நம்பிக் கையைக் கொடுத்தால்உள்ளங்கையை சுரண்டி தங்களின் வேட்கையை சொல்வது சில ஆண்களின் பழக்கம்.
கட்டி அணைக்கும்போது சில கதாநாயகர்கள் "இன்னிக்கி நைட் ப்ரீ யா?" என்று கேட்பார்களாம் . ஒரு நடிகையே மனம் வெந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்.குணசித்திர அம்மா நடிகையான அவர் இன்று இல்லை.
ஆண்களில் சிலர் இப்படி குணம் கெட்டு அலைவதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்?
"நான் இந்தியா வர ஆசைப்படுகிறேன்." என்று ஜெர்மனியில் இருந்து மும்பையில் இருக்கும் முகநூல் நண்பருக்கு ஒரு செய்தியை சொன்னார் ஜெர்மனி பெண்.
"அப்படியா? மகிழ்ச்சி! மும்பையை விட இந்தியாவில் பார்க்கத் தகுந்த இடம் இந்தியாவில் வேறு எதுவும் இல்லை!"
"அப்படியா .நான் மும்பைக்கு வருகிறேன்" என்று அந்த நண்பி சொல்ல அவரை வரவேற்று தனது இல்லத்தில் இடம் கொடுத்தார்.
இரவு வந்தது.
நண்பனின் முகம் மாறியது. கண்ணெல்லாம் காமம். இரவின் கருமை அடர்த்தி ஆகியது. அவனது மனதிலும் இருள் கப்பியது.
மெதுவாக சென்றான்.
எங்கே தொடக்கூடாதோ அங்கே தொட்டு அழுத்தினான்.
நண்பனை நம்பி வந்த ஜெர்மானிய பெண் என்ன நினைத்திருப்பாள் ?
அவனை எப்படி எதிர் கொள்ள வேண்டுமோ அப்படி அதிரடி கொடுத்து தப்பி இருக்கிறாள்!
முகநூல் நண்பர்களில் இப்படி ஓநாய்களும் இருக்கவே செய்கின்றன.
எச்சரிக்கை.
எனதருமை சென்னையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒடுங்கிய பாடாக இல்லை.
இரவில் ஐ.டி.வேலை முடித்து காரில் திருப்பிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு கும்பல் வழி மறித்து கடத்தி இருக்கிறது. பணம்,நகை இல்லை என்றதும் அந்த பெண்ணை இறக்கிவிட்டு இருளில் பறந்து விட்டார்கள்.
கார் டிரைவர் விசாரணை வளையத்தில்!
யாரைத்தான் நம்பும் அந்த பேதை உள்ளம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக