சனி, 31 மார்ச், 2018

புராணம் புரட்டா. உண்மையா, ஏமாற்றம்தானே?


கிரேக்க இதிகாசக் கதைகளில் ஒன்றை படிக்க நேர்ந்தது.

அப்படியே  வட இந்திய புராணக் கதைகளை தழுவியதைப் போல இருந்தது. யார் யாரை தழுவி இருக்கலாம் என்பதெல்லாம் இங்கு நமக்கு  அவசியம் இல்லை.

கதையை மட்டும் பார்க்கலாம். 

குரோனஸ். கிரேக்கத்தின் இறைவன் யுரானஸின் கடைக்குட்டி மகன்.!

இவனது அன்னையின் பெயர் கயா.

மகனுக்கு கட்டளை பிறப்பிக்கிறாள்.

"உன்னுடைய தந்தை யுரானசின் 'விரை'களை அறுத்து வீசி விடு!"

விசித்திரமான கட்டளை. கணவனின் விரைகளை வெட்டி எறியும் அளவுக்கு தலைமைக் கடவுள் யுரானஸ் என்ன குற்றம் செய்தான்?

அது அவளுக்குத் தான் அதாவது  அந்த அம்மாவுக்குத்தான்  தெரியும்!

சொன்னபடியே விரைகளை வெட்டி கடலில் வீசி விட்டான்! வெட்டுவதற்கு  ஆயுதமாக இருந்தவள் அன்னை கயா. எப்படி இருக்கிறது ?

குரோனஸ் கடவுளின் டிபார்ட்மென்ட். அறுவடை. இவனை வணங்கி விட்டுத்தான் மக்கள் அறுவடையைத் தொடங்குவார்கள். அப்பனின்  'ஆதாரத்தையே ' அறுத்து வீசியவனாச்சே!

இவனுக்குத் திருமணம். சொந்த சகோதரியை  திருமணம் செய்து கொண்டவன்.

இந்த குரானசுக்கு ஒரு சாபம் உண்டு! பெத்த அப்பனே கொடுத்த சாபம்தான் !

"அடே மகனே! என் விரைகளை வெட்டி வீசியதால் உனக்கு ஒரு சாபம். உனக்கு பிறக்கும் பிள்ளையினால் தான்நீ சாவாய் .!"

மரணபயம் கடவுளுக்கும் உண்டு. நமது கடவுளர்களுக்கும் இருந்திருக்கிறதே!

இதனால் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் குரான்ஸ் முழுங்கி விடுவான். கம்சன் நினைவுக்கு வரணுமே!

எத்தனை குழந்தைகளை ரியா இழப்பாள்? அவளும் தாய்தானே! கடைசியாக பெற்ற குழந்தையை ரகசியமாக வேறு இடத்துக்கு கடத்தி விட்டு கணவனிடம் துணியால் சுற்றிய கல்லை கொடுத்து விட்டாள். அவனும் பிரித்துப்பார்க்காமல் விழுங்கி விட்டான்!

தப்பிய குழந்தைதான் ஜீயஸ் .வளர்ந்து ஆளாகி அப்பனுடன் சண்டை போட்டு வயிற்றில் விழுங்கிய ஐந்து பிள்ளைகளையும் வெளியில் எடுத்தான்.

இப்படி போகிறது கதை!

வியாழன், 29 மார்ச், 2018

நிர்பயாவை மறந்து விட்டார்களே பாவி மக்கா!

நிர்பயாவை மறந்திருக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை.

இந்திய மக்களுக்கு தேசிய அளவில் ஆப்சென்ட் மைன்ட்  என்பது பல தேர்தல்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது. இன்று தாலியை அறுத்துவிட்டு நாளை வந்து "மன்னித்துக் கொள் " என்பான்.

"வாடா மாப்ள" என்று அவளும் அணைத்துக் கொள்வாள். இந்திய அரசியலில்  இழிவான அரசியல் என்பது  என்றோ பரிவட்டம் கட்டிக்கொண்டு தனி அந்தஸ்து பெற்று விட்டது. அதனால் நிர்பயாவை சற்றே ரீவைண்ட்....!

மருத்துவம் பயிலும் மாணவி.சினிமாவுக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்புகிறாள்.2012.ம் வருடம்.16-ம் தேதி இரவு!

மனிதம் தின்னும்  மிருகங்கள் அவளை கூட்டாக வேட்டை ஆடி விட்டு கொலை செய்து பஸ்சிலிருந்து வீசி எறிந்து விட்டனர்.

குற்றவாளிகளுக்கு நீதி மன்றம் 'சாகும் வரை தூக்கில் தொங்கும்படி' மை லார்டுகள்' தீர்ப்பு எழுதி விட்டார்கள். ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடந்து விட்டன. குற்றவாளிகள் இன்னமும்  உயிருடன் உலா போகிறார்கள். இன்னமும்  அவர்களது தண்டனை நிறைவேற்றப் படவில்லை.

நிர்பயாவின் அம்மாஆஷா தேவி கண்ணீர் விடுகிறாள்.

"தண்டனை நிறைவேறாமல் காலம் கடந்து விடுமோ? நீதி தேவதையின் தீர்ப்பில் மாற்றங்கள் செய்வதற்கான காலத்தை எதிர்பார்க்கிறார்களோ?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடரவே செய்கின்றன"என மனம் வருந்தி இருக்கிறார் .

நமக்கும் அதே சந்தேகம்தான்.

புதன், 28 மார்ச், 2018

அதிமுக எம்.பி.களுக்கு வந்ததே தற்கொலை சோதனை!

                        
நவநீதகிருஷ்ணன் எம்.பி. கடவுள் நம்பிக்கையாளர். நெற்றி நிறைய  விபூதிக் கீற்றுகள். கையெடுத்துக் கும்பிடத்தோணும்.அப்படியொரு  பக்தி  மான்.

சத்யமேவ ஜெயதே. வாக்குத் தவறாத மனிதர், தமிழக விவசாயிகளின்  கஷ்ட,நஷ்டம் தெரிந்த மனிதர். விவசாயிகளுக்காக கண்ணீர் விட்டு கண் ரெப்பைகள் வரண்டு போச்சு என்கிறார்கள். ஏழேழு லோகத்திலும் இப்படியொரு சத்தியவானை பார்க்கவே முடியாது என்று அதிமுகவில் எல்லோருமே சொல்வார்கள்.

இப்படிப்பட்ட அதிமுக சத்யவான் "காவேரி மேலாண்மை கமிஷன்  அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை பண்ணிக் கொள்வோம்" என்று பேசி இருக்கிறார்.

எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தூக்கில் தொங்கினார்கள்.நச்சருந்தி செத்தார்கள். அப்போதெல்லாம் இந்த எம்.பி.க்கள்  எங்கே போனார்கள் என்கிற சந்தேகம் வரலாம். வரும்.  ஆனால் அப்போது  ஸ்க்ரீன் ப்ளே எழுதியது வேற ஆள். இப்ப எழுதுவது புது ஆள்! இவர் சோகமாக எழுதுவதில் எக்ஸ்பெர்ட் என்கிறார்கள். அதான் நவநீத கிருஷ்ணன் சீன் சூப்பராக வந்திருக்கிறது.

என்னடா இப்படி டயலாக் பேசிட்டோமே நாளைக்கு தினகரனின் ஆட்கள் கயிறு ,மருந்தெல்லாம் அனுப்பி என்னிக்கி எழவு என்று தேதி கேட்டால் என்ன பண்றது என்கிற தயக்கம் ,பயம் வராமல் இருக்குமா? 

அதான் சென்னையில் அறிக்கை பேட்டி கொடுப்பதற்கு  ஒருத்தரை  நேர்ந்து   விட்டிருக்கிறார்களே!   

அவர்தான் " நவநீத கிருஷ்ணன் உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிட்டார். அதை பெரிசா எடுத்துக்காதிங்க"என்று சொல்லி சீனை முடித்து வைத்திருக்கிறார். ஜெயக்குமாருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் சொல்லியிருக்கணும் அந்த எம்.பி.

திங்கள், 26 மார்ச், 2018

டைவர்ஸ்தான்!

குண்டான  பெண்ணாக இருந்தால் சிலருக்குப் பிடிக்கும்!

உடல்வாகு கவர்ச்சியாக இருக்கும்.முக்கியமான அங்கங்களில்  செழுமை இருக்கும்.பார்ப்பவர்களுக்கு கண்கள் வலிக்கும். குண்டுப் பெண்கள் மீது  ஆசை வரும்.

அந்த மாதிரியான பப்லி  தான் நடிகை சார்மி.  போதை மருந்து விவகாரத்தில்  காவலர்களின் கண்காணிப்புக்கு உள்ளாகி இருந்தவர்.

இவ்வளவு  வயதாகியும் இன்னும் ஏன் கல்யாணம் ஆகவில்லை?

கோபமான கோபம்.

"நான் என்ன கல்யாண மெட்டீரியலா? இல்ல.!

கல்யாணம் பண்ணிக்கிட்டால் கணவனை கண்ணுக்குள் வைத்துக்  காப்பாத்தணும்.அந்த ஆளை சுத்தியே கவனம் இருக்கணும். இந்த ரெண்டுமே எனக்கு சாத்தியம் இல்லை. இதெல்லாம் கடந்து கல்யாணம்னு நடந்தா  டைவர்ஸ் எப்பங்கிறது தெரியாது. எனக்கும்  காதல் வந்தது. ஒரு தெலுங்கு நடிகரை லவ் பண்ணினேன்.ஆனா ஒர்க் அவுட் ஆகல. என்ன பண்றது?"

ம்ம்ம்ம்ம்ம் ! இப்படியும் ஒரு பெண்! 

சனி, 24 மார்ச், 2018

பிஜேபியின் பிராஞ்சு ஆபீஸ் ரஜினியின் மண்டபம்!

பெரியார் பிறந்த பூமி என்றாலும் தலையில் பல்லி விழுந்தால் மரணம் என்று நம்பி பயந்து வாழ்கிற பகுத்தறிவு ஜீவன்கள்  வாழ்கிற நாடுய்யா நம்ம திராவிட நாடு!

எவனாவது வீட்டை விட்டு கிளம்புறபோது குறுக்கால ஒரு பூனையை  அதுவும் கருப்பு நிறப் பூனையை விட்டுப் பாருங்க.

"ச்சே..கருப்பு பூனை !போற காரியம் வெளங்குன மாதிரிதான்!" என்று வீட்டுக்கு திரும்பி ஒரு வாய் தண்ணீரை குடித்து விட்டு சற்று நேரம் உட்கார்ந்து விட்டுத்தான் மறுபடியும் கிளம்புவான். சும்மா போக மாட்டான் .திருமதிக்கு வெடப்பாரம் விடுவான்." ஏண்டி அறிவில்ல? மனுசன் கெளம்புற போது வீதியில என்ன சனியன் போகுதுன்னு சகுனம் பார்த்து சொல்ல மாட்டியா?"

எத்தனை பெரியார் இருந்தால் என்னங்க.அவனவன் அடிமனசுக்குள் மூட  நம்பிக்கைகள் ஏற்றுமதி செய்கிற அளவுக்கு டன் கணக்கில் இருக்குங்க.

அட அது ஒரு பக்கம் இருக்கட்டும். 'ஆபரேஷன் திராவிடா' என்று நாலாயிரத்து எட்டுநூறு கோடியில் ஒரு திட்டத்தைப் போட்டிருக்காங்க  என்று தெலுங்கு நடிகர் சிவாஜி அபாய சங்கு ஊதி இருக்காரே அதுக்காக  நடிகர்கள்,ஐ.பி.எஸ்., ஐ,ஏ,எஸ் அதிகாரிகளை பிஜேபி பயன்படுத்தப் போகிறது என்று தெலுங்கு நடிகர் சிவாஜி பகிரங்கமாக சொல்லி இருக்கிறாரே! அது உண்மையாக இருக்குமா?

ரஜினியைப் பார்த்தால் அப்படித்தாங்க தெரிகிறது.  ஆன்மிக அரசியல் இமயமலை பயணம் இதெல்லாம் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.சை விட  அமர்க்களமாக செயல்படுவார் போலிருக்கிறதே!

கொடி,கட்சிப்பெயர் இன்னமும் மேலிடத்திலிருந்து அப்ரூவ் ஆகி வரலேன்னு நினைக்கிறேன். ஒவ்வொரு படமும்  வெளியாகும் போது பாலாபிசேகம்,கர்ப்பூர ஆரத்தி ,பிலிம் பெட்டியை வீதி வலம் தூக்கிட்டுப் போன அனுபவம் ரசிகர்களுக்கு நிறையவே இருக்கிறது. அதனால் கோவிலில் அர்ச்சனை,ஆராதனை என அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

பிஜேபியின் அடுத்த கட்ட வேலை உள்கட்சிப் பிரச்னையை ஊதி விடுவது.

ஒரு ஜோதிடர் சொல்கிறார்.

