My Thoughts

திங்கள், 25 பிப்ரவரி, 2019

கமல்-ரஜினி இணைந்து போட்டியிடுவார்களா?

"உலகநாயகன் கமல்ஹாசனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரிப்பாரா?"
எல்லோரும் சொல்வதைப் போல இது மில்லியன் டாலர் கேள்வி மட்டுமல்ல.ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.!
இது நடக்குமா,சாத்தியம் இருக்கிறதா,?
நடந்தால் அது வரலாற்று மாற்றம்.
என்ன இருந்தாலும் ரஜினிகாந்த் பிஜேபி மோடியின் ஆதரவாளர் .அவர் எப்படி மோடியை எதிர்ப்பவரை ஆதரிப்பார்? ரஜினியை நம்பித்தானே பிஜேபி தனது அடித்தளம் அமைவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறது?
அதிமுக கூட்டணியில்தான் ஐந்து இடங்கள் பெற்றிருக்கிறது என்று இபிஎஸ்-ஓபிஎஸ் சொன்னதை பிஜேபி தலைவர் அமித்ஷா ஓங்கி அடித்து "அப்படி இல்லை! எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக சேர்ந்திருக்கிறது!"என்றெல்லவா திருத்தம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
அவரது நண்பர் ரஜினி காந்த் என்பதை இங்கு நினைவில் கொள்க.
"பாஜக-அதிமுக கூட்டணியில் சேருகிற வாய்ப்பே மக்கள் நீதி மய்யத்துக்கு இல்லவே இல்லை" என்று சொல்லிவிட்டார். அழுத்தம் திருத்தமாக "திமுக  அணியிலும் சேரப் போவதில்லை.நாற்பதிலும் தனித்தே போட்டி "என்பதையும்   சொல்லி இருக்கிறார்.
"திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் ஒரு அணி’ என்றுதான்"கமல் கூறினார்
"மூன்றாவது அணி அமைகிற வாய்ப்பு இருக்கிறது என்பதாக " மீடியாக்கள்தான் கூவின
 
அவரது இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் கமல் பேசியபோது"யாருடன் சேர்ந்தால் ஓட்டு வரும்,யாருடன் சேர்ந்தால் பணம் வரும் என்பதை சிந்திக்காமல் மக்கள் நலம் கருதியே பேசி வருகிறேன்" என்று சொன்னது பா.ம.க.வை நினைத்துத்தான்  என்பதை அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?
அதே நேரத்தில் ரஜினி,சீமான் ஆகியோரது ஆதரவு இருந்தால் நல்லது"என்பதை அவர் கோடிட்டுக் காட்டத்தவறவில்லை. 
ஆனால் ரஜினி ஆதரிப்பாரா? தனது பிஜேபி ஆதரவு நிலையை அறுத்து எறிந்து விட்டு வருவாரா?
வந்தால் நல்லது.
கமல்-ரஜினி இருவரும் மாபெரும் சக்திகள் .இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது.
ரஜினி தனது வலதுசாரித் தன்மையையும்,கமல் அவரது இடதுசாரித்தன்மையையும் மறந்து விட்டு ஒன்று சேர்ந்தால்  தமிழகம் புத்தொளி பெறும். 
டிவிட்டர் இணையதளத்தில் இருவரும் பரிமாறிக்கொண்ட  வாழ்த்துச்செய்திகள் வார்த்தைகளாக இல்லாமல் உயிரானவையாக இருக்குமேயானால் நிச்சயம் விடிவுகாலம்தான்! தமிழகத்துக்கு தேவையான எல்லாமுமே வந்து சேரும்.புதுயுகம் பிறக்கும்.
,"கட்சி ஆரம்பித்து,இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து,தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப்போகும் மக்கள் நீதிமய்யத் தலைவர் என் நண்பர்கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றிபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என ரஜினி குறிப்பிட்டு இருந்தார் .
 
ரஜினிக்கு நன்றி தெரிவித்து கமல் "எனது 40 ஆண்டுகால நண்பரே .நல்லவர்  துணை நின்றால் நாற்பது எளிதே .நாளை நமதே."என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் பொருள் என்னவென்பது சூப்பர் ஸ்டாருக்குத் தெரியாதா?
நேரம் பிப்ரவரி 25, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 23 பிப்ரவரி, 2019

நீங்காத நினைவுகள்.2. சிவாஜி நடத்திய கல்யாணம்




"அழவும்,கூடவே சிரிக்கவும் அதை விட காதலை கண்களில் காண்பிக்கவும் கற்றதெங்கே, சொல்லலாமா?"


காதல் இளவரசன் என மக்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசனிடம் ஒருவர் கேட்கிறார்.


அதற்கு அவர் சொல்கிறார்.


"வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களிடம்,  பார்த்த படங்கள் இவைகளிடம் இருந்து அழுகை -சிரிப்புகாம்பிநேஷன் முதலில் பார்த்தது திரு.சிவாஜியிடம்,திருமதி சாவித்திரியிடம்.!"
ஆக கற்றதெல்லாம் பள்ளிப்படிப்பு அல்ல. அவரது ஆசான் மனிதர்கள்.


ஆணழகன் என்று புகழப்படுகிற கமலை சினிமாவில் நடிப்பதற்கு தகுதி இல்லை என ஒதுக்கியதும் உண்டு. 


"இந்த மூஞ்சி எல்லாம் நடிக்க லாயக்கில்லைன்னு என்னை ஒதுக்கியது உண்டு.சினிமாவில் நுழைஞ்சதும் டைரக்சன் துறையில தீவிர ஈடுபாட்டுடன் இருந்த என்னை பாலசந்தர் சார் மாதிரி உள்ளவங்க 'இந்த மூஞ்சிய படம் பிடிக்கலாம்'னு நெனச்சதினாலதான் நடிகனானேன்."என ஒரு பத்திரிகையில் எழுதி இருக்கிறார் கமல்.


இனி தொடருக்கு வரலாம்.


"இரண்டாவது குழந்தை பிறகே திருமணம் பற்றி தீர்மானித்தேன்.திருமணத்தின் விளைவாக உருவானவள் என்பதை விட ஸ்ருதியை எங்களுடைய ஆழமான அன்பின் அடையாளமாகவே நான் கருதுகிறேன்.வீண் சடங்குகளை விட இந்த குழந்தை எங்களுடையது என்கிற உணர்வே முக்கியமானது"என்றார் சரிகா.



அடுத்து வருவதை வாணிக்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ளலாம்.



"திருமண வாழ்க்கை ஒழுங்காக அமைய வேண்டுமானால் கணவனை மனைவி மதித்து வாழ வேண்டும்.கணவனை விட நான் மேலானவள் என்கிற அகம்பாவத்துடன் பிறர் மத்தியில் கணவனை இழிவாக நடத்திவிட்டு அதன் பிறகும் அவன் உங்களை நேசிக்கவேண்டும் என்றால் அது எப்படி நேர்மையானதாகும்?


