"எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது" என்று இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் போகி கொளுத்தி சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடுவதை விட சிரம் வெட்டி ராம்லீலா கொண்டாடும் பிஜேபி தான் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறது.
ஜெயலலிதாவின் மர்மச்சாவு அவர்களுக்கு திறவு கோல் கிடைத்ததைப் போலாகிவிட்டது. எந்த காய்களை எப்போது வெட்டித் தூக்கலாம் என்பது அவர்களுக்கு பால பாடம் அல்ல.பட்டம் பெற்றவர்கள். அத்வானியையே சிங்கிள் காலம் செய்தியில் கூட தனித்து வரமுடியாமல் செய்து விட்டார்கள்.'ஆல்சோ ஸ்போக்' வரிசையில் சேர்த்து விட்டவர்களுக்கு சசியை மண்டியிட வைக்க முடியாதா என்ன!
இன்று சசியின் உறவுக்கூடாரம் சட்டத்தின் பிடியில்.!
ஜெ.யை மறந்து " சின்னம்மா..சின்னம்மா " என கூவியவர்களும் " சின்னம் அங்குதானம்மா. ரெட்டை எலை வேண்டுமம்மா" என அணி தாவி விட்டார்கள்.
இரட்டை இலையை ஏதோ மந்திரச்சொல் மாதிரி நினைத்துக் கொண்டு மடம் மாறியவர்களும் இருக்கிறார்கள். "இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது " என்று துண்டு போட்டுக் கொண்டவர்களும் இருக்கவே செய்வார்கள். "எதுக்கு தனிக்கடை.இனி போணி ஆகாது "என்று நம்பி ஓடி வந்தவர்களும் இருப்பார்கள். வந்தவர்களை தங்களின் அணிக்கு கொண்டு வருவதற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் பலப்பரிட்சையில் இறங்குவது அவர்களால் தவிர்க்க இயலாதது. இருவரிடமும் ஆள் அம்பு சேனை எல்லாமே இருக்கிறது.
ஆனால் இரட்டை இலை வசியம் இனியும் செல்லுமா ?
மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி முடிவு எப்படி அமைந்தாலும் அது தமிழகத்தின் குரல் என்பதாக கருத முடியாது. ஆட்சி,அதிகாரம்,காவல் துறையின் துணை இவைகளுடன் பண நாயகம்தான் வெற்றி பெற்றதாக நினைக்க முடியும்.
ஆளுநரின் மாவட்ட ஆய்வு, பிஜேபியின் அதிமுக விமர்சனம் என தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாறுதல் அதிமுகவை மெது மெதுவாக காலி செய்து விடும்.!
மற்றொரு சுனாமியும் அதிமுகவை சுற்றி வளைத்து சூறையாட காத்திருக்கிறது. புதை குழிக்குள் போன ஜெயலலிதாவின் பிம்பத்தை உடைக்கபார்க்கிறார்கள்.முன்னொரு காலத்தில் ஷோபன்பாபுவுடன் ஜெ.இணைந்து வாழ்ந்ததில் பிறந்த பெண் குழந்தை நான்தான் என உறவினர்களே ஒரு பெண்ணை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். "அம்மா..அம்மா "என அழைக்கப்பட்டவர் நிஜத்திலும் ஒரு அம்மாதான் எனச்சொல்லி செல்வி என்கிற அடையாளத்தை அழித்துப் பார்க்கிறார்கள். செத்துப்போனவரின் கண்ணியத்தை காவு கேட்பது யாருடைய திட்டம் என்பது தெரியவில்லை. அரசியல் எவ்வளவு இழிவாக நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் அந்த கட்சி அமைதி காப்பது வேதனை.!
என்ன நடக்கப்போகிறது ? அந்த பிரம்ம மகரிஷிக்கு மட்டுமே தெரியும்!