திங்கள், 27 மார்ச், 2017

இந்து தேசம் ஆகிறதா இந்தியா?

மோடியின் செல்வாக்கினால் பிஜேபியின் ஆளுமை வட மாநிலங்களில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

எதனால் அவரது செல்வாக்கு உயர்ந்தது ...கொள்கையின் அடிப்படையினாலா, அல்லது அவரது தலைமையில்தான் இந்தியா உண்மையான வளர்ச்சியை பெற முடியும் என மக்கள் கருதுகிறார்களா என்பதெல்லாம் விவாதத்திற்கு  உரியவை. ஆனாலும் வெற்றி வெற்றிதானே! ஒரு கட்சியின் மீதான அதிருப்தி  அல்லது வெறுப்பு மற்றொரு கட்சிக்கு ஆதாயம்.

வட மாநிலங்களில் கிடைத்திருக்கிற வெற்றியினால் ராமர் கோவில் கட்டி  முடிக்கப்படும் என்கிற நம்பிக்கை இந்துத்வா தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது..இந்த நம்பிக்கையை  பிஜேபி எந்த நிலையிலும் சிதைத்துக்  கொள்ளாது.அதற்காக ராமர் கோவில் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்குவார்கள். உ.பி. மாநில முதல்வர் முரட்டுத் தனம்  மிகுந்தவர் .இந்து மத வெறியர் என்றாலும் தவறில்லை.அவரை பயன்படுத்திக்கொள்ளும் பிஜேபி மேலிடம்.

இத்தகைய சூழலில்தான் ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கிறது.ஜூலையில்  புதியவர் பதவி  ஏற்க வேண்டும்.

அவர் யாராக இருப்பார்?

அத்வானியா,அல்லது சுஜ்மாவா, அல்லது சரத் பவாரா?

பிஜேபியை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிறது  சிவசேனா.

"இது இந்து தேசமாக மாறவேண்டும். அதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் உண்மையான முகமாக இருப்பவர் மோகன் பகவத்தான்! ஹெக்டேவார், கோல்வல்கர் ஆகிய தலைவர்களுக்கு பிறகு இவர்தான் உண்மையான இந்து ராஜ்யத்தை உருவாக்கக்கூடியவர்."என்பதாக  சேனாவின் ஸ்போக்ஸ் மென்  சஞ்சய் ரவுத் சொல்லி இருக்கிறார்.

சிவசேனாவின் எதிர்ப்பினை பிஜேபி சம்பாதித்துக் கொண்டதால்தான்  இரண்டு  தடவை காங்.கட்சி குடியரசுத் தலைவர் பெற முடிந்தது. இந்த தடவை  அத்தகைய நிலைமை வந்து விடக்கூடாது என்பதில் மோடி கவனமாகவே இருப்பார்.

மத சார்பற்ற நாடாக இருக்கிற இந்திய தேசத்தை இந்து தேசமாக அறிவிப்பதற்கு பி.ஜெ.பி.முற்படாது என்று  சொல்கிறார்கள். ஆனால்  நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அமைதியான  தேசத்தின் ஒற்றுமைக்கு  மோடி வெடி வைக்க மாட்டார் என்று நம்புவோமாக!
.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...