"ராஜாவாக சூரியனும்,மந்திரியாக சனி பகவானும் இருப்பதால் ஆட்சி செய்பவர்களுக்கும்,அடுத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஈகோ பிரசனை அதிகரிக்கும்.பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும்." என்கிறார்.

அதாவது எடப்பாடிக்கும் ஓபிஎஸ்.சுக்கும் பனிப்போர்,கசமுசா நடக்கலாம்  என அர்த்தம் கொள்ளலாம்.

அதாவது இப்படி எல்லாம் செய்து கால் பதிக்கலாம் என பார்க்கிறது பிஜேபி!

சசிக்கு குனிந்து கும்பிடு போட்டவர்கள் மறுபடியும் அங்கே போகும் நிலைமை வந்து விடும் போலிருக்கிறதே!

நீர் அடித்து நீர் விலகவா போகிறது என்று சொல்லும் காலம் வருமா? முன்னொரு காலத்தில் திமுக அதிமுகவை இணைப்பதற்கு ஒரு பிஜு பட்நாயக் வந்ததைப் போல இவர்களை இணைக்க ஒரு ஷா வரமாட்டாரா?

புத்தாண்டுப் பலன் இதானா?

காமாந்தகா! சதை தின்னும் மனித மிருகமே..!

                     " பிரபல பின்னணிப் பாடகருக்கு உறவுக்காரன், சினிமா  உலகில்  அவனுக்கு  பெரிய செல்வாக்கு. இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள்.அவன் மனது வைத்தால் என்னை பெரிய நடிகையாக்கி விடுவான் என்று என் அம்மா  நினைத்தாள்.அதனால் நாசரை எனது கார்டியனாக பாதுகாவலாக ஷூட்டிங் நடந்த இடங்களுக்கு அனுப்புவாள்.அவனுக்குள் அப்படி ஒரு காமாந்தகன்   ஒளிந்திருக்கிறான் என்பது யாருக்குத் தெரியும்?"

                          அப்பாவியாகப் பேசுகிறார்  டெய்சி  இரானி.முன்னாள் நடிகை. 50 களில் பிரபலமாக இருந்த குழந்தை நட்சத்திரம். 'யார் பையன்' என்கிற படத்தில் ஜெமினி கணேசன்--சாவித்திரியுடன் நடித்திருப்பவர்.அந்த படத்தில் நடித்த போது அவருக்கு வயது 6. 'ஹம் பஞ்சி ஏக்  டால்கே' என்பது இந்திப்படம்.

.  அசோக்குமார்,திலிப் , ராஜ்கபூர், வைஜயந்திமாலா ஆகிய பிரபலங்களுடன்  பையன் வேடத்தில் நடித்திருக்கிறார். சின்னப்பையன் வேஷத்துக்கே பிறந்தவர் போன்ற முகம் ,சுருட்டை முடி. நல்ல 'பப்ளி'யாக இருப்பார்.

                    "சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதுதான் எனக்கு 'அது ' நடந்தது" என நினைவுகளில் பின்னோக்கி செல்கிறார்.

                   "ஹோட்டல் அறைக்கு வந்ததும் எனது கார்டியன்  இடுப்பு வாரால்  என்னை அடித்தான்.
                   
                  "வெளியில் சொன்னால் கொன்னுடுவேன் என்று மிரட்டி என்னை  கெடுத்துட்டான். வலியால் துடிக்கிறேன். வாய் விட்டு கத்த முடியல. உயிர்ப் பயம். சாகடிச்சிடுவானே! ,ஊருக்குப் போக முடியாதே!எத்தனை நாள்  அந்த உயிர் வலியால் துடிச்சேன் தெரியுமா?"

                        பழைய நினைவுகள் என்றாலும் கண்களில் மிரட்சி! 6௦ ஆண்டுகள். பூட்டிக்கிடந்த இருட்டு அறை .சிலந்திக்கூடுகள், தூசுகள், மூச்சு முட்டச் செய்த மாசடைந்த காற்று .எல்லாம் வெளியேறின.

                  "  15-- வயசு.'மேரே ஹுசூர்' என்கிற படத் தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. மராத்தா மந்திர் பக்கமாக புரொட்யூசர் மல்லிகா சந்த கோக்கர் ஆபீஸ். அங்கே போவதற்காக அம்மா என்னை தயார்படுத்தி அனுப்பினாள்.அந்த காலத்து நடிகைகள் 'ஸ்பான்ஜ்' வைத்த 'ப்ரா' அணிவது வழக்கம்.எனக்கும் அதை அம்மா அணிவித்திருந்தாள். அந்த ஆள் சோபாவில்  நானும் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்திலேயே  அவனது கை தடவ ஆரம்பித்து விட்டது. பேசாமல் அதை கழற்றி அவனின் கையில் கொடுத்து விட்டு திரும்பி விட்டேன்.இதை எல்லாம் இப்போது சொல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை .உண்மையை சொல்லவேண்டும் என்று தோன்றியது.சொல்லி விட்டேன்" என்கிறார் டெய்சி இரானி.

                  மனதின் அழுத்தம் குறையுமே!.                                             

                         

வியாழன், 22 மார்ச், 2018

பிஜேபியின் அசல் ஏஜன்ட் தினகரன்!

            மத்தியில் ஆள்கிற பிஜேபியின் அசல் ஏஜன்ட் யார் என்கிற குழப்பம் இப்போது வந்திருக்கிறது.

           ஒருகாலத்தில் அம்மாவுக்கு அடிமைகள், விசுவாசிகள்,தூசிகள் ,துரும்புகள் என அதிரடியாக கிளம்பியவர்கள் அம்மா செத்த பிறகு அப்படியே  வாய்க்கால் வெட்டி சசிகலா பக்கமாக திருப்பி விட்டார்கள். ஊழல் வழக்கில் நாலு வருசம் ஜெயில் சாப்பாடுதான் என்று சசியின் வனவாசம் பெங்களூரு பரப்பன அக்ரகாரத்துக்கு மாறியது.

          அவ்வளவுதான்! அதுநாள் வரை பிஜேபிக்கு எதிராக சல்லடம் கட்டி இருந்தவர்கள் கூச்ச நாசம் இல்லாமல் கழற்றி எறிந்து விட்டு 'எஜமானே! கட்டளை இடுங்கள் . காத்திருக்கிறோம்' என பாதபூஜை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

           ஆனால் 'இவர்களை விட அசல் ஏஜன்ட் இவர்தான்' என்று புதிதாக  அடையாளம் காட்டி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

           அடையாளம் காட்டப்பட்டவர் வேறு யாரும் அல்லர் .சாட்சாத்  டி,டி,வி  தினகரனேதான்!

              நாக்கில் தழும்பேறாத குறையாக திராவிடத்தை காக்க வந்தவர்  என்று  சொன்னவர்தான் சம்பத். முன்னர் வைகோவை எப்படியெல்லாம் வர்ணித்து  உச்சி முகர்ந்திருப்பார்? அதற்கு சற்றும் குறை வைக்காமல் தினகரனுக்கு  வாழ்த்துப்பா பாடினார்.

             அவர்தான் சொல்கிறார் 'பிஜேபியின் அசல் அடிமை தினகரன் ' என்பதாக! 

             அண்ணாவையும் திராவிடத்தையும் கட்சியின் பெயரில் மட்டும்  வைத்திருக்கிற எடப்பாடி அண்ட் ஓபிஎஸ் கம்பெனியை ஏஜண்ட் என்று சொல்வதா, அண்ணாவையும் திராவிடத்தையும் துறந்த தினகரனை  ஏஜண்ட்  என்று நம்புவதா?

           திராவிடா.........! உனது நாட்டில் மற்றொரு ராஜா!

புதன், 21 மார்ச், 2018

இது மகா கேவலம்!

"என்னதான் கோவம் இருந்தாலும் போய்த்தான் ஆகனுங்க. கல்யாணம் காட்சிக்கு போவலேன்னாலும் கேத காரியம் .துஷ்டிக்கு போகணும்!"

சர்வ சாதாரணமாக கிராமங்களில் சொல்லிக் கேட்ட சொற்கள்தான்.

வெட்டுக்குத்து கொலை வரை போய் பரம வைரியாக இருப்பார்கள். ஆனாலும் எழவு விழுந்துவிட்டால் ஒரு எட்டு போய் பார்த்து உட்கார்ந்து இருந்து விட்டு திரும்புவார்கள்.அதுதான் மனுசத்தனம்.! இன்னும்  கிராமங்களில் பார்க்கலாம்!

நடராசனை அனுதினமும் பார்த்து சிபாரிசுகள்,வாய்ப்புகள்,என கேட்டுப் பெற்றவர்கள் இன்றைய அதிமுகவில் யாருமே.... இல்லவே இல்லியா? 

"சின்னம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே" என கெஞ்சி கூத்தாடியவர்களில் எத்தனை பேர் பதவிகளைப் பெற்றார்கள் என்பதை  மனதை தொட்டு சொல்லமுடியுமா? அது சரி, மனம் என்பது இருந்தால் தானே  தொட்டு தடவிப்பார்த்து சொல்ல முடியும்!

"நடராஜனுக்கும் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது" என்று ஜெயலலிதா எத்தனை அறிக்கை விட்டிருப்பார்! அப்படி அறிக்கைகள் விட்டாலும் 'எம் மென் ' பவர் பாங்காகத்தான் இருந்தார்.அதிகாரிகள் முதல் மந்திரிகள் வரை  ரகசியமாக உறவாடிக்கொண்டுதானே இருந்தார்கள். மறுக்க முடியுமா?

இவ்வளவு ஏன்? இறுதிச்சடங்குக்காக  சாலை ஓர புல் புதர்களை அகற்றி ஒழுங்கு செய்யும்படி  உத்திரவிடவில்லையா? அது 'சின்னம்மா சசி ' வருவதால்தான் என்று சொல்லப்பட்டதே?

ஜெ.க்கு  குனிந்து பணிந்து தரையைத் தொட்டு நமஸ்காரம் செய்தவர்கள் சின்னம்மாவுக்கும் அப்படி குனிந்து கும்பிடு போட்டவர்கள்தானே?

'ஒட்டும் இல்லை உறவும் இல்லை.அதனால் நடராசனின் ஈமச்சடங்குக்கு செல்லவில்லை "என்பது ஜெயகுமாரின்  தனித்த குரல் என்பதாக சொல்ல முடியாது. அமைச்சரவையின் மொத்தக்குரல் ,பிஜேபியின் பின்னணிக் குரல் என்பதாகவே கருத முடியும். 

செவ்வாய், 20 மார்ச், 2018

யார் அப்பன் வீட்டு பணம்?

 பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுட்டுக்கொண்டு தப்பி ஓடியவனை  விட்டு விட்டு பொட்டிக்கடை வைத்துப் பிழைப்பவனின் சில  நூறு ரூபாய் கடனுக்காக ஜப்தி பண்ணுவார்கள்.போலீசை விட்டு மிரட்டுவார்கள்.

தினமும் நாளிதழ்களைப் பார்த்தால் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் கோடிகளை சுருட்டிக்கொண்டு ஓடியவர்களைப்  பற்றிய செய்திகள்.

ஆதார் கார்டு கொண்டு வா! குடியிருப்புக்கான சர்டிபிகேட், ரேஷன் கார்டு  கொண்டுவா என்று சொல்லி பக்கம் பக்கமாக வங்கிகளில் கையெழுத்து  வாங்கிக்கொள்கிறார்கள்.

ஆனால் இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களுக்கு எப்படி கோடிகளை  அள்ளிவிட முடிந்தது?

பெல்ஜியத்து குடிமகனாம் நீரவ் மோடி!பாஸ்போர்ட்.

மனைவிக்கு  அமெரிக்க பாஸ்போர்ட் என்கிறது ஒரு இணைய செய்தி!

இந்த செய்தி பொய்யானது என்கிற செய்தியை யாராவது சொல்ல மாட்டார்களா என மனம் துடிக்கிறது.

கமல், ரஜினி இருவரும் எலிகளா?

 கள் என்று நினைத்து பாலிடாலை குடித்தவன் அன்றே சிவபதவி அடைவது அவன் செய்த புண்ணியம். ஈரல் கெட்டு,குடல் அழுகி,  அழுந்தி பின்னால்  சாகவேண்டியவன் முன்னாடியே  போய்ச்சேர்ந்தால் அது அவனுக்கும் நல்லது.அவனது உறவுகளுக்கும் நன்மைதானே!
 
அப்படித்தான் அதிமுகவின் நிலையும் இருக்கிறது. தேர்தலில்தான் ஒரு கட்சியின் வாழ்வும்,தாழ்வும் இருக்கிறது.மக்களாக பார்த்து முடிவு செய்வது ஒரு வழி! தானாகவே நெருப்பு வளையத்துக்குள் போய் நிற்பது மற்றொரு வழி!!இரண்டாவது வழியில் அதிமுக.!

இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்கும் பேர்வழியாக இருந்தால்    நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு கேடி திரிய முடியும்!  ஆனால் அதிகாரி மாறுதல் ஆகி சென்று விட்டால் ?

