திங்கள், 25 டிசம்பர், 2017

தி.மு.க. உண்மையைச்சொல்லுமா?

      ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. 50 ஆயிரம்  வாக்குகள் வரை பெற்றது.
       ஆனால் தற்போது 2௦ ஆயிரம் வாக்குகள் பெற்று பொறுப்புத் தொகையை  இழந்திருக்கிறது.
      திமுகவுக்கு என இருந்த செல்வாக்கு சரிந்து விட்டதா? அல்லது இடம் பெயர்ந்து விட்டதா?
      பணம் விளையாடியது என்பது  உண்மைதான். ஆனால்   விலை போகக் கூடியவர்களா  திமுக தொண்டர்கள்?  கழகத்துக்காக  உயிரையும் கொடுக்கும்  மனப்பான்மை அவர்களுக்கு இருக்கிறது.தியாகத்தில் வளர்ந்த பேரியக்கத்தை சிறு குச்சி புரட்டியிருக்கிறது என்றால் ?
     சிந்திக்கவேண்டும்.திமுக தலைமை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!காரணத்தை கண்டு பிடித்து சொல்ல வேண்டும்!

      இரண்டு பட்ட  அதிமுக பலவீனத்தின் மடியில் கிடக்கிறது. எடப்பாடியா, ஓபிஎஸ்.சா என்கிற அதிகாரப் போட்டியில் அவர்கள் பிளவுண்டு கிடந்தாலும் பொது எதிரி தினகரன். இவரின் வெற்றியில் திமுகவுக்கு பங்கு உண்டு என்று  சொல்வது தோற்றபிறகு சொல்கிற வழக்கமான புலம்பல்தான்!
    ஆனால் தினகரனின் மகத்தான வெற்றிக்கு எது காரணம்,தெரிய வேண்டும். 
     

1 கருத்து:

Unknown சொன்னது…

தொண்டர்கள் வேறு திமுகவிற்கு வாக்களிக்கும் மக்கள் வேறு.திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் எல்லாம் தொண்டர்கள் ஆகிவிட மாட்டார்கள்.
வாக்களிக்கும் மக்களின் வாக்குகள் தேர்தலுக்கு தேர்தல் மாறிக்கொண்டே இருக்கும்.