Wednesday, August 2, 2017

கட்சி அலுவலகத்தை தினகரன் கைப்பற்றுவாரா?

"கோவம் வேணாம்டி ..என் கோல மயிலே! நான் கூட்டியாந்திருக்கிறது  உன்னோட தங்கச்சியைத்தான் ! ஒரு வாரம்  உன்னோட.!மறுவாரம்  அவளோட ! இப்படி படுக்கைய பங்கு போட்டுக்கலாம் " என்று என்னதான்  மந்திரிச்சாலும் எந்த பொம்பளையும் சரின்னு சொல்ல   மாட்டாள். தங்கச்சியா இருந்தாலும் அவளுக்கு பெயர் சக்களத்திதான்!ஒரு முழப் பூவில்  இரண்டு அங்குலம்  குறைஞ்சாலும் " நேத்து வந்தவ உசத்தியா போயிட்டாளாக்கும். எங்கிட்ட இல்லாதத அவ கிட்ட என்னத்தய்யா கண்டுட்டே?"ன்னு நாலு இடி வாங்காம இருக்க மாட்டான் புருசன்காரன்.!

அந்த மாதிரி ஆகிப்போச்சு எடப்பாடியாரின் நெலமை.!

அம்மாவின் சாவில் மர்மம்னு பொங்குன ஓபிஎஸ்.ஒரு பக்கம். "நீங்க  ரெண்டு  பேரும் சேர்ந்துடுவீங்களா ...நாங்க விட்ருவமா?"...நாங்கதான்யா அதிமுக !அசல் வாரிசு"ன்னு குமுறும் தினகரன் கோஷ்டி இன்னொரு பக்கம்னு  ரெண்டு கோஷ்டியும்  எடப்பாடியின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஏழரையை கூட்டி  வருகிறார்கள்.அப்பனே மட்டையை பிடிச்சிக்கிட்டு தொங்குறானாம்.மகனோ  நல்ல நெத்துக்காயா ரெண்டு பறிச்சு போடுய்யான்னானாம்  மகன்.அப்படி ஆகிப்போச்சு பழனிச்சாமியின் நெலமை.

போதாக்குறைக்கு கமல்ஹாசன் வேற. ''ஊழலோ ஊழல் எல்லாமே ஊழல்"னு  சங்கு ஊதுகிட்டிருக்கிறார்.

"எது எப்படியா இருந்தாலும் சரி. தினகரனை கத்திரிச்சிவிட்டுட்டு  ஓபிஎஸ்  அணியோடு சேர்! அப்பத்தான் ரெட்டை எலை கிடைக்கும்.நாங்களும்  கூட்டணி  வச்சிக்குவோம். இல்லேன்னா வருமானவரி இலாகாவை  அவுத்து  விட்ருவோம்"னு பிஜேபி மெரட்டுது. ஜனநாயகத்தை கொன்னுட்டு  ஏக பாரதம்னு காவியை கட்டிவிடப் பாக்குது.அழிந்த கொல்லையில் குதிரை மேஞ்சா என்ன கழுத மேஞ்சா என்ன? அப்படி ஆகிப்போச்சுங்க தமிழ்நாட்டு நெலமை.!

ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்குள்  தினகரனை  அனுமதிக்காவிட்டால் முப்பத்தி ஐந்து எம்.எல்.ஏ.க்களுடன்  கவர்னர்  மாளிகைக்குள் புகுந்து எடப்பாடிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்றோம்னு மனு கொடுக்க தினகரன் தயாராக இருக்கிறாராம்.. அதுக்காக  கூவத்தூர் ஸ்டைலில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை  ஒரே இடத்தில் வைக்கவும்  திட்டம் ரெடின்னு சொல்றாங்க. இதையெல்லாம் எடப்பாடி எப்படி சமாளிக்கப் போறார்னு தெரியல.

எடக்கு பண்ணினா இப்படியும் பண்ணுவோம்னு  வருமானவரித்துறையை வச்சு  ரெட்சிக்னல் காட்டுது மத்தியில் குந்தியிருக்கிற அரசு. .டாக்டர் மந்திரியின் நூறு ஏக்கர் நிலம், கல் குவாரிய  முடக்கி போட்டு  கபர்தார்னு கழுத்தில கத்தி.! உடனே தனக்குள்ள  பவரை காட்டி தமிழக அதிகாரியை ட்ரான்ஸ்பர் பண்றார் மந்திரி.

கட்சியும் ஆட்சியும் எங்கள் கையில என்று எடப்பாடி அணி டிக்ளேர் பண்ணினால் ரெண்டுமே எங்க கையிலதான்னு தினகரன் சைடில் உறுமல். ஆதியில் வந்தவ வீதியில்  நிக்கிறாலாம்.நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம் என்கிற கதை இங்க நடக்காது என்று  நெஞ்சு நிமிர்த்துகிறார்கள் தினகரன் ஆட்கள்.

என்னமோ தெரியலிங்க. இன்னும் ரெண்டு நாளில் ஒரு ரகளை நடக்கும்னு  தெரியிது.ஐந்தாம் தேதி கட்சி ஆபீஸ் பக்கம் வராம டூர்  போறேன்னு  தினகரன்  கிளம்புனா  ஆள் ஜகா வாங்குறார் .தாக்குப்பிடிக்க மாட்டார்னு புரிஞ்சிக்கலாம்.

No comments:

இது மகா கேவலம்!

"என்னதான் கோவம் இருந்தாலும் போய்த்தான் ஆகனுங்க. கல்யாணம் காட்சிக்கு போவலேன்னாலும் கேத காரியம் .துஷ்டிக்கு போகணும்!" சர்வ சாதா...