தலைமறைவு வாழ்க்கைத்தான்!

மோடியின் பாசப்பிணைப்பு இருப்பதால்  வரம்பு மீறி  ஆளும்  கட்சி ஆட்டம் போடுகிறது. அந்த அன்பு அணைப்பு அறுந்து போனால்?

யோசிக்கவே மாட்டார்களா?

சட்டப்பேரவையில் தங்களை எதுவும் செய்யமுடியாது என்பதால் யாரையும் எளிதாக அவர்களால்  வசை பாட முடிகிறது.

"நடிகர்களின் பெயர்களை வேண்டுமானால் சபைக்குறிப்பில் இருந்து  நீக்கிக்கொள்ளுங்கள்.சினிமாவில் புலி!அரசியலில் எலி.அதில்  தனக்கும் புரியாமல் ,மற்றவர்களுக்கும் புரியாமல்  ஒரு நடிகர் பேசி  வருகிறார்" என்று வெங்கடாசலம் என்கிற அதிமுக எம்.எல்.ஏ. பேசி இருக்கிறார்.

பொருள் தப்பில்லை.ஆனால் அதற்கு பதில் சொல்லவேண்டியவர்கள்  அவையில் இல்லையே! நிழலுடன் சண்டை போடுவதா? கமல்,ரஜினியை  மிகவும் மட்டமாக தரக்குறைவாக பேசுகிறவர்கள் இல்லாமல் இல்லை..ஆனால்  அது பொது மேடை.! மக்கள் முடிவு மகேசன்  முடிவு! 

அவைத் தலைவரின் பாதுகாப்புடன் எதையும் பேசிவிடலாம் என எல்லையைக் கடப்பது அதிகப்பிரசங்கித்தனம்!

ஒரு எலியினால்தான் சிங்கம் வலையில் இருந்து தப்ப முடிந்தது என்பது  நீதி வகுப்பு கதை!

திங்கள், 19 மார்ச், 2018

வம்பு சண்டைக்கு வருகிறது இந்துமகா சபா!

என்றைக்கு மதவாத சக்தியின் பிடியில் நாடு சிக்கியதோ  அன்றே ஒற்றுமையின் குரல்வளையில்  அரிவாள் வைக்கப்பட்டு விட்டது. வன்முறையை தடுக்ககூடிய சக்தி வலுப்  பெறுகிற போதுதான் அரிவாள்  பிடித்த கையை முறித்துப் போட முடியும்.வன்முறையும்  ஒடுங்கும்!

அதுவரை இந்திய துணைக்கண்டத்தில் அமைதி என்பது  கேள்விக் குறிதான்!

 இந்த துணைக்கண்டம் எந்த ஒரு மதத்தவனுக்கும் சொந்தமில்லை .இங்கு பிறந்த ஒவ்வொருவனும் துணைக்கண்டத்தின் மகன்தான். இந்தியத் தாயின் பிள்ளை. அவனை மதம் பிரிக்கலாம்.ஆனால்  உறவை பிரிக்க முடியாது.

ஒற்றுமையாக வாழ்கிறவர்களை பிரிக்கும் முயற்சியில் எந்த சக்தி இறங்கினாலும் அது வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிக்கப்படும். இது காலம் சொல்லி வருகிற வரலாறு.!

இந்து மகா சபா என்கிற அமைப்பு வரலாற்று சின்னங்களின் பெயர்களை  மாற்றி காலண்டர் போட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலின் பெயரை மகாலயா என்றும்  டில்லியில் இருக்கிற குதுப்மினாரின் பெயரை விஷ்ணு ஸ்தம்பம்  என்றும்  இப்படி ஒன்பது சின்னங்கள்,வழிபாட்டு இடங்களின் பெயரை அறிவித்திருக்கிறது.

"விரைவில் தாஜ்மகால் பற்றிய பிரச்னை முடித்து வைக்கப்படும் " என்று  முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்னதற்கு இதுதான் பொருளா?

பிரதமர் மோடி என்ன சொல்கிறார்?

ஞாயிறு, 18 மார்ச், 2018

' நானென்ன புறம்போக்கா ,பரதேசியா?

அடடா ...தமிழ்நாட்டின் பெருமையே பெருமையடா! உச்சி முடி எல்லாம்  நட்டமா நிக்கிதுடா.

இட்டுக்கட்டி இப்படி எல்லாம் பாடலைன்னா நம்ம கவுரதை என்ன  ஆவுறது? 

நேத்துவரை 'சுயம்பு'வாக இருந்த தினகரன் ,இன்று  நாஞ்சில் சம்பத்துக்கு வேம்பு.! 

"நான் அங்க போய் நிக்கிறதுக்கு என்ன பொறம்போக்கா,  பரதேசியா? அந்தாளையல்லாம்  பார்க்க முடியாது" என்று விறைப்பாக நிற்கிறார் சம்பத்.

இன்னொரு பக்கம் " எடப்பாடி மாதிரி ஒரு ராஜ தந்திரியை பார்க்க முடியுமா" என்று ஓபிஎஸ் பக்திப்பாடல் பாடுகிறார். இதையெல்லாம்  பார்க்கிறபோது நமது தமிழ்நாடுதானா என்று கிள்ளிப்பார்த்துக் கொள்ள  தோன்றுகிறதா இல்லையா?

நமது தமில்நாடேதான்! மன்னிக்க... தமிழ்நாடு!

எப்படின்னு கேட்கிறீங்களா?

புதுக்கோட்டை மாவட்டம் ,கரம்பக்குடி .தங்கராசு ---ராணி  உதாரணத் தம்பதி. தாம்பத்திய செழிப்பு. நான்கு ஆண் பிள்ளைகள்!

கணவனைப் போட்டுத் தள்ளியதாக  ராணி  மீது போட்ட வழக்கில்  ஆதாரம் இல்லை என தள்ளுபடி ஆகி விட்டது. 

"புருசனை போட்டுத்தள்ளிட்டு எந்த பொம்பளய்யா...தாலிய  அத்துட்டு வந்து  நிப்பா? ராணி உத்தமிய்யா" என்று ஊரே மெச்சியது.  பெத்த பிள்ளைகளும் நம்பியது.

காலம் நகராமல் இருக்குமா,,,ஓட்டமாக ஓடியது.

பிள்ளைகள் சொத்துக்காக அம்மாவிடம் சண்டை போட்டார்கள்.

"கொடுக்கலேன்னா பார்த்துக்க.சும்மா வுடமாட்டேன் "என்று மகன்  மிரட்ட அம்மா உண்மை அப்போதுதான்  உண்மை பேசுகிறாள்.

"ஏலேய்...உங்கப்பன போட்ட மாதிரி உன்னையும்  போட்டுத் தள்ளிருவேன்!"

அப்போதுதான் பயலுக்கு உண்மை தெரிகிறது. 

அம்மாவை தரதரவென வீதிக்கு இழுத்துவந்து தலையை தனியாக வெட்டி எடுத்து பத்திரமாக போலீஸ் நிலையம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான்.

வீரத்தாய்...வெற்றித்திருமகன்.

போற்றிப்பாடடி பொண்ணே!


நல்வாய்ப்பு ..நழுவ விட்டால் நாசமாவீர்கள்!

ஒரு கிராமத்தில் ஒவ்வொரு  இரவிலும் ஒருவர் வீடு வீதம் கோழி காணாமல் போய்க்கொண்டிருந்தது.

எல்லாம் நரியின் வேலை என்பது தெரிந்தும் ஒருத்தன் பொறி வைத்துப் பார்த்தான். மாட்டவில்லை.இன்னொருத்தன் இரை வைத்து அதில் நஞ்சு கலந்தான் .நரி சாகவில்லை. இப்படி தனித்தனியாக அவரவர் புத்திக்கேற்ப என்னன்னவோ செய்தும் புத்திசாலி நரி  கோழிகளை கொன்று தின்று  விட்டது.

இனி கோழி வளர்ப்பதில்லை என முடிவு செய்தார்கள்.

அது இல்லாமல் போனால் என்ன?

 குட்டி ஆடுகளை கொன்று தின்ன ஆரம்பித்தது அந்த குள்ள நரி!

தனித்து நின்று அவர்களால் குள்ள நரியை கொல்ல முடியவில்லை!

அப்போதுதான் ஒருத்தன் யோசனை சொன்னான்.

அதன்படி,

தனித்தனியாக செயல்படுவதை விட  கிராமம் முழுவதும் ஒன்றாக  சேர்ந்து விழித்திருந்து நரியை சுற்றி வளைத்து  போட்டுத்தள்ளினால் என்ன? ஒன்றுபட்டார்கள் கொன்று போட்டார்கள்.!

அதைப் போல மாநிலங்களின் உரிமைகளில் கை வைத்து நாட்டை சுரண்டும் கோடீஸ்வர கும்பல்களுக்கு உதவி செய்து வரும் மத்திய  பிஜேபி அரசை அகற்றுவதற்கு ஒரு நல் வாய்ப்பு வந்திருக்கிறது.

கூட்டணி வலையில் இருந்து பிஜேபியை விட்டு வெளியில் வந்து விட்ட தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. மோடியிடம் கெஞ்சிப்பார்த்தும் ,மிரட்டிப்பார்த்தும் எதுவும் நடக்கவில்லை.

நம்பிக் கழுத்தை நீட்டிய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து ''தாலி கட்டவா சொல்கிறாய்.படுடி..படுக்கையில்" என வன்புணர்வுக்கு முயன்ற  காமக்கொடூரனைப் போல தெலுங்கு தேசக்கட்சியை ஏமாற்றி இருக்கிறது பிஜேபி அரசு.!

பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தைத் தோற்கடிக்கவேண்டிய பொறுப்பு,கடமை,இன்னும் என்னென்னே எழவு உண்டோ அத்தனையும்  அதிமுகவுக்கு இருக்கிறது.

காவிரி பிரச்னையில் மோடி அரசு தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத  துரோகத்தை செய்திருக்கிறது. தமிழகத்தை சுரண்டுகிற அதானி குழுமத்தினருக்கு உதவி செய்கிறது. அதற்கு கைக்கூலியாக நீங்களும்  மறு பக்கம் சுரண்டுங்கள் என்று அதிமுக அரசுக்கு வழி விட்டிருக்கிறது.
கட்சி போனால் என்ன கொழுத்த பணம் வருகிறதே என எடப்பாடி குழுவும் இடம் கொடுத்திருக்கிறது.

மனைவியின் சேலையை உருவுகிறவன் புதுச்சேலைதான் கொடுக்கப் போகிறான் என  எவனாவது நினைத்து சும்மா இருப்பானேயானால்  அவனைப்போல ஈனப்பிறவி எவனுமில்லை.

காவிரிப் பிரச்னையில் உண்மையிலேயே, அக்கறை இருந்தால், விவசாயம் மரித்துப்போகக்கூடாது என்கிற கவலை இருந்தால், தமிழக  உரிமைகளை காக்கும் பொறுப்பு இருக்கிறது என நினைத்தால் "ஆத்தா , அம்மா" என பெற்ற தாயை எண்ணி  உருகுகிறவர்களாக இருந்தால்  பிஜேபி அரசை தோற்கடியுங்கள்.

இல்லை என்றால் உங்களை மக்கள் தண்டிப்பார்கள். தெய்வங்களின்  தண்டனைகளுக்கு ஆளானவர்களை சொல்லி ஆட்சி நடத்துகிற உங்களின் பெயர்களை ரயில்வே ஸ்டேஷனின் படிக்கட்டுகளில் கூட  எழுத மாட்டார்கள்.

மக்களின் சாபம் சுட்டெரிக்கும் கோழைகளாக மாறப்போகிறீர்களா ?
  

சனி, 17 மார்ச், 2018

காமக் கொடூரங்களுக்கு இரையாவதே பெண்களின் விதி!

மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான  பாலியல்  வன்முறைகள் அதிகமாகியதே தவிர கட்டுக்குள்  அடங்கியதாக  இல்லை.

வன்முறைகளின் அளவும் கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியில் இருந்து அவரது கட்சியினர் அனைவருமே  'பாரதம்' ஒளிர்வதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

. பிஜேபி ஆள்கிற மாநிலம் உ.பி.. அங்கே ஒருவரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது கால்களையே  தலையணையாக அவருக்கு வைத்திருக்கிறார்கள்.அது  அரசு மருத்துவமனை என்பதுதான்  வெட்கக்கேடு. ஒரு தலையணைக்குக் கூட வக்கில்லாமல் போய் விட்டதா? மாநில முதல்வர் பதவியை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?

ஒரு மாநிலத்தின் உயர்ந்த போலீஸ் அதிகாரியாக கட்டி ஆண்ட ஒரு புண்ணியவான்.  அந்த மாநிலம் கன்னடம். அவரின் பெயர் சங்கிலியானா.
அண்மையில் பெங்களூருவில் ஒரு நிகழ்வு.