என்னைப் பொருத்தவரை கமல்ஜியின் காலைத் தொட்டு வணங்குவதை தாழ்வானதாக கருதவில்லை.நான் மரியாதையும் அன்பும் வைத்துள்ள மாமனிதர் அவர். என்னைவிட மூத்தவர்.ஒருவருக்கு மரியாதை காட்டுவதால் நாம் தாழ்ந்து விட மாட்டோம்."என்கிறார் சரிகா.


சரிகாவின் திருமண விருப்பத்தை கமலிடம் சொன்னதும் அவரும் சரியென ஒப்புக்கொண்டார். அவரது தந்தை சீனிவாசன் அவர்களிடம் சம்மதம் பெற்றார். 


நடிகர் திலகத்திடம் வந்து திருமணத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.


 ராம்குமார்,பிரபு இவர்களுடன் சிவாஜியின் மடியில் உரிமையுடன் அமர்ந்து வளர்ந்த அன்னை இல்லத்தின் மூத்த பிள்ளை கமல்தான்.


"டே ...கமலா" என்றுதான் சிவாஜி  அழைப்பார். அந்த 'டே'யில் அழுத்தம் இருக்காது.அது ஒரு ஓசை சொல்லாகத்தான் இருக்கும்.


தேவர் மகன் படத்தில் சிவாஜிதான் நடிக்கவேண்டும் என்பதில் கமல் பிடிவாதமாக நின்று 3 நாட்கள் வாதாடித்தான் சம்மதம் வாங்கினார். கால்ஷீட் வாங்கத்தான் அவரை வலியுறுத்த வேண்டியதாக இருந்தது.ஆனால் கல்யாணத்தை நடத்தி வைங்கண்ணே என்று கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டு விட்டார். 


கமல்ஹாசனின் இல்லத்தில் கல்யாணம். 


சிவாஜி கணேசன்,திருமதி கமலா அம்மாள்,ராம்குமார், இவரது மனைவி கண்ணம்மாள், பிரபு படப்பிடிப்பில் வெளியூரில் இருந்ததால் அவரது மனைவி புனிதவதி பிரபு ,ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமாங்கல்யத்தை சிவாஜி,கமலா தம்பதி எடுத்துக் கொடுக்க கமல்ஹாசன் அதை வாங்கி சரிகாவுக்கு கட்டினார்.
மிகப்பெரிய பாக்கியம்.


இதைப் போல  எனது மூத்த மகன் ராம்குமார்-பானுமதி திருமணத்தை சிவாஜியும் கமலா அம்மாவும் வந்திருந்து நடத்திக் கொடுத்தனர். சிங்கப்பூரில் இருந்து இந்த திருமணத்துக்காகவே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில்தான் கமல்-சரிகா இருவரும் குடும்பம் நடத்த வேண்டிய நிலை.இதை முன்னரே சொல்லி இருக்கிறேன். 


கஸ்தூரி ரங்கன் சாலையில் நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த அத்தனை பொருட்களும் எடுத்துச்செல்லப்பட்டு இருந்தன.யாரால் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.


மாளிகை மாதிரி சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழ்ந்தபோதுதான் ஸ்ருதிஹாசன் பிறந்தார்.


ஒருநாள் திடீரென கமலிடம் இருந்து போன்.


"கொஞ்சம் வீட்டுக்கு வரீங்களா?"


உடனே புறப்பட்டு சென்றேன்.


"ஆஸ்பிடல் வரை போயிட்டு வரேன். அவங்களை ( சரிகா.) அட்மிட் பண்ணிருக்கு"என்று சொல்லிவிட்டு ஒரு வாடகைக் காரில் புறப்பட்டுப் போனார். 

சொந்தக்கார் அன்று அவர் வசம் இல்லை.


ஹேராம் படப்பிடிப்பில் கணவன் மனைவி இருவரும் கடுமையாக உழைத்ததை அருகில் இருந்து பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தில் நடித்தவர்களை பேட்டி எடுத்து அதை தொகுத்துக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு தரப்பட்டிருந்தது.                                                              
கலைஞன் படப்பிடிப்பின் போது ஒரு நிகழ்வு.
அதை நாளை மறுநாள் பார்க்கலாம்.
---தேவிமணி 
நேரம் பிப்ரவரி 23, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

எல்.கே.ஜி..விமர்சனம்.




இன்றைய அரசியல் நிலவரம்,கலவரம்,அந்தரங்கம்  இவைகளை   நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஓட விட்டிருக்கிறார் லால்குடி கருப்பையா காந்தி. பெயர் சுருக்கமே எல்.கே.ஜி.

சர்காரில் இலவசங்களை இழிவு படுத்தினார்கள் என்று சொல்லி ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்.கே.ஜி.க்காக என்ன பண்ணப்போகிறார்கள். அவர்களைத்தான் பாலாஜி நாறடித்திருக்கிறார் .! வசனங்களில் வகை வகையான கிண்டல்கள்.ரசிக்க முடிகிறது.தொடக்கமே பினாமி ஆட்சி ஒழிக என்றுதான் தொடங்குகிறது.

ஒரு கட்சியைக் கூட விட்டு வைக்கவில்லை. தொண்டன் அறை வாங்கிய தியாகத்தையும் காட்டுகிறார்கள். மீடியாக்கள். மீம்ஸ் கிரியேட்டர்களையும் மரண கலாய். இப்படித்தான் மீடியாக்களின் கேள்விகள் என நக்கல் செய்வதற்கும் துணிச்சல் வேண்டும். 

கதை என்பதை அற்ப ஜந்துவாக்கி விட்டதால் பெரிதாக சொல்வதற்கில்லை. கோர்வையான திரைக்கதையும் இல்லை.

நாஞ்சில் சம்பத்தை வைத்து மேஜிக் காட்டப்போகிறார்கள் என்றால் பாவம் அவரை வாயில் காப்போன் அளவுக்குத்தான் வைத்திருக்கிறார்கள். குறள் சொல்வதற்கு சம்பத் வேண்டுமா என்ன?ஒரு சரித்திர ஆசிரியரை நாற்காலியுடன் பிணைத்து விட்டீர்களே பாவிகளா!

முதலமைச்சராக ராம்குமார் கணேசன்.அப்படியே அப்பாவின் சாயல்.அவரது கம்பீரக்குரல்.இந்த வாரிசை  பட்டைத் தீட்டப்படாத வைரமாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கிரிமினல்கள்,இந்திய தேர்தல்களில் அந்நிய சக்திகளின் வியூக உதவிகள் ,உள்ளூர் அரசியல் வாதிகள் ,சமாதி சத்தியங்கள், கட்சிக்குள் கலவரம்,எல்லாவற்றையும் தோல் உரித்துக் காட்டியதற்காக பாலாஜிக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும். 

