வியாழன், 30 மார்ச், 2017

என் கன்னித்தன்மையின் விலை பதினாலு கோடி...!

'எனது கன்னித்தன்மையின்  விலை 2.3 மில்லியன் ஈரோ." என்று 18 வயது கன்னிப் பெண் ஒருத்தி ஏலம்  போய் இருக்கிறாள்.!

இந்திய பணத்துக்கு பதினாலு கோடி ரூபாய்.

அவளின் பெயர் அலீக்சான்டிரா. ரொமானியப் பெண்.இன்னும் கன்னி கழியாதவள்.அவளுக்கு ஏனிந்த நிலை? யாரும் கட்டாயப்படுத்தினார்களா?

இல்லை.! ஏலம் போவது அவளது சொந்த முடிவு! இவள் மட்டுமில்லை. இவளைப்போல இன்னும் முன்னூறு கன்னிப்பெண்கள் ஏலம் போவதற்கு தயாராக இருக்கிறார்கள்.இந்த புனித காரியத்தை செய்வதெற்கென எழவெடுத்த ஒரு நிறுவனம் இருக்கிறது.'சின்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் ' என்பது  அந்த நிறுவனத்தின் பெயர்.

அலீக் என்ன சொல்கிறாள்?

"நான் ஏழ்மையின் மடியில் வளர்ந்தவள்.எனக்கு பதினைந்து வயது ஆகும்போதே எனக்கு இந்த எண்ணம் வந்து விட்டது. கன்னித்தன்மையை  ஏலம் விட முடிவு செய்தேன்.ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரன்  என்னை 2.3.மில்லியன் ஈரோ நாணயத்துக்கு ஏலம் எடுத்திருக்கிறார்.( என்னுடைய கணக்குப்படி இந்திய நாணயத்துக்கு 149327506 ரூபாய் ஆகிறது. நான் கணக்கில் வீக்.)இதை வைத்துக்கொண்டு என்னுடைய பெற்றோரை காப்பாற்ற முடியும்.சொந்தமாகவீடு வாங்குவேன்.

என்னுடைய முடிவை இந்த சமுதாயம் ஏற்காது என்பது தெரியும். ஆனாலும்  என்னை மாற்றிக்கொள்ள முடியாது! யாரோ ஒருத்தனுக்கு கன்னி கழியப்  போகிறேன்.அது இப்படி போவதில் என்ன தப்பு?" என்கிறாள்.

என்னமோடா நாராயணா! இந்த கண்றாவி சமுதாய சீர்கேடு இந்தியா பக்கமும் வந்து விடக்கூடாது.

இங்கே ஏற்கனவே கலாச்சார சீர்கேடுகள் சினிமா வழியாக வந்து இருக்கின்றன. நாகரீகம் என்கிற பெயரில் நமது பண்பாடு கற்பழிக்கப் பட்டிருக்கிறது. துறவிகள் என்கிற பெயரில் கற்பு சிதைக்கப்படுகிறது. அத்தகைய நாசகாரன்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்.

எச்சரிக்கையாக இருப்போமாக.!

புதன், 29 மார்ச், 2017

ஒரு நடிகையின் ஒப்புதல் வாக்குமூலம்.

உண்மை என்பது அரிச்சந்திரன் காலத்துடன் முடிந்து விட்டது.

பிச்சை எடுப்பவனில் இருந்து உச்ச பட்ச உயர் பதவியில் இருக்கிறவன் வரை  எவனுக்கும் உண்மை என்பதற்கு அர்த்தமே இல்லை. அவனவனும் தன்னை பாதுகாத்துக் கொள்ள,அல்லது உயர்த்திக்கொள்ள பொய் சொல்லி வருகிறான்.

துறவி கூட சிவலோகபதவியை விரும்புவதில்லை.அரசுப் பதவியையே நாடுகிறான். பற்றற்ற வாழ்க்கை என சொல்லியபடியே பணம் குவிப்பதிலேயே நாட்டமுடன் இருக்கிறான் ராஜகுரு என சொல்லிக்கொள்கிறவன்.

இத்தகைய பொய்யான மனிதர்களுக்கு மத்தியில் கங்கனா ரனாவத் போன்ற  நடிகையும் ஓரளவுக்கு உண்மையாக இருக்கிறார் என்பது ஆறுதல்.

தெரியாத்தனமாக ஒரு புத்திசாலி சதி சாவித்திரியை பற்றி அவரிடம் கேட்க....

"என்னிடமா இந்த கேள்விய கேக்கிறீங்க.சதி சாவித்திரி மாதிரியெல்லாம்  நடிக்க வராது.! நான் அந்த டைப் இல்ல. நான் முரட்டுத்தனமான பொண்ணு!  நான் பெரிய ஆளு!"என்று சொல்லி இருக்கிறார் கங்கனா.

"கவர்ச்சின்னு சொல்றாங்களே...அது என்ன மேடம்?"

"சினிமாவே கவர்ச்சிதான்யா.! அங்க கவர்ச்சியான பொம்மைகள்தான் தேவை! நமது உண்மையான அடையாளங்களை மாத்திக்கணும்!"

"நீங்க நடிகர்களை விட உயர்வானவரா?"

"ஏன் அப்படி கேக்கிறீங்க. என்னை சுத்தி இருக்கிற ஒவ்வொரு ஆளையும் விட நானே உயர்வானவள்!"

"நண்பர்களை பற்றி?"

"பத்துக்காசு செலவு செய்யாத ஆளு கூட எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்..என்ன சொல்ல சொல்றீங்க?"

தைரியமான பொண்ணுதான்!
 

செவ்வாய், 28 மார்ச், 2017

ஆர்.கே .நகரில் ஒரு ரவுண்டு....

செல்வம் கொழிக்கும் தொகுதி என்றால் அது ராதாகிருஷ்ணன் நகர்தான்!

எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தினகரன்.

தினகரனை தோற்கடித்து நாம்தான் உண்மையான அதிமுக என்பதை  நிரூபிக்க வேண்டிய அவசியத்தில்  ஓபிஎஸ்.

பிளவு பட்ட அதிமுகவை  வீழ்த்தாவிட்டால் நமக்கென்ன பெருமை என்கிற கவுரவப் பிரச்னையில் திமுகழகம்.

தொகுதி முழுவதும் பிங்க் கலர் நோட்டுகளுக்கு பஞ்சமே கிடையாது. எந்த கட்சி ,எந்த அணி கொடுத்தது என்கிற பேதம் இல்லாமல் வாங்கி கொள்கிறார்கள் .வஞ்சகம் இல்லாத மனம் . ஆனால் மனதுக்குள் ஒரு  முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது அவர்களது  சிரிப்பில் தெரிகிறது.'வந்ததை வரவில் வைப்போம்.யார் அப்பன் வீட்டுக்காசை  கொடுக்கிறார்கள். கொள்ளை அடித்த பணம்தானே.வாங்குவதில் தப்பே இல்லை 'என்கிற மனப்பக்குவம் அவர்களுக்கு  !

இதே மனப்பான்மை எல்லா தொகுதி மக்களுக்கும் வந்துவிட்டால் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் பழக்கம் கொஞ்சமாவது குறையும்!.

சசி அதிமுகவில் உள் குத்து வேலைகளுக்கு பஞ்சம் இல்லை என்கிறார்கள்.. தினகரன் ஜெயித்துவிட்டால் கொத்தடிமைகளை விட கேவலமாகிவிடுவோம் என்கிற பயம் எடப்பாடி குழுவினருக்குஇருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்துக்கு எடப்பாடியை கொண்டு வருவதற்கு தம்பித்துரை படாதபாடு பட்டிருக்கிறார் என்கிறார்கள்.ஆனால் தொகுதியில் தொப்பிகளுக்கு பலத்த ஆதரவு இருப்பது மாதிரி ஒரு தோற்றம் ! பெண்களின் குத்தாட்டம் செம பின்னு பின்னுகிறது. இந்த ஆட்டத்தையெல்லாம் அவர்களின் கணவன்மார்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு எறங்கி குத்துகிறார்கள்.அவர்கள் கட்சிக்காரர்களா,அல்லது தொழில்முறை ஆட்டக்காரர்களா என்பது தெரியவில்லை. இந்த ஆட்டம் எல்லா கட்சியிலும் இருக்கிறது என்பதுதான் உறுத்தல்.பெண்கள் மது அருந்துவதையும்  காண முடிந்தது! அவை மிடாஸ் சரக்கு!

தொப்பியை விட இரட்டை மின்கம்பம்தான் தொகுதியில் அதகளம் பண்ணுகிறது. இரட்டை இலையை நினைவு படுத்துகிற மாதிரி இரட்டை விரலை காட்டியபடியே ..ஆட்டியபடியே ஓட்டு கேட்பது சுலபமாக இருக்கிறது.
தினகரனின் ஆதரவாளர்கள் என்னதான் இது எம்.ஜி.ஆர்.தொப்பி என்று சொன்னாலும் அவர்களுக்கு புஷ்குல்லா எம்.ஜி.ஆர்.தான் நினைவுக்கு வருகிறார்.ஆங்கிலோ-இந்தியர்களது தொப்பி என்பதாகவே சொல்கிறார்கள்..

தினகரனை ஆதரித்து வாக்கு கேட்கும் சில இடங்களில் சிறுவர் சிறுமிகள்  உதய சூரியன் சின்னம் காட்டுகிறார்கள்.பொதுவாக திமுக- ஓபிஎஸ் அணிகளுக்கிடையில்தான் போட்டி இருக்கிறது. மூன்றாவது இடம் சசி அணிக்கா அல்லது பி.ஜே.பி.க்கா என்பது போக போகத்தான் தெரியும்.

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளைப் பற்றிய கவலையோ அக்கறையோ அந்த தொகுதி மக்களுக்கு இல்லை.வைகோ,திருமா,ராமதாஸ் ஆகியோர்  போட்டி இடாததால் எந்த கட்சிக்கும் பாதிப்பு  ஏற்படுவது மாதிரி தெரியவில்லை.