தலைநகரம் டில்லியில் பேருந்தில் காமக்கொடூரன்களின் பாலியல் வன்புணர்வுக்கு இரையான நிர்பயாவின் அம்மா கலந்து கொண்டிருக்கிறார். சசியின் ஆடம்பர சிறை வாழ்க்கையை அம்பலப்படுத்திய ரூபாவும் கலந்து கொண்டிருக்கிறார். இவரையும் வைத்துக் கொண்டுதான் சங்கிலியானாவின் 'காமநெடி மிகுந்த 'பேருரை  நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

"நிர்பயாவின் அம்மா 'நல்ல உடல் கட்டுடன் இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது  நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது."  

 வக்கிரத்தை வாய் நிறைய  வைத்து இருந்தவர் முக்கியமான ஆலோசனையையும் பெண்களுக்கு வழங்கி இருக்கிறார்.

இதை மாண்பு மிகு பிரதமர் மோடி பரிசீலனை செய்வார் என நம்புவோமாக. ஐ.பி.எஸ் .அதிகாரி ஆச்சே!

"பெண்களே! ஆண்கள் உங்களை விட பலம் பொருந்தியவர்களாக  இருந்தால் சரண்டர் ஆகி விடுங்கள்.அப்போதுதான் பாதுகாப்பு.உயிர் பிழைத்திருப்பீர்கள். மற்றதை நீதி மன்றம் பார்த்துக் கொள்ளும்" என்று  திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்.

பாரதமாதாவே இதற்கு என்னம்மா பதில் வைத்திருக்கிறாய்?

கூட்டு சேர்ந்து கற்பழித்து நார் நாராய் கிழித்து எறிந்த பிறகு ஒரு பெண்  இந்த சமுதாயத்தில் வாழ காவல்துறையின் அட்வைஸ் இதுதானா? 

நீதி மன்றம் என்னய்யா பார்த்துக்கொள்ளும்?

குற்றவாளியின் வக்கீல் "அங்கே தொட்டானா,இங்கே வைத்தானா, உனக்கு சுகமாக இருந்ததா?" என கேள்விகளால் அந்த பெண்ணை  மறுபடியும் கற்பழிப்பான்.அதற்கு மற்றொரு  முறை நீதிபதி முன்பாக அவள் சாவாள்! எத்தனை தடவை அய்யா  ஒரு பெண் சாவது?

ச்சீய் வெட்கக்கேடு! 

ஒவ்வொரு மாநிலமும் பாஜக வசம். மொத்த இந்தியாவும் மோடியின் கட்டுப்பாட்டில்!

நாடு வாழுமா?

வெள்ளி, 16 மார்ச், 2018

ஜெ.இருந்தால் இந்த அசிங்கம் நடந்திருக்குமா?

"எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்களோ, அந்த இடத்தில் தெய்வங்கள் வாழ்கின்றன" என்பார்கள்.

ஆனால் தமிழகத்துக்கு அந்த புண்ணியம் கிட்டியபாடில்லை.!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் ஆணவக் கொலைகள் அவ்வப்போது நடந்தேறுகின்றன.

காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சார்பின்மை .அதிமுகவினரின் சாதி பற்று, பண விளையாட்டு இன்னும்  ஒரு ஆட்சியில்   நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கின்றன.

அமைச்சர்,அதிகாரிகள் வீடுகளில் நிகழ்ந்த வருமானவரி சோதனை, குட்கா ஊழல் இவைகள் பற்றி வெறும் கேள்வி பதிலோடு நின்று விட்டன..

இந்த நிலையில்தான் அருவெறுப்பான நிகழ்வு...

அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கூட்டம் நடக்கும் போது மந்திரி விஜயபாஸ்கர்  வெளியில் வருகிறார்.

"கூட்டத்தில் என்ன நடந்தது?" என்று கேட்கிறார் பெண் செய்தியாளர்.

பதில் வேறு விதமாக வருகிறது." உங்களுடைய கண்ணாடி அழகாக  இருக்கிறது!"

"நான்தான் தினமும் அதைத்தான் போட்டுக்கொண்டு வருகிறேனே! சொல்லுங்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?"--அதே பெண் நிருபர் மீண்டும் கேட்கிறார்.

"ஓகே!இன்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். யூ லுக் பியூட்டிபுல் "-மந்திரி விஜயபாஸ்கர்தான் சொல்கிறார்.

ஜெ.இருந்திருந்தால் அந்த மந்திரி இப்படி பேசிவிட்டு பதவியில் இருந்திருக்க முடியுமா?

பாரதி பாடினான் 'பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!"

எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்கு காட்டுகிற அக்கறையை இம்மாதிரியான மக்கள் பிரச்னையிலும்  காட்டவேண்டும்.

கலைஞரின் ஓய்வு  கழகத்தை எங்கோ கொண்டு செல்கிறது!








'

வியாழன், 15 மார்ச், 2018

நாட்டையே வித்தாச்சா?

இன்றைக்கு வாசித்த 'வாட்ஸ் அப்' தகவல்களில் சிரிக்க வைத்தவை மட்டுமல்ல  சிந்திக்கவும் தூண்டியது. "விற்று விட்டோம் " என்று சரமாரியாக  அடுக்கியவைதான்!

மதுரையில் இருந்து மாரிமுத்து என்கிற பெயரன் எனக்கு அனுப்பியதை சற்றே  நடை மாற்றி இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

"கடலுக்கப் போகாதே ,மச்சான்!
கச்சத்தீவை  வித்தாச்சு!

காட்டுக்குள் போகாதே,
நியூட்ரினோவுக்கு வித்துட்டோம்.

காவேரிக் கரைக்குப் போகாதே,
மணலுக்கு விலை பேசிட்டோம்.

விவசாயம் பண்ணாதே,
 ஹைட்ரோகார்பனுக்கு வித்துட்டாய்ங்க.

மருத்துவம் படிக்காதே,
வட இந்தியாவுக்கு நீட் நல்ல ரேட்டுக்கு போயிருக்கு.

தமிழ்நாடு பப்ளிக்சர்வீஸ் கமிஷன் எழுதாதே,
தமிழே தெரியாதவன் வாங்கிட்டான்.

ராம்நாடு போகாதே, அதானிக்கு 
பத்திரம் எழுதியாச்சு.

தஞ்சாவூருக்குப் போகாதே, மீத்தேனுக்கு 
எப்பவோ வித்தாச்சு.

மலை ஏறப் போகாதே, கிரானைட்,
குவாரிக்கு குத்தகை.

வெள்ளியங்கிரிக்கு போகவேணாம்.
ஜக்கிக்கு வித்தாச்சு.

சதுரகிரிக்கு போகவேணாம்,
யாருக்கோ விலை பேசப் போறாய்ங்க!

எப்பூடி?

புதன், 14 மார்ச், 2018

எடப்பாடி --பிஜேபி.யை மிரட்டிய தினகரன்.!

மார்ச் 15. மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உகந்த நாள்.

காலை 10.30.நல்ல நேரம் ஆரம்பம். கைக்கடியாரத்தை பார்த்தபடியே பேசிய  தினகரன் சரியான நேரம் வந்ததும் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என தனது கட்சியின் பெயரை மேலூரில்  அறிவித்து ,கொடியையும் காட்ட ,அதே நேரத்தில் சென்னை சட்டப்பேரவையில் 10.31 க்கு பட்ஜெட்  உரையை  பன்னீர் செல்வம்  வாசித்தார். 'ஒருநாளும் உன்னை மறவாத' என்கிற வார்த்தையுடன்  ஆரம்பமாகியது.

எனக்கென்னவோ அது ரஜினி படத்தின் பாடல் வரிகளை நினைவு படுத்தியது.

சரி ,சங்கதிக்கு வருவோம்.

தினகரன் அணிக்கு திரண்டிருந்தகூட்டத்தைப் பார்த்தபோது பயங்கர மிரட்டலாகவே தெரிந்தது. மேலூரின் கொள்ளளவையும் தாண்டிய தொண்டர்கள். நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடை கண்மாயின்  கரை உடைந்ததைப் போல அவ்வளவு பெருங்கூட்டம்.பந்தலுக்கு   வெளியிலும்!

அதிமுகவினரின்  பெரும் பிரிவினர் தினகரன் பக்கமாகவே இருக்கிறார்கள்   என்பதை எடப்பாடி, ஓபிஎஸ், பிஜேபி தலைவர்களுக்கு மிரட்டும் தோரணையில் காட்டி இருக்கிறார்கள்.இது உண்மையாகவும் இருக்கிறது. சன் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியதே!  உள்நோக்கம் இல்லாமல்  அந்த தொலைக்காட்சி எதிலும் இறங்காது.!

மாநாடு போல நடந்த கூட்டத்தில் வைத்திருந்த கட்-அவுட், மேடையின் பின்னணி படங்கள் அவர்கள் பெரியார் அண்ணா ஆகியோரை எந்த அளவுக்கு  சிறுமையுடன் மதிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

முதலில் தினகரன்,சசிகலா,ஜெயா, எம்.ஜி.ஆர், அண்ணா என கட்அவுட் வரிசைப் படுத்தப்பட்டிருந்தது. அடப்பாவிகளா!

மேடையிலோ பெரியார்,அண்ணா இவர்களை சின்ன வளையத்துக்குள்  அடக்கிவிட்டு மற்றவர்களை பெரிய வட்டத்தில் கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக காட்டும் இரட்டை விரலை மறந்து கட்டை விரலை உயர்த்திக்காட்டினார்கள்.இலையே போச்சு. பிறகெதுக்கு  ரெட்டை விரல்!

"வாங்கய்யா வாத்தியாரய்யா" என்கிற எம்.ஜி.ஆர் பட பாடலை தினகரனை வரவேற்பதற்காக  ஒலிபரப்பினார்கள்.நாளடைவில்எம்.ஜி.ஆரையும் மறந்து விடுவார்கள். பிறந்த நாள் இறந்த நாள் மட்டுமே நினைவுக்கூரப்படும் நிலைக்கு தி.மு.க.வே  வந்து விட்ட பிறகு இவர்கள் மட்டும் பெரியார் அண்ணாவை நெஞ்சில் சுமப்பார்களா என்ன?

ம்ம்ம்ம்ம்ம்! காந்தியார் என்பவர் யார் என்பதே தெரியாமல் வளர்ந்திருக்கும் இளைய தலைமுறை தமிழையும் ,உரிமைக்காக போராடிய பெரியார் அண்ணாவை மட்டும் நினைவில் வைக்குமா?

எல்லாம் சரி ,எத்தனை கோடிகள் செலவாகி இருக்கும்.? இதைப்போல  கமல், ரஜினி இறைப்பார்களா? இதை விட பெருங்கூட்டத்தை ரஜினி காட்டினால்தானே  அவருக்குப் பெருமை?


அறை வாங்கிய சூப்பர் ஸ்டார் யார்?

ஒவ்வொரு நடிகையும் மனசாட்சிக்கு பயந்து  உண்மையைச் சொன்னால்   ஆழ் மனதில் படுத்துக்கிடக்கும் நிகழ்வுகள் சிலிர்த்து எழுந்து வெளியில் வந்து கை கொட்டி சிரிக்கும் போலிருக்கிறது.

வட இந்திய நடிகைகளுக்கு அதிலும் சிலருக்கு  'தில்' நிறையவே இருக்கிறது. குறிப்பாக ராதிகா ஆப்தே!

ரஜினிகாந்துடன் கபாலி, என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவுடன் இரண்டு படங்கள், அக்சய்குமாருடன் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.

"அந்த நடிகருடன் முதல் நாள் ஷூட்டிங். பழக்கமில்லாத அந்த சூப்பர் ஸ்டார் எனது காலை அவரது காலால் உரசினார். ஒரே அறை. அதிர்ந்து போனார் ." என்று சொன்னவர் தெலுங்கு படஉலகில் பெண்களுக்கு  உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை " என்றும் சொல்லி இருக்கிறார்.

யார் அந்த சூப்பர்?  

சினிமாவில் நுழைகிறது பிஜேபி!

ஆக்டபஸ் தனது  கைகளை விரிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆமாம்.!  ஆர்.எஸ்.எஸ்.எனும் மதம் சார்ந்த அமைப்பு சினிமாவிலும்  கை  வைக்கிறது.

நூறு கோடி பட்ஜெட். இந்திப் பட உலகில் பிரபலமான இயக்குநர்.

பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை. இவரை அண்மையில்  ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.யின் முன்னணி தலைவர்கள் சந்தித்து கதையைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அமித் ஷாவும் தொலைபேசி வழியாக பேசியதாக சொல்கிறார்கள்.

"ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், ஹெட்கேவார்,கோல்வல்கர், சவர்க்கார்,  சுதர்சன் ஆகியோரின் 'தியாகத்தை' புகழ்ந்து கதை வசனம் அமைந்திருக்க வேண்டும்  என்று  சொன்னதாக ஆந்திர திரை உலகில் சொல்கிறார்கள்.

பார்க்கலாம்.

