புதன், 3 மே, 2017

சரியாக இந்தி எழுதாதவன் புருசனாக முடியுமா?

"என்னடா உங்க வெளங்காத ஞாயம்?"-கடுப்போடு வந்து  உட்கார்ந்தார்  ஏடாகூடம்.

"வரும்போதே வாய்  நெறைய கங்கு? எதுக்கு இப்படி பொங்கல்?"

"பின்ன என்னங்கானும்...மாடுன்னு  திட்டுனா கோபம் பொத்துக்கிட்டு வருது. ஆனா அதே மாட்டை லட்சுமின்னு கும்பிடுறிங்க.அப்புறம் ஏன்டா மாடுன்னு வஞ்சா பாய்றீங்க ? அந்த மாட்டை கொன்னா குத்தம் தின்னா பாவம்னு சொல்றீங்கள்ல! ஆனா எருமையை கொன்னா பாவம் இல்லயாக்கும்? "

"யோவ்.! மல்லிகைப்பூவ்ல மாலை கட்டலாம். நீ முருங்கப்பூவ்ல கட்டப்பாக்கிறியே? வெளங்குற மாதிரி சொல்லு. இத படிக்கிறவங்கள பாதியிலேயே  குளோஸ் பண்ண வச்சிடாதே?"

"கஜோல்னு ஒரு நடிகை. பிரண்ட்ஸ் வீட்டுக்கு  விருந்துக்கு போச்சு. டைனிங் டேபிள்ல என்னென்னவோ இருந்திருக்கு. அதில பீப் சூப்பும்  மணக்க மணக்க  இருந்துச்சாம். இத அந்த நடிகை வெள்ளந்தியா சொல்ல மத்த பயலுக கட்டி ஏறி காத அறுக்காத குறை. எப்படி மாட்டுசூப்பை குடிக்கலாம்னு சல்லடத்தை கட்டிட்டு கோதாவ்ல குதிச்சிட்டாய்ங்க! மன்னிச்சிடுங்க. வாய் தவறி பீப்னு சொல்லிட்டேன்.அது பப்பல்லோ சூப் ன்னு சொன்னபிறகுதான் பொங்குனவய்ங்க அடங்கியிருக்காய்ங்க! அப்ப எருமக்கறியை தின்னா  பாவம்  இல்லையா? எமனோட வாகனம் ஆச்சே!"

"எந்த கறிய திங்கிறது திங்க கூடாதுங்கிறதல்லாம் அவனவனோட தனிப்பட்ட  வெவகாரம்! உத்திரபிரதேசத்தில்   மதோரா பஞ்சாயத்தில் ஊர் கூடி தீர்மானம்  போட்டிருக்காங்க.முஸ்லிம்கள் பெரும்பான்மையா இருக்கிற பஞ்சாயத்து. அங்க யாராவது பசுவ வெட்டுனா ரெண்டரை லட்சம் அபராதம்னு சொல்லி  இருக்காங்க.இதுக்கு என்னத்த சொல்றது?"

"அந்த வெங்காயத்த நாங்களும் படிச்சோம். அதே பஞ்சாயத்தில் பொம்பள புள்ளைக செல்போனை வீட்டுக்குள்ளேதான் வச்சுதான் பேசிக்கணும். வெளியே எடுத்திட்டு போயி பேசுனா 2100 ரூபா தண்டம் கட்டணும்னு  சொல்லிருக்கே! வீட்டை விட்டு ஓடிப்போறத தடுக்குறாங்கய்ளாம். .இவிங்க  எந்த காலத்தில இருக்காய்ங்க. ?"

"யோவ் .ஏடாகூடம்...தமிழை சரியா எழுதத்தெரியாத பயலுக எக்கச்சக்கமாக  இருக்காய்ங்க.சரியா எழுத படிக்கத் தெரிஞ்சவனைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்னு எந்த பொண்ணாவது சொன்னதா ஞாபகம் இருக்கா?"

"இல்லியே!"

"உத்திரபிரதேசம்  குராவளிங்கிற ஊர்ல பொண்ணு  ,மாப்ள ரெண்டு வீட்டு சொந்தங்களும் பொதுவான எடத்தில கூடி இருக்காங்க. பொண்ணுகிட்ட இந்தியில் ஏதேதோ  எழுத சொல்லிருக்கான் மாப்ளையா வரப்போறவன்!. பொண்ணும் எழுதி இருக்கு.  அப்புறம் பொண்ணு எழுத சொல்ல அவனும் அட்ரஸ் உள்பட இந்தியில் எழுதி கொடுத்திருக்கான். அவன் எழுதிக் கொடுத்த  இந்தி தப்பு தப்பா இருந்திருக்கு! ஒழுங்கா எழுதத்தெரியாத பயல கட்டிக்க மாட்டேன்னு பொண்ணு நடைய கட்டிருச்சு. இந்த மொழிப்பற்று நமக்கு எப்பய்யா வரப்போகுது?"

நீங்களாவது சொல்லுங்க? மைல் கல் வரை இந்தி வந்த பிறகும் சும்மாதானே  இருக்கோம்?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...