அமரர் எம்.ஜி.ஆர்.படப்பாடல்கள் காலம் கடந்தும் நிற்கிறது.
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " என்கிற அவரது பாடல் அவரது கட்சிக்கே பொருந்திப் போகும் என்பதை மக்கள் திலகம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். 

மேடைகளில் எதிரிகளை கிழிக்கும்  கே.ராஜனின் மகன்தான் இயக்குநர் கே.ஆர். பிரபு.  நாயகன் பாலாஜியின் வால்யூமை சற்றே குறைக்கத் தவறி விட்டார். 
நேரம் பிப்ரவரி 22, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.




ஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.!

ஆனால் இயக்குநர் சிம்புதேவனுடன் பிரச்னை ,காட்சிகளில் தலையிடல் என பல சிக்கலை வடிவேலு ஏற்படுத்தியதாக தயாரிப்புத் தரப்பில் சொல்லப்பட்டது.

பல கோடிகளில் போடப்பட்ட செட்டுகளையும் கலைக்க வேண்டியதாகி விட்டது.

பேச்சு வார்த்தைகளும் பயன்படவில்லை. 

இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு நடிப்பதற்கு தடை போட்டது. 

பெப்சி தரப்பும் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தது.

ஆனால் தடை இருப்பது தெரிந்தும், மாரி செல்வராஜ், சுராஜ்,ஷக்தி சிதம்பரம் ஆகியோர்  படங்களில் வடிவேலு நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.

அதிகாரப்பூர்வமான செய்தியா என்பது தெரியாது.

இதற்கிடையில் வடிவேலுக்காக சமாதான  பேச்சில் சீமான் இறங்கி இருப்பதாக.சொல்கிறார்கள். 

ஒருவேளை ஷங்கரிடம் வாங்கிய பல கோடி முன்பணத்தை வடிவேலு திருப்பித்தர சம்மதம் தெரிவித்திருப்பாரோ என்னவோ! 

வடிவேலு மீண்டும் நடிப்பதற்கு வந்தால் சரி,!

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து தடை இன்னும் நீக்கப்படவில்லை என்பதை சொன்னதாக தெரிகிறது.
நேரம் பிப்ரவரி 22, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ரஜினி-விஜயகாந்த் என்ன பேசினார்கள்?




காலை 11 மணி அளவில் சாலிகிராமத்துக்குள் சூப்பர்ஸ்டார் என்ட்ரி.

 ரஜினி வருவது முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வாசலில் வந்து வரவேற்றார் சுதீஷ்.

உள்ளே சென்றதும் கேப்டன் விஜயகாந்த் புன்னகைத்தபடியே கை கொடுத்தார்.

அருகில் பிரேமலதா விஜயகாந்த்.

"விஜி! எப்படிஇருக்கீங்க? என்று ரஜினி  கேட்டபடியே  பேசத் தொடங்கினார்.

அரைமணி நேர உரையாடல்.

சிங்கப்பூரில் டிரீட்மெண்ட் எடுத்த பிறகு ரஜினியும் அவ்வப்போது அமேரிக்கா சென்று செக் அப் செய்து கொள்வதால் இந்த சந்திப்பு. கேப்டனுக்கும் அதே சிகிச்சைதான்!

வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் "நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை.அவரது அமெரிக்க சிகிச்சை பற்றி பேசினோம்.நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் முதலில் வந்து என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்"என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றார் சூப்பர் ஸ்டார்.
நேரம் பிப்ரவரி 22, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

தேமுதிகவுக்கு 5 இடங்கள் தர அதிமுக தயார்?



தமிழகத்தின் ஆள்கிற -எதிர்க்கிற கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கிற தேர்தலாக வருகிற பாராளுமன்றத் தேர்தல் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மோடியை கடுமையாக கடைசி வரை எதிர்த்து வந்த அதிமுக தற்போது தலைவியை இழந்து எதிர்கொள்கிறது பாஜகவின் துணையுடன்!

இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக இருந்த கலைஞர் கருணாநிதி இல்லாமல் பழக்கப்பட கட்சிகளின் துணையுடன் சந்திக்கிறது தி.மு.க.

இந்த இரு பெரிய கட்சிகளின் தோள் மீது சவாரி செய்து பழக்கப்பட்ட ஏனைய கட்சிகள்.

இன்னும் பேச்சு வார்த்தை முற்றுப் பெறாத நிலையில் இரு அணிகள்.

அவர்களின் நோக்கமெல்லாம் விஜயகாந்தின் மீது.!

அந்த கட்சியின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அந்த கட்சிக்கு கூடுதலாக இடங்கள் கிடைக்கலாம். அது அவர் நேரடியாக களம் இறங்குவதை பொறுத்தது.

அதிமுக கூட்டணி அனேகமாக முடிவாகி விட்டதாகவே சொல்லலாம்.

பெருந்தொகை கை மாறி இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆகவே பாமக கேட்கிற தொகுதிகளை விட்டுக்கொடுக்கிற நிலையில்தான் அதிமுக இருக்கிறது

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் இணைந்தே நடத்தப்பட்டால் அந்த கட்சி கட்டாயம் அவைகளில் வெற்றி பெற்றாகவேண்டும்.

இல்லையேல் சட்ட மன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம்.

பெரும்பான்மையான தொகுதிகள் வட மாவட்டங்களில் வன்னியர் அதிகமாக வாழ்கிற பகுதியாகவே இருக்கிறது.ஆகவே இதை பாமக வசமாக பயன்படுத்துகிறது.

காரி உமிழாத குறையாக அதிமுகவை விமர்சித்தவர்கள் டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இருவரும்தான்.

அவர்களே இன்று அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்றால் ...எந்த அளவுக்கு அவர்கள் மக்களை மதிக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு அதிமுக தயாராக இருக்கிறது.

ஆனால் வேறு பல விஷயங்களில் தேமுதிக இணக்கமாக செல்ல விரும்பவில்லை.

பாமக கவனிக்கப்பட்ட அளவுக்கு இவர்களும் கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தேர்தலுக்குரிய செலவினங்களை இரண்டு பெரிய கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதாக  சொல்கிறார்கள்.

அதிமுகவுடன் சேர்வதை விட திமுகவுடன் சேருவதை தேமுதிக தொண்டர்கள் விரும்பினாலும் தலைமையில் உள்ளவர்களுக்கு மத்தியில் மந்திரி பதவி இலக்காக இருக்கிறது.