தமிழ்த் திரை உலகில் யாரும் மாட்டவில்லையா? திராவிட பூமி, தமிழ் மானம் என்று பேசுகிறவர்கள் என்னவாகப் போகிறார்கள்?

செவ்வாய், 13 மார்ச், 2018

மூக்கில் குத்து விட்ட காதலி!

காதலன்  கெடி என்ன கேட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை. கிஸ் கேட்டிருந்தால் உதடுகளை ஐந்து நிமிடமாவது பென் கெபில் கொடுத்துத் தொலைந்திருப்பாள். படுக்கைக்கு அழைத்திருந்தாலும் பரவாயில்லை தொலைந்து போ என இணங்கி இருப்பாள்.

பாவிப்பயல் என்ன கேட்டானோ தெரியவில்லை.!

அவள் மாடல்,விதம் விதமாக போஸ் கொடுப்பதில் வித்தகி.

"டார்லிங்" என சொல்லி இடுப்பில் கை வைத்து இழுத்து அணைத்தவன் என்ன சொன்னானோ?

அவளது முட்டிக்காலால் அவனின் காலிடுக்கில் உதை!

உலகமே சுற்றியது.

மூக்கில் ஓங்கி குத்து.முகத்திலும் மாறி மாறி குத்துகள் வயிற்றிலும் குத்து. முகம் முழுவதும் ரத்தம் சாய்ந்து விட்டான்.

"பாஸ்டர்ட்! பிரேக் அப் சொல்லிட்டு இப்ப எதுக்குடா இங்க வந்த?"

இதுதான் அவள் கேட்ட கேள்வி!

தலையை விரித்துப் போட்டால் சனியன் வருவான்!

எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானாலும் சரி ,திரைப்பட விழாவானாலும்  சரி  நடிகைகள் தலையை விரித்துப் போட்டபடிதான் இருப்பார்கள்.

கணவனை இழந்த கண்ணகி நீதி கேட்க பாண்டியனிடம் சென்றபோது தலைவிரி கோலமாக  'அவிழ்ந்த கூந்தலுடன் சென்றாள் இளங்கோ அடிகள்.

ஆனால்  இன்றைய பேஷன் அவிழ்ந்த கூந்தல்தான்! பெரிய நடிகைகளும் அப்படித்தான் வருவார்கள். இதற்காக பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில்  பணம் கொடுத்து அழுது விட்டு வருவார்கள்.

ஆனால் நமது முன்னோர்கள் இரவில் தலைசீவக் கூடாது என்பார்கள். ஒரு முடி உதிர்ந்தாலும் தரித்திரம் என்பார்கள்.

தலையை விரித்துப் போடக்கூடாது .அது சனியனுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைப்பது போல என்பார்கள்.

இந்த காலத்தில் யார் கேட்கிறார்கள்.?

"விளக்கு வைத்த பிறகு பெண்கள் தலை சீவினால் கேட்ட ஆவிகள் வந்து சேருமாம். அதிலும் பவுர்ணமி நாளில் சன்னல் ஓரமாக அமர்ந்து தலை வாரினால் துர்மரணம் அடைந்தவர்கள் அதாவது தூக்குப் போட்டு செத்துப்போனவர்களின் ஆவி வாடகை இல்லாமல் வந்து குடியேறும் என்கிறார்கள் .குடும்பத்துக்கு ஆகாது என்கிறார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக நடிகைகளை பார்த்தால் தெரியவில்லையே!

கஸ்டமரை கல்யாணம் செய்த விலை மகள்!

"இன்னார்க்கு இன்னார் என்று
 எழுதி வைத்தான்
தேவன் அன்று" என்று எழுதியது 
பிழை ஆகுமா?

பிறந்த ஊர் நியூசிலாந்து.
வாழ்வது இங்கிலாந்து.
பெயரை நாமே வைக்கலாம்
'ஆப்பிள்' சத்தான பழம்!

அவளும் சத்தானவள்.வயது 53.
தொழில் விபசாரம்.18 வருட அனுபவசாலி!
அவனது உழைப்பு ,அவளுக்குக் களைப்பு!
பணம் கொடுத்தவன் வாழ்க்கையையும்
பங்கு போட்டான்.அவளது பார்ட்னரானான்

எவ்வித இடையூறும் இல்லை.
"எது எங்களை இணைத்தது 
என்பது தெரியாது. கோயிங் ஸ்டெடி 
கார் வாங்க உடலை விற்றவள்  இன்று
பார் போற்றும் விலைமகள்"

"நான் வெட்கப்படவில்லை.தனிவீடு.
தொழில் வளர்ச்சிக்கு கூடவே இரு பெண்கள்.
அலுக்காமல் தொழில் நடக்கிறது.
வாழ்க்கைக்கு பிடிப்பு புருஷன்.
அவரின் துணை எனது தொழிலுக்கு!

துயரமே இல்லை. 
"வாடிக்கையாளரின் மகிழ்ச்சியே 
எங்களுக்கு தொழில் வளர்ச்சி"
என்கிறாள் ஆப்பிள்.

உண்மை நிகழ்வு இது.
 

திங்கள், 12 மார்ச், 2018

கேன்சரை கஞ்சா குணமாக்குமா?

பாம்பின் நச்சை முறிப்பதற்கு பாம்பின் விஷமே மருந்து.

இது அறிவியல் .

ஆனால் கஞ்சாவினால் கேன்சரை குணமாக்க முடியுமா?

இங்கிலாந்தில் ஜாய் ஸ்மித் என்கிற பெண்ணுக்கு வயிற்றில் கேன்சர்.

ஆறுவாரம் உயிர் வாழ்ந்தாலே ஆச்சரியம் என டாக்டர்கள் கைவிட்ட கேஸ். ஆனால் வருடம் இரண்டை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

எப்படி சாத்தியம் என வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதாக செய்திகள்.

அவளோ 'மர்ஜுவானா "என்கிற போதை செடியில் இருந்து மருந்து தயாரித்து  சாப்பிட்டதாக சொல்லி இருக்கிறாள்.

மர்ஜுவானா என்பது நம்மூர் கஞ்சாவைப் போன்றது. அதில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள். ஆனால் அது புற்று நோயை குணப்படுத்த முடியுமா?

இதில் ஏதோ தவறு இருப்பதாகவே நமக்கு தெரிகிறது.

விக்ரம் மகனுக்கு ஜோடி கவுதமியின் மகள்?

கோடம்பாக்கமே பன்றிக் காய்ச்சலில் படுத்திருந்தாலும்  பரபரப்பு செய்திகளுக்கு பற்றாக்குறை இருப்பதில்லை.

கரப்பான் பூச்சியை எப்படி ஒழிக்க முடியவில்லையோ அப்படித்தான்  கிசு கிசு!

எப்படித்தான் கிளம்புமோ  தெரியாது. திரை உலகைச் சேர்ந்த புண்ணியவானோ  ,  புண்ணியவதியோ கேட்டது கிடைக்கவில்லை என்றால்  ஆபத்துதான்! வத்தி பற்றி எரியும்!

கடந்த இரண்டு நாட்களாக---

"பாலா டைரக்சனில் துருவ் நடிப்பது தெரியும். ஹீரோயின் யார்னுதெரியுமா?"

"தெரியலியே மாமு!"

"விக்ரமின் மகனுக்கு ஜோடி சுப்பலட்சுமி.!"

"கவுதமியின் மகளா?"

"அந்த பொண்ணேதான்! "

"ஏம்பா ..பாலாகிட்ட தாக்குப் பிடிக்க முடியுமாப்பா?"

"முன்ன மாதிரி இல்லியாம் பாலா! சாப்டா நடந்துக்கிறாராம்."

"கமல் சாரிட்டயே இருந்தா மகளுக்கு மார்க்கெட் பிடிக்க முடியாதுன்னு சொல்லித்தான் வெளியே வந்திருப்பாங்க போலிருக்கு! ஸ்ருதிக்கு போட்டின்னு சொல்லிடக்கூடாதுன்னு நெனச்சும் வெளியே வந்திருக்கலாம். எது எப்படியோ ஜெயிச்சு மலை ஏறி கொடியை நட்டா சரி!"

-----இவ்வாறு திரை உலக சிற்பிகள் பேசிக்கொள்வதை கேட்க முடிந்தது.

இதான் மேக் இந்தியாவா மோடி சார்?

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்ததும் எத்தனை மாணவர்கள் வந்திருக்கின்றனர் என்பதை பெயர் சொல்லி கணக்கெடுக்கிறார்!

"பழனிச்சாமி?"

"உள்ளேன் ஐயா!"

"பன்னீர்செல்வம்?"

"பிரசென்ட் சார்!"

"தினகரன்?"

"வரல ஐயா"----யாரோ ஒரு மாணவியின் குரல்!

இப்படித்தான் காலம் காலமாக பள்ளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சிஸ்டத்தை மாற்றினால் என்ன? துக்ளக் வாழ்ந்த நாட்டில் அவரது  கொள்கை வழிக் கோமான்கள் இருக்காமல் போவார்களா?

"எல்லா மதங்களைச் சார்ந்த நீதி போதனை புத்தகங்களை வைத்து  நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும் " என்பது மேனகா காந்தியின் ஆலோசனை. எச் ஆர் டி துறைக்கு ஆலோசனை சென்றிருக்கிறது.

பள்ளியிலேயே மதச்சண்டைக்கு வழி  வகுக்கப் பார்க்கிறார்கள். ராஜாக்களுக்கும் தமிழிசைகளுக்கும்   சரியான பணி காத்திருக்கிறது.

இத்துடன் விட்டால் பரவாயில்லை.

வாத்தியார் அட்டடன்ட்ஸ் எடுக்கும்போது 'பிரசன்ட்  சார்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஜெய் ஹிந்த்" என்று மாணவர்களை சொல்ல வைக்கவேண்டும் என்பதாகவும் ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது.

இதுதான் மேக் இந்தியாவா?

அப்படியானால்  தமிழகத்தில் "வாழ்க தமிழ்" என எமது மாணவர்கள் சொல்வார்கள்.

சரிதானா மோடி சார்?








'

ஞாயிறு, 11 மார்ச், 2018

"தூக்குப் போட்டுக் கொள்வேன்"--தொல் .திருமா.

என்னவோ தெரியவில்லை.

தமிழ் உணர்வாளர்கள் என்கிற இன மான உணர்வாளர்கள் அதிகமாகவே  உணர்ச்சி வயப்படுகிறார்கள்.

காரணம் சாதி, மத வாத சக்திகளின் ஆதிக்க மனப்பான்மை மேலோங்கி  வருவதே காரணம்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பிஜேபி எந்த அளவு கொள்கைகளை மாற்றிக் கொண்டு பணங்களை அள்ளி விசி இருக்கிறது அதிகாரப் பலத்தை பயன் படுத்தி இருக்கிறது என்பதை  ஊடகங்கள்  வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தொல்.திருமா வின் நேர்காணல் பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

"தைலாபுரம் தோட்டம் செல்கிற நிலை ஏற்பட்டால் அந்த இடத்திலேயே  தூக்குப் போட்டுக் கொள்வேன்" என்கிற கந்தக வரிகள் .

தில்லு முல்லு கழகம் யாருக்குப் பொருந்தும்?

தேனி அருகே உள்ள மலைக்கு சுற்றுலா சென்றவர்களை காட்டுத் தீ சுற்றி  வளைத்திருக்கிறது.

காய்ந்த சருகுகள்.பலமான காற்று , இரவு நேரம். எங்கு நோக்கிச்செல்கிறோம்  என்பது புரியாமல் கலக்கம். என்ன செய்வார்கள் சுற்றுலா சென்றவர்கள்?

அவர்கள் திருப்பூரை சேர்ந்தவர்களாம்.  மலை ஏற்றப் பயிற்சி மாணவ மாணவியர்களும் இருக்கிறார்கள். இதுவரை 15 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அனைவரும் பத்திரமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்திப்போம்.

அடுத்து ,

அமைச்சர் ஜெயகுமார் புதியா கட்சிகளுக்கு பெயர் வைக்கும் ஜோசியராக  மாறி இருக்கிறார். தினகரன் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் கொடுத்திருக்கிற மூன்று பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிற நிலையில் அமைச்சர் புதிய பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்.

நல்ல மனசு!

அப்படியே ரஜினியின் கட்சிக்கு பெயர் சொல்கிற தில் இருக்குமா என்பது தெரியவில்லை. தில் இருக்காது என்பது எனது யூகம். அங்கே தொட்டால்  ஷாக் அடிக்கும் என்பது நன்றாகவே தெரியும்.பிஜேபி, ரஜினி இருவரையும்  மேலோட்டமாக விமர்சிப்பார்களே தவிர கடுமையாக விமர்சிக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் விவசாயிகள் பிரச்னையை வலியுறுத்துவதற்காகஅதிமுக எம்.பி..க்களை  பதவி விலக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி அதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார்.

முன்பெல்லாம் எம்.பி.க்கள் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.

தற்போது அப்படி இல்லை.!

