாச்சு.அப்புறம் என்ன? தெளிவாகப் பேச ஆரம்பித்தாள். எல்லாப்  புகழும் சொல்லிக்கொடுத்து அனுப்பியவர்களுக்குத்தான்!

                  " புது வீட்டுக்கு போறபோது பால் காச்சுறோம்.பொங்கலுக்கு பால் பொங்கல்தான் முக்கியம்.பால் பொங்கணும்.அப்புறம் அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டிருக்கிற ஜீவனுக்கு பால்தானே ஊத்துறோம்.பசு மாடு காமதேனுவாம்.தாய்ப்பாலுக்கு சமமா பசுப்பால்தான்."

              "வசந்தி..சும்மா சொல்லக்கூடாது.ஆயிரம் காலத்துக் கிழவிதான் நீ" என்று செல்லமாக கன்னத்தில் ஒரு கிள்ளு !" ம்ம்..அப்புறம் ?"  

          இப்பத்தான் அவளுக்கு நிஜம்மாகவே மனசு தடதடக்கிறது.

         அவனை பார்க்காமல் அகல் விளக்கை பார்த்து பேசினாள்.

         "பால்ல குங்குமப்பூ போட்டுருக்கு.நாம்ப ஒண்ணா சேர்றபோது ரெண்டு பேர் உடம்பும் சூடாகுமாம்."

         "ஓ...அப்படியா கண்ணு?"

           "கிண்டல் பண்ணாதிங்க.சூட்டுக்கு பால் நல்லது. சீக்கிரமா குழந்தை பெத்துக்க முடியும்..உயிரணு அதிகமாகுமாம்.உடம்பு களைச்சாலும் நல்ல தூக்கம் வரும்.அதனால்தான் முதலிரவில் பால் குடிக்கிறது" என்று சொல்லி முடித்தாலோ என்னவோ மின் விளக்கை முதலில் அணைத்தான்.
     
                                 

                       

விஷாலை தினகரன் ஆதரிப்பாரா?

                              ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட்டால் அது  ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம். ஊகிப்பது தவறில்லையே!

                            குறிப்பாக பிஜேபியை மேலும் பின்னோக்கித் தள்ளிவிடும் என்கிறார்கள்.தற்போது அந்தக் கட்சிக்கு  ஜாமீன் கிடைக்குமா ,கிடைக்காதா என்று  சூதாட்டமே  நடக்கிறது. "நமக்குப் பின்னால் இடம் பிடிக்க ஒரு கட்சி இருக்கிறது " என்கிற ஆறுதல் நாம்தமிழர் கட்சிக்கு கிடைக்கலாம்.

                    மற்றொன்று டி.டி.வி.தினகரனுக்கு போட்டியிடுகிற வாய்ப்பையே தரக்கூடாது என்கிற   முனைப்புடன் அதிமுக  இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்கிற  நாளன்று தினகரன் அதிகமான கார்,வாகனங்களில் வந்து  மனு தாக்கல் செய்தார் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து குறுக்குச்சுவர்  எழுப்பலாம்.அப்படி தடை ஏற்படும் பட்சத்தில் தினகரன் அணியினர்   விஷாலை ஆதரிக்கலாம்அல்லவா? இருபது சதவிகிதம் தெலுங்கு பேசுகிறவர்கள் தொகுதியில் இருக்கிறார்கள்.மற்றும் மீனவர்கள் அதிகமாக  வாழ்கிற பகுதியில் விஷாலின் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. மற்ற நடிகர் மன்றங்களும் இருக்கின்றன.அவைகளின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

              விஷாலை தோற்கடிக்கவேண்டும் என்பதில் தயாரிப்பாளர்களில் ஒரு  குழுவினர் இறங்குவது உறுதி. ஏற்கனவே அந்த சங்கம் பிளவு பட்டுத்தான் இருக்கிறது. அடுத்தவாரம் நடக்கவிருக்கும் பலப்பரிட்சையில் தெரிந்து விடும். கந்துவட்டி பிரச்னையில் அன்புச்செழியனை கைது செய்யக்கூடாது .நடவடிக்கை எடுக்கக்கூடாது என விஷாலுக்கு எதிராக பணத்தை கொட்டவும்  தயார் என்பது இன்றைய நிலை. ஆனால் திரை உலகத்தில் தினகரனை ஆதரிக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் சரியான டைம் பாம் மாதிரி.! இவர்கள் பகிரங்கமாக வெளியில் வருவதில்லை.