பார்க்கலாம் .இன்னும் நாள் இருக்கிறதே!

திங்கள், 27 மார்ச், 2017

இந்து தேசம் ஆகிறதா இந்தியா?

மோடியின் செல்வாக்கினால் பிஜேபியின் ஆளுமை வட மாநிலங்களில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

எதனால் அவரது செல்வாக்கு உயர்ந்தது ...கொள்கையின் அடிப்படையினாலா, அல்லது அவரது தலைமையில்தான் இந்தியா உண்மையான வளர்ச்சியை பெற முடியும் என மக்கள் கருதுகிறார்களா என்பதெல்லாம் விவாதத்திற்கு  உரியவை. ஆனாலும் வெற்றி வெற்றிதானே! ஒரு கட்சியின் மீதான அதிருப்தி  அல்லது வெறுப்பு மற்றொரு கட்சிக்கு ஆதாயம்.

வட மாநிலங்களில் கிடைத்திருக்கிற வெற்றியினால் ராமர் கோவில் கட்டி  முடிக்கப்படும் என்கிற நம்பிக்கை இந்துத்வா தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது..இந்த நம்பிக்கையை  பிஜேபி எந்த நிலையிலும் சிதைத்துக்  கொள்ளாது.அதற்காக ராமர் கோவில் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்குவார்கள். உ.பி. மாநில முதல்வர் முரட்டுத் தனம்  மிகுந்தவர் .இந்து மத வெறியர் என்றாலும் தவறில்லை.அவரை பயன்படுத்திக்கொள்ளும் பிஜேபி மேலிடம்.

இத்தகைய சூழலில்தான் ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கிறது.ஜூலையில்  புதியவர் பதவி  ஏற்க வேண்டும்.

அவர் யாராக இருப்பார்?

அத்வானியா,அல்லது சுஜ்மாவா, அல்லது சரத் பவாரா?

பிஜேபியை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிறது  சிவசேனா.

"இது இந்து தேசமாக மாறவேண்டும். அதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் உண்மையான முகமாக இருப்பவர் மோகன் பகவத்தான்! ஹெக்டேவார், கோல்வல்கர் ஆகிய தலைவர்களுக்கு பிறகு இவர்தான் உண்மையான இந்து ராஜ்யத்தை உருவாக்கக்கூடியவர்."என்பதாக  சேனாவின் ஸ்போக்ஸ் மென்  சஞ்சய் ரவுத் சொல்லி இருக்கிறார்.

சிவசேனாவின் எதிர்ப்பினை பிஜேபி சம்பாதித்துக் கொண்டதால்தான்  இரண்டு  தடவை காங்.கட்சி குடியரசுத் தலைவர் பெற முடிந்தது. இந்த தடவை  அத்தகைய நிலைமை வந்து விடக்கூடாது என்பதில் மோடி கவனமாகவே இருப்பார்.

மத சார்பற்ற நாடாக இருக்கிற இந்திய தேசத்தை இந்து தேசமாக அறிவிப்பதற்கு பி.ஜெ.பி.முற்படாது என்று  சொல்கிறார்கள். ஆனால்  நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அமைதியான  தேசத்தின் ஒற்றுமைக்கு  மோடி வெடி வைக்க மாட்டார் என்று நம்புவோமாக!
.

சனி, 25 மார்ச், 2017

மலம் தின்னும் பன்றிக்கு மலர் சூடும் மனிதர்கள்!

மலத்தின் வாடைக்கு விடைக்கும் நாசி.  சாக்கடையில் 'சேரும்' பிறவிக்கு  கங்கை என்ன ..காவிரி என்ன? பன்றிக்கு மாலை சூடும் மனிதனை  எதனுடன்  ஒப்பிடலாம்?

ச்சே...இவர்களை கழுவேற்ற வேண்டாமா? கதற கதற கல்லால் அடித்துக் கொல்ல வேண்டாமா? ஆண் என்கிற திமிருக்கு அடையாளம் சொல்லும்  அங்கத்தை துண்டித்து நெருப்பில் போட்டிருக்க வேண்டாமா?

என்ன ஜனநாயகம் இது என்று வெறுப்பின் உச்சிக்கு  போய்விட்டேன்.

சாதிய அரசியல் மனிதத்தை  சாக்கடைக்குள் தள்ளுகிறது..அந்த சேதியை  வாசித்தபோது அங்கமெல்லாம் எரிந்தது.

அப்படி என்ன சேதி அது?

ராஜஸ்தான் மாநிலம்.பிக்கானீர் அருகில் நோகா எனும் சிறு நகரம். தனியார் பள்ளி.

பதிமூன்று வயது மாணவி. மல்லிகையாக மலர்ந்து மணம் வீசினாள். அது இயற்கை.பள்ளிக்கூடத்தை ஆலயமாக நினைத்தாள்.கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை  கடவுளாக வணங்கினாள். அது பண்பு.  மாதா பிதா குரு என்று வரிசைப்படுத்திக் கொடுத்தவர்கள் நமது முன்னோர்கள்தானே! அதில் வழுவாது வாழ்ந்த சிறுமி அவள்.

பக்தையாக வாழ்ந்த அந்த சிறுமியை சிற்றின்ப கருவியாக பயன் படுத்தியோர் வேறு எவரும் அல்லர். ஆசிரியர்களே!  கல்விக்கூடத்தை கலவிக்கு பயன்  படுத்திக்கொண்ட காட்டுமிராண்டிகள்.!

பள்ளி நேரம் முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் இருப்பதாக சொல்லி தங்களின்  சிற்றின்ப வெறியை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் இருவர் அல்லர்.எட்டு பேர்.ஒன்றரை ஆண்டுகளாக அந்த மாணவியை  வேட்டை ஆடி வந்திருக்கிறார்கள், அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியே வெறியை தனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கரு உருவாகிடக் கூடாது என்று அடிக்கடி கருத்தடை மாத்திரைகள்.

விளைவு? புற்று நோய். இற்றுப்போன உடல்.!

மிரட்டலுக்கும் அதிகாரத்துக்கும் அஞ்சி வாழ்ந்த அந்த சிறு மலரின் சிதைவுக்கு காரணம் தேடியபோது அதுநாள் வரை பதுங்கி கிடந்த உண்மை தலை தூக்கி இருக்கிறது.

எட்டு பேரும் கைது. முதல் தகவல் அறிக்கை தாக்கல். ஆனாலும் சிறையில்  சகல வசதிகளும் கிடைத்திருக்கிறது. பன்றிக்கு மலர் சூடும் மனிதர்கள் இருக்கும்வரை குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது உல்லாசமே!

வெள்ளி, 24 மார்ச், 2017

அதிமுக.வின் நாரதர் யார்?


முட்ட முட்ட குடித்தவன் வாந்தி எடுக்கவும் முடியாமல், தூங்கவும்  முடியாமல், மயங்கவும் இயலாமல்   திணறுவானே  அதே நிலையில் தற்போது  அதிமுக,!

அதிமுக தலைவி ஜெ.மரணப் படுக்கையில் கிடந்தபோது மக்களவை  துணைத்தலைவராக இருந்து வருகிற தம்பிதுரைக்கு இருந்த முக்கியத்துவம்  தற்போது முகம் இழந்து கிடக்கிறது.தம்பிதுரையை முன்போல பார்க்க முடியவில்லை. அதிலும் தினகரன் கைக்கு கட்சி போனபிறகு அவர் அனாதையாக ஒதுக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

கட்சியின் இரட்டை இலைக்காக அவர் டில்லியில் முனைப்புடன் செயல்படவில்லை என்பதாக  அந்த கட்சியின் டில்லி பிரதிநிதியாக இருக்கிற தளவாய் சுந்தரம் போட்டுக் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த இடைத் தேர்தலில் தினகரன் ஜெயித்து விட்டால் அடுத்த மூவ் 'சி.எம்.' நாற்காலியின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை! எப்படி  ஜெ. மரணம் அடைந்த பின்னர் பொதுச்செயலாளர் பதவியை சசி கைப்பற்றினாரோ அதைப்போல தினகரனும் முதல்வர் பதவியை  கைப்பற்றியே தீருவார். இதை  தற்போது முதல்வராக இருக்கிற எடப்பாடியும் உணர்ந்தே இருக்கிறார் என்கிறார்கள்.கட்சியினரும்இப்படித்தான்நினைக்கிறார்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்.சும் ரகசியமாக சந்தித்துப் பேசி இருப்பதாகவும் ஒரு  தகவல் உண்டு. இதை   தளவாய் சுந்தரம் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

எல்லா கட்சியிலும் நாரதர்கள் இருப்பார்கள். தற்போது டில்லியில் இருப்பதாக  அதிமுகவில்  முணுமுணுக்கிறார்கள்

அது தளவாயா தம்பிதுரையா?.   


அதிமுக எதை நோக்கி பயணிக்கிறது?

ஜெ.வின் மர்ம மரணத்தை அடுத்து அந்த கழகத்தின் பயணம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ?

விமர்சனங்கள் வேறு வேறு விதமாக இருந்தாலும் ஜெ. சேர்த்து வைத்த திரண்ட  சொத்துகள், கட்சிக்கென இருக்கிற சொத்துகள் இவைகளையே  மையமாக வைத்துக்கொண்டுதான்  அந்த இரு கழகங்களின் பயணம் இருக்கிறது.

ஜெயிலம்மாவுக்கு மட்டுமே சொத்துகளின் மொத்த விவரம் தெரியும் என்பதால்    அவரை சுற்றியே  உறவுகளும்,பலன்அடைய விரும்புகிறவர்களும் நிச்சயம்  இருப்பார்கள். ஜெயிலம்மாவின் கையில்தான் சொத்துகளின்  சூட்சும கயிறு இருக்கிறது. அந்த கயிறு அறுந்து போகாமல் இருப்பதற்கு அவர் எதையும் செய்ய தயங்க மாட்டார்.ஏனென்றால்  இது அரசியல்.!பதவியில் இல்லாமலேயே பலனை அனுபவித்தவர்.நிச்சயம் விட மாட்டார்.