"முதலில் தமிழக அரசு பதவி விலகி வழி காட்டட்டும்.அதன் பிறகு எம்.பி.க்கள்  பார்லிமெண்டில் அழுத்தம் கொடுக்கிறோம் " என்று சொல்லி விடுவார்கள்.அப்புறம் கட்சிக்கு என்ன மரியாதை இருக்கிறது?

அதிமுகவில் தற்போது தலைமைக்குக் கட்டுப்பட்டு யாரும் இல்லை. பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள்தான் இருக்கிறார்கள்.அதனால்  எந்த ஒரு ஆளை மிரட்டினாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க தினகரன் அணி தயாராக இருக்கிறது.

"சிலிப்பர் செல்லில்" ஒரு ஆள் வந்துவிட்டார் என்று சொல்லி கூசாமல் சேர்த்துக் கொள்வார்கள்.

பிஜேபி என்ன சொல்கிறதோ அதற்கு பணிந்து போவது  எடப்பாடி,ஓபிஎஸ்  இருவரது தலை எழுத்து.

தினகரனின் கட்சிக்கு ஜெயகுமார் பரிந்துரைக்கும் பெயர் என்ன தெரியுமா?

"தில்லு முல்லு முன்னேற்றக் கழகம்"

இந்த பெயர்எந்த கட்சிக்குப் பொருந்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

முகநூல் நண்பரின் காம சேட்டை.

நம்பிக்  கையைக் கொடுத்தால்உள்ளங்கையை சுரண்டி தங்களின் வேட்கையை  சொல்வது சில ஆண்களின் பழக்கம்.

கட்டி அணைக்கும்போது  சில கதாநாயகர்கள் "இன்னிக்கி  நைட் ப்ரீ யா?"  என்று கேட்பார்களாம் . ஒரு நடிகையே மனம் வெந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்.குணசித்திர அம்மா நடிகையான அவர் இன்று  இல்லை.

ஆண்களில் சிலர் இப்படி குணம் கெட்டு அலைவதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்?

"நான் இந்தியா வர ஆசைப்படுகிறேன்." என்று ஜெர்மனியில் இருந்து  மும்பையில் இருக்கும் முகநூல் நண்பருக்கு ஒரு செய்தியை சொன்னார்  ஜெர்மனி பெண்.

"அப்படியா? மகிழ்ச்சி! மும்பையை விட இந்தியாவில் பார்க்கத் தகுந்த  இடம் இந்தியாவில் வேறு எதுவும் இல்லை!"

"அப்படியா .நான் மும்பைக்கு  வருகிறேன்" என்று அந்த நண்பி சொல்ல அவரை வரவேற்று தனது இல்லத்தில் இடம் கொடுத்தார்.

இரவு வந்தது.

நண்பனின் முகம் மாறியது. கண்ணெல்லாம் காமம். இரவின் கருமை  அடர்த்தி ஆகியது. அவனது மனதிலும் இருள் கப்பியது.

மெதுவாக சென்றான்.  

எங்கே தொடக்கூடாதோ அங்கே தொட்டு அழுத்தினான்.

நண்பனை நம்பி வந்த ஜெர்மானிய பெண் என்ன நினைத்திருப்பாள் ?  

அவனை எப்படி எதிர் கொள்ள வேண்டுமோ அப்படி அதிரடி கொடுத்து  தப்பி இருக்கிறாள்!

முகநூல் நண்பர்களில் இப்படி ஓநாய்களும் இருக்கவே செய்கின்றன.

எச்சரிக்கை.

எனதருமை சென்னையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்  ஒடுங்கிய பாடாக இல்லை.  

இரவில் ஐ.டி.வேலை முடித்து காரில் திருப்பிக் கொண்டிருந்த பெண்ணை  ஒரு கும்பல் வழி மறித்து  கடத்தி இருக்கிறது. பணம்,நகை இல்லை என்றதும் அந்த பெண்ணை இறக்கிவிட்டு இருளில் பறந்து விட்டார்கள்.

கார் டிரைவர் விசாரணை வளையத்தில்!

யாரைத்தான் நம்பும் அந்த பேதை உள்ளம்? 

சனி, 10 மார்ச், 2018

அய்ய்ய்! ரஜினி மலை ஏறி விட்டார்!

காலண்டரில் தேதியைக் கிழிப்பது போல தினமும் ஒரு கொலை, கற்பழிப்பு, லஞ்சம்,மோசடி ,பித்தலாட்டம் என்பது வழக்கமாகி விட்டது.

இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில் இது கூட இல்லைன்னா என்ன சார் என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

"கொலைங்கிறது  வீரம் சார்! அடுத்தவனோட ஓடிப்போகப்பார்த்தா அதான் போட்டுட்டேன்"என்கிறவன் ஏகப்பட்ட பெண்களின் வறுமையைப் பயன் படுத்தி பசியை தணித்துக்கொண்ட மிருகமாக இருந்திருப்பான்.

"யோவ் , நான் மட்டுமா வாங்குறேன்.மந்திரியே கமிஷன் வாங்குறார்னு பேப்பர்ல வருதுய்யா.தில் இருந்தா அந்தாளைப் போய் கேளு"என்கிற  நாதாரிகளும்... மன்னிக்க.... நாற வாயன்களும் இருக்கிறார்கள்.( நாதாரி என்பது ஒரு பிரிவினரைக் குறிக்கும்.)

"போதை ஏறிடிச்சு. பொம்பளைகிட்ட போக காசு பத்தாது. அதான் அந்த சின்னப்  பிள்ளையை தூக்கிட்டுப் போய் ஜாலியா இருந்தேன்.அப்ப செத்துப் போச்சு. அதுக்கு நான் என்ன பண்ணுவேன். சரக்குக்கடையை திறந்து விட்ட கவர்மெண்டைப் போய் கேளு"-இப்படி காரணம் சொல்கிற காமக் கொடூரன் களும் இருக்கிறார்கள்.

இப்படி கழிசடைகள் எல்லாம் காரணம் சொல்கிற அளவுக்கு நாட்டில் நிர்வாகம் இருக்கிறது.

முறையாக ஆட்சி செய்யவேண்டிய மந்திரிகளோ டில்லி சுல்தான்களுக்குப் பயந்துபோய் சொல்வதை செய்கிற அடிமைகளாக இருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் வீராப்பு வேற! அந்த காலத்து மனோகரா வசனம். வடிவேலு ஸ்டைலில் எக்காளம்!

உருப்படுமா?

ரஜினிகாந்த் இன்று நேற்றா இமயமலை போகிறார். மந்திரி ஜெயகுமார்  நக்கலுடன்"ரஜினி மலை ஏறிவிட்டார்!" என்கிறார்.

மோடி அதிக நாட்கள் இந்தியாவிலேயே இருப்பதில்லையே! எப்பவும் வெளிநாடுகளில்தானே சுற்றுகிறார்.அவரை கிண்டல் பண்ணுங்களேன் பார்க்கலாம். மறுநாளே ரெய்டு வந்த விடாதா?

அடுத்த தேர்தலில் ஜெயிப்பாரா என்பதற்கு உத்திரவாதம் இல்லாத மந்திரி கடம்பூர் ராசு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து"அப்பச்சி..வர்ற தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காது போலிருக்கிறதே" என்று ஆருடம் சொல்கிறார்.

ஒருவேளை ஸ்டாலின் சி.எம்.சீட்டில் உட்காருவார் என்பதை மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ! 

இவர்களுக்கெல்லாம் நாக்கில் சனியன் குடித்தனம் இருக்கிறான் என்ன பண்ண?

எடப்பாடி--ஓபிஎஸ் பிரச்னையே கட்சிக்குள் அழுகிக் கிடக்கிறது.அதை சுத்தம் செய்யாமல் அடுத்தவராய் நக்கல் செய்வது விளம்பரம் தேடித்தானே!

வியாழன், 8 மார்ச், 2018

நடிகைகள் படும் துயரம் யாருக்குத் தெரியும்?

பிரபலங்கள் எவராக இருந்தாலும் சரி அவர்களுக்குள் ஒரு வித  சோகம் பம்மிக் கொண்டிருக்கும்.

வாய்ப்புக் கிடைக்கும்போது மனதை கிழித்துக் கொண்டு வெளியில் வந்து   விடும். வாய்ப்பு கிடைக்காவிடில் அவர்களுக்குள் புதைந்து புண்ணாகி விடும். நோயாகி அதுவே இறுதி ஊர்வலத்துக்கு வழி வகுத்து விடும்!

சினிமா நடிகைகள் என்றால் சுக போகங்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கென்ன கோடிகளில் குளிக்கிறார்கள் .சொகுசுக்கார்கள், பாஷ் பங்களாக்கள் இன்ன பிற வசதிகள் ......!

இப்படித்தான் நினைக்கிறோம்.அது உண்மையும் கூட!

ஆனால் அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை?

தமன்னா என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்!

"தொழிலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் எவ்வளவு கடுமைகளை  கடந்திருக்கிறார்கள்,தொல்லைகளை, துயரங்களை தாங்கி இருக்கிறார்கள்.அத்தனை தியாகங்கள் செய்துதான் மின்ன வேண்டியதாக இருக்கிறது.

புகழும் பணமும் நடிகைகளுக்கு சுலபத்தில் கிடைத்து விடுகிறது  என்று  மக்கள் நினைக்கிறார்கள்.அது தவறு.! இதனால் சினிமாவில் சந்தோஷமே  இல்லை என்பதாக நான் சொல்லவில்லை.ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் செய்கிற தியாகங்கள்?

சாதாரண மக்களுக்கு கிடைக்கும் சந்தோஷங்கள் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை"என்கிறார் தமன்னா.

உண்மைதான்.!

நாய் புனுகு தருமா?

விவேக சிந்தாமணியை தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.

வீதியில் பெரும் கூட்டம் "எச்சை ராஜா ஒழிக" என ஒலி எழுப்பியபடி போய்க் கொண்டிருந்தது.

அரசியல் விவகாரம்.

டெல்லியில் விசைக்கயிறு இழுக்கப்படும்போது அதற்கேற்ப ஆடித்தானே ஆக வேண்டும்!

சரி அதைப்பற்றி நமக்கென்ன ? விவேக சிந்தாமணியைப் பார்க்கலாம்.!

"குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து 
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்
அக்குணம் வேறதாகுமோ?அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால் குணந்தனில் பெரியதாகுமோ?"

அதாகப்பட்டது பெருமக்களே !

என்னதான் அழகு மஞ்சள் பூசி நாயை புனுகு பூனையின் கூண்டில் அடைத்து ஆராதித்தாலும் அது புனுகு பூனை ஆகி விடுமா? அதனிடம் புனுகு எடுக்க முடியுமா?

நாய் நாய்தான் !

இன்னொன்றும் இருக்கிறது.

மந்திரங்கள் ஓதி ஆகுதி போட்டு யாகம் வளர்த்தாலும் கழுதையானது எப்படி  குதிரை  ஆக முடியாதோ அப்படித்தான் சில மனிதர்களும் இருப்பார்கள் என்பது இயற்கை. அவர்களை மாற்ற முடியாது.

புதன், 7 மார்ச், 2018

வைகோவை குற்றம் சொல்வதா?

மனசாட்சி இல்லாதவர்கள் என்றே சொல்லலாம் ,வைகோவை விமர்சிப்பவர்களை!

அவர் மதிமுகவாக பிரிந்து சென்றபோது அவர் மீது கோபம் கொண்ட  சாமானியர்களில் நானும் ஒருவன். அவரது பேச்சில் கிறங்கியவன்.அவரைப் போல பேச இயலாதவர்கள் குறை சொன்னார்கள்.சில கோணல் ஊடகத்தினரும் நக்கல் செய்தனர்.

"ஒரு சின்னப் பையன் கேட்கிறான்" என்று  தன்னிடம் கொள்கை பற்றி கேட்டவர் பற்றி விமர்சித்த ரஜினி பற்றி வாயைத் திறக்காதவர்கள்தான் வைகோவை நக்கல் செய்தார்கள். அது கிடக்கட்டும்.

தன்னை ராசி இல்லாதவன் என சிலர் விமர்சிப்பதை மதிமுக பொதுக்குழுவில்  மனம் விட்டுப் பேசி இருக்கிறார்.

திமுகவுடன் 'கூட்டணி கூடாது" என்று குமுறியவர்கள் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

"நமது பலம் என்ன? ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் பதினைந்து லட்சமாவது  நம்மால் செலவு செய்ய முடியுமா? திராவிட இயக்கத்தை  அழிப்பதற்கு மதவாத கட்சிகள் முனைந்து நிற்கும் போது நாம் வேடிக்கை பார்க்கலாமா? என்னை நீங்கள் சி.எம்.ஆக ஆக்கமுடியுமா? திமுகவுடன் கூட்டு சேர்வதில் என்ன தப்பு? என் மீது ஊழல் வழக்கு போட்டிருக்கிறார்கள்.நமது வளர்ச்சியை தடுப்பதற்கு !

