Sunday, March 5, 2017

அந்தரங்க வாழ்க்கை நடிகைக்கு கிடையாதா?

நடிகனுடைய  'அந்தரங்க வாழ்க்கை ' அலசப்படுவதில்லை. சுட்டிக்காட்டினால்  தனது கோவணம் எந்த இடத்திலும் காயும் .அதனால் உனக்கென்ன கவலை என குட்டுவான்!

ஆனால் பாட்டரங்கம்,பட்டிமன்றம் என பல மன்றங்களில் நடிகைகளை பற்றி  கவலைப்படுவார்கள் பங்கேற்பாளர்கள்.! கை தட்டி விசில் அடிக்க ஒரு கூட்டமே வரும்.அடடா! பெண்கள் மீது அவர்களுக்குத்தான் எத்தகைய  அக்கறை ,,,கவலை!

 இந்த கேடுகெட்ட சமூகம்  ஏகபத்தினிவிரதன்களாக காட்டிக்கொண்டு. ஏகப்பட்ட 'பத்தினிகளை' வைத்துக்கொள்கிற  அரசியல்வாதிகளை, அல்லது  நடிகனை போற்றி புகழ் பாடும்.    இந்த புழுத்துப்போன சமூகம் அதற்காக  வெட்கப்படுவதில்லை!

தனக்கு இன்ன  நடிகை மாதிரி பெண் வேண்டும் என்று தேடுவார்கள்.!எந்த பெண்ணாவது தனக்கு விஜய் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னால் அவளை 'அப்படிப்பட்டவளாக' இருப்பாளோ  என சந்தேகிப்பார்கள்!   இவர்களது அளவுகோல்தான் என்ன?இவர்களும் மனிதர்கள்தான்!

பாலியல் ரீதியாக நடிகைகள் அடிபடுகிறபோது நாலைந்து நாட்கள் நாக்கு நமத்துப்போகும் அளவுக்கு பேசுவார்கள்.பாவனா விஷயமும் அப்படித்தானே  ஆகி இருக்கிறது.மூன்று வயது குழந்தையைக்கூட கொடூரன்கள் விடுவதில்லை.

!

தற்போது வைரல் அனுஷ்கா,திரிஷா,ஆண்ட்ரியா,அமலாபால் ஆகியோரைப் பற்றி பாடகி சுசித்ரா பெயரில் பதிவு ஆகிற படங்கள்தான்! ஆனால் இதுவும்  கடந்து போகும்!

நடிகை ரேகாவை தெரியுமா?

அஞ்சனா சபார் என்கிற இந்திப்படத்தில் நடித்தபோது திட்டமிட்ட அசிங்கம்  ஒன்று நடந்தேறியது.அப்போது ரேகாவுக்கு வயது 14. டைரக்டர் ராஜா நவாதேயும்  ஹீரோ பிஸ்வஜித்தும் கூட்டணி போட்டு ஒரு காட்சியை படமாக்குகிறார்கள். நெருக்கமான சீன்.

'அவளுக்கு தெரியாமல் கிஸ் பண்ணிவிடு. முரண்டு பிடிக்கவிடாமல் இறுக்கமாக அணைத்துக்கொள்"என்று சொல்லிவிட்டார் ராஜா நவாதே! 

கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு கண்ணீர் விடத்தான் முடிந்தது ரேகாவினால்!

படம் வெளியானதும் ''அடடா..எவ்வளவு போல்டான சீன் " என்று பத்திரிகைகள்  பாராட்டித்தள்ளிவிட்டன.

வினோத் மெஹ்ரா என்கிற நடிகரை கல்யாணம் பண்ணிக்கொண்டு புருசனுடன் புகுந்த வீடு செல்கிறார் ரேகா.அது எத்தகைய புனிதமானது என்பதை பெண்களால் மட்டுமே உணர இயலும்..

ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்  என்கிற எதிர்பார்ப்புடன் சென்றரேகாவுக்கு எதிர்மறையான வரவேற்பு!

ஸ்லிப்பரை வீசுகிறாள் மாமியார். நல்ல வேளை உள்ளே அழைத்துச்சென்று  தீக்குளிக்க வைக்கவில்லை.முதல் கோணல் கடைசி வரை கோணலாகவே அவரது வாழ்க்கை அமைந்து விட்டது.

அமிதாப்புடன் காதல், கழுத்தில் தாலி என பல கட்டங்களாக ரேகாவின் வாழ்க்கை கடந்தது. டில்லி பிசினஸ் மேன் முகேஷ்தான் கடைசி கணவனாக  இருந்தார். அவரது வாழ்க்கையும் தற்கொலையில் முடிந்தது.

தன்னுடைய கணவனின் காதலி என்பது தெரிந்ததும்  ரேகாவுடன் ஜெயா பச்சன் பேசுவது இல்லை. ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டிய கட்டாயம். பேசாமல் இருக்க முடியவில்லை.

ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தபோதும் ரேகாவுடன் பேசுவதை அமிதாப்  தவிர்த்து விட்டார்.அவர் காதலித்தது ரேகாவை,கைப்பிடித்தது ஜெயாவை!

ஆனால் இவையெல்லாம் அந்த காலத்தில் அந்தரங்க படங்களை பிரசவிக்கவில்லை.

என்னதான் சொன்னாலும் அந்த காலத்தில் கண்ணியம் காக்கப்பட்டது.
 

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...