சனி, 13 மே, 2017

ஜெ. மாளிகையில் ஆவியின் அழுகுரல்,.!

ஆதி தமிழன் முதல் அண்மைக் காலத்  தமிழன் வரை  அனைத்து மதத்தினரும்  நம்புவது  ஆவியை!

அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள்  ஆவியாக வந்து பழி தீர்த்துக் கொள்வார்கள் என்பதை பச்சை குழந்தைகளுக்கும் பாலூட்டியபடியே  கதை சொல்லி  வளர்த்து வந்திருக்கிறார்கள்.இதிகாசமும் ஆவி, பேயை   காட்டி  இருக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால்  ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது  இல்லை, அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அவரது அணியினரும் லட்சக்கணக்கான  தொண்டர்களும் நம்புகிறார்கள்.

போயஸ்கார்டன் மாளிகையில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்ததில்  நினைவிழந்தார் .அந்த நிலையிலேயே கொண்டு செல்லப்பட்டதால்தான் மாளிகையில் இருந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்பதும் ஒரு சந்தேகம்தான்! அப்போல்லோவில் எப்படிப்பட்ட  நிலையில் ஜெ. அனுமதிக்கப்பட்டார் ,வேதா நிலையத்தில் எத்தகைய மருந்து மாத்திரைகள்  கொடுக்கப்பட்டன என்பதற்கு  உரிய பதில்கள் கிடைக்கவில்லை.

இத்தகைய சந்தேகங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்தான் ஆவியின் அழுகை சத்தம் போயஸ்கார்டனில் நள்ளிரவில் கேட்பதாக  சொல்கிறார்கள்.

ஒரு பெண்ணின் அழுகைக் குரல் என சொல்லப்படுகிறது. அப்படியானால் அது  அம்மாவின் குரலாகத்தான் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

ஜெயாவின் மரணத்துக்குப் பின்னர் சிறுதாவூர் பங்களாவில்  தீ விபத்து. கொட நாடு பங்களாவில் மர்ம மரணங்கள், என அடுத்தடுத்து பலி வாங்கல்  நடந்து கொண்டிருக்கிறது. ஜெ.யின் சமாதியில்  காவல் பணியில் இருப்பவர்களும்  அடிக்கடி காய்ச்சலில் படுத்து விடுகிறார்களாம்.

ஆவியின் வடிவத்தில் வந்து ஜெ. பழி தீர்த்துக் கொள்வதாக சொல்வது உண்மையா ,பொய்யா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நானே வருவேன். என்று பாட்டு பாடுவதாக  சொல்லாமல் இருந்தால் சரி!
கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...