பொய்யாக புனைந்துள்ள வழக்கினை எதிர்கொள்ளவேண்
டாமா? திமுகவில் இருக்கிற இருவர் நம்மைப் பற்றி தவறாக பேசி இருக்கிறார்கள். கவலைப்பட வேண்டாம். சி.எம்.ஆகும் தகுதி ஸ்டாலினுக்கு இருக்கிறது.

நான் ராசி இல்லாதவன் என்கிறார்கள் .தென்மாவட்டங்களில் நாற்பது தொகுதிகளில்திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்தவன் நான் என்பதை மறந்து விட்டார்கள். அதைப்பற்றி கவலையும் இல்லை!"என மனம் திறந்து பேசியிருக்கிறார் வைகோ.

உண்மைதான்!

தார்ப்பாயில் வடிகட்டிய யோக்கியர்கள் பராக்!

மராத்திய மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டியதுதான். யாரும் மறுப்பு சொல்ல  மாட்டார்கள்.

மராட்டியத்தைக் காப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய சிவாஜிக்கு சிலை வைப்பது மராட்டியத்துக்கு பெருமை.பிள்ளைகள்  படிக்கும் புத்தகங்களில் நினைவு படுத்தப்பட்டிருக்கிற  சரித்திர புருஷன்.

அவருக்கு சிலை வைக்காமல் வேறு யாருக்கு வைப்பார்கள்?

ஆனால் 3600 கோடிகளை செலவிட வேண்டுமா? ஒரு துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய பணத்தை  ஒரு சிலைக்கு செலவிடுவது  தர்மமா?

பிஜேபி சிந்திக்க வேண்டிய செலவு.! இதை ஒரு பக்கம் செய்து கொண்டே மற்றொரு பக்கம்.........?


சிலைகளை புல்டோசர் வைத்து அகற்றும் சிந்தனை எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை.சிவாஜிக்கு சிலை வைக்கிறவர்கள் புரட்சி நாயகன்  லெனின் சிலை, பகுத்தறிவு பகலவன் பெரியார் ஆகியோரின் சிலைகளை  தகர்க்கும் யோசனையை அக்கட்சியின் அடியாட்களின் மனதில் விதைத்தது யார்?

விளைவுகள்  ஜன சங்கத்தின்  நிறுவனர் சியாமபிரசாத் முகர்ஜியின் சிலை  மீது சிலர் கை வைக்க, உ.பி யில் அண்ணல் அம்பேத்கரின் சிலை சிதைக்கப்பட்டிருக்கிறது.

ஆக குற்றவாளிகள் பிஜேபி தலைவர்கள்தான்.!

 டிவிட்டர் வழியாக தூண்டிவிட்டு அதன் வழியாகவே மன்னிப்பும் கேட்டு விட்டதால் சரியாகிவிடுமா?

சிலையை உடைத்தவரை கட்சியில் இருந்து விலக்கிவிட்டார்கள். சரி தூண்டிவிட்ட நபர் எச். ராஜா என்பவரை என்ன செய்தார்கள்? அவருக்கு  தண்டனை இல்லையா?

விபச்சாரியை கைது செய்து விட்டு படுத்தவனை விட்டு விடுவதைப் போலத்தான் இங்கும் நடக்குமா?  

மன்னிப்பு கேட்டுவிட்டதால் அரசு நடவடிக்கை எடுக்காது என்று  மந்திரி  ஜெயக்குமார் சொல்கிறார்.

மன்னிப்பு கேட்டு விட்டால் கொலை செய்தவனையும் விட்டு  விடலாமா? அடிமைகளின் விசுவாசத்துக்கு ஒரு எல்லை கிடையாதா? பிஜேபியினர்  மீது கைவைக்க அரசு ஏன் நடுங்குகிறது?

சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுப்போய் இருக்கிறது. .ஜெ.சமாதியில்  போலீஸ்காரர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார். சப்-இன்ஸ்பெக்டர்  காவல் நிலையத்திலேயே சுட்டுக் கொண்டு செத்துப் போய் இருக்கிறார்.இப்படி காவலர்களின் நிலையே கண்ணீர் விட வைக்கிறது.

 நித்தமும் லஞ்சம்,ஊழல் ,கமிஷன் என செய்திகள் கொள்ளிவாய்ப் பிசாசுகளாக அச்சுறுத்துகின்றன.    தடுக்கும் நிலையில் அமைச்சர்களும் இல்லை. அதிகாரிகளும் இல்லை. அடுத்து வருவோம் என்கிற நம்பிக்கை இல்லை என்பதால் கொள்ளை அடிக்கிறார்கள்.

தார்ப்பாயில் வடிகட்டிய யோக்கியர்கள்!

பெரியாரின் மீது கை வைத்தவர்களையும் , துணை போனவர்களையும், தூண்டி விட்டு யோக்கியர்களாக மாற்றம் பெற்றவர்களையும் தமிழர்கள் அதாவது அசல் வித்துகள்  மன்னிக்க மாட்டார்கள்.




செவ்வாய், 6 மார்ச், 2018

குரங்கு வாயில் கொழுப்பு வடிகிறது.!

குரங்கு வாயில் இருந்து கொழுப்பு வடிகிறதென்றால் அதற்கு நோய் முற்றி விட்டது என்பது பொருள்.

யாரைக் கடிக்கிறோம் என்பது தெரியாது.!

கல்லைக் கடித்துவிட்டு பல்லை இழக்கும்.! செக்கு எங்கே, சிவலிங்கம் எங்கே  என்பது புரியாமல் நக்கி நாக்கும் தடித்து விடும்.

அது என்ன சொல்கிறது என்பது சக குரங்குகளுக்கு தெரியாது.ஆனால் அதன் சேட்டைகளை வெகுவாக ரசிக்கும். குட்டிக்கரணம் போட்டு ஆரவாரம் செய்யும்.

இதைப் போல கொழுப்பெடுத்து யாரைக் கடிக்கலாம் என தேடுகிற மனிதர்களும் இருக்கிறார்கள்.அத்தகைய அரை குறைகள் தம்மை முன்னிறுத்துவதற்கு வேண்டாத சேட்டைகளை செய்து 'இதோ  நானும்  இருக்கிறேன் ' என்று காட்டிக்கொள்வர் .

கை கால் கண் காது மூக்கு இவையெல்லாமே  முழுமையான மனிதனுக்கு உரிய அடையாளம் இல்லை. பழுதற்ற மூளையும் இருக்கவேண்டும்.  

இவைகளையும் தவிர்த்து ஒரு ஆள் இருக்கிறார்.

பெயர் எச்.ராஜா.

இந்த ஆளை எந்த இனத்தில் சேர்ப்பது என்பது தெரியவில்லை.

"லெனின் சிலைய உடைத்ததைப் போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையும்  உடைபடும் காலம் வரும்" என்று சொல்லி இருக்கிறார்.

பாஜக.வின் குரல் இவர் வாய் வழியாக வந்திருக்கிறது.

செங்கொடியின் சிறப்பு இந்த காவிக்குத் தெரியாமல் போகலாம். அது அவரது  அறிவின் வளர்ச்சி!

பெரியாரின் பூமி தமிழ்நாடு, திராவிடத்தின் ஆணி வேர் அவர்தான்.அவரது சிலை மீது எவனும் கை வைக்க இயலாது.தமிழ்,தமிழனின் புகழ் தெரியாமல் நகல் தமிழர்கள்   சிலர் திடீர் பக்தர்களாக வக்காலத்து போட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கும் சேர்த்தே சொல்வோம்.

அடங்குங்கள்!





திங்கள், 5 மார்ச், 2018

எங்கள் நித்திக்கு தடையா?

,சிறுத்தையே,சிம்மமே, ஆன்மீகப் புலியே!
                      
             உமக்கு மதுரை ஆதினத்துக்குள் நுழைய நிரந்தரத் தடையா?

             புத்தனுக்கு பின்னர் நீதானே புனிதன்.

             ஆன்மீகத்தின் காவலன் நீயன்றோ!

             இந்து மதத்தின் இணையில்லா காவலன் அல்லவா நீ!

             பெண்ணினத்தை இமைகளுக்குள் வைத்துக் காப்பாற்றும் எம்பெருமானே! உமது அருமை,பெருமை தெரியாத ,புரியாத சிறுமதியாளர்களை பொன்மனம் கொண்டு மன்னித்து அருள் பாலி!

           உனது தெய்வீக அருள் தெரியாத கருப்புச்சட்டைகளின் கிண்டலை  சுண்டலாக சுவைத்து விடு!

           நீ அப்பன் என்றால் அம்மை ரஞ்சிதா.

          உன்னை மதுரை ஆதினத்துக்குள் நுழையக்கூடாது என நீதி மன்றம்  தீர்ப்பு கூறி இருக்கிறது.

           கவலைப்பட என்ன இருக்கிறது? பகவான் நித்தியானந்தாவுக்கே   தடையா?  தெய்வமாக நின்று தண்டித்து விடுங்கள் சுவாமியே!

             உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டதால் ஆதினங்களின்  முறை கேடுகளை கண்டு பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. போலிகளை கண்டுபிடிக்க ஒருவகையில் உதவி இருக்கிறீர்கள் பகவானே! அப்படியே எங்கள் தமிழ்த்தாயை அவமதித்த அடங்காப்பிடாரிகளை அடக்குவதற்கும் வழி கிடைத்திருக்கிறது.

                                                                        உங்களின்ஆன்மீக விழுது,
                                                                                   பக்தியானந்தா.

ஞாயிறு, 4 மார்ச், 2018

ஸ்ரீதேவியின் அஸ்தி சென்னைக்கு அருகில் கரைப்பு!

மனிதர்கள் எவ்வளவு மலிவானவர்களாகி விடுகிறார்கள்.

ஸ்ரீதேவியின் மரணமும் ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே  அமைந்து விட்டது என்று ஊர் உலகெல்லாம் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது.

தேசியக்கொடி போர்த்தலாமா என கேள்வி?

பத்மஸ்ரீ விருது வாங்கியிருக்கிறார் அதனால் மாநில அரசு கவுரவித்தது என பதில்.

எத்தனை பத்மஸ்ரீ விருது வாங்கி மறந்தவர்களுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது?

சொல்லுங்கள் பார்க்கலாம்

தற்போது புதிதாக ஒரு சர்ச்சை!

ராமேஸ்வரத்தில் கரைப்பதாக சொல்லி கொண்டுவரப்பட்ட அஸ்தியை  சென்னைக்கு அருகில் ஒரு வீட்டுக்கு பின்பக்கமாக கடலில் கரைத்திருக்கிறார்கள்.

சென்னையில் பரபரப்பாக பேசப்படுகிறது!

ஸ்ரீ தேவியின் அஸ்தியை ராமேஸ்வரம் கொண்டு செல்லாததன் காரணம் என்ன?

ராமேச்வரம்தானே புனித ஸ்தலம் ?

எல்லாமே ராங்!

பாஜவுக்காக என்கவுண்டரா?

மதுரையில் வீடு புகுந்து இருவரை போலீஸ் சுட்டுக் கொன்றிருக்கிறது.

கொல்லப்பட்டவர்கள் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. நீதிபதிகள் அதற்காகவே இருக்கிறார்கள்.

 உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்கிற கட்டத்தில் ,பயங்கர ஆயுதங்கள் அவர்கள் வைத்து தாக்குகிறார்கள் என்கிற கட்டத்தில் மட்டுமே என்கவுண்டர்  சாத்தியம் என சொல்வார்கள்.

ஆனால் கதவைத் திறந்ததுமே எதிரில் இருந்தவர்களை சுட்டுக் கொள்வது என்பது ..........

என்கவுண்டர் நடத்தப்போகிறோம் என்பதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரகளின் கதவுகள்,ஜன்னல்களை மூடச்செய்து விட்டு சுட்டிருப்பது  எதைக் குறிக்கிறது?

மாயக்கண்ணனை போட்டுத்தள்ளப்போகிறோம் என்பது முன்னதாகவே முடிவு செய்யப்பட்டிருப்பதைத் தானே காட்டுகிறது,

அதிமுக முக்கிய புள்ளிக்கு வேண்டிய ஒரு பாஜக பிரமுகரை மாயக்கண்ணன் போட்டுத் தள்ளப்பார்த்திருக்கிறான் என்பது உலவுகிற செய்தி.

அப்படியானால் அவனை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டியது கடமை. அதை விடுத்து சுட்டுக் கொள்வது என்பது அராஜகம் இல்லையா?

தற்காப்பு என்கிற கேடயத்தைப் பயன்படுத்தி வேண்டாதவர்களை தீர்த்துக்கட்டுவது அரசியல்வாதிகளுக்கு ஆதாயம். ஐந்து ஆண்டுகள் பதவி  என்பது மட்டுமே பாதுகாப்பு.! அதன் பிறகு அவர்கள் யார் யாருக்கு பதில் சொல்லவேண்டியதாக இருக்கும் ? லஞ்சம் ஊழல் குற்றங்களுக்காக கோர்ட்டில் ஏறவேண்டியவர்களுக்காக உயர்நிலையில் இருக்கிற காவல்துறை எப்போதுஏவல் துறை என்கிற அவப்பெயரை நீக்கும் என்பது  உண்மையான ஜனநாயகவாதிகளிடம் இருக்கிறது,

ஜெயகுமாருக்கு சவாலோ சவால்!

                                       இன்னமும் எத்தனை காலத்துக்கு பாப்பையா,நெல்லை கண்ணன் பட்டி மன்றங்களையே பார்த்துக் கொண்டிருப்பது?

                                       "அலுப்படிக்கிது சாமி! புதுசா ஒரு ஆளு வரமாட்டாரா , " என்று என்னுடைய  வீட்டுக்காரியே நொந்து, நொம்பலம்  ஆகிப்போனாள்.

                                        இனிமேல் புருஷன் கிட்ட பிடிச்சது எது ,முருங்கைக்கா  
 சிறப்பா, பேரிச்சம் பழம் சிறப்பா என்று கேட்காமல்  அரசியல் தலைப்புகளில் பட்டி மன்றங்கள் நடத்தினால் நல்ல பொழுது போக்காக இருக்கும்.!   

                                   நாஞ்சில் சம்பத் ஒரு சைடு.அமைச்சர் ஜெயகுமார் இன்னொரு சைடு.

                                      விட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?

                                      ஹவுஸ்புல் ஆகி மண்டபத்துக்கு வெளியிலும் லவுட் ஸ்பீக்கர்  வைக்கவேண்டியதாகிவிடும். ஆக்சன் படங்களைப் பார்த்து பார்த்து போரடிச்சுப் போய் இருக்கும் தமிழ்ச் சமுகத்துக்கும் இதை விட வேறு பொழுது போக்கு நிச்சயம் வேறு எதுவும் இருக்காது.

                                 ஒரு சைடில் நாஞ்சில் சம்பத் ரெடி! தினகரன்  பக்கம் பக்கா!

                                " நான் ரெடி. ஜெயகுமார் ரெடியா, ஒத்தைக்கு ஒத்தை! வா. நானும் கேள்வி கேட்கிறேன். நீயும் கேளு. சசிகலா சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் வீசிப்பாரு! என்னைக்கு என்பதை  தேதியை நீ குறிக்கிறியா , இல்ல நான் குறிக்கவா?"

                               பகிரங்கமாக சவால் விட்டிருக்கிறார் சம்பத்.

                              அந்த காலத்தில் மதுரைப் பக்கமாக பயில்வான்கள் துண்டு நோட்டீஸ் வழியாக சவால் விடுவார்கள்.

                               "என்னுடன் மோதுவதற்கு தயாராக இருந்தால்  கீழ மார்க்கெட் மைதானத்தில் மாலை ஐந்து மணிக்கு வந்து கையடி! இல்லாவிட்டால் நீ தோற்றுவிட்டதாக நோட்டீஸ் அடிப்பேன்" என்று பயில்வான்கள் நோட்டீஸ் அடித்து விடுவார்கள். 

                             அதைப்போல நாஞ்சில் சம்பத் ஒரு ஊடகம் வழியாக  சவால் விட்டிருக்கிறார்.

                           இதை விட  ஒரு அரிய ,சிறந்த  வாய்ப்பு  அமைச்சர் ஜெயகுமாருக்கு கிடைக்காது.நேர்மையான அரசு, அம்மா வழியில்தான் ஆட்சி செய்கிறோம் என்று மொத்த மந்திரிகளும் சொல்லிவருவதற்கு வலுவூட்டும் வகையில்  தானாகவே வந்திருக்கிற வாய்ப்பை நழுவ விடமாட்டார் ஜெயகுமார் என்று நம்புகிறோம்.

                          மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

சனி, 3 மார்ச், 2018

இப்படி தில்லாக உட்கார்ந்திருப்பது நடிகை டாப்சி.

லண்டன் வீதிகளில் படப்பிடிப்பு. இந்திப்படம்.'தில் சங்க்லி '

இரவு நேரப்படப்பிடிப்பு.அன்று டாப்சியின் பிறந்த நாள் என்பது அவருக்குத் தெரியாதாம்.( நம்பிட்டோம்.) தெரிந்திருந்தால் ஒரு வேளை கிளிஞ்ச ஜீன்ஸ்  போட்டிருக்கமாட்டார்.

யூனிட் ஆட்களுக்கு டாப்சியின் பிறந்த நாள் அன்றைக்குத்தான் என்பது தெரியுமாம்.கேக் எல்லாம் ரெடி. ஆனால் எல்லாமே பரம ரகசியமாம்.

ஒரு ஆள் கூட டாப்சிக்கு விசுவாசம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.!!!
டாப்சியின்  டச்-அப் ஆள் கூட சொல்லலியே! ஆச்சரியம்தான்.

நள்ளிரவு வந்ததும் சொல்ல மொத்த யூனிட்டே அமர்க்களம்.

ஒரு ரிக்ஸாவை ( லண்டனில் ரிக்ஸா!) பிடித்து டாப்சியை உட்கார வைத்து  பிக்காட்லி சர்க்கஸ் ஏரியாவை சுற்றி வந்து அமர்க்களம் பண்ணினார்களாம்.
( அட நம்மூர் போலீஸ்தானா?)

எல்லாம் சரிங்க. இந்தியா மேப்பில் யூனியன் ஜாக் கொடியை ஞாபகப் படுத்துற மாதிரி கோடு போட்டு இருக்காங்களே ! இன்னமும் அந்நியன் பிடியில்தான்  இருக்கிறோம் என்பதை சொல்கிறார்களா?

ரொம்பவும் தப்புங்க! 

தாய்ப்பால் கொடுப்பதும் பிரச்னையாடா ராஜா!

"கிரகலட்சுமி  மேகசீன் அட்டைப்படம் பார்த்தியா?"

மிகவும் அக்கறையுடன் ஒரு போன்.

"பார்க்கல. எதுக்கு கேக்கிறே?"

"கேரளாவ்ள ஒரு அக்கப்போர்  ஆரம்பம்.கல்யாணமாகாத  ஒருத்தி  மாடல் பண்ணிருக்கா.! அது கிரிமினல்னு  ஒரு ஆள் கேஸ் கொடுத்திருக்கார்.படிப்பாளிகள்  தேசம்னு சொல்வியே, அதான்  உனக்கு போன் அடிச்சேன்!"

"சரி. நான் நெட்ல பாக்கிறேன்"!

கைபேசியை 'ஆப்' செய்து விட்டு  கம்ப்யூட்டரில் கையை வைத்தேன்.

அந்த  மாடலின் பெயர் கிலு ஜோசப். விமானத்தில் பணிப்பெண். கவிதாயினி. மாடல்.அவர் தனது ஒரு பக்கத்து மார்பில் பச்சைக் குழந்தைக்கு பால் புகட்டுவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.

கொள்ளை அழகு. குண்டு விழிகள்.புஷ்டியாகத் தெரிகிறாள்.

அவள் செய்த தவறு மார்பு திறந்தது இல்லையாம்! கல்யாணம் ஆகாத  கன்னிப்  பெண் எப்படி அப்படி பாவனை செய்யலாம். அது கிரிமினல் குற்றம். ஆகவே அந்த பத்திரிக்கை ,கிலு ஜோசப் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றுநீதி மன்றத்தை நாடி இருக்கிறார்.

"டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கான்னு ஒருத்தி கண்ணாடிய ஒடச்சிட்டு வந்து  கேக்கிறா...ஒடச்சது ஒரு குற்றம், அனுமதி இல்லாம அங்கு வந்தது மற்றொரு  குற்றம். ஒருத்தி கிரீமை காலில் தடவி பிளேடால் ஒரு இழு இழுக்கிறாள் .முடி இல்லாமல் போகிறதாம். அந்தரங்கம் தொடர்பான அசிங்கமா விளம்பரம்  வருவதெல்லாம் கண்ணுக்கு தெரியலியா? ஒரு நல்ல காரியத்துக்காக  ஒருத்தி மாடலா நின்னது குற்றமாயா? "

கண்கள் நிறைய ஆபாசத்தை வைத்துக் கொண்டு  பார்த்தால் அம்மா படமும் அசிங்கம்தான்!

எப்படி நீதி மன்றம் அணுகுகிறது என்பதை பார்க்கலாம்.
 

வியாழன், 1 மார்ச், 2018

ஸ்ரீதேவிக்கு நடந்த அவமரியாதை..வெட்கம் ,வேதனை!

இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி.

'தண்டர் தைஸ்' என வட இந்திய ஊடகங்கள் வணிக ரீதியில் எழுதி விற்பனையை பெருக்கிக் கொண்டாலும் கனவுக்கன்னி என சிறப்பித்து எழுதவும் தயங்கியதில்லை.

தமிழ்நாட்டில் சிவகாசி  அருகில் சிறு கிராமம் மீனம்பட்டியில் ஜனித்த அந்த  அழகு மயில் வடஇந்தியாவின் மருமகளாக சென்று கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருந்தது நமக்குப் பெருமையாக இருக்கிறது.

அவரது மரணம் முடிந்து விட்ட கதை. அதைப் பேசி இனிப் பயனில்லை.

அவரது இரங்கல் கூட்டத்தில் ஒரு நடிகையின் தரம் தாழ்ந்த நடவடிக்கை நம்மை கொதிக்க வைத்திருக்கிறது.

மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் எல்லா முக்கிய நடிகைகளும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேசிய நிகழ்ச்சியில்  முன்னாள் பிரபஞ்ச அழகி  சுஷ்மிதா சென், ஷ்ரத்தா தாஸ் இருவரும் உடைந்துபோய் கண்ணீர் விட்டதை  அங்கிருந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்கிற நடிகை துயர நிகழ்ச்சியில் இருக்கிறோம் என்பதையும் மறந்து,

சிரிக்கிறார். வாய் விட்டு சிரிக்கிறார்.

த்தூ ...என்ன நாகரீகம்?

படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.!
                             

அண்ணாவாக மாற முடியுமா டி.டி ,வி.தினகரன்?

                              சொன்னது நீதானா சொல் சொல் ,
                              மாதங்கள் பல கடந்தும் மந்திரிகள்
                             மாறவில்லை அணி
                            'ஆட்சி கவிழும் அலறுவார்கள் '
                             என்றதெல்லாம் வீண் கனவா,
                             வெட்டிப்பந்தாவா?'
                            ஓட்டை விழுந்த பலூன்களை
                            வாய் வலிக்க ஊதி
                            வேடிக்கைக் காட்டியது போதும்னே!

இதை வசனம் என்றாலும் சரி, வசன கவிதை என்றாலும் சரி, அடடே அருமையான கவிதை என்று பாராட்டினாலும்( ! ) சரி, ஏதோ ஒரு வகையில் எனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறேன் என்பது புரிகிறதல்ல
வா?

"என்னண்ணே மந்திரிகளில் ஸ்லீப்பர் செல்கள்  இருக்கிறார்கள், என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,காலி! இன்னும் மூணே மாதம்தான்.ஓபிஎஸ்-எடப்பாடி ஆட்டம் குளோஸ் !பார் பார்" என்றதெல்லாம் டம்மி ஆட்டம்தானா?
டி.டி.வி.தினகரன் காற்றில படம் வரையிற ஆள்தானா? நீங்களும் மாஞ்சு மாஞ்சு எழுதுனீங்க .என்னாச்சு? விரல் தீஞ்சிருக்குமே ?"என்றெல்லாம்  எனது நண்பன் கேட்டான்.

 வார்த்தைகளில் இருந்த குழைவு குரலில் இருக்கவில்லை.

"எங்களை என்ன 'இ 'னா 'வா'னான்னு நெனச்சி எழுதினியா?எதுவுமே நடக்கல  பாத்தில்ல" என்று குத்திக்காட்டுவது போல் இருந்தது.

"நானென்ன மரத்தடி சோசியனா,கட்டம்போட்டு சோழி உருட்டி சொல்றதுக்கு?"

தினகரன் பேசியதைத்தான் எழுதினேன்.

இப்போது கூட கட்சியின் பெயரை ஆர்.கே.நகரில் வைத்து சொல்லப்போவதாக சொல்கிறார். சொன்னபடி நடக்காமல் போனால் நான் பிணையாக முடியுமா?

ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கியதால் தினகரனின்  புதிய கட்சியும் அங்கிருந்துதான் ஸ்டார்ட் ஆகப்போகிறதாம்!

அதனால் அண்ணாவாக மாறிவிடுவாரா தினகரன்?

பால்கோவா விற்கிறவனுக்கு அதை எப்படி ருசியாக செய்வதென்கிற பக்குவம்  தெரியுமா?

என்னுடைய பெண்டாட்டி கிண்டினால் அது உப்புமா.

நான் இட்டிலியை பிட்டுப்போட்டு கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்தால்  அதன் பெயரும் உப்புமா என்று சொல்லி விட முடியுமா?

அப்படி சொன்னால் நானென்ன செய்வேன் முருகா!