புதன், 10 மே, 2017

ஜெ.உயில் என்னிடம் இருக்கிறது.!

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவன் அரசியல் வாதியாக இருக்க  முடியாது.! வட்ட செயலாளருக்கே  அந்த வார்டில் இருக்கிற புறம்போக்கு  நிலம் எல்லாமே பதிவு செய்யப்பட்டு  பட்டாவாகி இருக்கும் என்கிறபோது  நாட்டை  ஆள்கிறவர்களுக்கு என்னவெல்லாம் சொந்தமாகி இருக்கும்? வீடியோ கடை வைத்திருந்தவருக்கு சாராய ஆலை சொந்தமாவது ஜீ பூம்பா மந்திரத்தினால் இல்லை.அரசியல் அதிகாரத்தினால் மட்டுமே சாத்தியம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என கருதப்பட்ட  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருமே குற்றம் செய்தவர்கள்  என்று  நீதி மன்றம் நால்வரையும் காராக்கிரகத்தில் தள்ளி கதவடைத்தது. ஊழ்வினை காரணமாக  ஜெயலலிதா உயிருடன் இல்லை.மற்றவர்கள் கர்நாடக மாநில  சிறைக்குள்.!

ஜெயாவின் திரண்ட சொத்துகளுக்கு வாரிசு யார்? அவர் எழுதிய உயில் எங்கே யாரிடம் இருக்கிறது என்கிற சந்தேகம் எழும்போதெல்லாம் சிலர்  சோ வை அடையாளம் காட்டினார்கள். அவரும் விண்ணுலகம் சென்று விட்டதால்  குருமூர்த்தியிடம் இருக்கலாம் என்றார்கள்.இப்படி ஹேஷ்யம் சொல்லிவந்த காலகட்டத்தில்தான்  ஜெ யின் கொடநாடு மர்ம பங்களாவில் கொள்ளை முயற்சியும் கொலைகளும் நடந்து இருக்கின்றன.

உயிலை தேடி நடந்தது தான் அந்த கொள்ளையும் கொலைகளும் என நம்பப்படுகிற நேரத்தில்.......

"அத்தையின் உயில் என்னிடம் இருக்கிறது. போயஸ்கார்டன் வேதா நிலையம்,ஜெமினி பார்சன்ஸ் காம்ப்ளக்ஸ்,ஹைதராபாத் திராட்சை தோட்டம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தம். சொத்துகள் எங்களுக்கே   என சொல்லிவிட்ட பிறகு எப்படி சசியும் அவரது குடும்பத்தாரும் அத்தையின் வாரிசு ஆக முடியும்?" என்கிறார் தீபக்.

உயில் பகிரங்கமாக வெளியாகும்வரை தீபக் சொல்வதை எப்படி நம்பமுடியும்?

அலிபாபாவின் குகைக்கு சரியான மந்திரம் யாருக்குத் தெரியுமோ...? ஒரு  வேளை மோடிஜிக்கு தெரிந்திருந்தால்?

கொடநாடு கொள்ளை முயற்சிக்கு ஒரு மூத்த அமைச்சர்தான் காரணமாக இருக்கும் என்று சசி தரப்பு கருதுவதாகவும்,

கேரளத்தில் இருக்கும் பிரபல புள்ளியின் மூளையில் ஜனித்த திட்டம் இது அவர்தான் ஜெ யின் முன்னாள் காரோட்டி காமராஜை பயன்படுத்தினார் என்று மற்றொரு தரப்பும்,

கோவை மர வியாபாரியும் அதிமுக அரசியல்வாதியுமான ஒருவரும் இதில்  பின்னப்பட்டிருக்கிறார் என இன்னொரு தரப்பும் சொல்கிறது.

யார் சொல்வது உண்மை என்பது ஜெ யின் ஆவிக்குத்தான் தெரியும். யாராவது ஆட்டையை போட நினைத்தால் அவர்களை அடையாளம் தெரியாமல் செய்துவிடும் ஆவி என்பதை புரிந்து கொண்டால் அவர்கள்தான்  புத்திசாலிகள்.!
கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...