                   விஷால் போட்டியிட்டால் அது மும்முனை போட்டியாகவே இருக்கும்.திமுக- அதிமுக.-விஷால் என வரிசைப் படுத்திக் கொள்ளலாம்.   தினகரன் நிற்கும் நிலை வந்தாலும்  இத்தேவரிசைதான்! ஊகம்  தானே!


   

சனி, 2 டிசம்பர், 2017

காமம் இல்லா காதல் சாத்தியமா?

                          "இது என்ன கேள்வி .....காமம் இல்லாத காதல் சாத்தியம்தான்"  சிலர் சொல்லலாம்.வாதிடலாம்.ஆனால் செயலளவில் ?

                         "இயலாது" என்பதே எனது கருத்து. காரணம் 'மனிதம்' என்பது பலவீனமாகிவிட்டது. 'மிருதம்' கலந்துவிட்டது .'டெஸ்ட்ரோசன்' எனும் ஹார்மோன் ஆணிடம் இருக்கும்வரை அவனுள் காமமும் இருக்கும். காமம்  இல்லாத கடவுளர்களை கதைகளில் படிக்க முடிகிறதா? எல்லாவித சக்திகளையும் அடக்க முடிகிற ஆண்டவனால் காமத்தை அடக்கமுடிய  வில்லையே! ஆனால் காமத்துக்கும் ஒரு எல்லை இயலாமை.மூப்பின் முதிர்ச்சி.ஆனால் வக்கிரபார்வை வழியே காமம் வழியும்!

            ஆனால்  இலட்சியநோக்குடன் ,உறுதியான மனமுடன்,மரணம் வந்தாலும்  அஞ்சேன் என கொள்கை நடை போடுகிறவர்களை காமம் தொட்டுப் பார்ப்பதில்லை.வெகு சிலரே காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.மணம் முடிந்த பின்னர் காமம் என்கிற நெறியில்  வாழ்ந்தவர்கள் இல்லாமல் இல்லை.

          எனக்குத் தெரிந்தவரையில் அதாவது வாசித்தவகையில் எனக்குப்பிடித்த ஒரு சித்தாந்தவாதி யூத இனத்தைச்சேர்ந்தவர்.அவரை ஜெர்மானியர்கள்  வெறுத்தனர்.விரட்டினர்.எத்தனையோ சோதனைகள்.அதனை கடந்து  இடம் பெயர்ந்து சென்றபோதெல்லாம் பெண்மணி ஒருவர் உடன் சென்றார். அந்த  அணங்கு இல்லாதிருந்தால் நமக்கு மூலதனம் கிடைத்திருக்குமா ? இன்றைய  அறசீற்றங்கள் , வெகுண்டேழுதல் இவைகளுக்கு வேர்தான் மூலதனம்.
          
                  "என்னுடைய மகன் உனக்கு ஏற்றவன் அல்லன் " அந்த தத்துவ ஞானியை பெற்ற தந்தை சொன்னதை ஏற்க மறுத்து அந்த பெண் ஞானியுடன்  பயணப்பட்டார்.காதலை மறக்கவில்லை.
             
            "இனி வரும் அத்தனை நூற்றாண்டுகளும் காதலுக்கானது.காதல் என்றால் ஜென்னி.ஜென்னி என்றால் காதல்" என காதலைப் புகழ்ந்தவன்  காரல்மார்க்ஸ்.ஜென்னிக்கு மணம் ஆனபோது வயது முப்பதை நெருங்கியிருந்தது என வாசித்த நினைவு.நான் இவர்களின் காதலை ஓர் இணையத்தில்தான் வாசித்தேன்.

              இவர்களும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். நீரோ,சீசர் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
           
              கட்டற்ற காமம் இவர்களுடையது. காமம் என்பதை விட  வெறி என்றுதான் சொல்வேன்.

               அன்னை அக்கிப்பினாவை புணர்ந்தவன் நீரோ.

              அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப்பேரன் ஸலிக்யூலா.தனது மூன்று சகோதரிகளின் புருசன்களையும் கொலை செய்துவிட்டு சகோதரிகளை படுக்கை அறைக்கு கொண்டுவந்துவிட்டான்.பெண்களை நிர்வாணப்படுத்தி  அனைவர் முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது பிடிக்கும்.இவனது சகோதரிகளை அனுபவிக்க ஆயிரம் பொற்காசுகள் என கட்டணம் வைத்திருந்தானாம்.மதன் எழுதியதில் நான் படித்தது.
     
         தற்காலத்தில்  சிறுமிகளை வல்லுறவு வைத்துக்  கொள்கிறவர்களும் சீசர்.ஸலிக்யூலா வழி வந்தவர்கள்தான்.

