" டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி ,
தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம்.
உங்களை பிரதமராக கொண்டதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
ஆனால் பெரிய ஆளுமைகள் , பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

நான் என் உணர்வுகளை மிகவும் வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன்.
இது சரியான மனநிலையில் ஆக்கப்பூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாகவே நம்புகிறேன்... ஜெய்ஹிந்த்..!"-
இவ்வாறு பிரதமரிடம் 'முறையிட்டிருக்கிறவர்' தமிழகத்தைச்சேர்ந்தவர் இல்லை..
எதற்காக இவ்வளவு வேதனையுடன் செய்தி பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக புது டெல்லியில் நடிகர்களுடன் குறிப்பாக வட இந்திய நடிகர்களுடன் மட்டுமே பிரதமர் மோடி கலந்தாலோசனை செய்திருக்கிறார்.
இந்த ஆலோசனையில் ஒருவர் கூட தென்னிந்திய நடிகர் இல்லை என்பதுதான் கவலைக்குரியது..
எதற்காக பிரதமர் இந்த முடிவினை மேற்கொண்டார்?
தென்னகத்தில் பாஜக முற்றிலுமாக துடைத்து எடுக்கப்பட்டதினால் இத்தகைய ஒரு சார்பு நிலையை பிரதமர் மோடி எடுத்திருக்கிறாரா?
ஒன்றே தேசம் என்கிற முழக்கம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இப்படி பிரித்தாளும் நடவடிக்கையா?
இந்த பிரச்னையில் வருத்தப்படக்கூடிய தமிழக நடிகர்கள் குறிப்பாக கமல்ஹாசன் ,விஜய்,ஆகிய இருவரும் கருத்து தெரிவிக்காததுதான் வேதனையாக இருக்கிறது.
இவர்களுடன் ரஜினி ,அஜித் ஆகியோரை இணைத்துக் கொள்ள முடியாது.
ஏனெனில் அவர்கள் மோடியின் ஆதரவாளர்கள்..அவர்களால் கண்டிக்க முடியாது.
ஆனால் ஆந்திரத்தின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள் உபாசனாதான் மோடியைப் பார்த்து அப்படியொரு கேள்வியை கேட்டிருக்கிறார்.. அவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனங்களின் துணைத் தலைவர்.
இந்த கேள்வியை பிரதமர் 'லைக் 'பண்ணியிருக்கிறார் என்பது இன்னொரு வேடிக்கை.