புதன், 4 ஜனவரி, 2017

மன்னிப்பு கேட்டது தவறு சுராஜ்!

இது  காலம் கடந்த பதிவுதான்! 

வித்யாபாலனின்  'பேகம்  ஷான் ' படத்தின்  ஸ்டில்  பார்க்கும்வரை!  அங்கேதான்  இயக்குநர் சுராஜ்  நடிகைகள் நயன், தமன்னா  ஆகியோரிடம்  மன்னிப்பு  கேட்டிருக்கக்கூடாது  என்கிற  எண்ணம்  தோன்றியது. 

சுராஜ் பேசியதின்  தொனியில்  ஆணாதிக்கத்தின்  திமிர்  இருந்தது. அதையே  அவர்  மென்மையாக  பேசியிருந்தால்  பிரச்னை  எழ வாய்ப்பு  இருந்திருக்காது. 

ஆத்திரப்பட்ட  நடிகைகள்  இரண்டுபேருமே 'இதற்கு  மேலும்  கவர்ச்சிக்கு  எல்லை  வகுக்க முடியாது" என்கிற  நிலையில் உச்சம்  தொட்டவர்கள்தான்.

ஆனால்  கவர்ச்சியாக  நடிப்பதோ  அத்தகைய கேரக்டர்களில்  நடிப்பதோ  தவறில்லை. ஆனால்  நடிக்க மறுப்பது  அவர்களது உரிமை.

இயக்குநர்  திலகம்  அமரர்  பாலசந்தர்  விலைமாதுகளின்  அவலத்தை  படமாக்கவில்லையா?  சாதனை படைத்த நடிகைகள்  நடித்திருந்தனர்.  தப்புத்தாளங்கள்  சரிதா, அரங்கேற்றம்  பிரமிளா  ஆகியோரின்  நடிப்பு  மக்கள் மனதில்  அருவெறுப்பை  தரவில்லையே!  பிரமிக்க வைத்தனர்.

அதைப்  போலவே  ஸ்மிதா பட்டேல் இன்னும் பலர்  வடக்கிலும்  சாதனை  செய்தனர்., வித்யாபாலன்  போன்றோரும்  தற்போது  நடிக்கவே செய்கிறார்கள். கேரக்டருக்கு  தகுந்த கவர்ச்சி  காட்ட தயங்கியதில்லை. 

டர்ட்டி பிக்சர்  படத்துக்கு அடுத்து  பேகம் ஷான்  என்கிற படத்தில்  முக்கியமான  படத்தில்  நடித்து வருகிறார். 

இந்தியா  துண்டாடப் பட்ட  1947-ல்  பஞ்சாபில்  விபசார விடுதி  ராணியாக  வாழ்ந்தவளைப்  பற்றிய  கதை. அதில் விலை மாதுவாக வித்யா பாலன். நசிருதீன் ஷா ,ஆஷிஷ்வித்யார்த்தி ,ராஜேஷ் சர்மா  போன்ற திறமைசாலிகளும் நடித்து வருகிறார்கள். அவர்களும்  பணம்  வாங்கிக்கொண்டுதான்  நடிக்கிறார்கள். 

திரையுலகமே  கவர்ச்சியை நம்பித்தான்  இருக்கிறது, நடிகைகளும்  பணத்தை நம்பித்தான்  நடிக்கிறார்கள். யாரும் கலைச்சேவை  செய்ய வரவில்லை. 

1 கருத்து:

Chellappa Yagyaswamy சொன்னது…

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால், சினிமா உலகில் சின்ன இயக்குனர்களுக்கு மரியாதை கிடையாது. நடிகைகளை எதிர்த்து அவர்களால் தொழில் செய்யமுடியாது. முன்பொருமுறை ஜோதிகாவைப் பற்றி எதோ ஒரு கருத்து சொன்னதற்காக, பலபேர் முன்னிலையில் தங்க்கர் பச்சான் மன்னிப்புக் கேட்டது மறந்துவிட்டதா? அவரை விடவா சுராஜ் பெரிய ஆள்?

மதிப்பீடுகள் ஏதும் இல்லாத மாய உலகம் சினிமா உலகம்...

- இராய செல்லப்பா நியூஜெர்சி

(http://chellappaTamilDiary.blogspot.com)

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...