              காமம் என்பது வன்புணர்வு அல்ல.ஒழுக்கம்சார்ந்தது.

              நான் எழுதியதில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.


உலக அழகியும் நான்கு வயது சிறுமிக்கு ஏற்பட்ட கோரமும்!

                                        மிகவும் பெருமையாக இருக்கிறது !இந்தியாவைச் சேர்ந்த  மானுஷி சில்லர்உலகப் பேரழகியாக தேர்வுப் பெற்றிருக்கிறார். அறுபத்தி ஏழாவது அழகி. இருபது வயது இளம் கட்டிளம் பெண்.மருத்துவம் பயில்கிறார். சிறந்த கார்டியாக் சர்ஜனாக வரவேண்டும் என்பது இலக்கு!
                                    இவருக்கு பிடித்த நடிகர்?
                                    "ஆமிர்கான்"
                                 பெண்கள் கலந்து கொள்ளும் ஆடை அலங்காரப் போட்டிகள் பற்றி?
                                " ஒருவரை அடக்கிவைத்துவிட்டு மற்றவரை உயரம் கொண்டு செல்ல முடியாது! பெண்கள் விருப்பப்படி தன்னை 'கிளாமராக' காட்டுவதில் என்ன தவறு இருக்கமுடியும்? எந்தவொரு பெண்ணும் தன்னை ஒரே மாதிரியாக ஆடைகள் அணிந்து பிம்பப்படுத்துவதை விரும்ப மாட்டாள்! பத்திரிகைகளில் வருகிற அவளது கவர்ச்சிப் படங்களை வைத்து மதிப்பிடக்கூடாது."
                             திருமணம் எப்போது..எனி ஐடியா?
                             "இருபத்தி ஒன்று வயதே ஆகும் ஒரு பெண்ணிடம் கேட்கிற கேள்வியா இது!"
                             பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே நடித்திருப்பது சரியா?
                            "அவர் ஒரு நடிகை.அவரது தொழிலுக்கு மதிப்பு அளிக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது."
                             பிடித்த கிரிக்கெட் வீரர்?
                            "விராட்கோலி"
                            நடிகை?
                             "பிரியங்கா சோப்ரா"
                          பிடித்த பிரதமர் ?
                          "பிரதமராக யார் வந்தாலும் பிடிக்கும்!"

உலகப்பேரழகியின் பொன்னான கருத்துகள் இப்படி இருக்க சில புழுத்துப்போன  கிருமிகள்  நான்கு வயது அரும்பினை கசக்கி இருக்கிறது. அதே வயது சிறுவர்கள் மனதில் அத்தகைய நச்சுக்கருத்துகள் எப்படி வேர் பிடித்தது என்பது தெரியவில்லை.அந்த நான்கு வயது சிறுமியை எந்தப்பள்ளியிலும் சேர்க்க மறுக்கிறார்கள் என்பது கொடுமையான விஷயம். பெற்றவள் கதறுகிறார்கள்.

இதையே இரண்டு மனித மிருகங்கள் நான்கு வயது சிறுமியை பள்ளிக்  கழிப்பறையில் வைத்து வேட்டையாடப்பார்த்திருக்கிறது .இந்த கொடுமை கொல்கொத்தாவில் நடந்திருக்கிறது.

        இன்னொரு கொடுமை கவுரவமான ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறது.
தமிழில் ராமாயணத்தை எழுதியது யார் என கேட்டால் பள்ளிச் சிறுவன் கம்பர்  என்பதாக சொல்வான்!
             ஆனால் நமது மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் சேக்கிழார் என்கிற ரகசியம் தெரிந்திருக்கிறது. எந்த புதைகுழியை தோண்டிப் பார்த்தாரோ தெரியவில்லை.எடக்குப்பாடியார் டாக்டரேட் எதுவும் பண்ணுகிறாரா?



    

செவ்வாய், 28 நவம்பர், 2017

சசி கூடாரம் காலியாகிறது!

                           "எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது" என்று இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும்  போகி  கொளுத்தி  சர்க்கரை பொங்கல் வைத்து  கொண்டாடுவதை விட  சிரம்  வெட்டி  ராம்லீலா கொண்டாடும் பிஜேபி தான்  சந்தோஷத்தில் திளைத்திருக்கிறது.
                         ஜெயலலிதாவின் மர்மச்சாவு அவர்களுக்கு திறவு கோல் கிடைத்ததைப் போலாகிவிட்டது. எந்த காய்களை எப்போது வெட்டித் தூக்கலாம் என்பது அவர்களுக்கு பால பாடம் அல்ல.பட்டம் பெற்றவர்கள். அத்வானியையே சிங்கிள் காலம் செய்தியில் கூட தனித்து வரமுடியாமல்  செய்து விட்டார்கள்.'ஆல்சோ ஸ்போக்' வரிசையில் சேர்த்து விட்டவர்களுக்கு  சசியை மண்டியிட வைக்க முடியாதா என்ன!
                    இன்று சசியின் உறவுக்கூடாரம் சட்டத்தின் பிடியில்.!
                    ஜெ.யை மறந்து " சின்னம்மா..சின்னம்மா " என கூவியவர்களும் " சின்னம் அங்குதானம்மா. ரெட்டை எலை வேண்டுமம்மா" என அணி தாவி விட்டார்கள்.
                  இரட்டை இலையை  ஏதோ மந்திரச்சொல் மாதிரி நினைத்துக் கொண்டு மடம் மாறியவர்களும் இருக்கிறார்கள். "இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது " என்று துண்டு போட்டுக் கொண்டவர்களும் இருக்கவே செய்வார்கள். "எதுக்கு தனிக்கடை.இனி போணி ஆகாது "என்று நம்பி ஓடி வந்தவர்களும் இருப்பார்கள். வந்தவர்களை தங்களின் அணிக்கு கொண்டு வருவதற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் பலப்பரிட்சையில் இறங்குவது அவர்களால் தவிர்க்க இயலாதது. இருவரிடமும் ஆள் அம்பு சேனை எல்லாமே இருக்கிறது.
               ஆனால் இரட்டை இலை வசியம் இனியும் செல்லுமா ?
               மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி  முடிவு எப்படி அமைந்தாலும் அது தமிழகத்தின் குரல் என்பதாக கருத முடியாது. ஆட்சி,அதிகாரம்,காவல் துறையின் துணை இவைகளுடன் பண நாயகம்தான்  வெற்றி பெற்றதாக நினைக்க முடியும்.
           ஆளுநரின் மாவட்ட ஆய்வு, பிஜேபியின் அதிமுக விமர்சனம் என தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாறுதல் அதிமுகவை மெது  மெதுவாக காலி செய்து விடும்.!
             மற்றொரு சுனாமியும் அதிமுகவை சுற்றி வளைத்து சூறையாட  காத்திருக்கிறது. புதை குழிக்குள் போன ஜெயலலிதாவின் பிம்பத்தை உடைக்கபார்க்கிறார்கள்.முன்னொரு காலத்தில் ஷோபன்பாபுவுடன் ஜெ.இணைந்து வாழ்ந்ததில் பிறந்த பெண் குழந்தை நான்தான் என உறவினர்களே  ஒரு பெண்ணை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். "அம்மா..அம்மா "என அழைக்கப்பட்டவர் நிஜத்திலும் ஒரு அம்மாதான்  எனச்சொல்லி செல்வி என்கிற அடையாளத்தை அழித்துப் பார்க்கிறார்கள். செத்துப்போனவரின் கண்ணியத்தை காவு கேட்பது யாருடைய திட்டம்  என்பது தெரியவில்லை.  அரசியல் எவ்வளவு  இழிவாக நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் அந்த கட்சி அமைதி  காப்பது வேதனை.! 
             என்ன நடக்கப்போகிறது ? அந்த பிரம்ம மகரிஷிக்கு மட்டுமே தெரியும்! 
 
     

சனி, 25 நவம்பர், 2017

அதிமுகவுக்கு வசந்த காலம் வருமா?