தினகரனை  வெற்றி அடைய செய்து விட்டால் மொத்த சொத்துகளும் ஒரு குடும்பத்தின் ஆளுகைக்குள் அடங்கி விடும் என்பதற்கு ஜோதிடம் பார்க்க வேண்டியதில்லை. ஜெ.யின் உழைப்பில் கட்டிய அவரது வேதா நிலையம் இன்று யாருடைய இல்லமாக மாறி இருக்கிறது என்பதை உதாரணமாக சொல்ல  முடியும். ஆக அந்த கழகம் சொத்துகளை மையமாக வைத்தே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பார்க்கும்.

ஆனால் ஓபிஎஸ் அணியினர் மிகப்பெரிய தடையாக இருப்பார்கள் .

அதனால்தான் எம்.ஜி.ஆர். கட்டிக்காத்து வளர்த்த இரட்டை இலை சின்னம் இன்று  முடக்கப் படுவதற்கு  காரணமாக இருந்திருக்கிறார்கள். சசியின் கைக்குள் கழகம் அடங்கி விடக்கூடாது என்கிற முனைப்புடன் ஓபிஎஸ் அணி  இயங்கி வருவதால்  சின்னத்தை முடக்கி முதல் வெற்றியை பெற்று இருக்கிறார்கள். தினகரனை தோற்கடிப்பதற்கு அவர்கள் நிறுத்தி இருக்கிற  வேட்பாளர் மது சூதனன் பலமிக்கவர்,அந்த தொகுதியை சேர்ந்தவர்..!

சுகவனம் என்கிற சாதாரண தொண்டரை பர்கூரில் நிறுத்தி ஜெயலலிதாவை  தோற்கடித்த கழகம் தி.மு.க.  இன்று அதே பாணியில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலையும் கொண்டு செல்ல நினைத்திருக்கிறது.அவர்களுக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றன.தொண்டர்களும் கடுமையாக உழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜெ.யின் மர்ம மரணம், சசியின் சர்வாதிகாரம், அந்த கழகத்தின் சட்ட விதி மீறல்கள் ,இவை அனைத்தும் அ.தி.மு. கழகத்தின் சாதாரணத் தொண்டனையும்  குமுற வைத்திருக்கிறது....'வாழைப்பழ சின்னத்திலேயே ஜெ. வெற்றி பெற்றிருக்கிற போது இரட்டை இலை இல்லாமலும் வெற்றி பெறுவோம் ' என்பதாக  ஆதாயம் தேடிகள் சொல்லி வந்தாலும்  ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் மன நிலை வேறு மாதிரி இருக்கிறது.

ஜெ.வளர்த்த கழகம் இன்று பல்வேறு குழுவாக பிரிந்திருக்கிறது. இது மிகப்பெரிய பலவீனம். ஆனாலும் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அரசு எந்திரங்களை தினகரன் கடுமையாக  முடுக்கி விடுவார் என்பதை மறுப்பதற்கு இல்லை. பணம் புழங்கும்.பவர் சென்டரை நம்பியே  தினகரன் நிற்கிறார்.

கலைஞர் கலந்து கொள்ளாத தேர்தலை முதல் தடவையாக திமுக சந்திக்க போகிறது. அதனுடைய வியூகம் கடுமையாக இருக்கும்.ஜெயிலம்மாவின்  அணி வெற்றி பெறுவதை பாஜக விரும்பாது. என்பதால் தேர்தல் விதி முறைகளில் கடுமையான கண்காணிப்பு இருக்கும்.என்று எதிர்பார்க்கலாம்.இந்த இடைத்தேர்தல் முடிவு எப்படியாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். வளர்த்த கழகம் ஆரோக்கியமாக இல்லை என்பது மட்டும் உண்மை.

வலு இழந்து கொண்டிருக்கிறது என்றே சொல்ல முடியும்!

 

ஞாயிறு, 19 மார்ச், 2017

இளையராஜாவின் வக்கீல் நோட்டிசும் பாலுவும்.!

தமிழ்த்திரை இசையில் மெல்லிசை மன்னர்களை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தவர் இளையராஜா என்பதில் எவர்க்கும் எள்ளளவும் வேறுபாடு அல்லது மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மிகப் பெரிய  சாதனையாளர். இன்றும் இரவினில் பலருக்கு  தாலாட்டு அவரது பாடல்கள்தான்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சித்ரா, ஜானகி ,ஏசுதாஸ் என  இன்னும் பலர் அவரது  மெட்டுகளுக்கு ஜீவனாக இருக்கிறார்கள்..

சில பாடல்களை ராஜாவே பாடி இருப்பார். 'அடடா இந்த பாடல்களை பாலு பாடி இருக்கவேண்டும் அல்லது ஏசுதாஸ் பாடி இருக்கவேண்டும்.கெடுத்து விட்டாரே ராஜா ' என்கிற விமர்சனங்கள் எழுந்தது உண்டு.

அவரது மெட்டுகளின் பிறப்பிடம் நாட்டுப்புறம்தான் என்பது உண்மை. நாட்டுப்புற பாடல்களை ஆராய்ந்து அதை மேடைகளிலும் பாடிவந்தவர்கள்  ஆய்வாளர்களான விஜய லட்சுமி -நவநீதன் தம்பதி.

ராஜாவின் எந்தெந்த பாடல்கள் எந்தெந்த வட்டாரங்களில் இருந்தது என்பதை  எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி வந்தவர்கள்தான் அவர்கள்.'ஆயிரம் தாமரை மொட்டுக்களே" என்கிற மெட்டு "காளையார்கோவில்' என தொடங்கும் நாட்டுப்புறப்பாடலின் தழுவலே என சொன்னது நினைவில் இருக்கிறது.

ஏழு ஸ்வரங்களை பிறப்பிடமாகக் கொண்டு காலம் காலமாக ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடப்படுகின்றன. மேலை நாடு மற்றும் வடநாடு  என ராஜாவின் மெட்டுகளுக்கும் பிறப்பிடம் கண்டு விமர்சிக்கப்பட்டதை  மறந்து விடக்கூடாது.

மெல்லிசை மன்னர்களின் மெட்டுகளை ராஜா கையாண்ட விதமெல்லாம் கங்கை அமரனே இன்றும் சொல்லிக்கொண்டுதான்  வருகிறார்.  ஆக சுயம்பு என்று  யாரும் சொல்லிக்கொள்ள இயலாது.

சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்கிற  பாடலின்   மெட்டுக்கு  ராஜாவை சுயம்புவாக சொல்ல முடியுமா?

தனது பாடல்களை பாலு மெல்லிசை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று ராஜா எச்சரித்து நோட்டீஸ் விட்டிருப்பதை  நியாயமானதாக சொல்ல முடியவில்லை.பாடலை எழுதிய கவிஞர்களுக்கும்  உரிமை இருக்கிறது !  திடீர் என ராஜா இப்படி ஒரு முடிவு எடுத்தற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.தொடக்க காலத்தில் பாலுவின் இசைக்குழுவில் வாத்தியம் வாசித்தவர்கள்தான் பாவலர் சகோதரர்கள். ரத்த சொந்தங்களை விட பாசமுடன் வாழ்ந்தவர்கள். காரணமில்லாமல் முடிவு எடுக்கமாட்டார் ராஜா! தெரியபடுத்தினால் நல்லது.

ராஜாவுக்கு தனி ராஜாங்கம் உண்டு.அவரது அரசவையில் அமைச்சர்களாக  இருந்து  பெருமைப்படுத்தியவர்களை  இழிவு படுத்துவது  ராஜாவின் பெருமை  ஆகாது.

சனி, 18 மார்ச், 2017

பர்ஸ்ட் நைட்டுக்கு எதுக்கும்மா லட்டு...ஜிலேபி?

என்னடா  ஆச்சு?
--------------
" இன்னா  வட்டம்?  பொதுக்கூட்டத்துக்கு ஜனங்க வரலியேன்னு தலீவரு கோச்சுக்கினாறாமே....இன்னாபா மேட்டரு?"

"கை தட்டுறதுக்கு ஐநூறு , கொடி புடிக்கிறதுக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும், ஊர்வலத்துக்கு ஆயிரம் ,பொதுக்கூட்டத்துக்கு ரெண்டாயிரம்னு பிக்ஸ் பண்ணியிருக்காணுங்க. கூட்டிக்கழிச்சு  பாத்தா ஒத்த ஆளுக்கு ஐயாயிரம்னு கேக்கிறானுங்க. தலீவரு பழைய நெனப்லேயே இருந்தா எப்டி கூட்டம் சேரும்?"

????????????????????
-----------------------
போர் ஜி போன் எப்ப கிடைக்கும்?
------------------
"என்னடி உன் ஆளு கிட்ட போர் ஜி போன் கேட்டியே...என்ன சொன்னான்?"

"பை-எலக்சன் வருதுல்ல ..வாங்கித் தந்துடுறேன்கிறான்.!"

"மூளைக்காரன்டி! ஹனிமூன்னு சொல்லி பேரணி நடத்துற லாரியில கூட்டிட்டுப் போயிடப்போறான்!

????????????????????????????
---------------------
பர்ஸ்ட் நைட்டு ஸ்வீட்டா இது?
-------------------------
புது மாப்பிள்ளை: " என்னடி கொடுமை இது? பர்ஸ்ட் நைட்ல லட்டு ஜிலேபி பூந்தின்னு வைப்பாங்கன்னு சொல்வாங்க. இதென்னடி டப்பா  டப்பாவா இருக்கு?"

புது மனைவி: " கல்யாண அலுப்புல ஸ்வீட்ஸ் தின்னுட்டு தூங்கிட்டா...அதான்  பழனி சித்த வைத்தியரிட்ட இருந்து சிட்டுக்குருவி லேகியம் வாங்கி வச்சிருக்காரு!

புது மாப்பிள்ளை: ???????????????????????
--------------------------
கக்கூஸ்ல என்ன கூச்சல்?
-------------
கணவன்: " என்னடி வேடிக்கை பார்த்திட்டு நின்னிட்டிருக்கே? எங்கப்பா ஏன்  கக்கூஸ்ல இருந்து கத்துறாரு?"

மனைவி: " கக்கூஸ்ல உட்கார்ந்திட்டு சாதகம் பண்ணாதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன். கேக்கல. இப்ப பல் செட்டு உள்ள விழுந்திருச்சு. சோகராகம் பாடுறாரு!"
-------------------------------


வெள்ளி, 17 மார்ச், 2017

உலகநாயகனை விமர்சிக்கும் அரசியல் விதுஷூகன்கள்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது .விசாரணை கமிஷன் அமையுங்கள் என்று சொன்னால் சசி அண்ட் கோவுக்கு அடிவயிற்றில் கடபுடா.!ஜெயாவின் மறைவுக்குப் பின்னர் வேதா நிலையத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? எந்த உறவில் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

இதை தட்டிக்கேட்கும் உரிமை இருந்தும் ஜெயாவின் ரத்த உறவுகள்  வாயில்  பிளாஸ்டரை ஒட்டிக்கொடிருக்கிற மர்மம் என்ன? ஜெ.மாண்டு மாதங்கள் கடந்த பின்னரும் உயில் பற்றிய விவரங்கள் வெளிவராத மர்மம் என்ன?

அறம் தவறி பிழையாக பெற்ற பிள்ளைக்கு எவனுடைய இனிஷியலை  போட்டால்தான் என்ன ?

'முறை தவறி அமைந்த இந்த அரசு நீங்க வேண்டும்' என்று  உலக நாயகன் கமல்ஹாசன் சொன்னதில் என்ன குற்றம் கண்டுவிட்டார்களோ தெரியவில்லை. அவர் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள் அமைச்சர்கள். அமைச்சரின்  டபேதாருக்கும் ஆட்சியை அகற்ற சொல்லும் உரிமை உண்டு.

கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்ததால்  அநாகரீகமாகநடந்து கொண்டவர் அன்றைய முதல்வர் ஜெயலிதா, சில அமைப்புகளை தூண்டிவிட்டு கமலுக்கு பொருள் நட்டத்தை ஏற்படுத்தியது ஊடகங்களுக்கும் தெரியும். இருந்தும் அரசின் மிரட்டலுக்கும் விளம்பரம் கிடைக்காது போய்விடும் என்கிற அச்சத்துக்கும் உள்ளாகியதால் வாயை மூடிக்கொண்டன.
அது அவர்களின் ஊடக தர்மம்.

'இனியும் அத்தகைய மிரட்டல் எதிர்வரும் காலத்தில் வந்து விடக்கூடாது" என்பதற்காக உலகநாயகன்  எச்சரிப்பதால் எடப்பாடியாருக்கு என்ன நோவு வந்து விட்டது?

நற்பணி மன்ற தலைவர் மீது போய் வழக்குப் போடுவதும் கமலை மிரட்டுவதும் தீர்வாகிவிடாது. மக்கள் மன்றத்தில் வாக்கு கேட்டுப்போகும் அவர்களுக்கு தீர்வு எழுதக்கூடியவர்கள் மக்கள்.

அவர்களைத்தான் கமல் எச்சரிக்கையுடன் இருக்க சொல்கிறார்.

இதில் சசி அண்ட் கோவுக்கு குத்துவது ஏன்? குடைவது ஏன்?

அவர்களைஅரசவை விதுஷூகன்கள் என்பதாகவே மக்கள் பார்க்கிறார்கள்!

இது கழிசடைத்தனமாக இல்லையா?

டிக்கடி இரயிலில் பயணிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் உறவுகளின் வீட்டு நிகழ்வுகளுக்கு அடிக்கடி மதுரை, இராமநாதபுரம் சென்று திரும்புவது  உண்டு.

கழுத்து வலி, இடுப்பு வலி என உபத்திரவங்கள் உண்டு. இதனால் பேருந்துப் பயணம் தவிர்த்து இரயிலில் தான் பயணம்.

இரண்டடுக்கு அல்லது மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் வசதியாக இருக்கும்.

அதிக கட்டணம் செலுத்தும் வசதி உள்ளவர்கள்தான் பெரும்பாலும் பயணிக்கிறார்கள். உடன் பயணிப்பவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடல். குழந்தைகளை அதட்டுவதில் கூட அந்நிய மொழிதான்! அது குழந்தைக்கும்  உறவினர்களுக்கும் புரிந்திருக்குமா  என்பது ஐயம்தான்! நாகரீக உடை, பெரும்பாலும் மேலாடை இல்லாமல் சுடிதார்.பகட்டுக்கு பஞ்சம் இருக்காது.

ஆனால் இவர்கள் கழிவறையை பயன்படுத்துவதை பார்த்தால் எதைக் கொண்டு  அடிப்பது என்கிற ஆத்திரம்தான் வரும்! கழிசடைகள்.!

வெளியில் உள்ள வாஷ்பேசினில் கூட்டமாக இருந்ததால் கழிவறைக்குள்  பல் தேய்த்து விட்டு மறந்து அங்கேயே டூத் பிரசை வைத்து விட்டு வந்து விட்டேன். அதை எடுப்பதற்காக திரும்பவும் அங்கே சென்றபோது ஒரு சுடிதார் ..இளம் வயது வெளியில் வந்தது கையில் ஆங்கில நாவல்.

உள்ளே சென்ற எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. சரியாக தண்ணீரை ஊற்றவில்லை.

"மேடம்.! பிளஸ் பண்ணிட்டு வரக்கூடாதா?"

என்னை அலட்சியமுடன் ஏறிட்டது. "நோ வாட்டர் அட் ஆல்! வாட் கேன் ஐ டூ?"

"தண்ணீர் நிறைய இருக்கு. நீங்கதான் சரியா அழுத்தல.! உங்க வீட்ல இருக்கிற மாதிரி இங்க பாத்ரூம்லயும் படிச்சிங்க .ஒகே.ஆனால் டாய்லட் விஷயத்தில்  பப்ளிக் லட்ரினை யூஸ் பண்ற மாதிரி  பண்ணிட்டிங்க.!"

வழக்கம்போல 'நியாயவாதிகளான' பயணிகளில் பலர் அந்த பெண்ணுக்கு  சாதகமாக பேசினார்கள்.

"விடுங்க சார்! பெரிய இடத்துப் பெண். ரயில் டாய்லட்டை பயன்படுத்தத் தெரியல.நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்!"

அடடா  ஆர்க்கிமிடீஸ் தத்துவம் தோற்றது. பெரிய இடத்துப் பெண்களுக்கு ரயில்வே டாய்லட்டை பயன் படுத்த தெரியாது என்பது.!

 கழிசடைத்தனம்.!
 

புதன், 15 மார்ச், 2017

பர்கூரில் ஜெ.தோல்வியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும்!

ஜெயலலிதாவினால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரனை சசியின்  அதிமுக பிரிவு தனது வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

இது எதிர்பார்த்ததுதான்! ஜெ.வின் மர்ம மரணத்துக்குப் பிறகு அதிமுக,மற்றும் ஜெ.யின் கோடிக்கணக்கான சொத்துகளை குறி வைத்துதான்  சசி இயங்குவார், அதற்காக அவர் எந்த வழியிலும் செல்லத்தயங்க மாட்டார் என்பது எதிர்பார்த்ததுதான்! இதற்காக கழகத்தின் சட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு மீறப்படும் அல்லது அவர்களுக்கு தோதாக மாற்றப்படும் என்பதை தினகரன் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்தாக ஜெ. யின் கழகமும் சொத்துகளும் காலப்போக்கில்  மாறும் என்பது எழுதப்படாத சட்டம். ஜெ.வாழ்ந்த வேதா இல்லத்தை சசி குடும்பம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை அம்மாவின் ரத்த வழி உறவுகள் எப்படி அனுமதித்துள்ளன என்பது இதுவரை புரியாத மர்மமாக இருக்கிறது. ஜெ.யின்  உயில் யாரிடம் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஜெ.யின் மர்ம மரணத்தைப்போலவே உயில் மர்மமும் இருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் உறுமிக்கொண்டிருக்க...

ஆர்.கே.நகரில் தினகரன் சசியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். ஒ.பி.எஸ். அணி என தனியாக பிரிந்து தொண்டர்களில் பெரும்பாலோர்  அவர் பக்கமாக சென்று விட்ட நிலையில் பலவீனமான  நிலையில்தான் சசியின் வேட்பாளர் இருக்கிறார்.

அவரது நம்பிக்கை ஆட்சியின் அதிகார பலம், பணம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். காவல்துறையின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு ஆளும் கட்சிக்கு ஆதரவாக  இருக்கும் என்பதை கடந்த தேர்தல்களில் பார்த்திருக்கிறோம்.

ஆனால் 1966-ல் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது  அவரை  எதிர்த்து போட்டியிட்டு தோற்கடித்தவர் திமுகவின் இளைய வேட்பாளர் சுகவனம். பண பலத்தை மக்கள் பலம் கொண்டு முறியடித்தது திமுகழகம்.

சற்றேறக்குறைய அதே நிலைமைதான் ஆர்.கே.நகரிலும் நிலவுகிறது. திமுக வேட்பாளர் கட்சியின் அடிமட்டத்தொண்டர். இனிவரும் காலங்களில் இத்தகைய தொண்டர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் பத்திரிகையாளர்.சாதாரணமானவர். சுகவனத்தைப்போலவே! குடும்பமே கழகம் சார்ந்து இருக்கிறது. தொகுதியிலும் நல்ல பெயர். இத்தகையவர்களுக்குத்தான்  தேர்தலில்  வாய்ப்பு  வழங்கப்பட வேண்டும் என்று காலம் காலமாக தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதை பொதுச்செயலாளர் பேராசிரியரும் செயல்தலைவரும் நடைமுறைப்படுத்தி இருப்பது புதிய இரத்தம் பாய்வதைப்  போன்றதாகும்.

தினகரனுக்கு பெரும் பின்னடைவாக இருக்கப்போவது ஜெ.யின் மர்ம மரணமும் அதன் தொடர்பாக நடந்துள்ள நிகழ்வுகளும்தான். இவர் மீதும்  வழக்கு இருக்கிறது. சிங்கப்பூர் குடிஉரிமை பெற்றதாக சொல்லிக்கொண்டவர்  தேர்தலில் நிற்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

ஓ.பி.எஸ். அவரது அணி சார்பில் கடுமையான வேட்பாளரை நிறுத்தி விட்டால் அது திமுகவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பதை சொல்லத் தேவை  இல்லை.


ஞாயிறு, 12 மார்ச், 2017

மன்னர் அவசரமுடன் பாய்வது ஏன்?

தளபதி : " எதிரி  இன்னமும் படை  எடுத்து வரவில்லையே, எதற்காக மன்னர் அவ்வளவு அவசரமுடன் பதுங்கு குழிக்குள் பாய்கிறார் அமைச்சே ?"

அமைச்சர்.; ஷ்..ஷ்..! சத்தம் போடாதே! மன்னரின் கோவணத்துக்குள் எறும்பு புகுந்து விட்டதாம்!

சிப்பாய்: ???????
-----------------------------------------

மகன்; " எனக்கு சின்னம்மா வேணும்னு உங்கிட்ட அப்பா கேட்க சொல்றார். நீ என்னம்மா சொல்றே?"

அம்மா: "உனக்கு புது அப்பா வந்திட்டார்னு போயி அவரிட்ட சொல்லிடு!"

மகன்: அப்ப எனக்கு அவரும் ஐஸ் வாங்கித் தருவாரா?

அம்மா: ??????????????????
--------------------------------------

தொண்டன்; "தலைவர் தலையில அவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்காரே ஏன்?"

மற்றவன்: "சின்ன வீடு வெயிட்டா  கேட்ட வைர நெக்லஸை வாங்கி கொடுக்கலையாம். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு சின்ன வீடு  காட்டிருச்சாம்!"

_------------------------------------------

"அவ்வளவு பெரிய நடிகர் யார் பேர்ல யாகம்
பண்ண வந்திருக்கார். டெலிவரிக்கு போயிருக்கிற ஒய்ப் மேல எவ்வளவு அக்கறை பார்த்தியா?"

"மண்ணாங்கட்டி! டுவிட்டர்ல அவர் வீடியோ வந்துடக்கூடாதுன்னு ஸ்பெஷல்  அர்ச்சனை பண்றார்!"

---------------------------------------- 

 

பா.ஜ.க."வின் " வீச்சில் சிக்கி விட்ட அதிமுக கட்சிகள்.!

உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு  மரண அடி கொடுத்த அந்த மாநிலத்து மக்களுக்கு முதலில்  நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிவிடுவோம்.!

ஐயன் திருவள்ளுவர் சிலையை கோடவுனில் போட்டு வைத்திருந்த  புழுத்த மனதுக்காரர் அந்த ஆளு! போய் சேரட்டும்! இனி  குப்பைத்தொட்டியில்தான்  அவரது அரசியல்.!

ஐந்து மாநிலத்து சட்டமன்றத்தேர்தலில் மோடிக்கு கிடைத்திருக்கிற வெற்றி  சாதாரணமானது இல்லை. செல்லாத நோட்டு அறிவிப்பினால் மோடிக்கு  மாபெரும் வீழ்ச்சி காத்திருக்கிறது என்று பெரும்பாலோர் கணித்திருந்தார்கள் ஆனால் அவர்களது கணிப்புகள் அழுகி விட்டன...உத்திர பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி அரசியல் வரலாற்றில் தனித்த தகுதியை பெற்று இருக்கிறது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும்  ராஜ்ய சபாவில்
பாஜக வை எதிர்க்கட்சிகள் திணற அடித்து வந்த நிலைமை இனி  இருக்கப்  போவதில்லை..

அதிமுகவுக்கு பாராளுமன்றத்தில் இருந்து வந்த முக்கியத்துவம்  ஜெ.மரணத்துக்குப் பிறகு இல்லாமல் போய் விட்டது. அதனுடைய  ஆளுமை  சவப்பெட்டிக்குள்ளேயே அடங்கி விட்டது. ஆளும் பாஜகவை அந்த கழகத்தினால்   இனி மிரட்ட முடியாது .பயந்து வாழவேண்டிய கட்டாயம் சசி கோஷ்டிக்கு!சசியின் சிறை வாழ்க்கை இறுகுவதும்,தளர்வதும் பாஜகவின் கருணையில்!
வடக்கில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கிற பாஜக,வின் அடுத்த இலக்கு  கழுகுப் பார்வை  எல்லாமே இனி தென்னகம் பக்கம்தான்!! முதலில் கர்நாடகம். அடுத்து தமிழகம் என்று அஜண்டா போட்டு   வைத்திருப்பார்கள்..கர்நாடகாவை பொருத்தவரை எடியூரப்பா அவர்களது  பலம்.

தமிழகத்தை பொருத்தவரை ஆளும் அதிமுகவின் பலவீனம் பாஜகவுக்கு பலம்.ஒ.பி.எஸ்.சின் அணி ,சசியின் அணி இரண்டுமே அப்பத்தை பங்கு போட நினைக்கிற பூனைகள்.! அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி  பிஜேபி விளையாடிவிடும்.தனது விளையாட்டுக்கு ராஜ தந்திரம் அறிந்த தலைமை தேவை என்பதால் தமிழகத்தலைமையை மாற்றவும் தயங்காது.

ஜூன் மாதம் வரை தற்போதைய அதிமுக அரசு தாக்குப்பிடிக்கும் என்கிறார்கள் பாஜக பிரபலங்கள்.

பார்க்கலாம்.

வெள்ளி, 10 மார்ச், 2017

பெற்ற தாயை புணர்ந்த மாமன்னன்...ச்சீ!

மனித ஓநாய்களின் காமம் உறவு பார்ப்பதில்லை.இனம் பார்ப்பதில்லை. நாயையும் விட்டு வைக்கவில்லை. பச்சிளம் குழந்தைகளையும் காமப்  பசிக்கு இரையாக்கிக் கொல்கின்றன ....சாதாரணமாக பார்க்கப்படுகிறது.

இதைப் போன்ற செய்திகள் நாளிதழ்களில் தினமும்!

இந்த சமுதாயம் காட்டுமிராண்டித்தன்மைக்கு மாறுகிறதா? அதன்தொடக்கமா?
மனிதனின் வக்கிரம் வரும் காலத்தில் இன்னும் மோசமாகுமா?பெண்களின்   பாதுகாப்புக்கு உத்திரவாதம் இருக்குமா? பயமாக இருக்கிறது.

இந்த இழிந்த நிலை பற்றி அரசுகள் அவ்வளவாக கவலை கொள்ளாதது எதைக்காட்டுகிறது?தெரியவில்லை

இதுவும் கடந்து போகும் என்பதுதானா?

ரோம் மன்னன் நீரோவைப் பற்றிய ஒரு வரலாற்று உண்மையை தெரிந்து  கொள்வது தவறில்லைதான்!

ரோமாபுரி பற்றி எரிகையில் பிடில் வாசித்தான் என்பதாக சொல்வார்கள். அவனது காலத்தில் பிடில் இல்லை என்பதாக சிலர் சொல்வார்கள். ஆனால்  அவன் பெற்ற தாய் 'அக்கிப்பினா'வை அவனது படுக்கை அறை சரசங்களுக்கு  பயன்படுத்திக்கொண்டான் என்பதை உண்மை என்பதாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

பெற்ற தாயையே காமப் பசிக்கு உணவாக்கி கொண்டிருக்கிறான் அந்த கொடூரன்.

ஆனால் மக்களுக்கு அவனின் அசிங்கம் தெரிந்தே இருந்தது. ஆனாலும் அனுமதித்திருக்கிறார்கள்,அவர்களை மக்கள் என சொல்வதே மனித இனத்தை  இழிவுபடுத்துவதாகிவிடும்.

இன்றைய சமுதாயமும் ரோம சாம்ராஜ்யத்தின் காட்டு மிராண்டித்தனத்துக்கு  திரும்பிவிடுமோ ?மனதில் உறுத்தல் .


அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப்பேரனின் மிருகத்தன்மையைப் பற்றி  மதன் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது..அவனது பெயர் கலிக்யூலா. முழுப் பெயர் கேயஸ்சீசர் ஜெர்மானிக்ஸ்.

மூன்று சகோதரிகளின் கணவன்களை கொன்று விட்டு தனது படுக்கை அறைக்கு சகோதரிகளை  கொண்டு வந்திருக்கிறான்! இவனை எப்படி மன்னன்  என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பது புரியவில்லை.

இன்று மதுக்கடைகளை நாடு முழுவதும் அரசே நடத்துவதைப்போல  விபசார விடுதிகளை கலிக்யூலா அனுமதித்தான்.

அந்த விடுதிகளுக்கு அவனே செல்வான். அந்தரங்கத்தில் அறைக்குள் அரை வெளிச்சத்தில் நடக்க வேண்டியதை அவன் பகிரங்கமாக நடத்தினான். அவனது  காம விளையாட்டுகளை சுற்றிலும் இருப்பவர்கள் கரவொலி எழுப்பி  ரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.

இவனே அந்த விடுதிகளுக்கு தீயிட்டிருக்கிறான்.அங்கிருந்தவர்கள் அவனுக்கு  முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். அதற்குத்தான் அந்த தீ வைப்பு!

இதைவிட கொடுமை இன்னொன்றும் இருக்கிறது.

