மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும் விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----
சசிகலாவை நொறுக்கத் தொடங்கி விட்டது பிஜேபி மத்திய அரசு.
அதன் விளைவுதான் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி உண்மையை கசிய விட்டிருக்கிறார் என்று கருத தோன்றுகிறது.
இது நாள் வரை ரகசியம் காத்து வந்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் இன்றுதான் உண்மையின் சிறு பகுதியை வெளியிட்டு இருக்கிறார்.
"ஜெயலலிதா உடல் நிலை சீரியசாக இருக்கிறது என்பதை சொல்ல வேண்டாம் ' என அறிவுறுத்தினேன் .மக்களின் அபிமானம் பெற்ற தலைவர் என்பதால் அவ்வாறு சொல்ல அறிவுறுத்தினேன் " என்று சொல்லி இருக்கிறார்."அறிவுறுத்தல் "என்பதை இங்கு கட்டாயப்படுத்தல், அச்சுறுத்தல் எனவும் நாம் கருதலாம்.
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் பிரதாப் ரெட்டி வெளியிட்டிருக்கும் உண்மை மலை அளவு கேள்விகளை எழுப்புகிறது.
அறிவுறுத்தியதற்கு என்ன காரணம்?
அமைச்சரவை கூடிஅந்த முடிவை எடுக்கும்படி சொன்னதா?
இல்லை. சசிகலா சொன்னார் என்றால் அப்படி சொல்வதற்கு அவருக்கு என்ன தகுதி இருந்தது? எந்தப் பதவியில் இருந்தார் என்று அப்பல்லோ நிர்வாகம் கட்டுப்பட்டது?
மக்களின் அபிமானம் பெற்ற தலைவர் என்று சொல்கிற ரெட்டி இந்த அழுத்தத்தை மத்திய அரசுக்கு சொன்னாரா? அல்லது அன்றைய ஆளுநரிடமாவது சொல்லி இருக்கலாமே? சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று நினைத்ததாக சொல்வது நியாயமான காரணமா?
இப்போது சொல்கிற அவர் இத்தனை காலம் அதாவது ஓராண்டு மவுனமாக இருந்ததற்கு என்ன காரணம்?
"ஜெ.கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்கிற சந்தேகம் வலுவடைவதற்குள் முழு உண்மையும் வெளிவந்தாக வேண்டும். இதில் மத்திய அரசுக்கு எந்த அளவு பங்கு ? எய்ம்ஸ் டாக்டர்களும் உடந்தையாக இருந்தனரா? வெளிநாட்டு டாக்டரை அழைத்து வந்து அவரையும் விசாரணை வட்டத்துக்குள் நிறுத்துங்கள்.
வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்?

1 கருத்து:
ரெட்டி சொல்வது இருக்கட்டும். மத்திய அரசின் ஏஜன்ட் கவர்னர் என்ன சொன்னார் ?
நான் மருத்துவமனை சென்று பார்த்தேன்.
முதல்வர் நலமாக இருக்கிறார் என நாட்டு மக்களுக்கு அறிக்கை தரவில்லையா ?
அப்போ
கருத்துரையிடுக