                                 " கடந்த காலம் கசந்த காலம்,
                                   வருங்காலம் வசந்த காலமாக இருக்க வேண்டும்"---என்பது  தனது  ஆசை ,விருப்பம் என கூறி இருக்கிறார் அதிமுகவின்  ஒ.பி.எஸ் .அணியை  சேர்ந்த மைத்ரேயன்.பாராளுமன்ற  உறுப்பினர்.  துணை முதல்வர் ஓபிஎஸ்.சின் ராஜகுரு என்று சொன்னாலும் தப்பு இல்லை. டில்லி தர்பாரில் இவருக்கென தனித்த செல்வாக்கு இருக்கிறது. இன்னும் சொல்வதானால் தம்பிதுரைக்கு  நேரடி போட்டியாளர் இவர்தான்!
                                    இரட்டை இலையை திரும்பப் பெறுவதில் இவரது அணுகு முறை அந்த இரட்டையர் அணிக்கு சாதகமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்கிற ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்கி வந்த  கழகம் தற்போது ஓபிஎஸ்- இபிஎஸ் என்கிற இரட்டைத்தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்கவேண்டிய கட்டாயம். ரெட்டையரில் ஒருவர்  முறுக்கிக்கொண்டாலும் விபரீதம்தான்! அந்த அளவுக்கு இருவருமே கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கட்டமைப்புக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் கழகத்தை தனது  ஆதிக்கத்துக்குள் அடக்கி விடவேண்டும் என்கிற நரித்தன்மை  இருவருக்கும்  இல்லை என சொல்லிவிட முடியாது.
                                   அவ்வப்போது  இபிஎஸ் சோதித்துப் பார்ப்பதும் அதற்கு ஓபிஎஸ் அணி எதிர்ப்பு காட்டுவதும் நிகழத்தான் செய்கிறது. அண்மையில் மதுரையில்  நடந்திருக்கும் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. இருவருக்கும் துணை முதல்வர்க்கும் அழைப்பு இல்லை.இரட்டை இலை வந்து விட்டது. இனி எதற்கு  அந்த 'பீஸ் ' என நினைத்திருக்கலாம்.
                                  சிக்கல் வந்தால் கிண்டி, கிளறிவிட்டு ,அலசி அதில் பலன் பார்ப்பது ஊடகங்களின் தர்மமாக மாறி இருக்கிறது.அவற்றிலும்  கட்சி அரசியல் இருக்கிறது.
                                சென்னையில் ஆளுநரை சந்தித்துவிட்டு திரும்பிய மைத்ரேயன் அன்றைய பரபரப்புக்கு அவர்களது  கருவியாகி விட்டார். மதுரையில் நடந்த கொடியேற்று விழாவில்  ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்ள வில்லை என்பதை  சுட்டிக்காட்டி கருத்து கேட்க, அவரும் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
                          "இரட்டை இலை கிடைத்த வெற்றிக்குப் பின்னர் நடந்திருக்கும் முதல் நிகழ்ச்சி..போகிற வழியில் முதல்வர்  கொடி ஏற்றிவிட்டுப் போயிருந்தால் பரவாயில்லை. முப்பெரும் விழா என சொல்லி மீட்டெடுப்பு விழாவையும்  சேர்த்திருக்கிறார்கள்.அனைத்து தரப்புக்கும் சொல்லியிருக்கவேண்டும். இரட்டை இலைக்காக டில்லிக்கு அடிக்கடி சென்று வந்த குழுவில் நானும் ஒருவன்.எங்களுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும்.ஓபிஎஸ் அண்ணனுக்கு  தெரியாமல் இருந்திருக்கலாம்.ஆனால் மதுரை எம்பி,கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இருவருக்கும் சொல்லவில்லை. இருவரும் அண்ணனின் ஆதரவாளர்கள்.கடந்த காலம் கசந்த காலம்.வரும் காலமாவது வசந்த காலமாக இருக்க வேண்டும்." என்று சொல்லியிருக்கிறார்.
                        பொதுவாக பல அரசியல் திருப்பங்களுக்கு மதுரை காரணமாக இருந்திருக்கிறது.முப்பெரும் விழா அதற்கு கருவியாகி விட வாய்ப்பு இருக்கிறது.சிறு பொறிதான்.! அதுதானே பெருநெருப்பாக மாறுகிறது.!
 
                                 

பிஜேபியில் இணைவாரா அதிமுக அமைச்சர்?