குறைந்த சீட்டுகளை ஒப்புக்கொள்வதாக இருந்தால் அமைச்சரவையில் இரண்டு இடங்களாவது தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த நிலையில்தான் கேப்டனை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். தே.தி.மு.க தங்களின் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதன் தொண்டர்களில்  ஆதரவு தங்களுக்கு கிடைக்கலாம் என திமுக நம்புகிறது.
நேரம் பிப்ரவரி 22, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

நீங்காத நினைவுகள். தொடர்.1



'கலைஞன்' படம்.
சிவாஜி பிலிம்ஸ் பேனர். ராம்குமார் கணேசன் தயாரிப்பு. உலகநாயகன் கமல்ஹாசன்,பிந்தியா ஆகியோர் நடித்த படம். சென்னை அண்ணாசாலையில் ஒரு பெரிய கட்டிடத்தில் படப்பிடிப்பு. முன்னெல்லாம் போன் செய்து விட்டு லொக்கேஷனுக்குப் போய் விடலாம். இடைவேளைகளில் நடிக நடிகையரை சந்தித்து பேட்டிகள் எடுக்கலாம். நெருக்கமான நட்பு நிலவிய காலம்.நடிகர்களும் நிறைய பேசுவார்கள்.
நான் படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றிருந்த போது 'தாண்டியா 'நடனக்காட்சியின் ஒரு பகுதியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.
மதியம் லஞ்ச் இடைவேளை.
வழக்கம் போல நடிகர் திலகத்தின் வீட்டிலிருந்து 'விருந்து' வந்தது. மட்டன் சிக்கன்,இறால்,மீன் ,காடை ,நண்டு,இப்படி பல வகைகள். விருப்பம் போல வெளுத்துக் கட்டலாம்.
கமல் வீட்டிலிருந்தும் நான்-வெஜ்..
"கருவாடு சாப்பிடுறிகளா?"  கமல் கேட்டார்.
"ம்ம்.சாப்ட்டு ரொம்ப வருசமாச்சு.மதுரையில் வீட்டில் சாப்பிட்டது."
"இது  நம்மூரு கருவாடுதான்! ராம்நாடில் இருந்து வந்திருக்கு! சாப்பிடுங்க!"
தொக்கு மாதிரி வைத்திருந்தார்கள்.. ருசி செம!
"ஜி! நீங்க நான்-வெஜ் ல என்னென்ன சாப்பிட்டிருக்கீக?"
"நடப்பன பறப்பன ஊர்வன இப்படி எல்லாமே இந்த வயசில சாப்பிடலேனா வேற எந்த வயசில சாப்பிட முடியும்?" என்றார்.
அவரது இளமையின் ரகசியம் புரிந்தது. 
காட்சியை கட் பண்ணுங்க.
அப்படியே அன்னை இல்லத்துக்கு வாங்க.!
நடிகர் திலகம் வரச்சொல்லி இருந்தார். போனேன்.
வீட்டு நலன்களை வழக்கம் போல விசாரித்து விட்டு "ஒழுங்கா இருக்கியா?".
இந்த கேள்வியின் அர்த்தம் நம்மைப் பற்றி யாரோ வத்தி வைத்திருக்கிறார்கள் என்பதுதான்!
சற்று பதட்டமுடன் "இருக்கேண்ணே!"
"மதுரையில இருந்தபோது ஒழுங்காத்தானே இருந்தே மெட்ராஸ் வந்தபிறகுதான் இப்படி ஆகிட்டியா?கண்டபடி எழுதுறியாமே...அதுக்கு பேரு என்னமோ சொல்றாய்ங்களே ..அதாண்டா கிசு கிசு."
"அண்ணே...எல்லாருமே எழுதுறாய்ங்கண்ணே.பத்திரிக்கை சேல்ஸ் இங்கிரீஸ் ஆகும்."
"மண்ணாங்கட்டி!.அதுக்காக மத்தவன் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிவியா.?நாலு பேரு வாயில ஏண்டா விழணும்?நம்ம புள்ள குட்டி நல்லாருக்கும்னுடா! சொல்றது  புரியிதா?" 
தலையாட்டினேன்.
இப்படி என்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு கண்டித்து திருத்தியவர்களில் நடிகர் திலகம்,உலகநாயகன்,திரையுலக மார்க்கண்டேயன் ஆகிய மூவருக்கும் பங்கு உண்டு,
இப்படியாக அண்ணன் சிவாஜி என்னை கண்டித்துக் கொண்டிருந்தபோது  அவ்வழியே எங்களை கடந்த இளைய திலகம் பிரபு "அப்பா ,ஹார்ஸ் ரைடிங்  போறேன்பா!"என்று தகவல் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் அண்ணனின் மூடு மாறி விட்டது.
"இவனும் உடம்பு இளைக்கனும்னு அடிக்கடி குதிரை சவாரி பண்றான். குதிரைதான் இளைச்சது,இவன் இளைச்சமாதிரி தெரியல "என்று சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நைசாக அப்படியே விடை பெற்று  கிளம்பிவிட்டேன். 
சிவாஜி சொன்னதின் எதிரொலியோ என்னவோ பிரபுவுக்காக  "கத்திரிக்கா...குண்டு கத்திரிக்கா" என்று பாடலும் எழுதி விட்டார்கள். 

உடல் பருமன் என்பது அவர்களது வம்சாவளி  சொத்து.
நடிகர் திலகத்தைப் பற்றி பலர் கஞ்சன் என்பார்கள். ராமநாதபுரம் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது நேரிலும் அவரது மன்றங்கள் வழியாகவும் அந்த காலத்து மதிப்புப்படி பல லட்சங்கள் செலவு செய்து குடிதண்ணீர் குழாய்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.கண்மாய்களை சீரமைத்துக் கொடுத்திருக்கிறார்.

கமலுடன் பிரபு உடற்பயிற்சி செய்வதாக ஒரு செய்தி கிடைத்தது. அதை நாளை மறுநாள் சொல்கிறேன்.

நேரம் பிப்ரவரி 22, 2019 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

விசிகவுக்கு பிக்பாஸ் நாமம் போட்டதா? கமல் ஏமாற்றி விட்டார்! I Cinema Murasam

  • மார்பழகி பாடகியின் போதை புலம்பல்!
    லேடி காகா! மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா! பூத்துக் குலுங்கும்  ...
  • ஜெயலலிதாவின் பதிலும் வலம்புரி ஜானின் கேள்வியும்! [ பத்திரிகையாளனின் கதை.6 ]
    நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம். அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்...

