ஞாயிறு, 12 மார்ச், 2017

பா.ஜ.க."வின் " வீச்சில் சிக்கி விட்ட அதிமுக கட்சிகள்.!

உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு  மரண அடி கொடுத்த அந்த மாநிலத்து மக்களுக்கு முதலில்  நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிவிடுவோம்.!

ஐயன் திருவள்ளுவர் சிலையை கோடவுனில் போட்டு வைத்திருந்த  புழுத்த மனதுக்காரர் அந்த ஆளு! போய் சேரட்டும்! இனி  குப்பைத்தொட்டியில்தான்  அவரது அரசியல்.!

ஐந்து மாநிலத்து சட்டமன்றத்தேர்தலில் மோடிக்கு கிடைத்திருக்கிற வெற்றி  சாதாரணமானது இல்லை. செல்லாத நோட்டு அறிவிப்பினால் மோடிக்கு  மாபெரும் வீழ்ச்சி காத்திருக்கிறது என்று பெரும்பாலோர் கணித்திருந்தார்கள் ஆனால் அவர்களது கணிப்புகள் அழுகி விட்டன...உத்திர பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி அரசியல் வரலாற்றில் தனித்த தகுதியை பெற்று இருக்கிறது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும்  ராஜ்ய சபாவில்
பாஜக வை எதிர்க்கட்சிகள் திணற அடித்து வந்த நிலைமை இனி  இருக்கப்  போவதில்லை..

அதிமுகவுக்கு பாராளுமன்றத்தில் இருந்து வந்த முக்கியத்துவம்  ஜெ.மரணத்துக்குப் பிறகு இல்லாமல் போய் விட்டது. அதனுடைய  ஆளுமை  சவப்பெட்டிக்குள்ளேயே அடங்கி விட்டது. ஆளும் பாஜகவை அந்த கழகத்தினால்   இனி மிரட்ட முடியாது .பயந்து வாழவேண்டிய கட்டாயம் சசி கோஷ்டிக்கு!சசியின் சிறை வாழ்க்கை இறுகுவதும்,தளர்வதும் பாஜகவின் கருணையில்!
வடக்கில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கிற பாஜக,வின் அடுத்த இலக்கு  கழுகுப் பார்வை  எல்லாமே இனி தென்னகம் பக்கம்தான்!! முதலில் கர்நாடகம். அடுத்து தமிழகம் என்று அஜண்டா போட்டு   வைத்திருப்பார்கள்..கர்நாடகாவை பொருத்தவரை எடியூரப்பா அவர்களது  பலம்.

தமிழகத்தை பொருத்தவரை ஆளும் அதிமுகவின் பலவீனம் பாஜகவுக்கு பலம்.ஒ.பி.எஸ்.சின் அணி ,சசியின் அணி இரண்டுமே அப்பத்தை பங்கு போட நினைக்கிற பூனைகள்.! அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி  பிஜேபி விளையாடிவிடும்.தனது விளையாட்டுக்கு ராஜ தந்திரம் அறிந்த தலைமை தேவை என்பதால் தமிழகத்தலைமையை மாற்றவும் தயங்காது.

ஜூன் மாதம் வரை தற்போதைய அதிமுக அரசு தாக்குப்பிடிக்கும் என்கிறார்கள் பாஜக பிரபலங்கள்.

பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...