                                      அதிமுக தொண்டர்களுக்கு அண்ணாவின் "ஆரியமாயை" புத்தகத்தையோ,அல்லது எம்.ஜி.ஆர் .எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' நூலை  அல்லது ஜெயலலிதாவைப் பற்றிய ஏதாவது ஒரு அறிவுசார்ந்த புத்தகத்தை  அதிமுகவினருக்கு அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர்
கொடுத்திருந்தால்  அமைச்சரின்  கழகப்பற்றை பாராட்டியிருக்கமுடியும்? திருக்குறளை வழங்கியிருந்தால்  ஒருவேளை அவரது தமிழார்வம் தெரிந்திருக்கலாம்?
                                   அதிமுகவினருக்கு  தொடர்பே இல்லாத பகவத் கீதையை  அவர்களுக்கு கொடுத்துப் படிக்கச் சொல்லியிருப்பதுதான் விளங்காத புதிராக  இருக்கிறது.பிஜேபியினருக்கு கீதை வேத புத்தகம்.புத்தகத்தின் வேர் சமஸ்கிருதம். செல்லூர் ராசுவுக்குக் கொடுத்திருந்தால் சிறப்பாக  ஆய்வு  செய்யக் கூடும். தெளிந்த கருத்துகளை அவர்  நமக்கு அருந்தக் கொடுத்திருக்கலாம்.  கழக வரலாறு சரியாகத்தெரியாத தொண்டனுக்கு வேதப் புத்தகத்தை  கொடுத்து அவனை சத்திய சோதனை செய்திருப்பது ஏன்?
                                    புரியவில்லை.
                                   முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் இதே  அமைச்சர்தானே சோதனைக்கு ஆளானார்? அது என்னாயிற்று என்கிற முடிவு  தெரியாமலேயே இதோ இடைத்தேர்தல் அதே ஆர்.கே,நகருக்கு!
                                  கே.பி.சுந்தராம்பாள் பாடிய 'தப்பித்து வந்தானய்யா' என்கிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
                                  கீதையை நம்பியதால் அல்லது பிஜேபியை நம்பியதால், சரி, இரண்டும் ஒன்றுதானே! யாருடைய உபதேசம் அவரை மாற்றி இருக்கிறது?
                                  அமைச்சர் அந்த சோதனையின் விளைவுகளில் இருந்து  மீண்டு விட்டார் என்று சாதாரணன் நினைக்கலாம்.
                                  பிஜேபியில் சேரக்கூடும் என்றும் அதே சாதாரணன் எண்ணினால் அதுவும் பிழை இல்லை.அவன் ஒன்றும் சாணி சயின்டிஸ்ட் இல்லையே?அதனால்தால் பிஜேபியில் ஐக்கியமாகலாம் என்பதாக குறுஞ்செய்தி அனுப்புகிறான்!
                                 எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடக்கும் இந்த கால கட்டத்தில்  இத்தகைய விபத்துகளை அம்மாவின் அடிமைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறதே!
                                                             

திங்கள், 20 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 13.) ரெட்டை இலை முடங்குமா,?

                                "  யாரை நோவது...அப்படி நொந்துகொள்வதால் என்ன நடந்துவிடப் போகுது .....நடப்பது நடக்கட்டும். எல்லாம்   ஆவி  காட்டிய வழியப்பா அதுவே நமது விதியப்பா " என அம்மாவின் மீது பழியை போட்டு  விட தயாராகி விட்டார்கள்.
                        கட்சிக்கு சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்பது இன்னமும்  டவுட் என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.டெல்லிக்கு முன்னர்  சென்றிருந்தபோது  முதல்வர் ,துணை முதல்வர் இருவரும் பிரதமர் மோடியிடம்தனித்தனியே  என்ன பேசி இருப்பார்கள் ,எதுவும் எழுதிக் கொடுத்து இருப்பார்களா, தற்போது நடந்திருக்கும் வருமானவரி சோதனையை நியாயப்படுத்துவது  எதனால், சிலர் ஜெ.யின் போயஸ் தோட்டத்தில் நடந்த ரெய்டை எதிர்ப்பதும், சிலர் வாய் திறக்க அஞ்சிக் கிடப்பதும் எதற்காக எனப் புரியாமல் பயந்து கிடக்கிறார்கள்.இப்படி விடை தெரியாமல் பல கேள்விகள்.
                   பிரதமரை சந்தித்தது மின்சாரத்துக்கு தேவையான நிலக்கரிஅனுமதி  கோரி மனு கொடுப்பதற்காகவே என்று ஒ.பி.எஸ்.சொன்னாலும் அப்படி மனு எதுவும் பெறப்படவில்லை என்பதாக பிரதமர் அலுவலகம் சொல்லிவிட்டது.
                     மொத்தத்தில் அதிமுகவின் எதிர்காலம் கணிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. ஆளுநர் ஆய்வு செய்வதும், தமிழக பிஜேபியினர் ஆட்சிக்கு எதிரான தவறுகளை திரட்டுவதும் அதைத்தான் உறுதி படுத்துகிறது.
இடுப்பில் இருக்கிற வேட்டி உருவப்படுவதைக்கூட பெருமையுடன் சொல்கிறவர்களை எவருடன்  சேர்ப்பது? நினைத்தாலே நெரி கட்டுகிறது !
                அன்று அடிமை,விசுவாசி என விளம்பரங்களில் தங்களின் முகங்களைக் காட்டியவர்கள்  ஜெ.வாழ்ந்த காலத்தில்  பம்மி, பதுங்கி ,கை கட்டி ,வாய் பொத்தி ,தலை, தரையைத் தொட வணக்கம் சொன்னார்கள் .அவர்களை ஏன் அப்படி வைத்திருந்தார் என்பது தற்போதுதான் தெரிகிறது. அவர்களது பேச்சில் வழிகிற  பொது அறிவுப்புலமையும், நுண்ணறிவும் அடடே ரகம்.!
                   ஊழல் எங்கும் எதிலும் என்று குற்றம் சாட்டுகின்றன எதிர்கட்சிகள். தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது  ஊழல் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால் எதைப்பற்றியும் ஆட்சியில் இருக்கிற அதிமுகவினர் கவலைப்படவில்லை.
                முட்டைக்கு மட்டும்தானே அரசு காசு கொடுக்கிறது. நாங்கள்  புழுக்களையும் சேர்த்து இலவசமாகவே  தருகிறோம் என்று திருத்தணியில் சத்துணவுக் கூடத்துக்கு முட்டைகளை அனுப்பியிருக்கிறார் ஒப்பந்தகாரர்.  இவர் ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர் என்கிறார்கள்.  