இந்த வலைப்பதிவில் தேடு

Pages

  • Home

என்னைப் பற்றி

மணியன்
'கலைமாமணி' REPORTER
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Archives

  • ►  2023 (10)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (112)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (12)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (20)
  • ►  2021 (302)
    • ►  டிசம்பர் (17)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (27)
    • ►  ஆகஸ்ட் (35)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (34)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (52)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (28)
  • ►  2020 (71)
    • ►  டிசம்பர் (22)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (1)
  • ▼  2019 (16)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மார்ச் (6)
    • ▼  பிப்ரவரி (7)
      • கமல்-ரஜினி இணைந்து போட்டியிடுவார்களா?
      • நீங்காத நினைவுகள்.2. சிவாஜி நடத்திய கல்யாணம்
      • எல்.கே.ஜி..விமர்சனம்.
      • வடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.
      • ரஜினி-விஜயகாந்த் என்ன பேசினார்கள்?
      • தேமுதிகவுக்கு 5 இடங்கள் தர அதிமுக தயார்?
      • நீங்காத நினைவுகள். தொடர்.1
  • ►  2018 (96)
    • ►  நவம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (42)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (23)
  • ►  2017 (209)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (18)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (17)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (25)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (30)
  • ►  2016 (176)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (34)
    • ►  அக்டோபர் (41)
    • ►  செப்டம்பர் (27)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (17)
  • ►  2015 (29)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (3)
  • ►  2014 (22)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஏப்ரல் (9)
  • ►  2013 (58)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (12)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2012 (204)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (26)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (44)
    • ►  ஜனவரி (49)
  • ►  2011 (46)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (12)
    • ►  அக்டோபர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  ஜனவரி (3)
  • ►  2010 (34)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (11)
  • ►  2009 (27)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)