கலிக்யூலாவின் சகோதரிகள் அரச குடும்பம். அதனால் அவர்களுடன்  புணர ஆசைப்படுகிறவர்கள் ஆயிரம் தங்கக்காசு வழங்கவேண்டும்.இப்படியும்  தனது சகோதரிகளை விலைமாதுகளாக மாற்றியவன்தான் அந்த வெறியன்.
இத்தகைய கேவலங்கள் சரித்திரத்தில் கறுப்பு பக்கங்களாக இருக்கின்றன.

கறுப்புப் பக்கங்கள் நாகரீகமாகி விடக்கூடாது.  


புதன், 8 மார்ச், 2017

கோபுர சின்னமும் இசைஞானியும்...?

ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது .

தமிழக அரசாங்கத்தின் சின்னத்தில் இருப்பது மதுரைக் கோபுரம் என்கிறார் இசைஞானி இளைய ராஜா!

"'இல்லை " என்கிறார்கள் மற்றவர்கள்.

யார் சொல்வது உண்மை?

ஞானி தவறாக சொல்வாரா...அல்லது அவருக்கு அப்படி ஒரு தகவல் தரப்பட்டதா?

முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜா பயின்றது ஸ்ரீவில்லிப்புத்தூரில்.
அவருக்கு தமிழக அரசின் சின்னமாக கோபுரம் இருக்க வேண்டும் என்பது விருப்பம். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலத்தில் அவர்கள் வெளியிட்ட கால் வராகன் நாணயத்தில் கோபுரம் இடம் பெற்றிருந்தது.

நம்மை அடக்கி ஆண்ட அன்னியனே நமது கோபுரத்தை சின்னமாக வைத்துக் கொண்டிருந்த போது நாம் நமது அரசு சின்னமாக கோபுரத்தை வைத்துக் கொண்டால் என்ன என்கிற எண்ணம் வராது இருக்குமா?

அதனால் 1949-ல் ஆர்.கிருஷ்ணராவ் என்பவர் கோபுரத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு அமைத்துக் கொடுத்ததுதான் அரசின் சின்னம். மதுரைக் கோபுரத்தில் சுதை சிற்பங்கள் அதிகம் இருக்கும்.அதனால் அதை எடுத்துக்கொள்ளாமல் 192அடி உயரமுள்ள சிற்பங்கள் இல்லாத ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டார் என்கிறது விக்கி.

விழா மலரில்  வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் மதுரைக் கோபுரம்தான்
அரசு சின்னமாக அமைய உதவியது என்று யாரோ எழுதியதை வைத்து இளையராஜா அப்படி சொன்னாரோ என்னவோ!


இளையதளபதியும் நானும்...

முதல்வர் கலைஞர் பொற்கால ஆட்சியில்...

எனக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.ஆளுநராக பாத்திமா பாபு . தங்கப்பதக்கம் வழங்கியவர் கலைஞர்.

சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி முயற்சியில் திரைப்பட வர்த்தக சபையில் எனக்கு பாராட்டுவிழா.

ஷங்கர்,பிரபு ,நெப்போலியன்,அர்ஜூன்,பிரகாஷ்ராஜ் ,கார்த்திக்,சரத்குமார், சந்திரசேகர்,மற்றும் அன்றைய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முதல்நாள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் "என்ன பரிசு வேண்டும்?" என்று என்னிடம் கேட்டார்.

"நானும் அண்ணன் சிவாஜி கணேசனும் உங்களின் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எனக்கு பரிசாக கொடுங்கள். அது போதும்" என்று சொன்னேன்.

என்னய்யா இப்படியும் ஒரு ஆளு இருந்திருக்கானேன்னு நினைக்கலாம். ஆனால் நானும் அண்ணனும் எத்தனையோ படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும் சலிப்பதில்லை.

விழாவுக்கு வந்த சரத்குமார் சார் குத்து விளக்கு கொடுத்தார்.தம்பி கார்த்திக் தங்க பிரேஸ்லெட் வழங்கினார், தனது பிறந்த நாளன்று அண்ணன் சிவாஜி  எனக்கு கொடுத்த தங்க சங்கிலியில் அவரது உருவம் உள்ள டாலரை இணைத்து அணிவித்தார். விஜய்யுடன்மேடைக்கு வந்த இயக்குநர் சந்திரசேகர்  நான் விரும்பிய படத்தை பரிசாக கொடுத்தார்.

அந்த புகைப்படம் இன்று என் கைக்கு கிடைத்தது. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

செவ்வாய், 7 மார்ச், 2017

ஜெ.மரண மர்ம முடிச்சு அவிழுமா?

எகிப்திய  மாமன்னர் மூன்றாம் ராம்சேஸ்.கடைசி பேரரசர்.

மூவாயிரம் ஆண்டுகளாக அவரது மரணம் பற்றிய மர்மம் அடை காக்கப்பட்டிருந்தது. பாதுகாக்கப்பட்ட அவரது மம்மி( சடலம்.) ஆய்வுக்கு வந்தபோது கழுத்தில் ஏழு  செண்டிமீட்டர் நீளம் ஆழமான வெட்டுக்காயம்.

கூர்மையான கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.அந்த காலத்திய மரபுப்படி ஒரு தாயத்தும் காணப்பட்டது.

அந்த காலத்தில் விசாரணை கமிஷன் கிடையாது.

ஆனால் இந்தக் காலத்து தடயவியல் ஆய்வாளர்களின் அறிவியல் மூளைக்கு  தெரியாது போகாதல்லவா?அரண்மனைக்குள் சதி!

ஆச்சரியப்படவேண்டாம்.மாமன்னனின் அந்தப்புரத்திலேயே தீட்டப்பட்ட சதி! அதுவும் அவரது மனைவியரில் ஒருவரான டியி, மகன் பெண்டாவர் இருவரும் சதியின் மூலவர்கள்.ஆக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு  தீர்த்துக் கொல்லும் 'உயரிய பண்பாடு' இருந்திருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட சரித்திரத்துக்கும் இனி சொல்லப்போவதற்கும் நடப்புக்கதைக்கும் எள்ளளவு கூட தொடர்பு இல்லை. இல்லவே இல்லை.!

சுய நினைவு இல்லாத நிலையில் உடல் நலம் சீர் கெட்டுப்போன நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார் அவருக்கு வழங்கப்பட்டிருந்த உணவு,மருந்துகள்தான் காரணம் என்பதாக அப்பல்லோ மருத்துவமனை கூறியிருக்கிறது.

இதை வைத்து ஆங்கில இணைய தளத்தில் அய்யப்ப பிரசாத் ஒரு செய்தியை  பதிவிட்டிருக்கிறார்.

அதில்......

2011-ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது  ஜெயலலிதாவை எச்சரித்திருக்கிறாராம்.

"தமிழகத்தில் உங்களுக்கு இணையாக 'பேரலல் கவர்மெண்ட்' நடக்கிறது. பெரிய அளவில் 'டீலிங்' பண்ணுகிறார்கள்.எச்சரிக்கையாக  இருங்கள்." என்று  சொல்லியிருக்கிறாராம்.

தவறான மருந்து, உணவு கொடுக்கப்பட்டு வருவதை எச்சரித்த மோடி ஒரு டாக்டர்,நர்ஸ் ஆகியோரை சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால்  அந்த டாக்டர்,நர்ஸ் இருவரையும் மன்னார்குடிக்காரர்கள் திருப்பி அனுப்பி விட்டார்களாம்.

அதுமட்டுமல்ல கட்டுரையாளர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்.

அப்பல்லோவில் இருந்த சி.சி.டி .வி.கேமராக்கள் முப்பது அகற்றப்பட்டது ஏன்? முதல்வருக்கான கான்வாய் இல்லாமல் அவருக்கான ஆம்புலன்சில் அனுப்பாமல் ஆஸ்பத்திரியின் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தது ஏன் என்றும்  கேட்டிருக்கிறார்.

இன்னும் பல மர்மங்கள் வேதா நிலையத்தில்!

எப்போது அவிழுமோ?
 


ஞாயிறு, 5 மார்ச், 2017

அந்தரங்க வாழ்க்கை நடிகைக்கு கிடையாதா?

நடிகனுடைய  'அந்தரங்க வாழ்க்கை ' அலசப்படுவதில்லை. சுட்டிக்காட்டினால்  தனது கோவணம் எந்த இடத்திலும் காயும் .அதனால் உனக்கென்ன கவலை என குட்டுவான்!

ஆனால் பாட்டரங்கம்,பட்டிமன்றம் என பல மன்றங்களில் நடிகைகளை பற்றி  கவலைப்படுவார்கள் பங்கேற்பாளர்கள்.! கை தட்டி விசில் அடிக்க ஒரு கூட்டமே வரும்.அடடா! பெண்கள் மீது அவர்களுக்குத்தான் எத்தகைய  அக்கறை ,,,கவலை!

 இந்த கேடுகெட்ட சமூகம்  ஏகபத்தினிவிரதன்களாக காட்டிக்கொண்டு. ஏகப்பட்ட 'பத்தினிகளை' வைத்துக்கொள்கிற  அரசியல்வாதிகளை, அல்லது  நடிகனை போற்றி புகழ் பாடும்.    இந்த புழுத்துப்போன சமூகம் அதற்காக  வெட்கப்படுவதில்லை!

தனக்கு இன்ன  நடிகை மாதிரி பெண் வேண்டும் என்று தேடுவார்கள்.!எந்த பெண்ணாவது தனக்கு விஜய் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னால் அவளை 'அப்படிப்பட்டவளாக' இருப்பாளோ  என சந்தேகிப்பார்கள்!   இவர்களது அளவுகோல்தான் என்ன?இவர்களும் மனிதர்கள்தான்!

