செவ்வாய், 7 மார்ச், 2017

ஜெ.மரண மர்ம முடிச்சு அவிழுமா?

எகிப்திய  மாமன்னர் மூன்றாம் ராம்சேஸ்.கடைசி பேரரசர்.

மூவாயிரம் ஆண்டுகளாக அவரது மரணம் பற்றிய மர்மம் அடை காக்கப்பட்டிருந்தது. பாதுகாக்கப்பட்ட அவரது மம்மி( சடலம்.) ஆய்வுக்கு வந்தபோது கழுத்தில் ஏழு  செண்டிமீட்டர் நீளம் ஆழமான வெட்டுக்காயம்.

கூர்மையான கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.அந்த காலத்திய மரபுப்படி ஒரு தாயத்தும் காணப்பட்டது.

அந்த காலத்தில் விசாரணை கமிஷன் கிடையாது.

ஆனால் இந்தக் காலத்து தடயவியல் ஆய்வாளர்களின் அறிவியல் மூளைக்கு  தெரியாது போகாதல்லவா?அரண்மனைக்குள் சதி!

ஆச்சரியப்படவேண்டாம்.மாமன்னனின் அந்தப்புரத்திலேயே தீட்டப்பட்ட சதி! அதுவும் அவரது மனைவியரில் ஒருவரான டியி, மகன் பெண்டாவர் இருவரும் சதியின் மூலவர்கள்.ஆக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு  தீர்த்துக் கொல்லும் 'உயரிய பண்பாடு' இருந்திருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட சரித்திரத்துக்கும் இனி சொல்லப்போவதற்கும் நடப்புக்கதைக்கும் எள்ளளவு கூட தொடர்பு இல்லை. இல்லவே இல்லை.!

சுய நினைவு இல்லாத நிலையில் உடல் நலம் சீர் கெட்டுப்போன நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார் அவருக்கு வழங்கப்பட்டிருந்த உணவு,மருந்துகள்தான் காரணம் என்பதாக அப்பல்லோ மருத்துவமனை கூறியிருக்கிறது.

இதை வைத்து ஆங்கில இணைய தளத்தில் அய்யப்ப பிரசாத் ஒரு செய்தியை  பதிவிட்டிருக்கிறார்.

அதில்......

2011-ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது  ஜெயலலிதாவை எச்சரித்திருக்கிறாராம்.

"தமிழகத்தில் உங்களுக்கு இணையாக 'பேரலல் கவர்மெண்ட்' நடக்கிறது. பெரிய அளவில் 'டீலிங்' பண்ணுகிறார்கள்.எச்சரிக்கையாக  இருங்கள்." என்று  சொல்லியிருக்கிறாராம்.

தவறான மருந்து, உணவு கொடுக்கப்பட்டு வருவதை எச்சரித்த மோடி ஒரு டாக்டர்,நர்ஸ் ஆகியோரை சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால்  அந்த டாக்டர்,நர்ஸ் இருவரையும் மன்னார்குடிக்காரர்கள் திருப்பி அனுப்பி விட்டார்களாம்.

அதுமட்டுமல்ல கட்டுரையாளர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்.

அப்பல்லோவில் இருந்த சி.சி.டி .வி.கேமராக்கள் முப்பது அகற்றப்பட்டது ஏன்? முதல்வருக்கான கான்வாய் இல்லாமல் அவருக்கான ஆம்புலன்சில் அனுப்பாமல் ஆஸ்பத்திரியின் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தது ஏன் என்றும்  கேட்டிருக்கிறார்.

இன்னும் பல மர்மங்கள் வேதா நிலையத்தில்!

எப்போது அவிழுமோ?
 


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...