லேபிள்கள்

  • ---அரசியல். (1)
  • ---சரித்திரமும் கற்பனையும் கலந்தது. (1)
  • --சமூகம். (1)
  • --சினிமா. (1)
  • --நகைச்சுவை. (1)
  • (13.) ரெட்டை இலை முடங்குமா? (1)
  • ) உளவு சொன்னது யார்? ஈகோ சண்டையா? அரசியல்-சிறுகதை தொடர்ச்சி. (1)
  • அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல். (1)
  • அண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல். (1)
  • அதிமுக .துரோகம் ?--அரசியல். (1)
  • அதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு! (1)
  • அதிமுக எதிர்நோக்கும் ஆபத்துகள்.---அரசியல். (1)
  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ?--அரசியல். (1)
  • அதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே. (1)
  • அதிமுகவில் இன்னொரு ஜெயலலிதாவா?---அரசியல். (1)
  • அதிமுகவின் எதிர்காலம் தினகரனா? ----அரசியல். (1)
  • அதிமுகவின் கருணை மனு.--அரசியல். (1)
  • அதிமுகவின் நாரதர் யார்?--அரசியல். (1)
  • அதிமுகவின் பயணம். அரசியல். (1)
  • அதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல். (1)
  • அதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல் (1)
  • அதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல். (1)
  • அப்போலோ டாக்டர்களின் மன உறுதி. (1)
  • அப்போலோ: மோடி வராதது ஏன்? (1)
  • அப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல் (1)
  • அம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை. (1)
  • அம்மாவின் விசுவாசிகள் யார்" அரசியல். (1)
  • அம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல். (1)
  • அமைதிக்கு வேட்டு.--அரசியல். (1)
  • அரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம். (1)
  • அரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம். (1)
  • அரசியல் அவலம் (1)
  • அரசியல் மாற்றம். யாருக்கு லாபம்?--அரசியல் (1)
  • அரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக. (1)
  • அரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா? (1)
  • அரசியல்.அம்மாவும் தேர்தலும்.. (1)
  • அரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா?--அரசியல். (1)
  • அரசியலில் இதெல்லாம் சகஜம்.----அரசியல். (1)
  • அவலம் (1)
  • அழகான பெண்டாட்டியா இருக்கணும்னா....நகைச்சுவை. (1)
  • அழகிரிக்கு பேராசிரியர் எதிர்ப்பு.--அரசியல். (1)
  • அழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர் (1)
  • அளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள். (1)
  • அன்னையை புணர்ந்த மன்னன்.--சரித்திரம். (1)
  • அனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்?---அரசியல் (1)
  • அனிலா யார் காரணம்.----அரசியல். (1)
  • ஆசைநாயகியின் அர்த்தமுள்ள கனவு (1)
  • ஆட்சி கவிழுமா? தினகரன் தப்புவாரா?--அரசியல். (1)
  • ஆட்சியை கலையுங்கள்! அரசியல். (1)
  • ஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு. (1)
  • ஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம். (1)
  • ஆமியின் ஆபாச படம்.--சினிமா. (1)
  • ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஜனாதிபதி ஆவாரா? -அரசியல். (1)
  • ஆர்.கே.நகர் தேர்தல் எதிரொலி.--அரசியல். (1)
  • ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல். (1)
  • ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்குமா? --அரசியல். (1)
  • ஆர்.கே.நகரில் யாருக்கு ஓட்டு?- அரசியல் (1)
  • ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல். (1)
  • ஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்?--அரசியல். (1)
  • ஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்! (1)
  • இடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல். (1)
  • இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா?--அரசியல். (1)
  • இணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல். (1)
  • இது அரசியலா (1)
  • இது என்ன ஆச்சரியமா!--சமூகம். (1)
  • இது கலாச்சார சீர்கேடா? அல்லது பிழைக்கும் வழியா?--சமூகம் (1)
  • இது யாருடைய கவுரவ பிரச்னை?----அரசியல். (1)
  • இதுதான் தேசிய உணர்வா?---சமூகம். (1)
  • இந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல். (1)
  • இப்படியெல்லாமா காதலி இருப்பா?--சமூகம் (1)
  • இயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு (1)
  • இயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா (1)
  • இயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா. (1)
  • இலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம். (1)
  • இழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது?--சினிமா. (1)
  • இளையதளபதியும் நானும் (1)
  • இளையராஜா சொன்னது சரியா? -சமூகம். (1)
  • இளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா?-சினிமா (1)
  • இன்னோவா சம்பத்...அரசியல். (1)
  • உண்மையா பொய்யா? --மருத்துவம். (1)
  • உலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம். (1)
  • உலகாயுதா----நல் முயற்சி.--சினிமா (1)
  • உலகை வசப்படுத்திய விலைமகளிர். (1)
  • எடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் . (1)
  • எடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல் (1)
  • எடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல். (1)
  • எடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல். (1)
  • எடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல். (1)
  • எடப்பாடிக்கு மிரட்டலா?--அரசியல். (1)
  • எடப்பாடியார் சாதிப்பாரா? --அரசியல் (1)
  • எப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்?----அரசியல். (1)
  • எம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம் (1)
  • எமன் தர்பார். கற்பனை (1)
  • எமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை (1)
  • எல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல் (1)
  • எழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம். (1)
  • என்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு. (1)
  • என்னவாகுமோ திரை உலகம்?--சினிமா. (1)
  • எஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல். (1)
  • ஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது. (1)
  • ஏலம் போன கன்னிப்பெண்.--சமுதாயம் (1)
  • ஏழை குடும்பத்தின் இரவுப்பசி.--கற்பனை. (1)
  • ஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல். (1)
  • ஐயப்பன் பாடலில் குற்றமா? ----ஆன்மீகம் (1)
  • ஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம். (1)
  • ஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை. (1)
  • ஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு. (1)
  • ஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி. (1)
  • ஓ.பி.எஸ்.சிலிர்த்து எழுந்து விட்டார்.---அரசியல். (1)
  • ஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.!----அரசியல். (1)
  • ஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல். (1)
  • ஓபிஎஸ்.முதல்வர் பதவி நிலைக்குமா?--அரசியல் (1)
  • ஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்?-அரசியல். (1)
  • கங்கனா ரனாவத்.----சினிமா உண்மை. (1)
  • கட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல். (1)
  • கடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா. (1)
  • கடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை. (1)
  • கண்களில் ஆபாசம்.சமூகம் (1)
  • கண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி (1)
  • கமல் (1)
  • கமல் கேள்வி-பதில். (1)
  • கமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா (1)
  • கமல்ஹாசன் சொன்னது பலிக்குமா?---அரசியல். (1)
  • கமல்ஹாசனின் வலி....சினிமா. (1)
  • கமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல். (1)
  • கமலின் எதிர்ப்பாளர்களுக்கு...அரசியல். (1)
  • கமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல். (1)
  • கருவாட்டு கிஸ் ---சிரிப்பு. (1)
  • கலி பிறந்துடுத்து என்ன பண்றது?--சமூகம் (1)
  • கவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா (1)
  • கவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல். (1)
  • கவுதமியை இனியும் நம்பமுடியாது.---அரசியல். (1)
  • கன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம் (1)
  • கனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை (1)
  • காங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல். (1)
  • காங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்? அரசியல். (1)
  • காங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல். (1)
  • காங்.கட்சியில் குழப்ப வெடி.அரசியல். (1)
  • காதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு. (1)
  • காதல் என்றால் என்ன?----அனுபவம். (1)
  • காதல் எஸ்.எம்.எஸ்.கள். சமூகம் (1)
  • காதல் பற்றி ஸ்ருதிஹாசன்...சினிமா. (1)
  • காதல் மன்னன் கம்பனா (1)
  • காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை. (1)
  • காதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா? சரித்திரம் (1)
  • காதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன? --கவியின் நயம் . (1)
  • காந்தி நாளின் சிந்தனைகள். (1)
  • காந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு?---அரசியல் (1)
  • காம கொடூரங்கள் .சமூகம் (1)
  • காமத்துக்கு வாசம் இருக்கிறதா?--அனுபவம். (1)
  • காமம் .கண்ணதாசனும் ஓசோவும்!-சமூகம் (1)
  • காமம்.வெறி.காதல் ஓர் அலசல். (1)
  • காவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்? அரசியல் (1)
  • காவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை. (1)
  • காஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம். (1)
  • கீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்!---நகைச்சுவை. (1)
  • குடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா (1)
  • குர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்? நாட்டு நடப்பு. (1)
  • குழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்!---இதிகாச புரட்டு. (1)
  • குழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல். (1)
  • குற்றவாளி படம் வைக்கலாமா? அரசியல். (1)
  • கெட்ட பழக்கமா (1)
  • கேவலம் ---சமூகம். (1)
  • கொ.ப.செ. ஜெயலலிதா. அனுபவம் (1)
  • கோ.தே.ரா.( 11 (1)
  • கோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு? அரசியல் சிறு தொடர். (1)
  • கோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா? அரசியல்.சிறுகதை தொடர். (1)
  • கோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா. (1)
  • கோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்.. (1)
  • கோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா? (1)
  • கோ.மா (1)
  • கோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா? அரசியல்- சிறு தொடர். (1)
  • கோடாங்கி அடித்து குறி கேட்கலாமா? அரசியல். (1)
  • கோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும். (1)
  • சசி எழுதுவது சுயசரிதையா?---அரசியல். (1)
  • சசி தினகரனுக்கு பிஜேபி சலுகை ? அரசியல். (1)
  • சசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல். (1)
  • சசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்?---அரசியல் (1)
  • சசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா? --அரசியல். (1)
  • சசிக்கு பரோல்.தினகரன் மகிழ்ச்சி.--அரசியல். (1)
  • சசிகலா (1)
  • சசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா?--அரசியல். (1)
  • சசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல். (1)
  • சண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா?--அனுபவம். (1)
  • சந்தேக மரணங்கள். சமூகம் (1)
  • சமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம் (1)
  • சமூகத்தில் இப்படியெல்லாம் நடக்குதே! கோபம் (1)
  • சமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்? (1)
  • சாட்டை எடுப்பாரா பாரதிராஜா? சினிமா (1)
  • சார்மிக்கு கல்யாணம் நடக்காதா?--சினிமா (1)
  • சிலர் அலறுவது ஏன்?-அரசியல். (1)
  • சிலை திறப்பு சிறப்புகள்.--அரசியல். (1)
  • சிலைகள் உயிர் பெறுமேயானால்.....? ஒரு கற்பனை. (1)
  • சிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி. (1)
  • சிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு. (1)
  • சிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள். (1)
  • சிவாஜியின் மணிமண்டப அரசியல். (1)
  • சிற்றின்பம்தான் பேரின்பம்--சமூகம் (1)
  • சின்னவெங்காயமும் இடைத்தேர்தலும்!....அரசியல். (1)
  • சினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல். (1)
  • சினிமா நடிகை என்றால் கேவலமா?--திரை உலக அவலம். (1)
  • சினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா (1)
  • சினிமா. (1)
  • சினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு. (1)
  • சினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை. (1)
  • சினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும். (1)
  • சினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன். (1)
  • சினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல். (1)
  • சினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை! (1)
  • சீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே! அரசியல். (1)
  • சீதையின் கோபம். இலக்கியம். (1)
  • சீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல். (1)
  • சு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா?--சமூகம் (1)
  • சு.சுவாமியும் திருநாவுக்கரசரும்!--அரசியல். (1)
  • சுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை!----சினிமா (1)
  • சுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை? (1)
  • சூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா. (1)
  • செக்ஸ் படவிழா. (1)
  • செக்ஸ். மருத்துவ aayvu (1)
  • செயல்தலைவரா?--அரசியல். (1)
  • செல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன? (1)
  • செல்வாக்கு சரிந்திருக்கிறது .-அரசியல். (1)
  • சேலம் கொசுக்கள்.வீரியம் உள்ளவை.--சமூகம் (1)
  • சோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா (1)
  • டயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு. (1)
  • டாப்சி ஆகியோரின் ஆவேசம்.சமூகம். (1)
  • டிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல். (1)
  • தங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி! சரித்திரம். (1)
  • தத்துவமும் மனைவியின் கோபமும்.--நகைச்சுவை? (1)
  • தந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம் (1)
  • தம்பிதுரைக்கு சில கேள்விகள்.--அரசியல். (1)
  • தமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா (1)
  • தமன்னாவின் மனம் திறப்பு.--சினிமா (1)
  • தமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி (1)
  • தமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்?---சமூகம். (1)
  • தமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல். (1)
  • தமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல். (1)
  • தமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல். (1)
  • தமிழகத்தில் நடந்த குற்றங்கள்.---அரசியல் (1)
  • தமிழுக்கு பேராபத்து.அரசியல். (1)
  • தயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா. (1)
  • தலையிடாதே! நிருபர்களிடம் சீறிய நடிகை.---சினிமா (1)
  • தலைவிரிச்சாள்களுக்கு எச்சரிக்கை (1)
  • தனியார் சுதந்திரத்தில் கைவைக்காதீர்.---சமூகம். (1)
  • தனுஷ் அரசியல். சினிமா (1)
  • தாஜ்மகால் காப்பாற்றப்படவேண்டும்--அரசியல். (1)
  • திமுக பலவீனம்.அரசியல். (1)
  • திமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்!---அரசியல். (1)
  • திமுகவுக்கு சோதனை. அரசியல். (1)
  • திராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா. (1)
  • திராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல் (1)
  • திராவிடம் என்றால் என்ன?---அரசியல் (1)
  • திருந்தவே மாட்டாய்ங்களா?--எனது அனுபவம். (1)
  • திருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல். (1)
  • திருமாவளவனின் கந்தக பேச்சு.--அரசியல். (1)
  • தினகரன் (1)
  • தினகரன் எஸ்கேப் ஆவாரா?---அரசியல். (1)
  • தினகரன் திருவிளையாடல். --அரசியல். (1)
  • தினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல். (1)
  • தீ குளிப்பு .உண்மை சம்பவம். (1)
  • தீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல் (1)
  • தீபாவளி அப்போலோவிலா (1)
  • தூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம். (1)
  • தே (1)
  • தேசிய அவமானம்-அரசியல். (1)
  • தேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம் (1)
  • தேவி (1)
  • தேள்களுடன் வாழ்கிற இளம்பெண்.--சமூகம் (1)
  • தேன்கூடும் கல்லும்.குறுங்கதை. (1)
  • நகைச்சுவை. (1)
  • நகைச்சுவை.. (1)
  • நகைச்சுவை.சிரிக்க முடிஞ்சா சரிங்க. (1)
  • நடந்துச்சா இல்லியா?----சினிமா (1)
  • நடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல். (1)
  • நடிகரின் கள்ளப்பணம். மோடியா (1)
  • நடிகைக்கு கேன்சர்.சினிமா (1)
  • நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம். (1)
  • நடிகைகளின் அந்தரங்கம் .சினிமா. (1)
  • நடிகையின் ஒப்புதல்.---சினிமா. (1)
  • நடிகையின் நிர்வாணம்.சினிமா. (1)
  • நயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா. (1)
  • நல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?---அரசியல். (1)
  • நாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம். (1)
  • நாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு! (1)
  • நாளைய தலைவன்.---புதுக்கவிதை. (1)
  • நான் ரொம்ப ரொமண்டிக் பெண்! ஸ்ருதி.சினிமா. (1)
  • நான் உங்களுடன் படுக்கலாமா? நடிகையிடம் கேட்ட நடிகர். (1)
  • நித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல் (1)
  • நிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம். (1)
  • நிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா? --அரசியல். (1)
  • நீரவ் மோடி அதிர்ஷ்டசாலி.-அரசியல். (1)
  • நொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல். (1)
  • பந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல். (1)
  • பர்கூரில் ஜெ. தோற்கவில்லையா?-அரசியல். (1)
  • பரோல் கிடைக்காதா சசிக்கு?-அரசியல். (1)
  • பவர் பாண்டி. எனது கருத்து.சினிமா. (1)
  • பழக்க தோஷமா?--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம். (1)
  • பள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல். (1)
  • பன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல். (1)
  • பன்னீரா?--அரசியல். (1)
  • பாடகி சுசித்ராவுக்கு வேண்டுகோள்.---சினிமா (1)
  • பாரதிதாசனின் ஆசை!-சமூகம். (1)
  • பாரதியா?----ஒரு சிறு அலசல் (1)
  • பாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா (1)
  • பாலாவின் இயக்கத்தில் நடிப்பாரா?---சினிமா (1)
  • பாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம் (1)
  • பாலியல் வன்முறையா? (1)
  • பாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்? -சமூகம் (1)
  • பாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல். (1)
  • பாஜக--திமுக கூட்டணி அமையுமா?---அரசியல். (1)
  • பி.ஜே.பி. (1)
  • பிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு. (1)
  • பிரபல நடிக (1)
  • பிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா. (1)
  • பிருந்தாவன ஆசிரமத்தில் கற்பழிப்பு. (1)
  • பிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா. (1)
  • பிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல். (1)
  • பிஜேபி ராஜாவுக்கு என்னாச்சு?--அரசியல். (1)
  • பிஜேபியை ஏமாற்றியிருக்கிறார்கள் .--அரசியல். (1)
  • பீரங்கிபுரம்.சினிமா. (1)
  • புத்தாண்டு எப்படி இருக்கபோகுது?--அரசியல் புலம்பல். (1)
  • புத்தாண்டுப் பலன்கள்.---அரசியல் (1)
  • புத்திமதியா (1)
  • புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல். (1)
  • புதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக (1)
  • புருசனை மாத்திக்காட்டுங்க.டாக்டர்! நகைச்சுவை. (1)
  • புலம்பலை கேட்கவும். -நகைச்சுவை (1)
  • பூனை பிரியாணி சாப்பிட்டாச்சா? (1)
  • பெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம் (1)
  • பெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம் (1)
  • பெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு. (1)
  • பெரிய இடத்து அசிங்கம். சமூகம். (1)
  • பெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல் (1)
  • பேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு. (1)
  • பேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல். (1)
  • பேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம். (1)
  • பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா? ----சமூக பார்வை. (1)
  • பொங்கி சுனாமி ஆகிய நடிகை!---சினிமா (1)
  • பொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல். (1)
  • பொறுப்புடன் எழுதுங்கள்.சமூகம் (1)
  • பொன்னாரின் போலி வேடம்.-அரசியல். (1)
  • போயஸ் கார்டனிலா? (1)
  • போலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல் (1)
  • மகாளய அமாவசை அனுபவம் (1)
  • மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறதா பொங்கல்? --சமூகம் (1)
  • மண்டை மேல என்னடா இருக்கு?....நகைச்சுவை. (1)
  • மணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு. (1)
  • மதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா (1)
  • மதுரை (1)
  • மதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம் (1)
  • மதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல் (1)
  • மந்திராலயம் பயணம். 1. அனுபவம். (1)
  • மந்திரி சொல்வது உண்மைதானா?--அரசியல். (1)
  • மந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல். (1)
  • மந்திரி விஜயபாஸ்கரும் கீதையும்.--அரசியல். (1)
  • மர்மம் மர்மம்.---அரசியல். (1)
  • மன்னர்களின் விசித்திர ஆசைகள்.--சமூகம் (1)
  • மன்னரின் அவசரம். நகைச்சுவை. (1)
  • மன்னாரின் சேட்டைகள். நகைச்சுவை. (1)
  • மனசாட்சி உறங்காது---சினிமா. (1)
  • மனைவியை மயக்கும் மந்திரம். காதல். (1)
  • மாடங்கள் உள்ள ஆச்சரியக்கிணறு---வியப்பு. (1)
  • மாடியில் சனி. நகைச்சுவை. (1)
  • மாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம். (1)
  • மாணவர்களின் ராக்கிங் கொடுமை.--சமூகம். (1)
  • மாணவியை கற்பழித்த ஆசிரியர்கள்.--சமூகம். (1)
  • மாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு. (1)
  • மாமா உன் பொண்ணை கொடு! சிரிப்பு. (1)
  • மாவீரன் பிரபாகரனை பற்றிய படமா? சினிமா. (1)
  • மானஸ்தர்களின் கற்பனை.---அரசியல். (1)
  • மீரா ஜாஸ்மின் (1)
  • முத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா?---நகைச்சுவை. (1)
  • முத்தொள்ளாயிரம் சொல்லும் காதல்.-இலக்கியம். (1)
  • முதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல். (1)
  • முதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல். (1)
  • முதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை. (1)
  • முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்?--அரசியல். (1)
  • முதலிரவு ஆரோக்கியம். சமூகம் (1)
  • முதலிரவுக்கு என்ன ஸ்வீட்?-நகைச்சுவை. (1)
  • மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா?---ஊகம் அரசியல். (1)
  • மூடத்தனம் .இப்படியும் நடக்குமா?--சமூகம் (1)
  • மைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.?---அரசியல் ஜோதிடம். (1)
  • மோகன்லால் குற்றவாளியா? (1)
  • மோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல் (1)
  • மோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா? (1)
  • மோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல். (1)
  • மோடி அவசர சட்டம் போடுவாரா? (1)
  • மோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல். (1)
  • மோதல் அதிமுகவில்!---அரசியல். (1)
  • யாருடைய ஆவி அழுகிறது?--அரசியல். (1)
  • யாரை குறிக்கிறது? தெரியலிங்க.படிங்க. (1)
  • ரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல். (1)
  • ரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம். (1)
  • ரன்வீர்- தீபிகா காதல்.---சினிமா. (1)
  • ரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு?-அரசியல். (1)
  • ரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்! (1)
  • ரஜினி கூட்டத்தைக் காட்டுவாரா?---அரசியல். (1)
  • ரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு. (1)
  • ரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல். (1)
  • ரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல் (1)
  • ரஜினி-அஜித் அரசியல் பிரவேசம்.---அரசியல் (1)
  • ரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா?---அரசியல். (1)
  • ரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா. (1)
  • ரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல். (1)
  • ரஜினியும் ஒபிஎஸ்சும் மோதல்.----அரசியல். (1)
  • ரஜினியும் கட்ஜுவும்.--அரசியல். (1)
  • ரா (1)
  • ராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்?--அரசியல். (1)
  • ராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம் (1)
  • ராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு (1)
  • ராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்?--அரசியல். (1)
  • ரெமோ (1)
  • ரெமோ--விவகாரம் பண்ணுவது சரியா? சினிமா. (1)
  • ரெய்டுனால யாருக்கு பயன்?--அரசியல். (1)
  • ரேகாவின் தீராத சோகம்.--சினிமா. (1)
  • ரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல். (1)
  • வரும் தேர்தலில் விஜய் இறங்கினால்?--அரசியல். (1)
  • வாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள். (1)
  • வாய் வீச்சு மன்னர்கள்.---அரசியல். (1)
  • விசாரணைக்கமிஷன் வருகிறது? ---அரசியல். (1)
  • விநாயகர் யாருக்கு சொந்தம்? ஆன்மீகம் (1)
  • விலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை. (1)
  • விவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா (1)
  • விவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம் (1)
  • விளம்பரம் தேடிகள்.---அரசியல் (1)
  • விஜய்யின் மெர்சல்.பிஜேபிக்கு அலர்ஜி.--அரசியல். (1)
  • விஜயகாந்த் அரசியல் மறுவாழ்வு! (1)
  • விஷாலை மிரட்டுவது யார்?---சினிமா (1)
  • வைகை அணைக்கு பந்தல் போடலாமா? நகைச்சுவை. (1)
  • வைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல். (1)
  • வைகோவின் எதிர்காலம். அரசியல். (1)
  • வைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல். (1)
  • றெக்க படங்களை பற்றி! சின்ன அலசல். (1)
  • ஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்?...சமூகம் (1)
  • ஜல்லிக்கட்டு நடக்குமா? சமூகம். (1)
  • ஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம். (1)
  • ஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள். (1)
  • ஜனவரியில் சசி முதல்வர்!--அரசியல். (1)
  • ஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல். (1)
  • ஜெ.உயில் யாரிடம் இருக்கிறது? --அரசியல். (1)
  • ஜெ.கொலையா? அமைச்சர்கள் குபீர்.--அரசியல். (1)
  • ஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல். (1)
  • ஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல். (1)
  • ஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல். (1)
  • ஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல். (1)
  • ஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல். (1)
  • ஜெ.மரணம்.மோடி எச்சரிக்கை.---அரசியல். (1)
  • ஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல். (1)
  • ஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல். (1)
  • ஜெ.யும் இடைத்தேர்தலும். (1)
  • ஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல். (1)
  • ஜோக்ஸ். நகைச்சுவை. (1)
  • ஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம். (1)
  • ஸ்ரீதேவி அழகா மகள் அழகா? --சினிமா. (1)
  • ஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா (1)
  • ஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம் (1)
  • ஹிட்லர் மாவீரனா இல்லையா?---சிறு அலசல். (1)
  • ஹிட்லரின் சர்வாதிகாரம். அரசியல். (1)
  • amalapaul (1)
  • cinema (2)
  • election (1)
  • mahesh babu (1)
  • murugadoss (1)
  • tamil cinema news (1)
  • vijakanth (1)

முறைகேடு எனப் புகாரளி


Visitor Tracker
'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.

Pages

  • Home

Blogger news

free counters
Free counters
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.