திங்கள், 19 பிப்ரவரி, 2018

மு.க.அழகிரியின் விரக்தி.!

"ஓடினாள்..ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் "என்று கலைஞர்  எழுதிய வசனம் பராசக்தி கல்யாணிக்கு ஒரு காலத்தில் பொருந்தியது.

இன்று அவர் பெற்ற பிள்ளைக்கு பொருந்தும் போலிருக்கிறது.

விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் மு.க. அழகிரி .

"ஏன் இப்படி பேசினோம் ?" என அவரே பின்னர் வருந்துகிற அளவுக்கு வார்த்தைகளை வெளியிடுகிறார்.

"உதயநிதி ஸ்டாலின் அரசியலில் குதித்திருப்பது" பற்றி செய்தியாளர்கள்  கேட்ட கேள்விக்கு அழகிரி சொன்ன பதில் காழ்ப்பு உணர்ச்சியின்  உச்சம்  தாண்டி விட்ட  கோரம்.

""அரசியல் சாக்கடைதான்! அதில் யார் வேண்டுமானால் குதிக்கலாம்" என்பது  பதில்.! கலைஞர் உள்பட அழகிரியின் மொத்த குடும்பத்தையும் இதை விட இழிவு படுத்த எடப்பாடி வகையறாக்கள் தேவை இல்லை.

அழகிரியும் அந்த சாக்கடையில் குதித்து குளித்து மத்திய அமைச்சர் பதவி வரை அனுபவித்து ஓய்ந்திருப்பவர்தான். கட்சி பதவி கை விட்டு போன பிறகு  அவர் விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தானே அவரது பதில் காட்டுகிறது.

நாளைக்கே ஒரு பதவி கிடைக்குமேயானால் சாக்கடை கங்கோத்ரி ஆகி விடுமா?


எவனோ ஒரு அறிவாளி  எந்த காலத்திலோ எதற்காகவோ சொன்னதை வைத்துக் கொண்டு அதையே காலம் காலமாக அரசியல்  ஒரு சாக்கடை என்பதாக சொல்லி வருகிறார்கள்.

விதவைகளுக்கும் மறுவாழ்வு இருக்கிறது என்கிறபோது விரக்தியாளர் களுக்கு மட்டும் புனர்ஜென்மம் கிடைக்காதா?

கருத்துகள் இல்லை:

சினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.

துயரமும், துக்கமும்  நோயும் இன்விடேஷன் கொடுத்துவிட்டு வருவதில்லை.சொல்லாமல் கொள்ளாமல்  உடம்பில் உட்கார்ந்து கொண்டு விதியை எழுதி விளையாடும். ...