எதிர்க்கட்சிகள் சொல்லி வந்ததை, நீதி மன்றம் உறுதி செய்து நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி செய்ததை இன்று அம்மாவின் விசுவாசி, அடிப்பொடி,அடிமை என சொல்லிக்கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே உறுதி செய்து ஒப்புக்கொண்டிருக்கிறார்.
"அம்மாவால் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை தினகரன் வைத்துக் கொண்டு இருப்பதாக" பகிரங்கமாக ,பொதுமக்கள்.மீடியாக்கள் முன்னிலையில் சீனிவாசன் சொல்லி இருக்கிறார்.
முதல்வர் எடப்பாடியாரின் ரியாக்சன் என்ன?
தமிழகத்தை இன்னமும் அதிமுகவினர் சுரண்டி வருகிறார்கள் என எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுவதில் என்ன பிழை இருக்கிறது? ஒரு நர்ஸ் இட மாற்றம் செய்யப்படுவதற்கு மூனரை லட்சம் லஞ்சம் என மருத்துவ வட்டாரத்திலேயே பேசிக் கொள்கிறார்கள்.
மணல் அள்ளுவதில் கொள்ளை. கனிம வளம் சுரண்டப்படுகிறது.
அதிலும் கொள்ளை. நிர்வாகத்தில் ஊழல் என அரசின் சகல மட்டத்திலும் விமர்சனம் செய்யப்படுகிறது. பசுமை வழிச்சாலை என விவசாய நிலங்கள் மலடாக்கப்படுகின்றன .மலை வளம் நாசமாகிறது. யாரோ ஒரு கார்ப்பரேட் வாழ்வதற்காக ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கை யை புதை குழிக்குள் தள்ளிவிட்டனர்,
கருத்து சொன்னால் கைது என்கிறார்கள். அடக்குமுறை வழியாக நியாயத்தை சிதைக்கிறார்கள். சரி ஜெயலலிதா கொள்ளை அடித்தார் என ஒரு மந்திரியே சொல்லிவிட்ட பின்னர் அதிமுக தலைமை என்ன செய்யப்போகிறது?