புதன், 15 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 12.) ஆளுனரால் அதிமுகவுக்கு ஆபத்து?.

                 "மனிதனின் சிறுநீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம் .ஆராய்ச்சி  நடந்து கொண்டிருக்கிறது." என்கிறார் பிஜேபி அமைச்சர் நிதின் கட்காரி. உடனே நம்மூர் மந்திரி வகையறாக்களுடன் ஒப்பிட்டு விடாதீர்கள். விவசாயத்துக்குத் தேவையான பாஸ்பரஸ் போன்ற அவசியமான பொருட்கள்  நமது சிறுநீரில் கலந்திருக்கின்றன.  இந்திய விடுதலைக்கு முன்னர் மனித கழிவுகளை ,மாட்டுச்சாணத்தை விவசாயத்துக்கு நம்மவர்கள்  பயன்படுத்தி  இருக்கிறார்கள்.நகராட்சியாக மதுரை இருந்த காலத்தில் குப்பைகளை மக்கச்செய்து கம்போஸ்ட் உரமென விற்கப்பட்டிருக்கிறது .
             ஆனால் மனித சிறுநீர் சேகரிப்பு என்பது சாத்தியமாகுமா?
             பத்து லிட்டர் கேனை கொடுப்பார்களாம் .அதில் சிறுநீரை சேர்த்து தாலுகா ஆபிசில் கொடுத்தால் லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் அரசு கொடுக்குமாம்.'முதலில் கிராம அளவில் சோதனை செய்யப்படும் என்கிறார்கள்.
          ஒவ்வொருவரும் காலைக்கடன் கழிக்க செல்லும்போது கையில் ஒரு  பாட்டிலையும் எடுத்துச்செல்லக்கூடிய காட்சியை பார்க்கிற வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.கற்பனை செய்து பார்த்தால் ஆயிரம் கார்ட்டூன் போடலாம் போலிருக்கிறது..! பீர் விற்பனை அமோகமாக இருக்கவும் வாய்ப்பு  இருக்கிறது.ஆனால் சிறுநீரில்  ஊழல் கலந்து விடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டிய அடிஷனல் வேலைப்பளு  மாநில அரசுகளுக்கு! வருமானவரி சோதனைகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லாம் நடக்கவேண்டும்.
           பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் எதையும் சாதிக்க
வில்லை என்கிறது ஐ.நா.சபை. மாறாக மனிதக்கழிவுகளை மனிதனே அல்லும் நிலைதான் உருவாகி இருக்கிறது.அந்த திட்டத்தினால் தூய்மை மின்னவில்லை. மோடியின் கனவுத்திட்டம் முழு வெற்றி அடையவில்லை. என்கிறது ஐ.நா .சபை. என்ன செய்வது உடம்பு முழுக்க எண்ணையைத் தடவிக்கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும்.
           இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆளுநர் மாவட்டம் தோறும் விசிட்  அடிக்கப்போவதாக சொன்னதுதான் முதல்வரையும் அவரை சார்ந்தோரையும்  கலங்கடித்திருக்கிறது. புதுச்சேரியில் தலையை நீட்டிய ஒட்டகம் தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டதே ! எவ்வளவுதான் அடிவாங்கினாலும்  வலியை தாங்கிக் கொண்டு  சிரிப்பது மாதிரி நடிப்பது அவ்வளவு ஈசியா  என்ன? கடுப்பில் இருக்கிற மக்கள் அதிருப்தி  மனுக்களை அடுக்கிவிட்டால் இந்த மனிதர் டில்லி ஹெட் ஆபிசுக்கு ரிப்போர்ட்டை தட்டி விடுவாரே!
          மக்களை சந்தித்து ஆளுநர்  மனு வாங்குவது சட்டப் பிரச்னையா ?
          தெரியல..
*************************************************** .

             "என்ன  சொல்றீங்க?" 
             சாந்தியினால்  யூகம் பண்ண முடியவில்லை. மேட்னி  ஷோவுக்கு ஆசைப்படுகிறானா  புருஷன்.? நேற்று  இரவு  போதும் என்று  அவனே சொல்லி  களைத்துப்  போகும்  அளவுக்கு  இணக்கமாக  இருந்திருக்கிறாள்.. அவளுக்கே  ஆச்சரியம் ! இந்த அளவுக்கு ஒரு முரட்டு ஆணுடன் சல்லாபிக்க  தனக்கு  ஸ்டாமினா  இருக்கிறதே என அதிசயித்திருக்கிறாள் ஒருவேளை .அதை நினைத்துக் கொண்டு  ஆசைப்படுகிறானோ?
         மனதுக்குள்  கர்வம். வெளிக்காட்டுவதற்கு  விருப்பம் இல்லை. தலை  கவிழ்ந்தபடி  பேசினாள். " இத பாருங்க. உங்களுக்குத்தான்  பகல்.எனக்கு  பகலும் ராத்திரியும்   ஒண்ணுதான். கண்ணு தெரியாதவளுக்கு  பவர்ணமி என்ன அமாவாசை  என்னங்க?  இங்க நாம்ப ரெண்டு பேர்தானே  இருக்கோம்.படுக்கனும்னா  சொல்லுங்க.வாங்க!"  கையைப்பற்றியவள்  பெட்ரூமுக்கு அழைத்துப் போக சொன்னாள்.
           தர்மசங்கடம். ஆணுக்கு எப்படி ஆசை இல்லாமல் போகும்? ஆனால்  ஆசை  அதுமட்டும்   இல்லையே?
         " சாந்தி...." எச்சலை விழுங்கியபடியே  பேசினேன். சொல்லி விட வேண்டும்என்கிற முடிவுக்கு வந்தபிறகு எதற்கு தயக்கம்?
            " ஒரு படத்தில  ரஜினி  கடவுளே கடவுளேன்னு  சொல்லி ,பிரமை  பிடிச்சமாதிரி  போவாரே? கேள்விப்பட்டிருக்கியா?" 
            "ஆமா...படத்தைப் பார்க்கலேன்னாலும் என் பிரண்ட்ஸ்ங்க  சொல்லிருக்காங்க.குஸ்புவை  பாத் ரூமில் அப்படியே  முழுசா பாத்த பிறகு  பித்துப்பிடிச்ச மாதிரி அப்படி ரோட்டுல போவாராம். ஆமா  அதுக்கென்ன?" என்று  சாந்தி சொன்னாலும்  நான் விரும்புவதை  ஊகித்து விட்டாள் என்பதை அடுத்து வந்த கேள்வியிலிருந்து  அறிந்து கொண்டேன் .
            "அந்த மாதிரி  நானும் முழு நிர்வாணமா  நிக்கனுமாங்க?"என்றாள்.
            "ம்.!" 
           அவளுக்கு கோபம்  வரவில்லை.ஆச்சரியம்தான். .
          " பெத்த அம்மாகிட்ட கூட  ஒரு பெண் காட்ட மாட்டாங்க.. புருசனுடன்    படுக்குகிற போதுதான்  உடம்போடு உடம்ப  இறுக்கிக்குவா.லைட்டை போட்டா உடனே  போத்திக்குவா. இன்னிக்கி பாத்ரூமில் ரெண்டு பேரும் ஒன்னாத்தான  குளிச்சோம்.பாவாடைய  என்  நெஞ்சை  விட்டுஏறங்கவிட்டேனா.இல்லையே! நெஞ்ச தொட்டிங்க. எனக்கும் தொட மாட்டிங்களான்னு அந்த நேரத்தில ஆசை. இது  நமக்கு  இயற்கையாவே  இந்த வயசுக்கு வரும்! ஆனா  உங்களுக்கு வந்திருக்கிற  ஆசை  பொண்டாட்டிய  திருப்தி  படுத்த முடியாத  ஆம்பளைக்கு  வர  வேண்டிய  ஆசை. என் புருசனை நேத்து  ராத்திரியே  நல்லா புரிஞ்சிக் கிட்டேன். என்னை  ராத்திரி  முழுக்க சந்தோசப்படுத்தக்கூடிய ஆண் மகன்." என்றதும்  ஆடிப்போய்விட்டேன். என்ன பேச முடியும்?
           " சாந்திம்மா!" என்றபடியே  மார்புடன் அணைத்தபடி  முத்தமிட்டேன்.
             உப்பு கரித்தது. அவளது கண்ணீர்  உதட்டில் வழிந்ததினால்!