புதன், 1 மார்ச், 2017

குற்றங்களுக்கு மோடிஜி துணை போகலாமா?

ஈஷா யோகா மையம்.

"நூற்றி ஒன்பது ஏக்கர் நிலத்தில் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.ஒரு லட்சம் சதுர அடி அளவை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. அங்குதான் ஆதி யோகி சிலை திறக்கப்பட்டிருக்கிறது."

இது செய்தி இல்லை. சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல்  செய்துள்ள மனுவில் சொல்லப்பட்டுள்ள உண்மை.!

19.45 ஹெக்டர் விளைநிலம் மத வழிபாட்டை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நடப்பது மத சார்பற்ற அரசு என்கிறார்கள். அனுமதி பெறவில்லை , ஆக்கிரமிப்பு ,விதி மீறல் என சகல துஷ்பிரயோகமும் நடந்த  ஒரு இடத்துக்கு பிரதமர் மோடிஜி வந்து திறப்பு விழா நடத்திவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு இத்தகைய குற்றங்களை பற்றி சொல்லி இருக்க வேண்டுமா இல்லையா? தமிழக அரசின் நிர்வாகம் பிரதமரிடம் மறைத்ததுக்கு என்ன காரணம்? இவை எல்லாம்  குற்றமா இல்லையா?

ஏழை குடியிருக்க இடம் இல்லாமல் அரசு இடத்தில்  குடிசை போட்டுவிட்டால் கருணை இல்லாமல் பிரித்து எறியும் அதிகாரிகள்  ஈஷா யோகா மையத்துக்கு மட்டும் சலுகை காட்டியது எதனால்? யாரால்?  விளை நிலம் என பார்க்காமல் அமைச்சர்கள் கையெழுத்து போட்டதற்கு பேரங்கள் பேசப்பட்டிருக்கலாம் என்று நினைக்கமுடியாமல் இருக்க முடியவில்லையே! முதல்வராக இருந்த ஜெ, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என  உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருப்பதை பார்க்கிறபோது நாம் ஏன் அப்படி நினைக்கக்கூடாது?

அண்மையில் சீமான் வீட்டுப்பிள்ளைகள் உயர்தர கார்களில் ரேஸ் விளையாடி இருக்கிறார்கள். இப்படி நடப்பதற்கு போலீஸ் அனுமதி அளிக்காது.ஆனால் அப்படியொரு அவலம் நடந்திருக்கிறது.காவல்துறை அதிகாரியின் கால் மீதே காரை ஏற்றி தப்பித்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை. ஏழை என்றால் லாக் அப்பிலேயே அபிசேகம் நடத்தியிருப்பார்கள்.அவர்களின் பெயர்களை ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.காரணம் என்னவோ!

ஆக தமிழகத்தில் கோடிஸ்வரர்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் தமிழக அதிமுக அரசு கண்டு கொள்ளாது.காவல்துறையும் அவர்களுக்கு அடிபணிந்துதான் பணி புரியும் .

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டமும் பி.ஜெ.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நடத்தும் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது .

இவைகளுக்கு மத்தியில் ஒரு நல்ல காரியமும் நடந்திருக்கிறது. இந்திய-இங்கிலாந்து நட்புறவு விழாவில் இங்கிலாந்து மகராணி எலிசபெத்தை இரண்டாம் தடவையாக உலகநாயகன் கமல்ஹாசன் சந்தித்திருக்கிறார். மருதநாயகம் படத் தொடக்க விழாவுக்கு மகாராணி வந்திருந்தது திரையுலக வரலாற்றில் எழுதப்பட வேண்டியது.

தீமைகளுக்கு மத்தியில் ஒரு நல்ல காரியமும் நடந்திருக்கிறது.
   

ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் வாயை மூடி,கையை கட்டி வேடிக்கை பார்த்த அமைச்சர்களுடைய பங்கு

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...