Tuesday, April 4, 2017

எனது முதல் காதல்....பருவக்கோளாறு.!

மனைவியை மட்டுமே காதலிக்கிறேன் என சொல்கிறவர்கள் எல்லோருமே  சத்தியம் மட்டுமே பேசுகிறவர்கள் அல்லர்,!

அவர்களும் அவ்வப்போது சில பெண்களைப் பார்த்து சபலப்படுவது  உண்டு.! அது நிகழும் இடம்  ஆலயமாகவும் இருக்கிறது.. ஆண்டவனை பார்த்து மனம் கசிய வேண்டியவர்கள் பிற மனை நோக்குவதற்கு ஆண்டவனின் சந்நிதானத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்காகவே  கோவில்களுக்கும் செல்கிறார்கள்.அதற்கு  அவர்கள் வருத்தமோ குற்ற உணர்வோ கொள்வதில்லை.

அப்படி பார்ப்பதில் அவர்களுக்கு என்ன சுகமோ? அது வக்கிரம் என உணர்வதில்லை.தனக்கு ஒரு மனைவி அழகானவள் இருக்கிறாள் என்பதை மறந்து அடுத்தவளின் அங்கங்களில் கண்களை பதிப்பது தாயை நோக்குவதற்கு சமம் ! அது அவர்களுக்கும் தெரியும் . ஆனாலும் தெரிந்தே செய்வதில்  ஒருவித  ஆனந்தம்.

எனக்கு காதல் என்பது பிப்த் பார்ம் படிக்கிறபோது  ஜனித்தது.!

நான் படித்தது மதுரைக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியில்.! பள்ளிக்கு பின் பக்கம்  ரீகல் டாக்கீஸ். அங்கு ஆங்கிலப்படம் மட்டுமே ஓடும்.

பகலில் லைப்ரரி. மாலை ஆறு மணிக்கு மேல் தியேட்டர் என தினமும் தன்னை  மாற்றிக் கொள்ளும்.

எனது வகுப்புத்தோழன் ஆங்கிலோ-இந்தியன். அவனுடைய தந்தை எஞ்சின் டிரைவர்.

"நல்ல லவ் ஸ்டோரி. வாடா பார்க்கலாம்" என அழைத்தான்.

"எனக்கென்னடா புரியும்? நான் வரலடா!"

"இங்கிலிஷ் நாலட்ஜ் வளரனும்.கான்வர்சேஷன் புரியணும்னா இங்க்லீஷ் படம் பார்க்கணும்டா!"

அது ஒரு வகையில் பிரெய்ன் வாஷ் மாதிரிதான்! தொடக்கத்தில் நான் செல்லவில்லை என்றாலும் போகப்போக எனக்கும் ஒரு பொழுது போக்கு  தேவைப்பட்டது.எத்தனை நாளைக்குத்தான் நாலரை அணா டிக்கெட்டில் பெஞ்சில் உட்கார்ந்து தமிழ்ப்படம் பார்ப்பது.?

படத்தின் பெயர் நினைவு இல்லை. ஆனால் நடிகையின் பெயர் சோபியா லோரன்.தனது மகள் ரேப் செய்யப்பட்டாள் என்பதை அறிந்து அவள் கதறியது  இன்னும் மறுப்பதற்கில்லை.அதில் முத்தக்காட்சிகள் இருந்தன,யுத்தம் பற்றிய படம். அந்த முத்தக்காட்சிகள் என் உடலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை படம் பார்க்கிறபோதே உணர்ந்தேன்.அதுதான் எனது கல்வி கற்பதில் இருந்த  ஆர்வத்தை நசுக்கியது. பாலியல் ரீதியான மானிட இன்பம், காதல் என்கிற  பத்திரிகைகளை படிப்பதற்கு காரணமாக இருந்தது. எனது மார்க்குகளும்  குறைந்தன.

 எதிரில் வரும் மாணவிகளை  தவறான கண்ணோட்டமுடன் பார்த்திராத நான்  வேட்கையுடன் பார்த்தேன். சக மாணவர்களிடம் விமர்சனம் செய்தேன். ஒரு மாணவியை லவ் பண்ணிக்காட்டுகிறேன் என சவால் விடும் அளவுக்கு மனம் சிதைந்திருந்தது.

காதல் என்றால் என்ன என்பது கடுகளவு கூட தெரியாது. வெறும் இனக் கவர்ச்சி.கல்வியின் மீது இருந்த அக்கறை குறைந்தது.நான் எந்த மாணவியை காதலித்துக்காட்டுகிறேன் என சொன்னேனோ அதே மாணவிக்கும் என்னைப் போலவே உளத்தளவில் மாற்றம். வடக்கு சித்திரை வீதியில் மொட்டை கோபுரம் அருகில்தான்கிராஸ் செய்வோம். என்னுடன் சக மாணவர்கள் வருவதைப்போல அந்த மாணவியுடனும் வகுப்புத்தோழிகள் வருவார்கள்.

"ரென் அன்ட் மார்ட்டின் கிராம்மர் புக் இருக்கா...இருந்த குடேன். ரெண்டு நாளில் திருப்பி கொடுத்துடுறேன்" என அவள் தொடங்க அதை மறுநாள் நான் கொடுக்க எங்களிடையே நட்பு வளர்ந்தது. எனது தேர்வையும் ஒரு கை பார்த்து விட்டது.

தோல்வி அடைந்ததால் அவளை பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாது போயிற்று.எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்தது பருவத்தில் வரும் கோளாறு என்பது புரிந்தது.

2 comments:

Avargal Unmaigal said...

ஆஹா நீங்களும் நான் படித்த பள்ளியில் படித்திருக்கிறீர்கள் ஆமாம் பள்ளியின் கபடி க்ரெள்ண்ட் அருகில் உள்ள வாட்டர் டேங்க் பக்கம்வழியாக ரீகல் தியோட்டர் உள் நுழையலாமே அப்படி நுழைந்து இருக்கிறீர்களா?

மணியன் said...

அதே...அதே..! அந்த சடுகுடு திடலில்தான் ஆர்.எஸ்.எஸ்.சாகா நடக்கும்.தமிழாசிரியர் பி.எல்.ராகவன்,வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் அங்கு வருவார்கள். நான் படித்தபோது தலைமை ஆசிரியர் எம்.ஆர்.சீனிவாசன்.அகில இந்திய சுற்றுலாவுக்கு பள்ளி சார்பில் நானும் சென்று வந்தவன்தான்,மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களின் பதிவை படித்ததும்.

காமக் கொடூரங்களுக்கு இரையாவதே பெண்களின் விதி!

மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான  பாலியல்  வன்முறைகள் அதிகமாகியதே தவிர கட்டுக்குள்  அடங்கியதாக  இல்லை. வன்முறைகளி...