பாலியல் ரீதியாக நடிகைகள் அடிபடுகிறபோது நாலைந்து நாட்கள் நாக்கு நமத்துப்போகும் அளவுக்கு பேசுவார்கள்.பாவனா விஷயமும் அப்படித்தானே  ஆகி இருக்கிறது.மூன்று வயது குழந்தையைக்கூட கொடூரன்கள் விடுவதில்லை.

!

தற்போது வைரல் அனுஷ்கா,திரிஷா,ஆண்ட்ரியா,அமலாபால் ஆகியோரைப் பற்றி பாடகி சுசித்ரா பெயரில் பதிவு ஆகிற படங்கள்தான்! ஆனால் இதுவும்  கடந்து போகும்!

நடிகை ரேகாவை தெரியுமா?

அஞ்சனா சபார் என்கிற இந்திப்படத்தில் நடித்தபோது திட்டமிட்ட அசிங்கம்  ஒன்று நடந்தேறியது.அப்போது ரேகாவுக்கு வயது 14. டைரக்டர் ராஜா நவாதேயும்  ஹீரோ பிஸ்வஜித்தும் கூட்டணி போட்டு ஒரு காட்சியை படமாக்குகிறார்கள். நெருக்கமான சீன்.

'அவளுக்கு தெரியாமல் கிஸ் பண்ணிவிடு. முரண்டு பிடிக்கவிடாமல் இறுக்கமாக அணைத்துக்கொள்"என்று சொல்லிவிட்டார் ராஜா நவாதே! 

கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு கண்ணீர் விடத்தான் முடிந்தது ரேகாவினால்!

படம் வெளியானதும் ''அடடா..எவ்வளவு போல்டான சீன் " என்று பத்திரிகைகள்  பாராட்டித்தள்ளிவிட்டன.

வினோத் மெஹ்ரா என்கிற நடிகரை கல்யாணம் பண்ணிக்கொண்டு புருசனுடன் புகுந்த வீடு செல்கிறார் ரேகா.அது எத்தகைய புனிதமானது என்பதை பெண்களால் மட்டுமே உணர இயலும்..

ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்  என்கிற எதிர்பார்ப்புடன் சென்றரேகாவுக்கு எதிர்மறையான வரவேற்பு!

ஸ்லிப்பரை வீசுகிறாள் மாமியார். நல்ல வேளை உள்ளே அழைத்துச்சென்று  தீக்குளிக்க வைக்கவில்லை.முதல் கோணல் கடைசி வரை கோணலாகவே அவரது வாழ்க்கை அமைந்து விட்டது.

அமிதாப்புடன் காதல், கழுத்தில் தாலி என பல கட்டங்களாக ரேகாவின் வாழ்க்கை கடந்தது. டில்லி பிசினஸ் மேன் முகேஷ்தான் கடைசி கணவனாக  இருந்தார். அவரது வாழ்க்கையும் தற்கொலையில் முடிந்தது.

தன்னுடைய கணவனின் காதலி என்பது தெரிந்ததும்  ரேகாவுடன் ஜெயா பச்சன் பேசுவது இல்லை. ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டிய கட்டாயம். பேசாமல் இருக்க முடியவில்லை.

ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தபோதும் ரேகாவுடன் பேசுவதை அமிதாப்  தவிர்த்து விட்டார்.அவர் காதலித்தது ரேகாவை,கைப்பிடித்தது ஜெயாவை!

ஆனால் இவையெல்லாம் அந்த காலத்தில் அந்தரங்க படங்களை பிரசவிக்கவில்லை.

என்னதான் சொன்னாலும் அந்த காலத்தில் கண்ணியம் காக்கப்பட்டது.
 

சனி, 4 மார்ச், 2017

சுசித்ரா ...நிறுத்திக்கோ சகோதரி!

உங்களுடைய பெயரில் வெளியாகும் நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்க அசிங்க புகைப்படங்கள், வீடியோக்கள் தொடக்கத்தில் ஒருவகையான  எதிர்பார்ப்புகளை உருவாக்கியது உண்மை. ஆனால் அதுவே நீலப்படம் அளவுக்கு போகிறபோது வலைத்தளத்தை பினாயிலால் கழுவினாலும்  கறை போகாது போல!

கர்மம்..கர்மம் ! கண்றாவி. ஒரு பெண்ணால் எப்படி இப்படியொரு படங்களை பார்க்க, பதிவிட முடிகிறது? கணவனுடன் தனித்திருக்கும் படம் என்றாலும்  மனைவியும்  பார்க்க மறுப்பாள்.தணிக்கைக்குழுவினால் அனுமதிக்கப்படுகிற  அளவுக்கு இருந்த படங்கள் ப்ளு பிலிமாக மாறுகிறபோது வெறுப்புதான் வருகிறது.இருட்டில் நடக்கவேண்டியவைகளை வெளிச்சம் போட்டு படம் பிடித்த வக்கிரபுத்தியாளன் அல்லது வக்கிரபுத்திக்காரி யாராக இருக்க முடியும் பழுத்த அனுபவசாலியால் மட்டுமே முடியும்! ச்சே !எல்லாமே திட்டமிட்டு நடந்திருக்கின்றன !

பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வருகிற கிசு கிசுக்கள் உண்மைதான் என்று  மக்களை நினைக்கவைத்திருக்கிறார் பாடகி சுசித்ரா!

கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு சேதி. சுசித்ரா பெயரில் வெளியிடப்படுகிற படங்களுக்கு பின்னணியில் பெரிய இடத்து பையன் அனிருத் இருப்பதாக சொல்லப்படுகிறது. லண்டனுக்கு சுசி செல்கிறார் என்றும் தகவல். இவைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது  மூலவர் எவரோ அவருக்கு மட்டுமே தெரியும்.

சுசித்ரா....நிறுத்திக்கோ சகோதரி!கன்னட சோதரர்களும் தல படமும்....

வெட்கமாகத்தான் இருக்கிறது. தமிழ்த்திரைப்பட உலகில் நானும் பத்திரிகையாளனாக நாற்பது ஆண்டுகளை விழுங்கிவிட்டேன். இவ்வாண்டு  தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளைப் படித்தபோது  ஐ.சி.யூ.வில் கிடப்பது திரைப்படங்கள் மட்டுமல்ல.தயாரிப்பாளர்களும்தான் என்பது புரிந்தது.!

'நாங்கள் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு 'இலவச பஸ் பாஸ்' கொடுப்போம்' என்பது உறுதிமொழிகளில் ஒன்று!

சிரிப்பது நல்லதுதான்! வாய் திறந்து உரக்க சிரியுங்கள்.

ஆனால் கன்னட தயாரிப்பாளர்களின் ஒற்றுமையையும் பிடிப்பையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

அரசாங்க சட்டத்தின் மென்னியைப்  நெரித்து கோமாவில் கிடத்தி விட்டு 1962-லிருந்து இன்று வரை டப்பிங் படங்களை வெளியிடுவதில்லை என்கிற   குரங்குப்பிடியான கொள்கையில் ஊறிப் போய் இருக்கிறார்கள்.! வன காவலன் வீரப்பனின் பிடியில் சிக்கித்  தவித்த ராஜ்குமார்  ஆதரித்த கொள்கை என்று  கவசத்தை மாட்டிக்கொண்டு அராஜகம் செய்கிறார்கள்.

'தல' அஜித் நடித்திருந்த 'என்னை அறிந்தால்' தமிழ்ப்படத்தை 'சத்ய தேவ் ஐ.பி.எஸ் ' என்கிற பெயரில் டப் செய்து நாற்பது தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது .'கர்நாடக பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்' சில்  இருக்கிற சில விளங்காமல் போனவர்களின் மூளைகள் யாரை தூண்டிவிட வேண்டுமோ அவர்களை பணம் கொண்டு குத்தி விட்டது.

'டப்பிங் படங்களை திரையிட்டால் அந்த தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம்.சிறைக்கும் செல்வோம்" என கன்னட வெறியர் வாட்டாள் நாகராஜ் என்கிற அனாமதேயம்  அறிக்கை வாசித்தார். ஆள் பலம் இல்லாத அந்த ஆளுக்கு ஊருக்கு நாலு பேர் காசுக்கு கிடைக்காமல் போவார்களா? போஸ்டர் கிழிப்பு,பந்த் அறிவிப்பு என பூச்சாண்டி காட்ட ஹூப்ளி,பேல்கவா, குல்பர்கா ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டர்காரர்கள் பயந்து போனார்கள். ஒற்றை குச்சிதான் என்றாலும் உரசிப்போட்டால் பெரு நெருப்பு எழும் அல்லவா? 

"இப்படி மிரட்டுவது படம் பார்க்கிறவனின் சுதந்திரத்தை பறிப்பதாகும். இன்ன படம்தான் பார்க்கவேண்டும் என்று எவனும் உத்தரவிட முடியாது. நான் பெங்களூருவில் படத்தை ரிலீஸ் பண்ணுவேன். தடுப்பவன் யார் என்பதை பார்த்து விடலாம் " என்று படத்தின் உரிமையை வாங்கியிருக்கிற கிருஷ்ண கவுடா தடியை தூக்கிவிட்டார்.

"மாதம் ஒரு டப்பிங் படத்தை ரிலீஸ் செய்வேன்" எனவும் சொல்லியிருக்கிறார். அவரின் உறுதிக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய கர்நாடக பிலிம் சேம்பர் எதிரியாக தன்னை அடையாளம் காட்டி விட்டதுதான் கேவலம்.

ஒரு தமிழ்ப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு அது  பிற மாநிலங்களில் தடுக்கப்படுமானால்  தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன செய்ய வேண்டும்?

தயாரிப்பாளர்களுக்கு இலவச குடும்ப பாஸ் வாங்கிக் கொடுத்து பெங்களூரு  ரிசார்ட்டில் கொண்டு போய் அடைக்க வேண்டும்.!!!!!!!!!!

வேறென்ன!


வெள்ளி, 3 மார்ச், 2017

பாடகி சுசித்ராவின் இடி மின்னல் தாக்குதல்!

கன்றிப் போன சுசித்ராவின் கையில் இவ்வளவு கதைகள் இருக்கும்னு சத்தியமா  நினைக்கலிங்க.வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் மாதிரி படங்களை டிவிட்டரில் போட்டுக்கிட்டே இருக்காங்க.

வர்ற திங்கக்கிழமை புதுப்பட போஸ்டர் போடப்போறாங்களாம். தனுஷ்,அமலா , ஹன்சிகா, விஜய் டி .வி. திவ்யதர்ஷினி .ஆண்ட்ரியா, அனிருத் இவங்களைப் பத்தி பார்க்கலாம்னு டிவிட்டர் பண்ணிருக்காங்க. நல்ல வேளை சிம்புவுக்கு சிவன் அருள். ஹன்சிகாவின் காதலை கட் பண்ணிவிட்டுட்டார்.

வாடிவாசல்,நெடுவாசல்னு மக்கள் ஒரு பக்கம் தீவிரமா போராடி வர்றாங்க.தமிழ்நாட்டில தண்ணீர் பஞ்சம்,ரேசன்ல எதுவும் கிடைக்காமல் அல்லாடுராங்க.அவங்களுக்கு ஒரு எண்டர்டெயின்மென்ட் வேணாமா? அதான் சுசித்ரா இப்படி படங்களை ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க.அதுசரி படத்தில இருக்கிறது யாருங்க,ஹன்சிகாவா?

பண்ணுங்க மேடம். நாளைக்கு அவங்களும் ஏதாவது உங்கள் படங்களை வெளியிடலாம்ல. எங்களுக்கு கொண்டாட்டம்தான்!

ஆமி ஜாக்சன் ...இது அசிங்கம்!

ஆமி ஜாக்சன் .ஆங்கில நடிகை.

அவருக்கு தமிழகத்தில் அடித்தளம் அமைத்தவர் டைரக்டர் ஏ எல் .விஜய்.

'எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் "என்று பாரதி பாடியதற்கு இணங்க விஜய் கொண்டு வந்து சேர்த்த கலைச் செல்வம் ஆமி.!

அற்புதமான வளைவு சுழிவுகள். மறைக்கப்பட வேண்டியவைகள் என நாம்  நினைப்பது ஆமிக்கு அவசியம் இல்லை.! திறந்த வெளியில் நிர்வாணமாகக்  கிடப்பது ஆமிக்கும் அந்நாட்டவர்க்கும் வழக்கம்.

ஆனால் அதை தென்னகத்தில் நடத்துவது அசிங்கம். அதற்கு நம்மவர்களே  துணை நிற்பது கேவலம்.

ஆமிக்கு தென்னக திரைப்படங்களில் வாய்ப்பு அளிப்பது கழிவினை அள்ளி  சந்தனமாக பூசிக் கொள்வது போன்றது!

பாலிவுட் பங்காளிகளுக்கு அத்தகைய சந்தனம் பூசிக்கொள்வது ஜவ்வாது மாதிரி  ! அவர்களுக்கு உறுத்தாது. தமிழில் இருந்து அங்கு வாழப்போன நடிகை ஸ்ரீதேவி போன்றவர்களே மார்பக மையப் பகுதியை பளிச்சென காட்டுவதில் பெருமை.

தென்னகமும் வட தேசமும் பண்பாடு கலாச்சாரத்தில் ஒத்துப் போகாது.

நமக்கு கெட்டவை என்பதை ஆமி துணிச்சலுடன் புகைப்படம் வழியாக காட்டி இருக்கிறார்.

ஆந்திர இணைய தளத்தில் அந்த படம் வெளியாகி இருக்கிறது.

இனியாவது தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் இத்தகைய நடிகைக்கு வாய்ப்புகள் அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம்தான் பண்பாட்டு காவலர்கள் ஆயிற்றே!

அட ..போங்கய்யா! அந்த மாதிரியான போஸ்கள்  கொடுக்கச்சொல்லி கூடுதலாக  பணம் கொடுப்பதற்கு பேரம் பேசுவார்கள்.

புதன், 1 மார்ச், 2017

வம்பு தும்பும்,,,பித்தலாட்டமும்.!

எனது வலைப்பூவை வாசிக்கிறவர்களும் , இவனெல்லாம் எழுதி நாம படிக்கிறதா என வெறுப்பில் கடப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லாமல் இல்லை. அப்படி செல்கிறவர்கள் ஒரு நாலு வார்த்தை ஏதாவது  பதிவு போட்டா என்ன சார்?

மடத்தனமா எழுதுறதா நெனச்சா நறுக்னு சொல்லலாம். பரவாயில்ல.எழுத  வருதுப்பான்னு நினைக்கிறவங்க பூங்கொத்து வேணாமய்யா! ஒத்தை பூவை வைக்கலாம்ல.

விசயரங்கன் எழுதின தமிழ்ப்புதையலில் படிச்ச கருத்தை ஞாபகத்தில வச்சிருந்து இப்ப பதிவு செய்திருக்கேன். ரொம்பவும் எனக்கு பிடிச்சிருந்ததுங்க,

'கணக்கு வழக்கை பாருப்பா"ன்னு சொல்றாங்களே..அதுக்கு என்னய்யா அர்த்தம்?

கணக்குன்னா நூல் ,வழக்குன்னா நடப்பு .அதாவது புத்தகத்துக்கு தகுந்த மாதிரி  நாட்டு நடப்புடன் ஒத்துப்போன்னு அர்த்தம்!

'அவன் ரொம்பவும் பித்தலாட்டம் பண்றான்னு சொன்னா அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கு. பித்தளை + ஆடகம் =பித்தலாட்டம்-னு சொல்றாங்க. பித்தளையை பொன்னாக மாற்றப் பார்க்கிறான்னு அர்த்தம் சொல்றாங்க.

வன்பு+துன்பு=வம்பு தும்பு ன்னு மருவி இருக்கு! வன்பு என்றால் வன்முறை, துன்பு என்பது துயரம் ஆக வம்பு தும்பு இல்லாம வாழப்பாருங்கப்பான்னு அர்த்தமாம்.எக்குதப்பாக என்பதற்கு இலக்கு தப்பாக போய்விட்டதுன்னு பொருளாம்.
ஆக இதுக்காவது பின்னூட்டம் போடுவீங்களா?
 

குற்றங்களுக்கு மோடிஜி துணை போகலாமா?

ஈஷா யோகா மையம்.

"நூற்றி ஒன்பது ஏக்கர் நிலத்தில் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.ஒரு லட்சம் சதுர அடி அளவை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. அங்குதான் ஆதி யோகி சிலை திறக்கப்பட்டிருக்கிறது."

இது செய்தி இல்லை. சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல்  செய்துள்ள மனுவில் சொல்லப்பட்டுள்ள உண்மை.!

19.45 ஹெக்டர் விளைநிலம் மத வழிபாட்டை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நடப்பது மத சார்பற்ற அரசு என்கிறார்கள். அனுமதி பெறவில்லை , ஆக்கிரமிப்பு ,விதி மீறல் என சகல துஷ்பிரயோகமும் நடந்த  ஒரு இடத்துக்கு பிரதமர் மோடிஜி வந்து திறப்பு விழா நடத்திவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு இத்தகைய குற்றங்களை பற்றி சொல்லி இருக்க வேண்டுமா இல்லையா? தமிழக அரசின் நிர்வாகம் பிரதமரிடம் மறைத்ததுக்கு என்ன காரணம்? இவை எல்லாம்  குற்றமா இல்லையா?

ஏழை குடியிருக்க இடம் இல்லாமல் அரசு இடத்தில்  குடிசை போட்டுவிட்டால் கருணை இல்லாமல் பிரித்து எறியும் அதிகாரிகள்  ஈஷா யோகா மையத்துக்கு மட்டும் சலுகை காட்டியது எதனால்? யாரால்?  விளை நிலம் என பார்க்காமல் அமைச்சர்கள் கையெழுத்து போட்டதற்கு பேரங்கள் பேசப்பட்டிருக்கலாம் என்று நினைக்கமுடியாமல் இருக்க முடியவில்லையே! முதல்வராக இருந்த ஜெ, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என  உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருப்பதை பார்க்கிறபோது நாம் ஏன் அப்படி நினைக்கக்கூடாது?

அண்மையில் சீமான் வீட்டுப்பிள்ளைகள் உயர்தர கார்களில் ரேஸ் விளையாடி இருக்கிறார்கள். இப்படி நடப்பதற்கு போலீஸ் அனுமதி அளிக்காது.ஆனால் அப்படியொரு அவலம் நடந்திருக்கிறது.காவல்துறை அதிகாரியின் கால் மீதே காரை ஏற்றி தப்பித்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை. ஏழை என்றால் லாக் அப்பிலேயே அபிசேகம் நடத்தியிருப்பார்கள்.அவர்களின் பெயர்களை ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.காரணம் என்னவோ!

ஆக தமிழகத்தில் கோடிஸ்வரர்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் தமிழக அதிமுக அரசு கண்டு கொள்ளாது.காவல்துறையும் அவர்களுக்கு அடிபணிந்துதான் பணி புரியும் .

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டமும் பி.ஜெ.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நடத்தும் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது .

இவைகளுக்கு மத்தியில் ஒரு நல்ல காரியமும் நடந்திருக்கிறது. இந்திய-இங்கிலாந்து நட்புறவு விழாவில் இங்கிலாந்து மகராணி எலிசபெத்தை இரண்டாம் தடவையாக உலகநாயகன் கமல்ஹாசன் சந்தித்திருக்கிறார். மருதநாயகம் படத் தொடக்க விழாவுக்கு மகாராணி வந்திருந்தது திரையுலக வரலாற்றில் எழுதப்பட வேண்டியது.

தீமைகளுக்கு மத்தியில் ஒரு நல்ல காரியமும் நடந்திருக்கிறது.
   

ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் வாயை மூடி,கையை கட்டி வேடிக்கை பார்த்த அமைச்சர்களுடைய பங்கு